ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google escalates blacklisting of left-wing web sites and journalists

இடதுசாரி வலைத் தளங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கறுப்புபட்டியலிடலை கூகுள் தீவிரப்படுத்துகிறது

By Andre Damon
20 October 2017

இணைய தணிக்கை மீதான அதன் நகர்வுகளை அதிகரித்தளவில் விரிவாக்கும் விதத்தில், கூகுள் அதன் பிரபல செய்தி தொகுப்பு தளமான கூகுள் நியூஸ் இல் இருந்து முன்னணி இடதுசாரி வலைத் தளங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை நீக்கியுள்ளது.

இதை பிரசுரிக்கின்ற இந்நேரம் வரையில், news.google.com வலைத் தளத்தில் "World Socialist Web Site” (உலக சோசலிச வலைத் தளம்) என்று தேடினால் WSWS இல் பிரசுரிக்கப்பட்ட ஒரேயொரு கட்டுரை கூட வரவில்லை. இதேபோல அந்நேரத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளில் ஏதேனும் ஒன்றின் சரியான தலைப்பை இட்டு தேடினாலும் எந்த முடிவும் வராது.

கடந்த ஏழு நாட்களாக, news.google.com வெறும் 53 நபர்களுக்கு மட்டுமே உலக சோசலிச வலைத் தளத்தை மேற்கோளிட்டுள்ளது, கடந்த ஆண்டு வாராந்தர சராசரியாக 650 க்கும் அதிகமானவர்கள் வந்திருந்த நிலையில் இது 92 சதவீத வீழ்ச்சியாகும்.

வியாழனன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான எந்தவொரு ஒரு கட்டுரையும் கூகுள் செய்தி தேடலில், காட்டப்படவில்லை

புலிட்ஜர் விருது வென்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிறிஸ் ஹெட்ஜெஸ், கூகுள் செய்திகளில் அவர் கட்டுரைகள் தோன்றுவது நின்றுவிட்டதாக புதனன்று WSWS க்கு தெரிவித்தார். இந்த மாற்றம் உலக சோசலிச வலைத் தளம் உடனான அவர் பேட்டி பிரசுரமானதற்குப் பின்னர் நடந்திருப்பதாக ஹெட்ஜெஸ் தெரிவித்தார், அப்பேட்டியில் அவர் இடதுசாரி தளங்கள் மீதான கூகுள் தணிக்கைக்கு எதிராக பேசியிருந்தார்.

ஹெட்ஜெஸ் தெரிவித்தார், “அப்பேட்டி வழங்கிய சில காலத்திற்குப் பின்னர், அவர்கள் என்னை இருட்டடிப்பு செய்தனர்.” “நீங்கள் கூகுள் செய்திகளுக்குள் சென்று என் பெயரை இட்டால், அங்கே ஆறு செய்திகள் கிடைக்கும், அவற்றில் எதுவுமே எனக்கு சம்பந்தப்பட்டதல்ல.”

கிறிஸ் ஹெட்ஜெஸ் தொடர்பாக கூகுள் செய்தி தேடலில் பொருத்தமான எந்த முடிவும் கிடைக்கவில்லை

“நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். கூகுள் செய்திகள், முன்பு Truthdig என்பதற்காக எனது கட்டுரைகளை பட்டியலிட்டது, Common Dreams மற்றும் Alternet ஆகியவற்றிற்கு எனது பங்களிப்புகளையும், எனது நூல்களின் மேற்கோள்களையும் காட்டியது,” என்று குறிப்பிட்ட ஹெட்ஜெஸ் தொடர்ந்து கூறுகையில், “ஆனால் இப்போது அவையெல்லாம் காணவில்லை. நான் கூகுள் தணிக்கைக்கு எதிராக பேசியதால் தான் இது நடந்துள்ளது என்று என்னால் நிச்சயமாக கூறமுடியும்,” என்றார்.

கூகுள்.காம் தளத்தை அணுகி அதன் தேடல் கட்டத்திற்கு கீழே "செய்திகள்" என்றிருக்கும் திரியை க்ளிக் செய்து அணுகும் வகையில், கூகுள் தளத்தில் அதன் பழைய செய்தி சேகரிப்பு இயக்குமுறையை (news aggregator) கூகுள் இன்னும் வைத்திருப்பதாக தெரிகிறது. காலாவதி ஆக்கும் நடைமுறையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகின்ற அந்த செய்தி சேகரிப்பு இயக்குமுறை பதிப்பில், "World Socialist Web Site” என்று தேடினால் 254,000 முடிவுகளைப் பட்டியலிடுகிறது.

இதே வகையிலான தேடலில் "Chris Hedges” என்று தேடினால் 89,000 பக்கங்கள் வருகின்றன.

கூகுள் செய்திகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறைந்தபட்சம் ஏப்ரலில் இருந்து நடந்து வந்துள்ள ஒரு திட்டமிட்ட தணிக்கை மற்றும் கறுப்புபட்டியலில் இடும் பிரச்சாரத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஏப்ரலில் அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவுக்கான துணை தலைவர் பென் கோமெஸ் கூறுகையில், கூகுள் "மாற்று" செய்தி ஆதாரங்களை விட "அதிகாரபூர்வ" செய்தி வெளியீடுகளை ஊக்குவிக்க முயன்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அப்போதிருந்து, பதிமூன்று முன்னணி இடதுசாரி வலைத் தளங்களுக்கு கூகுள் தேடல் மூலமாக வரும் பயனர் விகிதம் 55 சதவீதம் சரிந்துள்ளது, அப்போதிருந்து தேடலின் ஊடாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு வருவோர் விகிதம் 74 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

“சாதாரண ஒரு பத்திரிகையாளராக கூறுவதானால், இது பயங்கரமானது,” என்று ஹெட்ஜெஸ் தெரிவித்தார். “இப்போதும் பத்திரிகையியலை மேற்கொண்டு வருபவர்களும் மற்றும் மேற்கொள்ள முயன்று வருபவர்களும் தான் பாதிக்கப்படுகிறார்கள்; மிகவும் குறிப்பாக அதிகாரம் மற்றும் பெருநிறுவன அரசு பிரச்சினைகளைக் கையாள முயற்சிக்கும் பத்திரிகையாளர்களே பாதிக்கபடுகிறார்கள்.

“இது அரசு எந்தளவுக்கு திவாலாகி உள்ளது என்பதை மட்டுமல்ல, மாறாக எந்தளவுக்கு அது பயந்து போயுள்ளது என்பதையும் காட்டுகிறது,” என்று ஹெட்ஜெஸ் எழுதினார்.

“எந்தவொரு கருத்து வேறுபட்ட விமர்சனப்பூர்வ குரல்களையும் முடக்கும் நோக்கில், இன்னும் பல இலக்கு வைக்கும் உள்ளார்ந்த முறைகளை கூகுள் அபிவிருத்தி செய்து வருகிறது,” என்று உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் தெரிவித்தார்.

இரண்டாம் உலக போரின் போது ட்ரொட்ஸ்கிச பதிப்புகள் முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் வகையில், அவர் தொடர்ந்து கூறுகையில், “இது பேச்சு சுதந்திரம் மீதான ஒரு முன்னுதாரணமற்ற தாக்குதல். இந்தளவிலான தணிக்கையானது, அமெரிக்க வரலாற்றில், போர் காலகட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒருபோதும் திணிக்கப்பட்டதில்லை,” என்றார்.

முதலாம் உலக போர் காலத்திய அரசியல் ஒடுக்குமுறையின் முன்னுதாரணத்தை ஹெட்ஜெஸ் சுட்டிக்காட்டினார். “தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், போர்க் காலத்தில், அவர்கள்" ஒரு இடதுசாரி போர்-எதிர்ப்பு பத்திரிகையான "The Masses ஐ மூடினார்கள்.”

இடதுசாரி இணைய தளங்கள் மீது கூகுள் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி இருப்பதானது, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் பிரிவுகளுடனும், அமெரிக்க உளவுதுறை முகமைகள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுடனும் சேர்ந்து, ரஷ்ய-விரோத பிரச்சாரத்தைக் கூர்மையாக தீவிரப்படுத்தி இருக்கும் பின்புலத்தில் நடந்தேறி வருகிறது.

இணைய தணிக்கைக்கு ஒரு நியாயப்பாட்டை உருவாக்கும் நோக்கில் நிரூபணமில்லா ஒரு சூழ்ச்சி தத்துவமாக, அமெரிக்க சமூகத்திற்குள் ரஷ்யா "பிளவுகளை விதைத்ததன்" மூலமாக 2016 தேர்தலில் "தலையிட்டது" என்ற கூற்றுக்களை சுற்றியுள்ள பிரச்சாரத்தை காரணம்காட்டி, வியாழனன்று, ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் மார்க் வார்னரும் அமி க்ளோபுசரும் (Amy Klobuchar), ஒரு சட்டமசோதாவின் முதல் அறிக்கையை அறிமுகம் செய்தனர்.

Axios நிறுவனத்திற்கு கிடைத்த அந்த சட்டமசோதாவின் தொகுப்புரையின்படி, “அமெரிக்க வாக்காளர்கள் மீது மேலாளுமை செலுத்துவதற்காக வெளிநாட்டவர்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் அரசியல் விளம்பரங்கள் செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்த, இணையவழி களங்கள் அறிவார்ந்த முயற்சிகளை மேற்கொள்வதும்" மற்றும் வெளிநாட்டவர்களிடம் இருந்து வருபவை என்று கருதினால் அந்த அரசியல் விளம்பரங்களின் ஒரு தரவுகளஞ்சியத்தை பேணுவதும் இதற்கு அவசியமாகிறது.

வார்னர் அந்த சட்டமசோதாவை அறிவிக்கையில், இணையத்தில் பேச்சு சுதந்திரம் மீது அதிக கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இதையொரு தொடக்க புள்ளியாக பயன்படுத்த செய்வதே அவர் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தினார். “நாம் என்ன செய்ய முயல வேண்டுமென்றால் மென்மையாக தொட்டு தொடங்க வேண்டும்,” என்றார்.

அமெரிக்காவில் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்ற தணிக்கை ஆட்சிமுறையின் இயல்பு குறித்து ஹெட்ஜெஸ் கருத்துரைக்கையில், “நீங்கள் எந்தவொரு சர்வாதிபத்திய அமைப்புமுறையையும் பாருங்கள், பத்திரிகைகள் மீதான அவர்களின் தாக்குதல் படிப்படியாக தான் இருக்கும். ஆகவே நாஜி ஜேர்மனியிலும் கூட, ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபோது, அவர் ஒரே வாரத்தில் சமூக ஜனநாயகவாதிகளின் பிரசுரங்களுக்குத் தடை விதித்து, அவர்களை பின்னுக்கு இழுத்திருக்கலாம். அவர் அவ்விதத்தில் சென்று, ஒரேயடியாக அனைத்தையும் மூடிவிடவில்லை.”

“கூகுள், அரசாங்கத்துடன் சேர்ந்து ஒருங்கிணைந்து, முழுமையாக அரசியல் சூழ்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ளது,” என்று நோர்த் தெரிவித்தார். “அமெரிக்க வெளியுறவு கொள்கையின் எதிர்ப்பாளர்களை நோக்கிய ஒரு இரகசிய தணிக்கை வேலைத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இது, அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் மீதான ஒரு சட்டவிரோத தாக்குதலாகும்.”

ஹெட்ஜெஸ் தொடர்ந்து கூறுகையில், “கொடுங்கோல் ஆட்சிகளில் வசித்திருக்கிறேன் மற்றும் அவற்றைக் குறித்து எழுதியிருக்கிறேன் என்பதால் என்னால் கூற முடியும், அவர்கள் நிறுத்த போவதில்லை, இப்போதும் நமக்கு வாய்ப்பிருப்பதால் நாம் எல்லா எச்சரிக்கை மணியையும் ஒலிக்க செய்ய வேண்டுமென கருதுகிறேன்,” என்றார்.