ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Petrograd, November 6-7 (October 24-25, O.S.): Bolsheviks launch insurrection in response to government attacks

பெட்ரோகிராட், நவம்பர் 6-7 (அக்டோபர் 24-25 ஒஎஸ்) : அரசாங்கத் தாக்குதல்களுக்கு பதில்கொடுக்கும் விதத்தில் போல்ஷிவிக்குகள் எழுச்சியைத் தொடங்கினர்


விரைவு போர்க்கப்பல் அரோரா

போல்ஷிவிக் தலைவர் ஜோர்ஜி ஒப்போக்கோவ் (“லோமோவ்”) நவம்பர் 6 அன்று ஒரு தொலைபேசி அழைப்பால் நடுநிசியில் விழித்துக்கொண்டார். மிகவும் குளிர், அத்தோடு நள்ளிரவுக்குப் பின்னராகவும் இருந்தது. போர்வைகளை வீசி எறிந்துவிட்டு எழுந்து தொலைபேசிக்கு விரையும் முன்னர் லோமோவ் சில கணங்கள் தாமதித்தார். அவர் தொலைபேசியை கையில் எடுத்தபொழுது அது ட்ரொட்ஸ்கி.

ட்ரொட்ஸ்கி லோமோவிடம் கெரென்ஸ்கி போல்ஷிவிக் தலைவர்களைக் கைதுசெய்வதற்காக உத்தரவுகளை இட்டுள்ளார், அரச படைகளால் போல்ஷிவிக் பத்திரிக்கைகள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, மற்றும் கெரென்ஸ்கி தலைநகருக்கு வருமாறு விசுவாசமுள்ள இராணுவத்தினருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார் என்று விரைந்து தகவல் சொன்னார். “கெரென்ஸ்கி தாக்குதலில் உள்ளார்” “நாம் ஒவ்வொருவரும் ஸ்மோல்னியில் கூட வேண்டியுள்ளது” என உறுதியாக அறிவித்தார்.

இராணுவ புரட்சிகரக் குழுவின் தலைமையகமான, ஸ்மோல்னி கட்டிடத்தில், ட்ரொட்ஸ்கி, லாசிமிர், ஸ்வெர்தோவ், அன்டோனோவ், போட்வாய்ஸ்கி மற்றும் லாஷிவிச் உள்பட போல்ஷிவிக் தலைவர்கள் விரைந்து கூடினர். அவர்கள் அனைத்து இராணுவ பிரிவுகளுக்கும் “ஆணை எண் 1” என்ற தலைப்பில் ஒரு அவசர ஆணையை பிறப்பித்தனர்.

பெட்ரோகிராட் சோவியத் நேரடி ஆபத்தில் இருக்கிறது; எதிர்-புரட்சிகர சதியாளர்கள் புறநகர்ப்பகுதிகளில் இருந்து கடேட்டுக்கள் மற்றும் அதிரடி படைப் பிரிவுகளை இரவோடு இரவாக பெட்ரோகிராட்டுக்கு கொண்டுவரமுயற்சி செய்துள்ளனர். பத்திரிக்கைகள் சோல்டாட் மற்றும் ரபோச்சி புட் மூடப்பட்டுள்ளன. உங்கள் படையினை போருக்கு ஆயத்தமாய் கொண்டுவருமாறும் (மற்றும் அதுவரை) மேலும் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்குமாறும் நீங்கள் இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்த ஆணையை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வது அல்லது குறுக்கீடு செய்வது எதுவும் புரட்சிக்குத் துரோகம் இழைப்பதாகக் கருதப்படும்.

ட்ரொட்ஸ்கியின் முதலாவது நகர்வு, போல்ஷிவிக் பத்திரிகை ரபோச்சி புட் (தொழிலாளர் பாதை) ஐ திரும்பவும் திறக்க லிடோவ்ஸ்கி படைப்பிரிவுக்கு ஆணையிடுவதாக இருக்கிறது. போல்ஷிவிக்குகளுக்கு விசுவாசமான இப்படைப்பிரிவு அரச ஆதரவாளர்களைவிட விரைவில் பெரும்பான்மை பெற்று, பத்திரிக்கைகளை மீண்டும் கைப்பற்றியது மற்றும் அசாங்க சீல் வைப்புக்களை அழித்தது. எழுச்சியானது உத்தியோகபூர்வமாக நடந்துகொண்டிருந்தது. மாநகரில் போல்ஷிவிக் செல்வாக்கின் பல உறுதிப்படுத்தல்களில் இந்த பரிசோதனை முதலாவதாக இருக்கிறது.

எங்கும் உள்ள படைவீரர்கள் இரண்டு விதமான முரண்பட்ட ஆணைகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர் — அவர்கள் இடைக்கால அரசாங்கத்திடமிருந்து ஒரு தொகுதி ஆணைகளைப் பெறுகின்றனர், மற்றறொரு தொகுதியை இராணுவ புரட்சிகரக் குழுவிடமிருந்து பெறுகின்றனர். ஆயினும், முந்தைய நாட்களிலான போல்ஷிவிக்குகளின் முயற்சிகள் பரந்த பகுதி படைவீரர்களிடமும் தொழிலாளர்களிடமும் இராணுவ புரட்சிகரக் குழுவிற்கு உள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்தின. எங்கும் உள்ள படைவீரர்கள், இராணுவப் புரட்சிகரக் குழுவினால் கையெழுத்திடப்படாத ஆணைகள் செல்லுபடியாகதவை என்றும் பின்பற்றப்படமாட்டாது என்றும் அறிவித்தனர்.

அக்டோபர் புரட்சியின் இலச்சினையாக ஆகவிருந்த விரைவு போர்க் கப்பலான அரோரா, இடைக்கால அரசாங்கத்திடமிருந்து கடலுக்குச் செல்லுமாறு ஆணையைப் பெற்றது. இது உடனடியாக இராணுவ புரட்சிகரக் குழுவால் எதிர்க்கப்பட்டது, அது எதிர்ப்புரட்சியை எதிர்த்துப் போரிடத் தொடர்ந்து கைவசம் இருக்குமாறு ஆணையிட்டது. அரோரா பேரார்வத்துடன் பிந்தையதின் ஆணையை செயற்படுத்தியது. “நேவாவில் அரோரா இருப்பது எழுச்சியின் சேவையில் மிகத் திறமான போரிடும் அலகாக இருந்தது மட்டுமல்ல, பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக இருந்த ஒரு வானொலி நிலையமாகவும் இருந்தது” “மதிப்பிடமுடியா அனுகூலம்!” என ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதுகிறார்.

“உயர் தலைமைப்பீடம்” அலெக்சாண்டர் கெரென்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட “இரத்தமும் இரும்புமான” ஆட்சி சுத்தமாய் அதிகாரமற்றதாய் இருப்பதாக தன்னைத்தானே காட்டிக்கொண்டது. அதன் உத்தரவுகளும் ஆணைகளும் பெட்ரோகிராட் மக்களால் பெரிதும் அலட்சியம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட எங்கும் அரசாங்கம் போல்ஷிவிக்குகளை சவால்செய்தது, மோதலானது போல்ஷிவிக் செல்வாக்கின் விரிவடைதலிலும் அரசாங்க கட்டுப்பாடு உருக்குலைவதிலும் விளைவைக் கண்டது.

நவம்பர் 7 அன்று முழுவதும், போல்ஷிவிக்குகளும் அவரது ஆதரவாளர்களும் நகரில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூலோபாய முக்கிய இடங்களை தம் கட்டுப்பாட்டில் எடுத்தனர். ட்ரொட்ஸ்கி மத்திய குழு கூட்டத்திற்கும் சோவியத்துக்களின் காங்கிரசுக்கான போராளர்களின் கூட்டத்திற்கும் தான் ஒரு இரத்தம் சிந்தா வெற்றிக்காக நம்பிக்கை கொள்வதாக அறிவித்தார். உடனே அவர் அனைவரும் எழுந்து நின்று தந்த பாராட்டை பெற்றார். போல்ஷிவிக்குகளும் அவரது ஆதரவாளர்களும் ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடத்தாமல் முழு நகரையும் கைப்பற்ற முடிந்தது.

ட்ரொட்ஸ்கியின் நகர்வுகள், காமனேவ் மற்றும் ரியாசனேவ் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட போல்ஷிவிக் தலைமையின் “மிதவாத” பிரிவால் விமர்சிக்கப்பட்டது, அவர்கள் போல்ஷிவிக்குகள் தங்களைத் தாங்களே அளவுக்குமீறி நீட்டிக்கொண்டிருக்கின்றனர் என நம்பினர்.

லெனின், மத்திய குழுவிலிருந்து வரும் கட்டளைகளின் கீழ் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும்படி வைக்கப்பட்டார், ஆனால் காமனேவ் பிரிவின் எதிர்ப்பை வெல்ல ஸ்மோல்னியில் தனது வருகை தேவைப்படுவதை நன்கு உணர்ந்திருந்தார். அவர் எழுதுகிறார், “அரசாங்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, என்ன விலை கொடுத்தாவது அதற்கு மரண அடி கொடுத்தாக வேண்டும். செயலை தாமதப்படுத்தல் மரண ஆபத்தானது.”

லெனின் ஒரு கனவானாய் மாறுவேடமணிந்து ஸ்மோல்னிக்கு செல்கையில், கடேட்டுகளின் ஒரு காவல்ரோந்தில் மயிரிழையில் தப்பித்தார் (அதன் அர்த்தம் அந்த சூழ்நிலையில் நிச்சயமாக அது மரணமாகத்தான் இருந்திருக்கும்). ஸ்மோல்னிக்கு வந்ததும் லெனின் போல்ஷிவிக் மத்திய குழுவுடன் விவாதத்தில் சேர்ந்துகொண்டார். அது புதிய அரசாங்கத்திற்கான பெயர்ப்பட்டியலை வரைவதை தொடங்கியது. “இடைக்கால அரசாங்கம்” அல்லது “அமைச்சர்” போன்ற பதங்களைப் பயன்படுத்த ஒருவரும் விரும்பவில்லை. ட்ரொட்ஸ்கி, புதிய அமைச்சர்கள் “மக்கள் கமிசார்கள்” என அழைக்கப்படுவார்கள் என்று கருத்துரைத்தார். அதனை லெனின் அங்கீகரித்து, அப்பதம் “புரட்சியின் வாசனையை வீசுகிறது” என்று சுட்டிக்காட்டினார். போல்ஷிவிக் அரசாங்கம் தன்னை “மக்கள் கமிசார்களின் அவை” என்று அழைத்துக்கொள்ளும் என்று அவர் மேலும் சேர்த்தார். இந்த கலந்துரையாடல்களில், புதிய அரசாங்கமானது ஒரு வடிவெடுக்க ஆரம்பித்தது.

ரஷ்ய புரட்சியின் வரலாறு என்ற நூலில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார், “பாரிய அளவில் மக்கள் தலையீடுசெய்த ஒரு புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் அந்த அளவு இரத்தம் சிந்தாமல் இருந்ததற்கான எடுத்துக்காட்டு வேறு எதுவுமில்லை.”

(ஆதாரம்: ராபினோவிட்ச், அலெக்சாண்டர், The Bolsheviks Come to Power, பக்கம்.249-272)