ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

BJP and Congress Party stoke reaction in Gujarat state election

குஜராத் மாநிலத் தேர்தலில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எரியூட்டும் எதிர்வினைகள்

By Arun Kumar and Kranti Kumara 
14 December 2017

இந்திய மேற்கத்திய மாநிலமான குஜராத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இன்று நடத்தப்பட்டது. இந்த இரண்டு கட்ட வாக்கெடுப்புகளும் டிசம்பர் 18, திங்களன்று எண்ணப்படவுள்ளது.

64 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குஜராத் இந்தியாவின் ஒன்பதாவது பெரிய மாநிலமாகவுள்ளது. இருப்பினும், குஜராத்தில் 13 வருடங்கள் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சராக இருந்தது உட்பட, கடந்த 19 வருடங்களாக குஜராத் மாநில அரசாங்கத்தை பிஜேபி அமைத்திருந்த நிலையில் பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கும் சரி, 2014 தேசிய தேர்தலில் வீழ்ச்சியடைந்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கும் சரி, இந்த தேர்தல்கள் ஒரு முக்கியமான சோதனையாகத்தான் உள்ளது என்று இந்திய பெருநிறுவன ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கூட தாங்களே கூறிக் கொண்டிருக்கின்றன.

அம்மாநிலத்தின் 32 மாவட்டங்களிலும் நடந்த தேர்தல் பேரணிகள் ஒவ்வொன்றிலும் தோன்றி பிஜேபி பிரச்சாரத்தை மோடி தானே முன்னின்று வழிநடத்தினார். இதற்கிடையில், காங்கிரஸ் பிரச்சாரங்களில் நேரு-காந்தி அரசியல் பரம்பரையின் வாரிசான ராகுல் காந்தி முன்னணி வகித்தார். இந்த மாத தொடக்கத்தில், ராகுல் காந்தி, 1998 முதல் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அவரது தாய் சோனியா காந்திக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சி தலைவரானார்.

தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் 150 ஐ பிஜேபி கைப்பற்றும் என பெருமையடித்துக் கொண்டது. ஆனால், கருத்துக்கணிப்புகளோ பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையேயான இடைவெளியை மிகவும் குறைத்துக் காட்டுகின்றன. மோடியின் அரசியல் கோட்டையாக திகழ்ந்த இந்த மாநிலத்தில், டிசம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி இரு கட்சிகளும் சம அளவில் ஒவ்வொன்றும் 43 சதவிகித ஆதரவைக் கொண்டிருப்பதையே காட்டுகின்றது.

எதிர்பார்த்தது போல், மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபி யும் வகுப்புவாத விண்ணப்பங்களை உரக்க பேசுவதன் மூலமாக தேர்தல் போட்டி இறுக்கமடைந்து வருவதற்கு விடையிறுத்துள்ளனர். இந்தியாவுக்கான பாகிஸ்தானின் உயர் ஆணையருடனோ அல்லது இந்திய தூதருடனோ ஒரு வழமையான சந்திப்பை பல காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பின்னர் அது குறித்து கடந்த வார இறுதியில் மோடி பேசுகையில், குஜராத்தில் இருந்து பிஜேபி ஐ அகற்ற, முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை, பாகிஸ்தானுடன் கைகோர்த்து இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மோடி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கொள்கைகளாக, நவம்பர் 2016 இல் செயல்படுத்தப்பட்ட நாட்டின் பெரும்பான்மை பணப் புழக்கத்தை செல்லாததாக்குதல் மற்றும் கடந்த கோடையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னடைவான தேசிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax-GST) போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள வேலையின்மை மற்றும் வேலை தட்டுப்பாடு, மற்றும் கஷ்டங்கள் மற்றும் பொருளாதார இடப்பெயர்வு ஆகியவற்றின் மீதான பொதுமக்களின் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தினால் காங்கிரஸ் பயனடைந்து வருகிறது.

ஆனால், உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு உழைப்பு புகலிடமாகவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு இளைய பங்காளியாகவும் இந்தியாவை மாற்றுவதற்காக முனைப்புடன் கடந்த கால் நூற்றாண்டு காலமாக முழுவீச்சுடன் செயலாற்றியுள்ள காங்கிரஸ் எதையும் செய்ய திறமையற்றதாகவும், விருப்பமில்லாததாகவும் உள்ளது, ஆனால் சமூக அதிருப்தி குறித்து மிக மவுனமான விண்ணப்பங்களை மட்டும் செய்து வருகின்றன.      

மாறாக, ஒரு மோசமான பிரச்சாரத்தையே காங்கிரஸ் மேற்கொண்டது, அதில் தனது இந்து நம்பகவாத தன்மையை நிரூபிக்கும் வகையில் பிஜேபி உடன் போட்டியிட்டது அத்துடன் பிற்போக்குத்தனமான சாதிவாத விண்ணப்பங்களையும் செய்தது.

2,000 மக்கள் இறப்பிற்கும் மற்றும் பத்தாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிற்பதற்கும் காரணமான 2002 இல் நடந்த முஸ்லீம் எதிர்ப்பு படுகொலைகளுக்குப் பின்னர் தனிமைபடுத்தப்பட்டிருந்த அந்த மாநில முஸ்லீம் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் தொடர்பாக பிரச்சாரம் முழுவதிலும் காங்கிரஸ் பகட்டாக அலட்சியமாக இருந்தது. ஆனால், மோடி குஜராத்தின் முதலமைச்சராக, 2002 நிகழ்வுகளைத் தூண்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். இந்து அடிப்படைவாத ஆர்வலர்களின் இறப்பிற்கு காரணமான ஒரு இரயில் ஏற்பட்ட தீ விபத்திற்கு முஸ்லீம்கள் தான் பொறுப்பு என்று அவர் முத்திரைகுத்தினார், மேலும் அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்த நிலையில் செயல்படாமல் இருக்க வேண்டும் என்றவகையில் பொலிஸுக்கு உத்திரவிட்டார்.

ஒரு “கருத்துவாத மதச்சார்பின்மையை” பாதுகாப்பதற்காக காங்கிரஸை பிஜேபி வெற்றிகரமாக “சுற்றிவளைத்து” உள்ளதென கட்சியின் “மூத்த தலைவர்கள்” வலியுறுத்தியதன் பேரில், காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி அவரது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக இந்து கோயில்களுக்கும், புண்ணிய ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தார் என்று கூறப்படுகிறது. காந்தியின் பயணத் திட்டம் சோமநாத் கோவில் போன்ற ‘உயர்ந்த புண்ணிய’ ஸ்தலத்திற்கான விஜயத்தையும் உள்ளடக்கியது. இக்கோவில், 1947 இல் தெற்காசியா வெளிப்படையாக ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகவும், முக்கியமாக இந்து இந்தியாவாகவும் வகுப்புவாத பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டதற்கு பின்னர் உடனடியாக மீள்கட்டமைக்கப்பட்டதை ஒரு இந்து வகுப்புவாத வலதின் அரசியல் திட்டமாகக் கருதி காந்தியின் கொள்ளு தாத்தாவான பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அதை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் சாதி அடிப்படையிலான மூன்று தலைவர்களுடன் கூட காங்கிரஸ் தேர்தல் கூட்டணிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது, அது முக்கியமாக, இந்தியாவின் சாதிய அடிப்படையிலான உடன்பாட்டு நடவடிக்கைக் கொள்கைகளின்படி இட ஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அவற்றை விஸ்தரிப்பதற்குமான அவர்களது கோரிக்கைகளுக்கு வாக்குறுதி அளிப்பதன் அடிப்படையிலானது. இட ஒதுக்கீட்டின் கீழ், சில பல்கலைக்கழக இடங்களும், அரசாங்க பணியிடங்களும், தலித்துக்களுக்கும் (தீண்டத்தகாதவர்களாக முன்பு கருதப்பட்டவர்கள்) மற்றும் “தாழ்த்தப்பட்ட சாதியினர்” என்று பாரம்பரியமாக வேறுபடுத்தப்பட்ட ஏனைய குழுக்களுக்குமென ஒதுக்கிவைக்கப்படுகின்றன அல்லது அவற்றிற்கென “ஒதுக்கீடு” செய்யப்பட்டுள்ளன.

இந்த கூட்டணிகளில், 24 வயதான ஹார்திக் படேலின் தலைமையிலான Patidar Anamat Andolan Samiti (PAAS) உடனான கூட்டணி மிக முக்கியமானதாகும். இந்த PAAS என்ற கட்சி, 2015 கோடையில் அகமதாபாத்தில் நூறாயிரக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டிய, மற்றும் குஜராத்தின் ஏனைய நகரங்களில் படேல் சாதியைச் சார்ந்த “சமூக” அல்லது பதிதார் சாதி உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கிடூகளை விஸ்தீரணம் செய்ய கோரிக்கைவிடுத்த நிகழ்வுகளின் போது வெடித்தது.

PAAS இன் ஆர்ப்பாட்டங்கள் குஜராத் மற்றும் புது தில்லியின் பிஜேபி அரசாங்கங்களை உலுக்கிப்போட்டது, அந்த அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை அகற்றல், பெருநிறுவனங்களுக்கு குறைந்த வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் அமைதியின்மை மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வந்த குஜராத்தின் “வளர்ச்சி-மாதிரியை” ஒட்டுமொத்த நாட்டிற்குமான ஒரு உதாரணமாக கூறின. அவை வன்முறை மற்றும் அடக்குமுறையினால் விடையிறுத்தனர் இறுதியில், மோடி அரசாங்கம் அம்மாநிலத்திற்கு இராணுவத் துருப்புக்களை அனுப்பிவைத்தார். PAAS இன் ஆர்ப்பாட்டங்களை அவர்கள் நசுக்கும்போது பொலிஸ் 14 பேரைக் கொன்றனர், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்களை மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தினர். இந்நிலையில், ஹார்திக் படேல் கைது செய்யப்பட்டு, தேசதுரோக குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒன்பது மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப்பின்னர், பிஜேபி மாநில அரசாங்கம், “உயர்ந்த சாதிகளில்”, “பொருளாதார ரீதியாக பின்தங்கிய” உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகள் மற்றும் பல்கலைக்கழக இடங்களில் 10 சதவிகிதத்தை ஒதுக்கீடு செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது ஒட்டுமொத்த ஒதுக்கீட்டு இடங்களை 50 சதவிகிதத்திற்கு கூடுதலாக்கும் என்பதால் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

நீண்ட காலமாக செல்வந்தர்களாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் பட்டேல்கள் இருந்து வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, PAAS இன் கிளர்ச்சியை ஒரு “சலுகை பெற்ற” கிளர்ச்சியாக கருதி உள்நோக்கம் கொண்ட பல்வேறு இடதுசாரிகள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். உண்மையில், ஒட்டுமொத்த இந்தியர்களைப் போல, பதிதார்களின் பெரும்பான்மையானோர், ஏழையாக உள்ளனர் அல்லது வாழ்க்கைக்கு போராடுபவர்களாக உள்ளனர். அவ்வாறு கூறினாலும் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகள் ஒரு பிற்போக்குத்தன முட்டு சந்தாக உள்ளது, அது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடி குறித்த எதிர்ப்பை சகோதரர்களுக்கு இடையிலான போராட்டமாக திசை திருப்பவும் சேவை செய்கிறது, அது சாதிய வழிகளில்  துயரத்தை “சமமாக” பிரித்து வழங்குகிறது.

ஹார்திக் படேல் கூட ஒரு கடுமையான சாதிய மற்றும் வலதுசாரி நபர் தான். பதிதார் பிரிவினருக்கான சிறப்பான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழிக்கு பதிலாக காங்கிரஸுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்னர், இந்தியாவின் ஆளும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) ஒரு பங்காளியாக இருக்கும் இந்து மேலாதிக்கவாத கட்சியான பாசிசவாத சிவ சேனாவுடன் ஹார்திக் படேல் குலாவினார்.

முன்னதாக, பதிதார்களுக்கான எந்தவொரு இட ஒதுக்கீடு குறித்தும் கடுமையான அவர்களது எதிர்ப்பை, Gujarat Kshatriya Thakor Sena வின் சுயமாக நியமிக்கப்பட்ட தலைவரான அல்பேஷ் தாகோர் மற்றும் 2016 இல் தலித்துக்கள் மீதான இந்து பசு-எச்சரிக்கைவாத தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை வகித்த ஒரு வக்கீலான ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவர்களுடனும் கூட ஒரு தேர்தல் உடன்பாட்டை காங்கிரஸ் கொண்டுள்ளது. தாகோர் பற்றிய குறிப்பான ஒரு உண்மை என்னவென்றால் ஒரு காலத்தில் அவருடைய தந்தை மோடியின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார்.

குஜராத்தில் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் ஒருசில இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. “நவ தாராளவாத” காங்கிரஸ் மற்றும் சர்வாதிகார இந்து வகுப்புவாத பிஜேபி இரண்டையும் பெயரளவிற்கு எதிர்த்து நிற்க வேண்டிய நிலையில் சிபிஎம் இருப்பதால், பாரம்பரியமாக அதிகளவில் ஆதரவைக் கொண்டிருந்த இரண்டு உழைக்கும் வர்க்க தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதை குறைப்பது உட்பட, அக்கட்சியின் குஜராத் மாநில பிரிவு காங்கிரஸின் வெற்றி குறித்த அதன் ஆதரவிற்கு சமிக்ஞை செய்துள்ளது.