ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-European tensions remain despite reassurances on NATO

நேட்டோ மீதான மீள் உறுதிப்பாடுகள் இருப்பினும் அமெரிக்க – ஐரோப்பிய பதட்டங்கள் தொடர்கின்றன

By Bill Van Auken
20 February 2017

இந்த ஆண்டு மூனிச் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உயர் அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட உரைகள், ஜனாதிபதி ட்ரம்ப்பால் முன்மொழியப்பட்ட “அமெரிக்கா முதலில்” எனும் கொள்கை, இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர் முதலாளித்துவ ஐரோப்பாவை பலப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் கூட்டுகளின் உடைவை ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவில் விரைவுபடுத்துகிறது என்ற ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்குள் உள்ளே அதிகரித்துவரும் கவலைகளை சாந்தப்படுத்தத் தவறிவிட்டன.

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக்கல் பென்ஸ் வாஷிங்டனிலிருந்து மாநாட்டிற்கு பிரதான செய்தியை வழங்கி இருந்தார். இம்மாநாடானது முன்னணி அரசு அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பெரு முதலாளிகள் ஆகியோரை ஒன்றாக கூட்டி இருந்தது. இது அமெரிக்கா மேலாதிக்கம் செய்யும் அட்லாண்டிக் கூட்டு நீண்டகாலமாக சவால்களை எதிர்நோக்கும் பகிரங்கமான கலந்துரையாடல் செய்யும் ஒரு மேடையாக இருந்து வருகின்றது.

இந்த வகையான முதலாவது ஆண்டு கூட்டத்திற்குப் பின்னரான 62 ஆண்டுகளில் முதலாவது தடவையாக ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் வாஷிங்டனிலிருந்தே வருகிறதாக பார்க்கப்படுகிறது. இந்தக் கவலைகள் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாய் மற்றும் தேசியவாத வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவளிப்பதிலிருந்து எழுகிறது மற்றும் இதனுடன் சேர்ந்து நேட்டோவை “காலாவதியானது” என்று நிராகரிக்கும் அவரது கூற்றுக்கள், ரஷ்யா மீதான ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை தளர்த்தக் குறிப்பிடல் மற்றும் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவளித்தல், அதேவேளை ஏனைய நாடுகளை “கூட்டமைப்பு” என இழிவாக குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விட்டோட்டலில் பிரிட்டனின் உதாரணத்தை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடல் இவற்றிருந்து எழுகிறது..

சனிக்கிழமை கூட்டத்தில் பென்சினது குறிப்பில், “ட்ரம்ப்” என்று டசின் கணக்கில் சொல்லிக்கொண்ட அதேவேளை, நேட்டோ கூட்டுடனான விசுவாசத்தின் வார்த்தையாடல் உறுதியினை பென்ஸ் வழங்கினார். வாஷிங்டனில் உள்ள எவருக்கும் புது நிர்வாகத்தின் உண்மையான வெளிவிகாரக் கொள்கையின் மீதாக எழும் தீவிர ஐயுறவாதத்தின் வெளிப்படையான எதிர்பார்ப்பில், தமது பார்வையாளர்களுக்கு, தான் அமெரிக்க ஜனாதிபதியின் சார்பில் பேசுவதாக திரும்பத்திரும்ப உறுதி அளித்தார்.

நேட்டோவுக்கு தனது ஆதரவை வழங்குவதில் அமெரிக்காவுக்கு “ஊசலாட்டமில்லை” என பென்ஸ் அறிவித்தார், மற்றும் டொனால்ட் ட்ரம்ப் “ஐரோப்பாவுடன் நிற்பார்” என்றார். அவர் மேலும் குறிப்பிட்டார்” “இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: ட்ரம்ப் மாஸ்கோ நிர்வாகத்துடன் ஒரு “பொது அடிப்படையை” கொண்டிருப்பதை நாடினாலும் கூட அமெரிக்காவானது ரஷ்யா பொறுப்புக்கூற வேண்டும் என்பதை தொடர்ந்தும் வைத்திருக்கும்”, என்றார்.

இந்த குறிப்பிடலுக்குப் பின்னர், பென்ஸ் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோசெங்கோவை சந்தித்தார், வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, அமெரிக்கா ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும் அது கிரீமிய தீபகற்பத்தை இணைத்துக்கொண்ட முயற்சியையும் அது அங்கீகரிக்கவில்லை என்று கோடிட்டுக் காட்டியது.” 2014ல் கியேவில் மேற்குலகு ஏற்பாடு செய்த வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அடுத்து ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி கிரிமிய தீபகற்பம் ரஷ்யாவுடன் மீளவும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

ரஷ்யா தொடர்பான பென்சின் அறிக்கையை தொடர்ந்து கடந்த வாரம் ட்ரம்ப்பின் பாதுகாப்புச் செயலரான, முன்னாளைய கடற்படையின் தளபதி James “Mad Dog” Mattis ஆலும் அதேவிதமான குறிப்புக்கள் தரப்பட்டன. உக்ரேன் மற்றும் கிரிமியா தொடர்பாக ரஷ்யா “தன்னை மெய்ப்பிக்கும்” வரைக்கும் ரஷ்யாவுடன் எந்தவிதமான கூட்டும் இல்லை என்று அவர் அறிவித்தார்.

மிக வெறியோடு நின்றவர்கள் மூனிச்சில் பங்கேற்ற இரு கட்சி சார்ந்த காங்கிரஸின் பேராளர்கள் ஆவர். குடியரசுக் கட்சி செனெட்டர் தென் கரோலினாவின் லின்ட்சே கிரஹாம் ஞாயிறு அன்று ”காங்கிரசில் ரஷ்யாவை உதைத்துத்தள்ளும்” ஆண்டாக 2017 இருக்கும்” என்றார் மற்றும் ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் எதிராக புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என சபதம் செய்தார். கனெக்டிகட்டிலிருந்து வரும் ஜனநாயகக் கட்சி செனெட்டர் அதே குழுவில் கிறிஸ்தோபர் மூர்பே மூனிச்சில் கிரஹாம் போலவே பேசினார். பொருளாதாரத் தடைகளை இரட்டிப்பாக்க அழுத்தம் கொடுப்பதில் அங்கு “கட்சி சார்ந்த பிளவு” இருக்காது என்றார்.

ரஷ்யா மீதாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் வாஷிங்டனின் நேட்டோ கூட்டாளிகளுக்கும் இடையில் இருக்கும் வெளிப்படையான வேறுபாடுகளுக்கு மத்தியில் –இவ்விடயம் தொடர்பாக வாஷிங்டனில் குழுக்குள்ளே இருக்கும் மோதல்களை பற்றிக் கூறத்தேவை இல்லை– அமெரிக்க–நேட்டோ ஆயுதமயமாக்கலானது சுமார் 4000 அமெரிக்கத் துருப்புக்களை கிழக்கு ஐரோப்பாவிற்குள் அனுப்புவதுடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அதேவேளையில் மூனிச்சில் உள்ள குறிப்புக்கள் மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றல் உடனடியாய் இல்லை என்று கருத்துரைத்தன.

மூனிச்சில் மாநாட்டிற்கு பென்சின் கருத்துக்களாக முன்வைத்தது பற்றி ரஷ்ய பாராளுமன்ற தலைவர் கொன்ஸ்ரன்டின் கொசாயேவ் பதில்கொடுத்தார், “இந்தப் பேச்சில் நான் எதனையும் கேட்கவில்லை. புதிய அமெரிக்கத் தலைவர்கள் முந்தைய நிர்வாகத்தில் திரண்டு கிடந்திருந்த எதிர்மறைக் கருத்துக்களைத்தான் மறுஉருவாக்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்.

பென்ஸ் பேச்சின் பெரும்பாலானவை அமெரிக்க இராணுவவாதத்தைக் கொண்டாடுவதாக இருந்தது மற்றும் ட்ரம்ப்பின் கீழ் அமெரிக்கா யுத்தத்தைக் கட்டி எழுப்பலை விரைவுபடுத்தும் என்றார்.

“அமெரிக்கா வலிமையாக இருக்கும், முன்னர் என்றுமிருந்ததை விடவும் வலிமையாக இருக்கும் என்று உங்களுக்கு நான் உறுதி தருகிறேன்” என்றார் துணை ஜனாதிபதி. நாம் எமது இராணுவத்தை பலப்படுத்துவோம், ஜனநாயகத்தின் ஆயுதத்தை மீட்போம், இன்று இங்கே கூடியுள்ள காங்கிரஸ் உறுப்பினர்களின் பல உறுப்பினர்களுடன் வேலை செய்கிறோம். நாம் படையினர், கடற்படையினர், விமானிகள், எல்லைக்காவலர்கள் ஆகியோரை புதுப்பிக்கப்பட்ட வளங்களுடன் சேர்த்து எமது தேசத்தையும் மற்றும் எமது கூட்டாளிகளையும் இன்றைய அச்சுறுத்தல்களிலிருந்தும் மற்றும் நாளைய தெரியா அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்போம்” என்றார்.

அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் மாட்டிஸ் ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்கா தலைமையிலான கூட்டிற்கு நிதியளிக்க தங்களின் “நிய்யமான பங்கை” அளிக்கத் தவறியமைக்காக கடிந்து கொண்டதை பென்ஸ் எதிரொலித்தார். “எமது பெரிய கூட்டாளிகளுள் சிலர்” தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை அர்ப்பணிக்க உறுதிசெய்வதற்கான ”பாதையில்” இல்லை என்றார். இதில் கருதப்பட்டது ஜேர்மனியாகும்.

மூனிச் மாநாட்டிற்கு அவரது சொந்த பாதுகாப்புக் குறிப்பாக, ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் மற்றும் நேட்டோ அது ஜேர்மனியில் அல்லது ஐரோப்பாவில் இருக்கையில் அதிகரித்த அளவுக்கு “அமெரிக்க நலனுக்காகவே” இருந்தது. ஜேர்மனி இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக –கிட்டத்தட்ட தற்போதைய இராணுவ வரவு-செலவு திட்டத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக மேர்க்கெல் கூறினார் “இந்த அர்ப்பணிப்புக்களை நிறைவேற்ற எம்மாலான எல்லாவற்றையும் செய்வோம்” என்றார்.

அவரது உரைக்குப் பின்னர், ஜேர்மனி இந்த ஆண்டு இராணுவ செலவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் “எப்படியோ நிறைய பணம் (தேசிய வரவு-செலவு திட்டத்திலிருந்து) உட்கிரகிக்கும் அளவு நாம் செய்ய முடியாது என்றார். அவரது குறிப்பு நாட்டின் இராணுவக் கட்டி எழுப்புதலுக்கு எதிராக பாரிய மக்களின் எதிர்ப்பை ஜேர்மன் ஆளும் நிர்வாகம் எதிர்கொள்கிறது என்ற உண்மையை எதிரொலித்தார் மற்றும் அதற்கான செலவானது சமூக செலவினங்களை கடுமையாய் வெட்டுவதன் மூலமும் வாழ்க்கைத்தரங்களை குறைப்பதன் மூலமும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்படும்.

மேர்க்கெல் மற்றும் ஜேர்மன் வெளிவிகார அமைச்சர் சிக்மார் காப்பிரியேல் இருவரும் நேட்டோவின் 2 சதவீத கட்டாய நிதி ஒதுக்கீடுக்கு ஜேர்மனியின் அகதிகளுக்கான செலவினமும் சமூக அபிவிருத்திக்கான செலவினமும் எதிராக வைக்க வேண்டும் என கருத்துரைத்தனர். ஆயினும், ஜேர்மனியின் மீளஇராணுவமயப் படுத்தலுக்காக வாஷிங்டனிலிருந்து வரும் கோரிக்கையானது எங்கும் வரவேற்கப்படுகிறது. ஜேர்மனியின் Der Spiegel  அதன் பிப்ரவரி 18 ஆசிரிய தலையங்கத்தில், ஜேர்மனியின் இராணுவ செலவினங்கள் பற்றி “டொனால்ட் ட்ரம்ப் சரியாக இருக்கிறார் என்று அறிவித்தது.

“ஐரோப்பிய வரலாற்றில், கண்டமானது தனது பாதுகாப்பினை அட்லாண்டிக் இற்கு அப்பாலிருந்த ஒரு பங்காளி முடிவடுக்க விடப்பட்ட நிலைமையானது மீட்கவியலாதவாறு கடந்துபோய்விட்டது. அது வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் இல்லாதபோது பிறகும் கூட தொடர்ந்திருக்கும்”, தலையங்கம், ட்ரம்ப் “மேற்கில் நெருக்கடியின் அறிகுறியே தவிர அதற்கான காரணம் அல்ல” என்று அறிவித்தது.

ஐரோப்பா இனியும் நிபந்தனையற்ற வகையில் அமெரிக்காவை நம்பி இருக்க முடியாது என்ற உண்மைக்காக தயார் செய்யப்படவில்லை எனில் விளைவுகள் பற்றி கவலைப்படாததாக மற்றும் அப்பாவித்தனமானதாக இருக்கும் என்று எச்சரித்ததன் மூலம் அது தொடர்கிறது.

தலையங்கமானது ஐரோப்பாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை பெரிய அளவில் விரிவாக்க வேண்டும் என்று ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தது. “ஐரோப்பா இளைய பங்காளியாக இருப்பது என்ற கருத்து இறுதியில் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தொலைத்தொழிந்துவிட்டது மற்றும் ஐரோப்பா தலைமையில் தனது சொந்த நலன்களை வரையறுக்கத் தொடங்குதற்கு அது ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறியது. இறுதியில் ஆசிரியத் தலையங்கம் ஆகக்குறைந்தது, ஜேர்மனியானது பிரான்ஸின் அணு ஆயுதத்தில் ஒரு மட்டத்திற்கு நம்பிக்கையை அபிவிருத்தி செய்ய முடியுமாயின், அதன் சொந்த அணு ஆயுதத்தை அபிவிருத்தி செய்யத் தேவை இருக்காது” என்றது.

உதவி ஜனாதிபதி பென்சின் உரையின் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், நேட்டோவிற்கு ஆதரவாக அது பன்முக கடமைப்பாடுகளை சேர்க்கின்ற அதேவேளை, அது ஐரோப்பிய ஒன்றியம் பற்றி ஒற்றைச் சொல்கூட குறிப்பிடவில்லை, அது மூனிச்சில் வாஷிங்டன் ஆனது ஐரோப்பாவின் செலவில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை மூர்க்கமுடன் பின்பற்றுவதற்கு வாஷிங்டன் புறப்படுகிறது என்று எச்சரிக்கையாக சிலர் எடுக்கின்றனர்.

மூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு தலைமை வகித்த வாஷிங்டனுக்கான முன்னாள் ஜேர்மன் தூதர் வொல்ஃப்காங் இஸிங்கர், Deutsche Welle  செய்தியாளரிடம் ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக தொடர்ந்து குரோதமாக நோக்கைத் தொடர்ந்து எடுத்தால், “அது இராணுவமல்லாத போர் அறிவிப்பின் ஒரு வகையாக இருக்கும். அதன் அர்த்தம் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் ஆகும். அதைத்தான் அமெரிக்கா விரும்புகிறதா? மீண்டும் அமெரிக்காவை பிரதானதானதாக்க செய்வதற்காக அவர் எப்படி விருப்பம் கொள்கிறார் என்பது இப்படித்தானா?”

மூனிச் மாநாட்டின் தொடக்கத்தில் அறிக்கையை இஸிங்கர் வரைந்திருந்தார். சர்வதேச நிலைமையானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எந்தப் புள்ளியிலும் வாதிக்கக்கூடிய அளவில் மிகவும் கொதிக்கும் நிலையில் இருக்கிறது என்று அது எச்சரித்தது மற்றும் “இந்த புதிய சகாப்தம் மீண்டும் பெரும் பதட்டங்களால் குறிக்கப்பட வேண்டுமா, சாத்தியமான வகையில், உலக பிரதான அரசுகளுக்கிடையில் நேரடியான மோதலாகக் கூட, குறைந்த பட்சம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எழுமா?” எனக் கேட்கிறது. மாநாட்டில் மேலாதிக்கம் செய்த விடயங்களை எடுத்துக் கொண்டால், அதே கேள்வி ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் கூட தெளிவாகவே பொருந்தும்.