ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German auto workers oppose Maruti Suzuki frame-up

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜோடிப்பு வழக்கினை ஜேர்மன் வாகனத் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்

By K. Nesan
5 April 2017

ஸ்ருட்கார்ட்-உன்டதுருக்ஹைம் (Stuttgart-Unteturkheim) இல் உள்ள டைய்ம்லர் தொழிற்சாலை முன்பாக, இந்திய வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட 31 தொழிலாளர்கள் சார்பில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) மூலமாக தொடங்கப்பட்ட பிரச்சாரத்திற்கு பல தொழிலாளர்கள் உடனடியாக ஆதரவளித்தனர். இந்தியாவில் அவர்களது சக தொழிலாளர்களை விடுவிக்கக் கோரி இணையவழி மனுவில் கையெழுத்திடுவதற்கும் பல டைய்ம்லர் தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டனர்.


ஸ்ருட்கார்ட்-உண்டதுருக்ஹைம் இல் உள்ள Mercedes-Benz தொழிற்சாலை

வட இந்திய மாநிலமான ஹரியானாவிலுள்ள மானேசரில் ஒரு நீதிமன்றம் நீதி மோசடியாக 13 மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது “ஆட்கொலை” குற்றத்தின் பேரில் கண்டனம் செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இன்னும் ஏனைய 18 தொழிலாளர்களுக்கு சிறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் நீண்டகால சிறை தண்டனைகளை விதித்துள்ளது. ICFI ஒரு அறிக்கையில் இந்த சட்ட ரீதியான சதியை நிராகரித்துள்ளதுடன், மாருதி சுசூகி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மார்ச் 29 அன்று, WSWS இன் நிருபர்கள் டைய்ம்லர் தொழிற்சாலை முன்பாக இந்த அறிக்கையினை ஒரு கையேடு வடிவில் விநியோகித்தனர். அது பின்வருமாறு கூறுகிறது: மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக நிறுவனம் மற்றும் அரசின் சதி வேட்டையை தோற்கடிக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தியாவிலும், தெற்காசியா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் சுயாதீனமான அரசியல் பலத்தை அணித்திரட்டும் நோக்கில் ஒரு சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.  ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அனைத்து தொழிலாளர்கள் மீதான தீர்ப்புகளை கைவிடகோரவும், மேலும் 2012ல் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துகொள்ள வலியுறுத்தவும், சர்வதேச தொழிலாளர் வர்க்கம் கண்டிப்பாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.”

காலை 6 மணிக்கு வேலை தொடங்கிய தொழிலாளர்களுக்கு 250 க்கும் மேற்பட்ட கையேடுகள் விநியோகிக்கப்பட்டது. நடைமுறையில் வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள மோசடிகள் பற்றி அப்போது அவர்கள் கேட்டனர், மேலும் அனைவரும் ஒரு கையேட்டினை எடுத்துக்கொண்டு, பிரச்சாரத்திற்கு அவர்களது ஆதரவையும் அறிவித்தனர். மிகக்குறைந்த ஊதியங்கள், குறுகிய கால, நிபந்தனையற்ற ஒப்பந்தங்கள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகள் ஆகியவற்றை மாருதி சுசூகி தொழிலாளர்கள் எதிர்த்துவந்ததால், மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாகமும், இந்திய அரசாங்கமும் அவர்களை இரக்கமற்ற வகையில் துன்புறுத்தியுள்ளன என்பதை பலரும் ஒப்புக்கொண்டனர். ஜேர்மனில் இதேபோன்ற போராட்டங்கள் உருவாகும்போது இதே வகையான முறைகள் பயன்படுத்தக்கூடும் என்று சில டைய்ம்லர் தொழிலாளர்கள் கருதினர்.

14.00 மணிக்கு வேலைமாற்ற நேரம் முடிவுற்றதை தொடர்ந்து, எண்ணற்ற தொழிலாளர்கள் WSWS இன் நிருபர்களுடன் பேசுவதற்காக நின்றனர். இந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை அவர்கள் ஒப்புக்கொள்வதாக கூறியதுடன், இணையவழி மனுவில் கையெழுத்திடவும் உறுதியளித்தனர். “எதுவாயினும், நாங்கள் அனைவரும் தொழிலாளர்கள், அதிலும் ஒரேமாதிரி நலன்களை கொண்டவர்கள்” என்ற வகையில், இந்தியாவில் உள்ள வேலை பேரழிவு நிலைமைகளுக்கும், வாழ்க்கை நிலைமைகளுக்கும் கண்டனம் தெரிவிப்பது முக்கியமானதென்று கருதுவதாக ஜேர்மனியில் சில தொழிலாளர்கள் கூறினர்.


WSWS நிருபர் ஒரு தொழிலாளியுடன் பேசுகிறார்

Roland பின்வருமாறு கூறினார், “இந்த தொழிலாளர்கள் வெளிப்படையாக தவறாக கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேலை நிலைமைகள் குறித்து என்னால் தெளிவாக யூகிக்க முடிகிறது, நிர்வாகம் அவர்களை ஒரு உதாரணமாக்கும் பொருட்டு வேண்டுமென்றே மிக கடுமையாக தண்டித்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கிறேன். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். நான் முப்பது வருடங்களாக இங்கு பணிபுரிந்துவருகின்ற நிலையிலும், தற்போது நான் எனது மேலதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களுக்கு ஆளாகிறேன். கூறப்படும் பிரச்சினைகளை அவர்கள் தான் உருவாக்கினார்கள் என்று இந்த ஆலையிலுள்ள தொழிலாளர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமைகள் இந்தியாவுடன் ஒப்பிடக்கூடியது என்று நான் கூறவில்லை, ஆனால் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் அழுத்தத்தை அதிகரித்துவருகிறது.

மற்றொரு தொழிலாளியான சினிசா, “நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உண்மையில் குற்றம்புரிந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. எனது கருத்தின்படி, அவர்கள் ஒருவேளை சிறந்த வேலை நிலைமைகளுக்கு கோரிக்கை வைத்து நிர்வாகத்திற்கு எதிராக போராடியிருக்கலாம். அவர்களது கோரிக்கைகளுக்காக போராட அவர்களுக்கு உரிமை இருக்கவேண்டும். இதுகுறித்து உண்மைகளை நீங்கள் கூற தொடங்கியுள்ளதால், உங்களது பிரச்சாரத்தை சிறந்ததென்றே கருதுகிறன். எதிர்காலத்தில் அவர்களது வேலை நிலைமைகள் குறித்து என்ன நடக்குமென்று எவருக்கும் தெரியாது. நிர்வாகம் வெறுமனே பொய்களை பரப்பிவருகின்ற நிலையில், அங்கு தொழிலாளர் தொகுப்பினரிடையே அமைதியின்மை அதிகரித்துவருகிறது” என்று கூறினார்.

ாஸாம் என்பவர், “எந்தவொரு உண்மையான ஆதாரமுமின்றி இந்த தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் கேள்விப்பட்டேன், மேலும் எனக்கு இது சர்வாதிகார நடவடிக்கைகள் போன்றே தோன்றுகிறது. உண்மையில், நான் எனது ஐக்கியத்தை வெளிப்படுத்தவேண்டும். நான் இந்த துண்டு பிரசுரத்தை கவனமாக படித்துவிட்டு உங்களது மனுவில் கையெழுத்திடுவேன். டைய்ம்லர் இல் வேலை நிலைமைகள் நன்றாக இல்லை என்றே பலரும் கருதுகின்றனர். நான் இங்கு முப்பது வருடங்களாக பணியாற்றிவருகிறேன். நான் பணிபுரியும் பகுதி கலைக்கப்படவுள்ளளது. 400 பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் என்ன செய்ய திட்டமிடுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. சிலர் மற்ற துறைகளுக்கு மாற்றப்பட கூடியவர்களாக உள்ளனர், அதே சமயத்தில் மற்றவர்கள் ஏதேனும் நிதி உதவி வழங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவர் என்று வதந்திகள் நிலவுகின்றன.” என்று குறிப்பிட்டார்.

“நான் தொழிற்சங்கத்தில் இருக்கிறேன் ஆனால் அவர்கள் ஒரு நல்ல வேலை செய்கிறார்கள் என்று நான் கருதவில்லை. அவர்கள் தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை, ஆனால் வெறுமனே நிறுவன நிர்வாகத்தின் கொள்கைகளை திணிக்கின்றனர். உண்மையில், நாம் மோசமான விளைவை மட்டுமே முகங்கொடுக்கிறோம்.” 

மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பதற்கான போராட்டத்திற்கு நானும் ஆதரவளிக்கிறேன் என்று பிராங் கூறினார். மேலும் அவர், “ஆசியாவில் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் கையாளப்படும் விதம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் நான் பார்த்தேன். பாகிஸ்தானில், ஒரு காலணி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு யூரோ சம்பாதிக்கிறார்கள். இத்தகைய நிலைமைகளுக்கு எதிராக போராடுவது தொழிலாளர்களுக்கு முற்றிலும் சரியானதேயாகும். மனித கண்ணியம் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம் செய்யப்பட்டுவருவதே மலிவுகூலி உழைப்பு என்பதாகும்” என்றும் தெரிவித்தார்.

“நான் இன்னும் உங்கள் துண்டுப்பிரசுரத்தை படிக்கவில்லை, ஆனால் தனிமைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தானே சொல்கிறீர்கள். முதலாளிகள் அவர்களது இலாபங்களை அதிகரிக்க எந்தளவுக்கு போகவும் தயாராக உள்ளனர். இந்த தொழிலாளர்களை விடுதலை செய்ய கோரும் மனுவிற்கு நான் ஆதரவளிக்கிறேன். 

“நான் பராமரிப்பு மற்றும் தயாரிப்பு பிரிவில் ஒரு துணை ஒப்பந்ததாரராக வேலை செய்கிறேன். டைய்ம்லர் இல் இரண்டு அல்லது மூன்று ஆண்டு கால ஒரு குறுக்கீட்டுடன், அனைத்து பொறுப்புக்களிலும் பணியாற்றி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளர்கள் மீது ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய மாற்றங்களை நான் சந்தித்து இருக்கிறேன். நாங்கள் இடையறாத அழுத்தத்தின் கீழ் இருக்கிறோம். பழைய காலத்தில் அரசர்களும், இளவரசர்களும் இதுபோன்ற முறைகளை பயன்படுத்தினர், தற்போது நிறுவன நிர்வாகங்கள் அதை செய்கின்றன.

டைய்ம்லர் இல் 10 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஹாலிம் என்பவர், “இது ஒரு அவமானம் ஆகும். நான் உங்களது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கிறேன். தொழிலாளர்களும் இந்த பிரச்சாரத்திற்கு கட்டாயமாக ஆதரவளிக்கவேண்டும். மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரோ என்றே நான் நினைக்கிறேன். தண்டிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருவதை மற்ற தொழிலாளர்களும் பார்க்கின்றனர். இதனால் நிறுவனம் விரும்பும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள செய்யும் வகையில் அவர்கள் மீது அழுத்தைத்தை இது ஏற்படுத்துகிறது. பணமும், அதிகாரமும் கொண்டவர்கள் அவர்கள் விரும்புவதை செய்யமுடியும். அது நிறுத்தப்படவேண்டும்.

“கடந்த ஆண்டில் நான் இந்த தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டேன். ஒன்பது ஆண்டுகளாக நான் பணியாற்றிவந்த, மற்றும் எனக்கு வேலை வழங்கிய துறை கலைக்கப்பட்டது. நான் இந்த சந்தர்ப்பத்தை நிராகரித்திருந்தால், வேலையிழந்தவனாகி இருப்பேன். இங்கே வேலை கடினமாக இருந்தபோதும், ஊதிய உயர்வு எதையும் என்னால் பெறமுடியவில்லை” என்று கூறினார்.