ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In wake of frame-up convictions of Maruti Suzuki workers

India’s finance minister meets with Maruti Suzuki chairman

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டதன் மத்தியில் 

இந்திய நிதி அமைச்சர் மாருதி சுசூகி நிறுவனத் தலைவரை சந்திக்கிறார்

By Shannon Jones
12 May 2017

13 மாருதி சுசூகி வாகனத் தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டு அவர்கள் சிறையிலிடப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜப்பானில் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் ஒசாமு சுசூகியை சந்தித்தார்.

ஏனைய முன்னணி ஜப்பானிய வணிகர்கள் பலரும் கலந்துகொண்டதான புதன்கிழமை கூட்டத்தை தொடர்ந்து, 2020 களின் தொடக்கத்தில் மேற்கு இந்தியாவில் சுசூகி அதன் புதிதாக கட்டப்பட்ட குஜராத் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக மற்றுமொரு 100 பில்லியன் யென்களை (US$880 million) முதலீடு செய்யவுள்ளதாக அது அறிவித்தது. இந்த தொகையானது இந்நிறுவனம் ஏற்கெனவே உறுதியளித்திருந்ததன்படி ஒரு புதிய முதலீடாகும். இந்திய வாகனச் சந்தையில் கிட்டத்தட்ட ஒரு பாதியை சுசூகி நிறுவனம் மட்டும் தனியாக கட்டுப்படுத்துகிறது என்பதுடன், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் தற்போதைய விற்பனையை இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மோடி நிர்வாகத்தின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” பிரச்சாரம் பற்றி ஜேட்லி வழங்கிய உரைகளில் இந்த முதலீடு பற்றிய தகவல்கள் வெளிவந்தன. பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஒரு மலிவு உழைப்பு களமாக இந்தியாவை சந்தைப்படுத்துவதே இந்த முயற்சியின் மைய நோக்கமாக இருக்கிறது. இதற்கு இணங்க, அடிபணிந்து செல்லும் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர் தொகுப்பை உறுதி செய்வதற்காக தொழிலாளர்களின் போராட்டங்களை மனிதாபிமானமற்ற முறையில் ஒடுக்க இந்திய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அதன் தொழிற்சாலையில் ஒரு மூன்றாவது உற்பத்திப் பிரிவை தொடங்கவிருப்பது உட்பட அதன் திட்டங்களை சுசூகி அறிவித்தது. 2019 ஆம் ஆண்டிற்கான வசதியுடன் ஒரு இரண்டாவது உற்பத்திப் பிரிவை தொடங்கவிருப்பதையும் இந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

மின்சார வாகனங்களுக்குரிய லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிக்க இந்தியாவில் கணிசமான முதலீடு செய்ய சுசூகி முன்னரே அறிவித்துள்ளது. அந்த கூட்டு திட்டத்தில் Toshiba மற்றும் Denso வும் அடங்கும். Toshiba வும் Denso வும் முறையே 40 சதவிகிதத்தையும், 10 சதவிகிதத்தையும் கட்டுப்படுத்தவிருக்கும் நிலையில், சுசூகி 50 சதவிகித பங்கை சொந்தமாகக் கொண்டிருக்கும்.

கொரியாவை சார்ந்த வாகன தயாரிப்பாளர் நிறுவனமான ஹூண்டாய் அதன் பங்கிற்கு இந்தியாவில் 2 பில்லியன் டாலர் தொகையினை முதலீடு செய்ய திட்டமிடுவதுடன், 2020-2021 வாக்கில் 1 மில்லியன் வாகனங்களை இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கம் “இந்தியாவில் உருவாக்குவோம்” (Make in India) திட்டத்தில் 1.5 டிரில்லியன் யென் (US$ 13.2 Billion) மதிப்பிலான தொகைக்கு ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் தொழில்துறை பகுதிகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் திட்டத்தை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. 

முதலீட்டு வாய்ப்புக்களை உயர்த்தவும் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்திய இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும் ஏதுவாக, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றுகின்ற ஜேட்லிக்கு அவரது ஐந்து நாட்கள் ஜப்பான் விஜயத்தின் ஒரு அங்கமாக சுசூகி நிறுவன தலைவருடனான சந்திப்பு நிகழ்ந்தது. இந்திய ஆளும் உயரடுக்கு, தொழிலாளர்களின் எதிர்ப்பை இரக்கமின்றி ஒடுக்கும் என்பது போன்ற இந்திய நிதித் தலைவரின் உறுதியளிப்பையும் இது கொண்டிருந்தது.

அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ மூலோபாய கூட்டணியை ஏற்பாடு செய்வதில், முக்கியமாக சீனாவுடனான ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்வதில் நோக்கம் கொண்டு, இந்தியா ஜப்பானுடனான தனது இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் அந்நாட்டின் இராணுவ சக்திகளை கணிசமாக விரிவுபடுத்துவதற்கான பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய அரசியலமைப்பிலுள்ள இராணுவவாத எதிர்ப்பு விதிகளை செல்லுபடியற்றதாக்க முனைந்து வருகின்றனர்.

ஜேட்லியின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கும், டொயோட்டா அதிபர் அகியோ டோயோடா மற்றும் ஒசாமு சுசூகிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவில் ஜப்பானின் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. 2000ல் இருந்து ஜப்பான் வெளிநாட்டு நேரடி முதலீடாக இந்தியாவிற்குள் 25.2 பில்லியன் டாலர் தொகையினை கொட்டியுள்ளது.

விஜயத்தின் பின்னணியில், மாருதி சுசூகி மானேசர் தொழிற்சாலையில் 2012 ஜூலை 18 அன்று நிறுவனத்தின் மூலம் தூண்டிவிடப்பட்ட கைகலப்பின்போது நிறுவன மேலாளர் ஒருவரை கொன்றதாக ஜோடிப்பு வழக்குகள் புனையப்பட்டு இந்த ஆண்டு ஆரம்பத்தில் தண்டனைக்குட்படுத்தப்பட்ட முன்னாள் தொழிலாளர்கள் மீதான இந்தியாவின் தொடர்ந்த துன்புறுத்துதல் காரணமாக இருந்தது. இந்த விவகாரத்தில் 13 தொழிலாளர்கள் அவர்கள் பங்கிற்கு ஆயுள் தண்டனையை பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேர், அதிகாரிகள், சார்பு நிறுவனத் தொழிற்சங்கம் மற்றும் மாருதி உத்யோக் காம்கர் யூனியன் அல்லது MUKU (Maruti Udyog Kamgar Union) இவற்றிற்கு எதிராக தொழிற்சாலையில் தொழிலாளர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) தலைமையை சார்ந்தவர்கள்.

மானேசர் தொழிலாளர் தொகுப்பிலிருந்து தீடீர் பணிநீக்கத்தை செயல்படுத்த 2012 ஜூலை 18ம் தேதிய நிகழ்வை நிர்வாகம் பயன்படுத்தியதானது, தொழிற்சாலையில் 2,300 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதியவர்களை பணியமர்த்தும் விளைவை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்றாண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டனர். மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 2011-2012 காலகட்டத்தில் மானேசர் ஆலையில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதற்கு வழிவகுத்தது.

இந்த சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், தொழிற்சாலையில் உள்ள மலிவுகூலி உழைப்பு ஆட்சியின் மீதான எதிர்ப்பை அச்சுறுத்துவதில் முக்கிய நோக்கம் கொண்டும், துரிதப்படுத்துதல் மற்றும் குறைந்த ஊதியத்திற்கும் எதிரான எந்தவொரு போராட்டத்தையும் இந்திய அதிகாரத்துவம் ஒடுக்கவிருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையிலும் மோசமானவைகளாக இருந்தன.

ஒரு நிறுவன வழக்கறிஞரே வாதித் தரப்பிற்கு ஆலோசகராக இருந்தார். மேலும் தொழிலாளர்கள், சார்புடையவர்களாக இருப்பார்கள் என்பதனால் அவர்களை நம்பமுடியாத சாட்சியங்களாக கருதி, அவர்கள் பொய்யான சாட்சியங்கள் அளிக்கக்கூடும் என்ற அடிப்படையில் எந்தவொரு தொழிலாளிக்கும் சாட்சியமளிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், முறையான செயல்முறை மீதான ஒரு அடிப்படைத் தாக்குதலாக, பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் வாதித் தரப்பினரின் முக்கிய சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களை குற்றமற்றவர்களாக நிரூபிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, வழக்கு விசாரணை குறித்த ஆதாரத்தின் சுமைகளை வாதித் தரப்பிடமிருந்து தொழிலாளர்கள் பக்கம் மாற்றுவதற்கு நீதிபதி முயற்சித்தார்.

அப்பட்டமாக அதிகாரத்துவத்தின் சார்பாக வாதித்தரப்பு இருப்பினும், 2012 ஜூலை கைகலப்பின்போது முதலாவதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிடப்பட்ட 150 தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதில் பிரதிவாதித்தரப்பு இறுதியாக அவர்களை பாதுகாத்தனர். நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற வகையில் வாதித் தரப்பினால் புனையப்பட்ட ஆதாரங்களை அவர்கள் இறுதியாக நிரூபித்தனர்.

இருந்தாலும், கொடூரமான ஆயுள் தண்டனைக்குள்ளான 13 தொழிலாளர்களை வாதித்தரப்பு குற்றவாளிகளாக்கியது.

13 தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டது இந்தியா முழுவதிலும் சூறாவளித் தன்மை கொண்ட ஆர்ப்பாட்டங்களை எழுப்பியது. இருப்பினும், மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும், ஒடுக்கவும், ஜோடிப்பு வழக்கு குறித்த எதிர்ப்பை திசைதிருப்பவும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் இயன்றவரை செயலாற்றியுள்ளன. இந்திய தொழிற்சங்கங்களின் ஸ்ராலினிச சார்பு மையம் (Pro-Stalinist Centre of Indian Trade Unions - CITU) அதன் வருடாந்திர மே தின அறிக்கையில் மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தியாவில் ஸ்ராலினிச சார்பு பாராளுமன்ற அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை இதேபோன்று தனிமைப்படுத்தியுள்ளன. ஸ்ராலினிச சார்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பத்தரிகை, பல வாரங்களாக, இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. அனைத்திற்கும் மேலாக, மாருதி சுசூகி தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் இந்தியா முழுவதிலுமான தொழில்துறை தொழிலாளர்களின் பரந்ததொரு கிளர்ச்சியைத் தூண்டிவிடக்கூடுமென்றும், நாட்டை ஒரு மலிவு உழைப்பு களமாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை அச்சுறுத்தும் என்றும் அனைத்து ஸ்ராலினிஸ்டுகளும் பீதியடைந்துள்ளனர்.