ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Miners walkout in Indonesia and Australia

Workers Struggles: Asia, Australia and the Pacific

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சுரங்க தொழிலாளர் வெளிநடப்பு

தொழிலாளர்கள் போராட்டம்: ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக்

20 May 2017

ஆசியா

இந்தோனிசியன் கப்பல்துறை தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பினை திரும்பப்பெற்றுக்கொண்டது

தன்யுங் பிரிஒக் (Tanjung Priok) துறைமுகத்தில் 2000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், நிறுவனத்துடன் ஒரு ”ஆக்கபூர்வமான உடன்படிக்கை” அடைந்துவிட்டது என கோரி, மே 15-20 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கான திட்டத்திலிருந்து பின்வாங்கிக்கொண்டது. அந்த நாட்டின் மிகப்பெரிய கொள்கலன்கள் துறைமுகமானது PT ஜகர்த்தா சர்வதேச கொள்கலன் முனையத்தால் (Jakarta International Container Terminal - JICT) நிர்வகிக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்துக்கு சொந்தமான பெலின்டோ II (Pelindo II) 48.9 சதவீத வசதியினைக் கொண்டிருக்கிறது மேலும் ஹாங் கோங் கில் தலைமையாக கொண்டு விளங்கும் ஹட்சிசன் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (Hutchison Ports Holdings - HPH) 51 சதவீத்தினை கொண்டிருக்கிறது.

JICT இல் HPHஇன் ஒப்பந்தத்தை 2039வரை நீட்டித்ததைக் எதிர்ப்பதாக இந்த வெளிநடப்புப் போராட்டம் இருந்தது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக கட்டணம் செலுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலன்களை JICT இன் இயக்குனர் வாரியம் வெட்டுவதாக தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியது. HPH கடந்தகாலத்தில் தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்தது மற்றும் ஊக்கத்தொகையை வெட்டியது என கோரி கப்பல் கட்டும் தொழிலாளர்கள் ஏப்ரல் 6 இல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

ஒப்பந்தம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தொழிற்சங்கம் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிடப்பட்டிருந்தது. அதில் நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தொழிலாளர் இழப்புக்களை குறைப்பதாக JICT இயக்குநர்கள் ஒத்துக்கொண்டதாக கூறியது.

இந்தோனிசியா: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்களை ஃபிரிபோர்ட் வேலை நீக்கம் செய்தது

மே 1 அன்று பெருந்திரளான பணிநீக்கங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்தபிறகு 8000 க்கு அதிகமான நிரந்தர மற்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கு பப்புவாவில்லிருக்கும் ஃபிரிபோர்ட் பெருத்த கிராஷ்பெர்க் செப்பு சுரங்கத்தில் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தோனிசியா ஃபிரிபோர்ட்டிலுள்ள இரசாயண, எரிசக்தி மற்றும் சுரங்கத் தொழிலாளர் சங்கம் (the Chemical, Energy and Mining Workers Union [SP-KEP]) ஒரு மாத வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது.

தொழில்துறை நடவடிக்கையானது சட்டவிரோதமானது என்றும் விடுமுறை இல்லாது வேலைக்கு வராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மற்றும் ஐந்து நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் செய்பவர்கள், அவர்களது  பணியிலிருந்து நீக்கப்படுவர் என்றும் ஃபிரிபோர்ட் அறிவித்திருந்தது. இதுவரையில் 840க்கு மேற்பட்டவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இந்தோனிசியாவில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது சட்டவிரோதமானதாகும்.

இந்தோனிசியா அரசாங்கத்துடன் அதன் நடப்பு ஒப்பந்த பிரச்சனை காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால் இது 5,000 பணியிடங்களை இல்லாமல் செய்ய முடியும் என இந்த நிறுவனம் கோரியிருக்கிறது, இது ஏற்கனவே ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை பணிநீக்கம் (விடுப்புக்கொடுத்துவிட்டு) செய்திருக்கிறது. புதிய அரசாங்கத்தின் விதிகளின்படி இந்த நிறுவனம் ஒரு புதிய சுரங்க அனுமதியைப் பெறவேண்டும். 51 சதவீத பங்குகளை விற்கவேண்டும், இரண்டாவது செப்பு உருக்காலையை கட்ட வேண்டும், நடுவர் தீர்ப்பாயத்தை கைவிடவேண்டும் மேலும் புதிய வரிகள் மற்றும் ஆதாயவரிகள் போன்றவற்றை செலுத்தவேண்டும். கிராஷ்பெர்க் இல் உற்பத்தியானது 60 சதவீதம் குறைக்கப்படலாம் என ஃபிரிபோர்ட் கோரியுள்ளது.

ஃபிரிபோர்ட் ஒரு விடுமுறை அளிக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. குறுகிய நேர அறிவிப்பு மூலம் தொழிலாளர்களுக்கு நீண்ட கால விடுப்பினைக் கொடுக்கின்றனர். விடுப்பு  நாளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்ட போதிலும் தொழிலாளர்கள் அதிக வேலைக்கான சம்பளக் கூலி, தங்கும் வசதி உட்பட பல்வேறு நலன்களை இழக்க நேரிடுகிறது.  இரண்டு நாட்கள் அறிவித்தல் கொடுக்கப்பட்டு நிறுவனத்தின் தங்கும் இடத்திலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

கம்போடியா ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்

தென்கொரியாவுக்கு சொந்தமான கெளவோன் ஆடைத் தொழிற்சாலையிடம்   கடந்த வாரத்தில் நான்காவது தடவையாக ஏப்ரல் மாத சம்பளத்தைக் கேட்டு புதன்கிழமையன்று தெக்மாஓ வில் தேசிய சாலை 21 இல் சுமார் 300 ஆடைத் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். நிறுவன முதலாளி ஏப்ரல் மாத சம்பளம் 153 டாலர் முழுத்தொகையினை செலுத்தத் தவறியதால் தொழிலாளர்கள் மே 12 அன்று மாலையில் சாலையினை மறிக்கத் தொடங்கிவிட்டனர். தொழிலாளர்கள் 20 டாலர் மற்றும் 50 டாலருக்கு இடையில் மட்டுமே பெற்றிருந்தனர்.

நிறுவனம் நிதி நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாலும்,  மே 20 அன்று முழு சம்பளத்தையும் அளிப்பதற்காக வங்கிக்கடனை ஏற்பாடு செய்திருப்பதாக நிர்வாகம் தொழிலாளர்களிடம் கூறியது. ஆடைத் தொழிலாளர்கள் அவர்களுடைய முழு சம்பளத்தினையும் கொடுக்காத பட்சத்தில் அவர்கள் வேலைக்குத் திரும்பப்போவதில்லை என்று கூறினார்கள்.

இந்தியா: ஹைதராபாத் மருத்துவமனைத் துப்புரவு பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்திலுருக்கும் அனைத்து அரசாங்க மருத்துவக் கல்லூரிகளின் ஒப்பந்த துப்புரவுபணித்  தொழிலாளர்கள் புதன்கிழமையன்று ஒரு குறைந்தபட்ச சம்பள உயர்வு கோரி வெளிநடப்புப் போராட்டம் செய்தனர். 2012ல் குறைந்தது மாத சம்பளம் 9,300 ரூபாயாக (145 அமெரிக்க டாலர்) இருக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்ட அரசாங்க உத்தரவு 68 இனை அமுல்படுத்தவேண்டும் என தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர். தற்போது 6000 க்கும் 7000 ரூபாய்க்கிடையில் கொடுக்கப்படுகிறது. மருத்துவ துப்புரவுப்பணித் தொழிலாளர்கள் நகரத்தில் சுமார் 2000மும் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 5000 மும் பணியிலிருக்கிறார்கள்.

தமிழ்நாடு பேருந்து தொழிலாளர்களின் போராட்டத்தை மேல்மட்ட தொழிற்சங்க அமைப்புக்கள் முடித்துக்கொண்டன.

பத்து பயணிகள் பேருந்து தொழிற்சங்கங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் மேல்மட்ட தொழிற்சங்க அமைப்புக்கள் வெறும் 24 மணிநேரத்திற்குப் பிறகு சிறிய ஆதாயங்களுடன் 1,00,000 அரசாங்க போக்குவரத்து தொழிலாளர்களின்   காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொண்டன. தொழிலாளர் முன்னேற்ற முன்னணி, ஸ்டாலினிச கட்டுப்பாட்டிலுள்ள இந்திய தொழிற்சங்களின் மையம் மற்றும், அனைத்து இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க மாநாடு ஆகியன கொடுக்கப்படாமல் இருக்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு 12.5 பில்லியன் ரூபாயினை தருவதாக அரசாங்கத்திலிருந்து வந்த பேரத்தினை ஒப்புக்கொண்டன. இது தொழிலாளர்களின் கோரிக்கைளில் ஒரு பகுதியளவு மட்டுமே திருப்தியடையவைத்தது.

தொழிலாளர்களின் கூற்றுப்படி,  ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு 14.8 பில்லியன் ரூபாயும், தற்பொது பணியிலிருப்பவர்களுக்கு 2.5 பில்லியன்   ரூபாயும், 47.3 பில்லியன் ரூபாய் செலுத்தப்படாத ஊதியமும் மாநில போக்குவரத்துக் கழகத்தால் கொடுக்கவேண்டியிருக்கிறது. 

போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15 அன்று நான்கு பிரதான கோரிக்கைகைளை வைத்து வெளி நடப்பு செய்தன. தாமதமான செலுத்தவேண்டிய ஊதியங்கள் மற்றும் ஒரு புதிய சம்பள ஒப்பந்தம், மற்றும் செயல்பாட்டுகளுக்கான கடனாகவும், புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நிதியாவும் போக்குவரத்து கழகத்தால் பயன்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு திருப்பி செலுத்தவேண்டிய பணமான 60 மில்லியன் ரூபாய் (வருங்கால வைப்புநிதியாக சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தது உட்பட) ஆகியன உள்ளடங்கியிருந்தன.

இந்த வேலைநிறுத்தத்தால் குறைந்தபட்சம் 22,000 பேருந்துகள் ஓடாமல் நிறுத்தப்பட்டிருந்தன.  வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று பிரகடனம் செய்யப்போவதாக அரசாங்கம் அவர்களை அச்சுறுத்தியிருந்தது, அதன் மூலமாக கடுமையான அபராதங்கள் மற்றும்   சிறையிலடைப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான்: சிந்துமாகாண மருத்துவமனை நிலமைகளை எதிர்த்து துணை மருத்துவக்குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

லர்கனாவில் இருக்கும் ஷன்ட்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாகிஸ்தான் துணைமருத்துவக்குழு பணியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலைநிலமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கு புதன்கிழனையன்று  பணிகளைப் புறக்கணித்தனர் மேலும் மருத்துவனை மருத்துவ கருவிகள் பராமரிக்கப்படவேண்டியதைக் கோரினர். இந்தப் போராட்டம் வெளி நோயாளிகள் பிரிவு, ஆய்வுக்கூடம் மற்றும் மருந்தகப் பகுதிகள் போன்ற முக்கியமான சேவைகளை முடக்கியது.

ஒரு மாதத்துக்கு மேலாக எக்ஸ்-ரே பகுதிகள் மூடப்பட்டுவிட்டன மேலும் அறுவைச் சிகிச்சை பகுதியிலுள்ள காற்றுசீரமைக்கும் இயந்திரம் செயற்படுவதில்லை என ஒரு துணைமருத்துவக்குழு உறுப்பினர் கூறினார். கொடுமைப்படுத்தி மற்றும் கட்டாயப்படுத்தி பணிமாற்றத்தை விதிக்கும் மருத்துவக் கண்காணிப்பாளரை அவர்கள் குற்றம்சாட்டி அவரை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பஞ்சாப் அரசாங்க எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மே 11 ன்று முல்டனில் அரசாங்க எழுத்தர்கள் 50 சதவீத சம்பள உயர்வு மற்றும் வாழ்க்கை அத்தியாவசியப் பொருட்களின்மீது வரிகளைக் குறைக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நகரத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய பேரணி நடந்தது. அனைத்து பாகிஸ்தான் எழுத்தர்கள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஒருங்கிணைந்த வெகுஜன கூட்டத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறினால் விளைவுகளைப்பற்றி அச்சுறுத்தியது.  ஒரு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வுக்காக சமீபத்திய ஆண்டுகளில் பலவற்றில் ஒன்றாக இந்த ஆர்ப்பாட்டம் இருந்தது.

பஞ்சாப் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்

பஞ்சாப் அரசாங்க ஆசிரியர்கள் சம்பள உயர்வு, பணி உயர்வு, கற்பித்தலுக்கான கொடுப்பனவு மற்றும் ஊக்க ஊதியம் உட்பட பல நீண்ட கால கோரிக்கைகளுக்காக புதன்கிழமையன்று லாகூரில் பஞ்சாப் சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  அவர்களுடைய சம்பள அலகுகளை உயர்த்துவதற்கும் மற்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக அவர்கள் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார்கள். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு சம்பள உயர்வு அதிகரிப்பு சில ஆசிரியர்களுக்கு செய்யாமல் இருக்கிறது.

பள்ளிகளை தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகவும் ஆசிரியர்கள் போராடினார்கள். 2016ன் ஆரம்பத்திலிருந்து அவர்கள் இதற்கான போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அண்மையில் உருவாக்கப்பட்ட பஞ்சாப் கல்வி அறக்கட்டளையால் பஞ்சாப் அரசாங்கத்தின் பொது-தனியார் கூட்டு ஒப்பந்தம் பொது கல்வி நிர்வாகத்தை அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமும், தனியார்துறையிடமும் நிர்வகிப்பதற்காக தூக்கிகொடுக்கப்படுகிறது. இது மேலும் ஒரு 5000 பள்ளிகளைப் பாதிப்புக்குள்ளாக்கும்.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் கல்விக்கான வருட வரவுசெலவு பட்டியலிருந்து வெட்டியிருக்கிறது அல்லது முடக்கியிருக்கிறது. ஏற்கனவே தேவைகுறைந்த மற்றும் நொறுங்கிய நிலையிலிருக்கும் சேவையானது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது மேலும் தனியார்மயப்படுத்துவதால் பாகிஸ்தானில் இலவசக் கல்வி அகற்றப்பட்டுவிடும் என ஆசிரியர்கள் பயப்படுகிறார்கள்.

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் மன்றம் மதபண்டிகையான ரம்லான் விடுமுறை நாட்களில் அதிகமான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவதென அச்சுறுத்தியிருக்கிறது.