ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On-the-Spot from New Delhi
Lawyer for Maruti Suzuki workers denounces frame-up

மாருதி சுசூகி தொழிலாளர்களின் வழக்கறிஞர் ஜோடிப்பு வழக்கை கண்டனம் செய்கிறார்.

By our correspondents
21 June 2017

ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த மானேசரிலுள்ள மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் போர்குணமிக்க தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும், விதிக்கப்பட்ட மிருகத்தனமான தண்டனைகளையும் தகர்த்தெறியப் போராடுபவர்களுடன் பேசுவதற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் குழு ஒன்று இந்திய தலைநகரமான தில்லி மற்றும் அதற்கு அருகிலுள்ள குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதிக்கு கடந்த மாதம் விஜயம் செய்தது.

ஜூலை 18, 2012 அன்று மாருதி சுசூகி நிறுவன தொழிற்சாலை தளம் ஒன்றில் நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட கைகலப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவத்தினால் உருவான புகையினை உள்ளிழுத்து அந்த நிறுவன மேலாளர் ஒருவர் மரணமடைந்தது குறித்து எழுப்பப்பட்ட ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 வாகனத் தொழிலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சற்று குறைந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் மற்றொரு 18 தொழிலாளர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட்டது.


ரெபேக்கா ஜோன்

ஒரு மூத்த வழக்கறிஞரும், மாருதி சுசூகி தொழிலாளர்களின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவருமான ரெபேக்கா ஜோனை செய்தியாளர் குழு சந்தித்தது. புது தில்லி, பாதுகாப்பு காலனியில் இருக்கும் இந்த வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் அவர்கள் நுழைந்தபோது, தொழிலாளர்களை குற்றவாளிகளென தீர்ப்பளித்து தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டில் ஜோன் இறுதித் திருத்தங்களை செய்துகொண்டிருந்தார். தற்போது, சண்டிகரிலுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு வெற்றிபெறுமென ஜோன் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தினார், அசல் விசாரணையின்போது, பொலிஸ் ஆதாரங்களை ஜோடித்தது மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டது என்பதை பிரதிவாதித் தரப்பு நிரூபித்ததை குறிப்பிட்டார், மேலும் வாதித் தரப்பு மற்றொரு வகையில் முழுமையாக முரண்பாடுகளையும், ஆதாரங்கள் தொடர்பாக ஓட்டைகளையும் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினர்.

“148 தொழிலாளர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். அதுவே ஒரு பெரிய வெற்றியாகும். ஏனெனில், இவை ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் என்பதை இது காட்டுகின்றது. தனிப்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களை தேடுவதற்கு பொலிஸ் முனையவில்லை. முடிந்தவரை அதிகளவு தொழிலாளர்களைச் சுற்றிவளைத்து பிடிப்பதில் மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருந்தனர்” என்று ஜோன் கூறினார்.

“ஒரு வழக்கில் 148 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், 117 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து, வழக்கிற்கு அடிப்படையாக இருந்த அடித்தளம் சரிந்துவிட்டது என்றுதான் நான் கூறுவேன்.

நிறுவன சார்புடைய மற்றும் அரசாங்க ஆதரவுபெற்ற தொழிற்சங்கத்திற்கு எதிராக நடந்த ஒரு கிளர்ச்சியின்போது, 2011-12 இல் மானேசர் தொழிற்சாலையில் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் 12 பேரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த 13 தொழிலாளர்களில் அடங்குவர் என்ற உண்மை குறித்து ஜோன் கருத்து தெரிவித்தார். “அவர்களை அடையாளம் காணவும், பெயரைக் குறிப்பிடவும், மேலும் பொய்யாக அவர்களது பாத்திரங்களை ஏற்றிக் கூறவும் பொலிஸூக்கும், நிர்வாகத்திற்கும் மிக எளிதாக இருந்தது. நீங்கள் ஒரு போராட்டத்தின் முன்னணியில் இருந்தால், நீங்கள் அறியப்பட்ட முகங்கள் ஆவீர்கள். உண்மையில், அவர்கள் தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்தனர் என்பது மட்டும்தான் வாதித் தரப்பினரால் அவர்கள் அடையாளம் காட்டப்பட்டதற்கான ஒரே காரணமாகும். அவர்களின் பெயர்கள் நன்கு அறியப்பட்டவையாக இருந்தன. மேலும் அவர்களது முகங்களும் நன்கு அறியப்பட்டவை, என்பதனாலேயே அவர்களை அடையாளம் காண்பது எளிதாக இருந்தது.”

அவர்களின் விதியை, நீதிமன்றம் விடுவிக்கவேண்டி இருந்த அந்த 117 பேருடன் அவர் வேறுபடுத்திக் காட்டினார். “நிர்வாகத்தை சார்ந்த எவரும் அவர்களில் எவரையும் அடையாளம் காட்ட முடியாது. மாருதி சுசூகி நிர்வாகத்தால் பொலிஸூக்கு வழங்கப்பட்ட பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் எளிதாக தூக்கப்பட்டனர்.

“இந்த வழக்கை முழுமையாக பார்ப்போம்,” என்று ஜோன் தொடர்ந்து பேசினார். “நிச்சயமாக ஒரு நபர் இறந்துவிட்டார். நிச்சயமாக சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கேள்வி என்னவென்றால்: ஒரு குற்றவியல் வழக்கில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை மட்டுமே காரணமாக காட்ட வேண்டும். மேலும் அவர் செய்ததாக நீங்கள் கூறுவதை, உண்மையில் அவர் செய்தார் என்று நீங்கள் நிரூபிக்கவேண்டும்.”

வாதித் தரப்பு அதன் வழக்கை நிரூபிக்க தவறியதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் இலக்காக தொழிலாளர்கள் இருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டும் முக்கிய சட்டரீதியான விஷயங்களை அவர் முன்னிலைப்படுத்திக் கூறினார்.

“(மேலாளர் அவனிஷ் தேவ்) தப்பித்து செல்லமுடியாத அளவிற்கு அவர் கால்களில் தாக்கப்பட்டிருந்தார் என்பதே வாதித் தரப்பின் முக்கிய வழக்காக இருந்தது. பின்னர் M-1 அறையில் நெருப்பு பற்றவைக்கப்பட்டது. நெருப்பைப் பற்றவைத்தது யாரென்று வாதித் தரப்பினரால் நிரூபிக்க முடியாது என்பதை எவரும் நிராகரிக்க முடியாதென நான் சவால் விடுகிறேன் என்று நீதிமன்றத்தில் நான் வாதிட்டேன்.

“ ‘A’ என்ற ஏதோவொரு நபர்தான் நெருப்பை பற்றவைத்தார் என்று உங்களால் அடையாளம் காட்ட முடியாதபோது, அது பின்னர் M-1 அறைக்கு பரவியதாகவும், அது பின்னர் அவனிஷ் தேவ் இன் மரணத்தை விளைவித்தது என்றும் கூறுவீர்களாயின், அங்கே ஒரு வழக்கிற்கு இடமில்லை - வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மட்டும் தான்.

“நெருப்பை பற்றவைத்தது யாரென்று ஆவணபூர்வமான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் முற்றிலும் இல்லை. எனவே இந்த கொலை குற்றச்சாட்டு தக்க வைக்க முடியாதது.

“அந்த நேரத்தில் தொழிற்சாலை வளாகத்தில் 700 க்கும் அதிகமானோர் இருந்தனர் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தவிர, நிர்வாக அதிகாரிகள், நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குர்கான் பொலிஸ் நிலையத்திலிருந்து வந்திருந்த பொலிஸ் ஆகியோர் அங்கு இருந்தனர். அங்கிருந்தவர்களில், இந்த 13 பேர் தான் நெருப்பை பற்றவைத்திருப்பார்கள் என்று அவர்களை மட்டும் நீங்கள் எப்படிக் குற்றம்சாட்ட முடியும்? நெருப்பைப் பற்றவைத்தது யாரென்று எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதை செய்தவர் அங்கிருந்த மற்றவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.”

வாதித் தரப்பு, வழக்கு பற்றிய அதன் விளக்ககுறிப்பின் ஒரு முக்கிய பகுதியில் “மோசடியான” மாற்றத்தை செய்ததை ரெபேக்கா ஜோன் சுட்டிக்காட்டினார். ஆரம்பத்தில், தொழிலாளர்கள் இரும்புத் தடிகள் மற்றும் கம்புகளைக் கொண்டு நிறுவன மேலாளர்களை தாக்கியதாக அதிகாரிகள் கூறினர். பின்னர், தொழிலாளர்கள் கதவு உத்திரங்களையும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களையும் ஆயுதங்களாகப் பிரயோகித்ததாக வாதித் தரப்பு கூறியதாக பொலிஸின் முதல் தகவல் அறிக்கையில் (First Information Report - FIR) கூறப்பட்டிருந்ததுடன் அது வெளிப்படையான முரண்பாட்டைக் கொண்டிருந்தது.

“கதவு உத்திரங்களும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களும்,” “ஒரு வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையில் உடனடியாக கிடைக்கும். மறுபுறம், பெருமளவில் கம்புகளும், இரும்புத் தடிகளும் வெளியிலிருந்து தொழிற்சாலைக்குள் கொண்டுவரப்பட்டது என்பதை வாதித் தரப்பு நிரூபிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். அவர்களால் அதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, கம்புகளும், இரும்புத் தடிகளும் தான் பயன்படுத்தப்பட்டிருந்ததாக FIR ல் திட்டவட்டமாக கூறியிருந்தாலும், வாதித் தரப்பு மிகவும் வசதியாக அதை கதவு உத்திரங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் எந்திரங்கள் என்று மாற்றியது” என்று ஜோன் கூறினார்.

நீதிமன்றத்தில், ஜோன் விளக்கியதுபோல, “பொலிஸூம், வாதித் தரப்பும் அவர்களது அசல் கூற்றின்படி குண்டாந்தடிகள் (lathis) தான் பயன்படுத்தப்பட்டது என்பதில் சிக்கியிருந்தால், இந்த வழக்கு தகர்ந்து போயிருக்கும் என்பதால் தான், பொய்யாக தொழிலாளர்களை சிக்கவைப்பதற்காக,” ஆயுதங்களில் இந்த மாற்றத்தை செய்தனர், என்று அவர் வாதிட்டார்.

“எனவே, அவர்கள் தொழிற்சாலை வளாகத்திற்குள் உடனடியாக கிடைக்கக்கூடிய ‘ஆயுதங்களை அறிமுகப்படுத்தினர். நீதிமன்றத்தில் நான் அவர்களை “மாற்று ஆயுதங்கள்” என்று அழைத்தேன், மேலும் இந்த வழக்குப் பதிவின்படி இந்த மாற்றம் வெளிப்படையாக இருந்ததாக நான் கூறினேன். பொய்களையும், தவறான கூற்றுக்களையுமே வாதித் தரப்பு அடிப்படையாக கொண்டிருந்ததை காட்டிய மற்றொரு சம்பவமாக இது இருந்தது.”

மலிவுகூலி உழைப்பு வேலையிட நிலைமைகள் மீதான எதிர்ப்பை மாருதி சுசூகி தொழிலாளர்களின் போராட்டம் தூண்டியது. மேலே படத்தில், அக்டோபர் 2011 ல் மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சுசூகி பவர்ட்ரெய்ன் தொழிலாளர்கள் அனுதாப வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.

தொழிற்சாலையின் மற்றொரு பகுதியிலிருந்து கதவு உத்திரங்களையும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களையும் தொழிலாளர்கள் திருடி விட்டதாக கூறிய வாதித் தரப்பின் கூற்றுக்களை எதிர்த்து, ஜோன் பின்வருமாறு கூறினார்: “இந்த சம்பவத்திற்கு முன்னர் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதவு உத்திரங்களையும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களையும் கொண்டிருந்தது, ஆனால் பின்னர் அது குறைந்துள்ளது என்று காண்பிக்க வாதித்தரப்பு எந்தவொரு ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. கதவு உத்திரங்களும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களும் அங்கிருந்து எடுக்கப்பட்டதை காண்பிக்க அங்கு எவ்வித ஆதாரமும் இல்லை.”

மேலும், சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கதவு உத்திரங்களும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களும் பின்னர் பல தொழிலாளர்களின் வீடுகளிலிருந்து மீட்கப்பட்டன என்பது போன்ற பொலிஸ் மற்றும் வாதித் தரப்பின் கூற்றுக்களில் இருந்த எண்ணற்ற முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இது முட்டாள்தனமானது. தொழிலாளர்கள் குற்றம் செய்திருந்து, அதில் அவர்கள் கதவு உத்திரங்களையும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களையும் பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அவற்றை அவர்கள் வீசியெறிந்திருப்பார்களேயன்றி, அவர்களது வீடுகளில் பத்திரப்படுத்தி இருக்கமாட்டார்கள்.”

பயன்படுத்தியதாக கூறப்பட்ட ஆயுதங்களை “மீட்பதில்” பொலிஸ் தங்கள் சொந்த நடைமுறைகளை மீறியதாக ஜோன் குறிப்பிட்டார். பொலிஸ் ஆயுதங்களை மீட்டது சாட்சியங்களாக இருப்பினும், அவர்களது மீட்பு நடவடிக்கை குறித்து நில உரிமையாளர்கள் அல்லது அண்டைவீட்டுக்காரர்கள் போன்ற எவரையும் தனிப்பட்ட சாட்சியங்களாக காண்பிக்க பொலிஸ் தவறிவிட்டது.

அதேபோல், கூறப்படும் ஆயுதங்களை பொலிஸ் உறையிட்டு, சீல் செய்தும் வைக்கவில்லை. “மாயாஜாலம் போல் எங்கிருந்தோ ஒரு தையல்காரர் தோன்றுகிறார், அந்த தையல்காரரிடம் ஏற்கனவே துணிகள் இருக்கிறது, அந்த துணிகளை பயன்படுத்தி ஒரு கட்டு கதவு உத்திரங்களையும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களையும் சேர்த்து தைத்தார்” என்று ஜோன் கூறினார்.

“யார் அந்த தையல்காரர் அல்லது தையல்காரர்கள்? எங்கிருந்து அவர்கள் தோன்றினார்கள்? மேலும், நீதிமன்றத்தில் சாட்சியங்களாக அவர்கள் நிறுத்தப்படவும் இல்லை.”

மேலாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்றும், அதற்கான மருத்துவ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற வாதித் தரப்பின் கூற்றுக்களுக்கு இடையிலான தெளிவான முரண்பாடுகளையும் ஜோன் சுட்டிக்காட்டினார். “மேலாளர்களின் வாய்வழி சாட்சியங்களும், மருத்துவ ஆதாரங்களும் பொருந்தவில்லை.” அனைத்து காயங்களும் “உடலின் மிகவும் முக்கியமற்ற பாகங்களில்” ஏற்பட்டிருந்தன. எனவே, வாதித் தரப்பு பேணிவந்ததற்கு எதிரிடையாக, “உண்மையில் நிர்வாக அதிகாரிகளை கொல்லும் அளவிற்கோ, அல்லது அவர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்துவதற்கோ,” எந்தவிதமான நோக்கமும் அங்கிருக்கவில்லை.

இது, விசாரணையிலிருந்த “நேர்மையற்றத்தன்மைக்கும்” அத்துடன் பொலிஸ், வாதித் தரப்பு மற்றும் மாருதி சுசூகி நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையேயான “நெருக்கமான உறவு” குறித்தும் மேலும் ஒரு உதாரணமாகவே இருந்தது என்று அவர் சேர்த்து கூறினார்.

இதுவரையிலும் நடத்தப்பட்ட விவாதத்தின் சுருக்கமாக, “வழக்கு விசாரணையின் முடிவில் வாதித் தரப்பு வழக்கு சிதைந்துபோனது என்பதை இரண்டு முக்கிய  சுவாரசியமான வாதங்கள் காட்டுவதாக ஜோன் கூறினார்:

“நெருப்பை யார் பற்றவைத்தது? நீங்கள் அந்த கேள்விக்குப் பதிலளிக்காவிட்டால், கொலை செய்ததாக யாரையும் நீங்கள் குற்றம்சாட்ட முடியாது. இதுவரை அவர்களிடம் இதற்கான பதில் இல்லை.

“இரண்டாவதாக, குற்றம் தொடர்பான அசல் ஆயுதங்களுக்கு என்னவாயிற்று? மேலும் கதவு உத்திரங்களையும், அதிர்ச்சியூட்டும் எந்திரங்களையும் ஆயுதங்களாக மாற்றுமாறு வாதித் தரப்பை எது நிர்ப்பந்தித்தது?