ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: ICFI supporters hold May Day meeting in Bangalore

இந்தியா: நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஆதரவாளர்கள்  பெங்களூரில் மேதினக் கூட்டத்தினை நடத்தினார்கள்.

By our correspondents
12 May 2017

மே ஒன்றாம் தேதி, இந்தியாவின் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஆதரவாளர்கள் கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில் “உலகப் போர் மற்றும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டு” என்ற தலைப்பில் மேதினப் பொதுக்கூட்டத்தினை நடத்தினார்கள். ICFI ஆதரவாளர்களால் மார்ச் 5 ன்று தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் அக்டோபர் 1917 புரட்சி மற்றும் அதன் தற்போதைய முக்கியத்துவம் என்னும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து இது இரண்டாவது பொது நிகழ்ச்சியாகும்.

ICFI ஆதரவாளர்கள் பெங்களூர் கூட்டத்தினை நடத்துவதற்கான அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பீனியாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்களுடனும் மற்றும் சிவாஜி நகர், மரதல்லி மற்றும் எலக்ரோனிக் சிட்டி உட்பட தலைநகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள தொழில்நுட்ப பணியாளர்களுடனும் உரையாடினார்கள். ஆங்கில, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.  

பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றொரு உலகப்போரின் அபாயத்தைப்பற்றியும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச போருக்கு எதிரான அமைப்பின் அவசியம் பற்றியும் மேலும் உலக சோசலிச வலைத் தளத்தில் ரஷ்யப் புரட்சி மீதான இணையவழி விரிவுரைகளை படிப்பதற்கு ஊக்குவித்து தொழிலாளர்களுடனும், மாணவர்களுடனும் கலந்துரையாடினர்.

பெங்களூர் கூட்டம் சதீஷ் சைமன் தலைமையேற்க, ICFI ஆதரவாளர்கள் குழுவிலிருந்து அருண் குமார் சிறப்புரையாற்றினார்.  மேலும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) (இலங்கை) தேசிய துணைச் செயலாளர் தீபல் ஜெயசேகரா இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார். 

ட்ரம்ப்பின் நிர்வாகம் சிரியா மீது கப்பல் எவுகணையால் தாக்கியதையும், ஆப்கானிஸ்தானில் பிரமாண்டமான ஆயுதப்படை வாயுக் குண்டினை (MOAB) போட்டதையும் வாஷிங்கடனின் வட கொரியாமீதான இராணுவ மிரட்டல்கள் பெருகிய நிலைமைகளையும் குமார் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய நடவடிக்கைகளினால் அணுஆயுதங்களைக்கொண்ட அபாயகரமான ஒரு புதிய உலகப் போர் உருவாகக்கூடிய நிலைமைகள் இருக்கிறது என அவர் எச்சரித்திருந்தார்.  கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” என்ற பெயரில் முடிவில்லாத தொடர்ச்சியான ஏகாதிபத்தியப் போர்களை நடத்திவருவதையும் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்

”சிரியா, ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறிய நாடான வடகொரியா மீதான மிரட்டல்கள், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலும், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலும் மற்றும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலும் அபாயகரமாக கூர்மையடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்களின் வெளிப்பாடுகள் மட்டும் தான்” என்று அவர் கூறினார்.

வளர்ந்துவரும் பூகோள புவி சார் அரசியல் பதட்டங்களுக்குள் எவ்வாறு தெற்காசியப் பிராந்தியம் அதிகமாக இழுக்கப்பட்டு வருவது மற்றும்  குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ்  சீனாவுக்கு எதிராக அமெரிக்க போர் தயாரிப்புக்கள் அதிகரித்திருக்கின்றன என்பதைப் பற்றியும் குமார் மதிப்பாய்வு செய்தார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலில், இந்தியாவை முன்னிலை நாடாக மோடி அரசாங்கம் உருமாற்றியிருக்கிறது மற்றும் அமெரிக்காவுடன் இராணுவ மூலோபாய உறவுகளை வலுவாக்கிக்கொண்டிருக்கிறது. என்று பேச்சாளர் கூறியிருந்தார். முன்னால் ஜனாதிபதி ஒபாமாவால் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான ‘ஆசியாவை  முன்னிலை படுத்தல்’ இயக்கத்திற்குள் இந்தியாவின் விரைவான ஒருங்கிணைப்தின் ஒரு அடையாளமாக அமெரிக்க இராணுவம் இந்தியத் தளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க கடந்தவருடம் புதுடெல்லி  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தற்போது இந்தியா அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை கப்பலுக்கு பிரதான சேவை மற்றும் பழுதுபார்க்கும் இடமாகவும் ஆகியுள்ளது. இது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தயாரிப்புகளுக்கு மையமாக இருக்கின்றது.

இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பெருகிய அளவில் போர் வெறியை மோடி அரசாங்கம் எடுப்பதற்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது. என குமார் குறிப்பிட்டிருந்தார்.  இந்த அபிவிருத்திகள், “பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் அழிவுகரமான விளைவுகளை தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும்  மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.” என அவர் கூறினார். போருக்கு எதிராக சோசலிச அமைப்பை கட்டுவதற்கு, ICFI போராடுகையில், அதடனுடன் மற்றும் இந்தப் பகுதியிலும் மற்றும் உலகெங்கிலும் அவர்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளுடன்  இந்திய தொழிலாள வர்க்கம் இணைவது ஏன் அவசியம் என்றும் என அந்த பேச்சாளர் விவரித்தார்.

தீபல் ஜெயசேகரா (வலது) பெங்களூர் கூட்டத்தில் பேசுகிறார்

தீபல் ஜெயசேகரா 1917 ரஷ்ய புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஒரு நீண்ட உரையாற்றினார். முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிகள் தான் முதலாவது உலகப் போருக்கும் மற்றும் இரண்டாவது உலகப் போருக்கும் வழிவகுத்திருந்தது. அது உயர்ந்த மற்றும் அதிக ஆழமான நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது என அவர் விவரித்தார். கடந்த நூற்றாண்டின் தீர்க்கப்படாத அனைத்து முரண்பாடுகளும் வெடிக்கும் சக்தியுடன் உலக அரசியலின் மேற்பரப்பில் மீண்டும் எழுகின்றன என்றும் இந்த நிலமைகளின் கீழ் ரஷ்யப் புரட்சி நடந்து நூற்றாண்டான 1917 ன் நிகழ்வு ஒரு புதிய மற்றும் தீவிரமான சமகால தொடர்பைப் பெறுகிறது என கூறினார்.

அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தைப் பெற தொழிலாள வர்க்கம் தலைமையேற்பதற்கு போல்ஷிவிக் கட்சியின் அயராத முயற்சி சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இருந்தது என்று அவர் கூறியதுடன் மேலும்”எல்லாவற்றுக்கும் மேலாக லெனினும் ட்ராட்ஸ்கியும் ரஷ்யாவில் சோசலிச புரட்சிக்கான புறநிலை அடிப்படைக்காரணங்கள், இறுதி ஆய்வில் உலக ஏகாதிபத்திய அமைப்பின் சர்வதேச முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளது என்றனர் அதாவது காலாவதியான தேசிய அரசு அமைப்புக்கும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதரத்துக்குமிடையில் வேரூன்றியிருந்தததை அடையாளப்படுத்தினார்கள். ரஷ்யப் புரட்சியின் தலைவிதி சோவியத் ரஷ்யாவின் எல்லைகளுக்கப்பால்  தொழிலாளர்களின் அதிகாரத்தை நீட்டிப்பதில் தங்கியிருந்தது” என்று அவர்கள் கூறினார்கள்.

முதலாம் உலகப்போருக்கு ஆதரவாக அவர்களின் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தினருடன் அணிவகுத்து நின்ற இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டத்தினை பேச்சாளர் மதிப்பாய்வு செய்தார். ஏப்ரல் 1917 இல் லெனினின் போராட்டம் போல்சுவிக் கட்சியை மறுநோக்கு நிலைப்படுத்தி, இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்தை தயார்படுத்தி அதிகாரத்தை எடுத்து அக்டோபரில் முதலாவது தொழிலாளர் அரசை உருவாக்கினார். என மேலும் விவரித்தார்

”இன்று, 1930களில் இருந்த மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியின் கீழ் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் புதிய உலகப் போரை நோக்கிச் ஏகாதிபத்தியங்கள் செல்லும் நிலையில், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டங்களின் புதிப்பிக்கப்பட்ட எழுச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றனர்” என்று ஜெயசேகரா கூறினார். ”அவர்களுக்குள்ளிருந்து மிகவும் முன்னேறிய தட்டுக்கள் ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை நோக்கி தவிர்க்கமுடியாமல் திரும்புவார்கள்”

இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் ரஷ்யப் புரட்சியின் அடிப்படை கோட்பாட்டு பிரச்சனைகளை பொய்மைப்படுத்தும் நிலையில் அக்டோபர் புரட்சியின் மரபுவழியை கோர முயன்றுள்ளது என பேச்சாளர் அம்பலப்படுத்தினார்.

அண்மையில் நூற்றாண்டு விழாவில் சிபிஎம் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் ரஷ்யப் புரட்சியானது ஒரு தேசிய நிகழ்வு என்றும்  உலகப் புரட்சியின் துவக்கமாக அது அல்ல எனவும் அறிவித்திருந்தனர் என ஜெயசேகரா தெரிவித்தார்.

ரஷ்ய புரட்சி மூலம் நிருபிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சித் தத்துவத்திற்கு எதிராக சிபிஎம், ஸ்ராலினிசத்தின் ”இரு-கட்ட” கோட்பாடு” என்ற மார்க்சிச எதிர்ப்பு தத்துவத்தை திரும்பவும் கூறியிருக்கிறது.. தேசிய முதலாளித்துவத்திற்கு அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போடும் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி  “முதல்-கட்டம்” ஆகும்  மற்றது என்றைக்கோ என்று ஒத்திவைக்கப்பட்ட – சோசலிசப் புரட்சி - “இரண்டாம் கட்டம்” என இந்த தேசியவாத முன்னோக்கு வலியுறுத்துகிறது.

இந்திய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர கட்சியாக இந்தியாவில் ICFI பகுதியைக் கட்டுவதற்கு ICFI மற்றும் SEP யுடன் இணையுமாறு கூட்டத்தில் எல்லோருக்கும் அழைப்பினை விடுத்து ஜெயசேகரா தனது சிறப்புரையை முடித்துக்கொண்டார்.