ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US demands “much greater” Chinese pressure on North Korea, or else

அமெரிக்கா வட கொரியா மீது “மிக அதிகமான” சீன அழுத்தத்தை கோருகிறது, இல்லாவிட்டால்…

By Peter Symonds
22 June 2017

சீனா “பிராந்தியத்தில் மேலும் துரிதப்படுத்தலை தடுக்க விரும்பினால்,” வட கொரியா அதனது அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிடுவதற்கு “மிக அதிகளவு பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தத்தை அது கொடுக்க வேண்டும்” என, சற்றே மறைமுகமான அச்சுறுத்தலை விடுக்கும் வகையில் அமெரிக்க இராஜாங்க செயலர் றெக்ஸ் ரில்லர்சன் நேற்று அறிவித்தார்.

வேறுவிதமாக கூறினால், பியோங்யாங் ஆட்சிக்கு கடிவாளமிட பெய்ஜிங் தவறினால், அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை நாடக்கூடும்.

ரில்லர்சன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் அவர்களின் சீன சமதரப்பினர்களான சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் (People’s Liberation Army) கூட்டு ஊழியர் துறையின் தலைவரான ஜெனரல் ஃபாங் ஃபெங்ஹுய் ஆகியோருக்கு இடையிலான ஒரு உயர்மட்ட கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்ற பின்னரே ரில்லர்சனின் இந்த தெரிவித்திருந்தார்.

பியோங்யாங்கின் இராணுவ திட்டங்களுக்கு நிதி ரீதியாக உதவுவதாக கூறப்படும் வட கொரியாவிற்கான “சட்டவிரோத” வருவாய் வழிகளை நிறுத்த கடும் முயற்சியெடுக்குமாறு சீனாவிற்கு ரில்லர்சன் அழைப்புவிடுத்தார். மேலும், கடந்த வாரம், “நாங்கள் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை தொடங்கப் போகின்ற ஒரு கட்டத்தில்” ட்ரம்ப் நிர்வாகம் இருக்கின்றது என அவர் காங்கிரஸ் குழுவிடம் கூறினார் -அதாவது, வட கொரியாவுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளையும், பெருநிறுவனங்களையும் தண்டிப்பதாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவால் சுமத்தப்படவிருக்கும் ஒருதலைபட்சமான “இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள்”, சீன நிறுவனங்களின் மீது விழும். இதுவரை, வட கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. பியோங்யாங் ஆட்சி உடனான வர்த்தக மற்றும் நிதி நடவடிக்கைகளை முடக்குவதற்கு போதுமானவற்றை செய்யத் தவறியதாக பெய்ஜிங்கை அமெரிக்க அதிகாரிகளும் செய்தி ஊடகங்களும் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளன. சீனாவின் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தண்டனை நடவடிக்கையும் விரைவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மோசமடையச் செய்துவிடும்.

இந்த பேச்சுகளுக்கு சற்று முன்பு தான், அமெரிக்க கோரிக்கைகளுக்கு தலைவணங்குமாறு வட கொரியாவை சீனா நிர்பந்திப்பதற்கான நேரம் கடந்துகொண்டே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமிக்ஞை செய்தார். “நான் ஜனாதிபதி ஜி (ஜின்பிங்) மற்றும் சீனாவின் முயற்சிகளை பெரிதும் பாராட்டினாலும்,” “அது செய்து முடிக்கப்படவில்லை” என்று அவர் செவ்வாயன்று ட்வீட் செய்தார்.

வட கொரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சீனா மீது அழுத்தம் கொடுப்பதை அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்பதை ரில்லர்சனின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை, ட்ரம்பின் டவீட், எந்தவித விளைவுகளும் இல்லையென்றால், இராணுவ நடவடிக்கை உட்பட ஏனைய நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்ற ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.

ட்ரம்பின் டவீட் பற்றி கேட்கப்பட்டபோது, பாதுகாப்பு செயலர் மாட்டிஸ், ரில்லர்சனுடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பின்வருமாறு கூறினார்: “ஆத்திரமூட்டல், ஆத்திரமூட்டல் மற்றும் ஆத்திரமூட்டல்களையே செய்கின்ற, அடிப்படையில் விதிகளை மீறி விளையாடுகின்ற, வேகமாக விளையாடுகின்ற மற்றும் உண்மையை விட்டும் விலகுகின்ற ஒரு ஆட்சி மீதான அமெரிக்க மக்களின் விரக்தியையே நீங்கள் காண்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன்.”

வட கொரியாவில் சிறையிலிடப்பட்டிருந்த அமெரிக்க மாணவன் ஓட்டோ வாம்பியெர், கடந்த வாரம் அமெரிக்காவிற்கு திரும்பிவந்த பின்னர் திங்களன்று மரணமடைந்ததற்காக, குறிப்பாக பியோங்யாங்கை மாட்டிஸ் கண்டனம் செய்தார். பியோங்யாங்கிற்கு அமெரிக்கர்கள் விஜயம் செய்வதை தடுக்க தடைவிதிப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்துவருகிறது. தற்போது இன்னும் மூன்று அமெரிக்க பிரஜைகளும் வட கொரியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வட கொரியா மற்றுமொரு அணுசக்தி சோதனை அல்லது தொலை தூர ஏவகணை சோதனையை நடத்துமானால், சீனாவுடனான அமெரிக்க உறவுகள் விரைவாக மோசமடையக்கூடும் என்பதையே மாட்டிஸ் மற்றும் ரில்லர்சனின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் CNN க்கு கருத்து தெரிவிக்கையில், பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகள், வட கொரியாவின் நிலத்தடி அணுசக்தி சோதனை தளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய நடவடிக்கைகளை செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக கூறிக்கொண்டதோடு, ஒரு ஆறாவது அணு வெடிப்பு தவிர்க்க முடியாதது என்றும் கூறினர்.

வாஷிங்டனில் நேற்றைய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், மாட்டிஸூம் ரில்லர்சனும் அவர்களது சீன சமதரப்பினருக்கு வட கொரியா குறித்து மட்டுமல்லாமல், தென் சீனக் கடல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உட்பட ஏனைய ஒருதொகை உணர்வூட்டும் பிரச்சினைகள் குறித்தும் அழுத்தம் கொடுப்பர் என அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகள் சமிக்ஞை செய்தனர்.

கிழக்கு ஆசியாவிற்கான பதில் தேசிய துணை செயலரான சூசன் தோர்ன்டன், தென் சீனக் கடலில் “அனைத்து தரப்பினரும் எந்தவொரு கட்டுமான அல்லது இராணுவமயமாக்கல் அம்சத்தையும் நிறுத்தவேண்டும்” என்று அமெரிக்காவின் குரல் (Voice of America) இடம் கூறினார் –இது குறிப்பாக சீனாவை இலக்குவைத்த ஒரு கருத்தாகும். கடந்த மாதம், அமெரிக்க கடற்படை மற்றொரு ஆத்திரமூட்டும் “கடற் போக்குவரத்து சுதந்திர” நடவடிக்கையை முன்னெடுக்கும் விதமாக, சீனா உரிமை கோரும் அதன் தீவுகளில் ஒன்றை சுற்றி 12 கடல் மைல் பிராந்திய வரம்புக்குள் ஒரு வழிகாட்டி ஏவுகணை ஏந்திய அழிப்புக்கப்பலை அனுப்பியுள்ளது.

நேற்றைய அமெரிக்க-சீன இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் விலக்கி வைக்கப்பட்டிருந்தாலும், அவை வெளித்தோன்றக் கூடியவையாகவே இருந்தன. கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, சீனாவின் வர்த்தக கொள்கைகளை ட்ரம்ப் பலமுறை கண்டனம் செய்ததோடு, கடும் அபராதம் விதிக்கக்கூடிய வர்த்தக யுத்த நடவடிக்கைகள் குறித்தும் அச்சுறுத்தினார். பியோங்யாங்கிற்கு அழுத்தம் கொடுக்க பெய்ஜிங்கின் உதவியை நாடுவதில், வர்த்தகத்தின் மீதான சலுகைகளை அமெரிக்கா வழங்கக்கூடும் என்று ட்ரம்ப் பிரேரித்தார்.

சீனாவின் முயற்சிகள் “நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்று ட்வீட் செய்திருப்பதன் மூலம் விடுக்கப்பட்டுள்ள மறைமுக அச்சுறுத்தல், வர்த்தகம் தொடர்பாக சீனாவின் மீதான அழுத்தத்தை அமெரிக்கா அதிகரிக்கக்கூடும் என்பதாகும். “வட கொரியா குறித்து உங்களுடைய உதவி எனக்கு தற்போது தேவையில்லை, எனவே வர்த்தகம் போன்ற ஏனைய விடயங்களிலும் நாம் அதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று ட்ரம்ப் கூறுகிறார்,” என்று ஆய்வாளர் ஜோன் டெலூரி New York Times க்கு தெரிவித்தார்.

அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சுரண்டிக்கொள்ள ஏதுவாக, வட கொரியாவின் பொருளாதாரத்தை முடக்கிப்போடும் மற்றும் ஒரு அரசியல் நெருக்கடியை தூண்டும் வகையிலான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க சீனா தயக்கம் காட்டுகிறது. நேற்றைய பேச்சுவார்த்தைகளில், பியோங்யாங் அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை அதுவே நிறுத்திக்கொள்வது, மற்றும் தென் கொரியாவில் வாஷிங்டன் மேற்கொள்ளும் அதன் கூட்டு இராணுவ பயிற்சிகளை நிறுத்தச்செய்வதை அடிப்படையாக கொண்ட புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான பெய்ஜிங்கின் அழைப்பை சீன அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர். அமெரிக்கா இந்த திட்டத்தை ஒரேயடியாக நிராகரித்துவிட்டது.

அனைத்திற்கும் மேலாக, வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் எனும் அச்சுறுத்தலானது ஆசியா மீதானதாகவே உள்ளது. இந்த வார தொடக்கத்தில், கொரிய தீபகற்பம் மீதான ஒரு நடவடிக்கையில் பென்டகன் தனது பலத்தைக் காட்டும் விதமான ஒரு ஆத்திரமூட்டும் நிகழ்வாக மீண்டும் இரண்டு B-1 ரக மூலோபாய குண்டுவீசிகளை அனுப்பியது. இந்தப் பகுதியில் அமெரிக்க கடற்படை அதன் மற்றொரு வழியில், இரண்டு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுக்களை அங்கு நிறுத்தியுள்ளது.

வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற வகையில் சீனா உட்பட ஏனைய சக்திகளை ஈர்க்கக்கூடிய கொரிய தீபகற்பத்தின் மீதான ஒட்டுமொத்த மோதல்களை தூண்டுவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. வடகிழக்கு ஆசியாவில் பதட்டங்களை உலுக்கியுள்ள நிலையிலும் கூட, ரஷ்யா மற்றும் ஈரான் உடனான ஒரு மோதலைத் தூண்டும் அச்சுறுத்தலாக சிரியாவில் ஒரு அதிகரித்துவரும் மோதலில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்ற உண்மையில் இருந்து, அதன் ஈவிரக்கமற்ற தன்மை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.