ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s assertive moves in South China Sea fuel growing tensions with China

தென் சீனக் கடலில் இந்தியாவின் உறுதியான நகர்வுகள் சீனாவுடன் வளர்ந்து வரும் பதட்டங்களுக்கு எரியூட்டுகின்றன

By Wasantha Rupasinghe
19 July 2017

தென் சீனக் கடல் குறித்து அமெரிக்கா சீனாவுடன் பதட்டங்களை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவும் இந்த சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் அதிகரித்தளவில் உறுதியாக வடிவெடுத்து புது தில்லி மற்றும் பெய்ஜிங் இடையே ஏற்கனவே உள்ள கூர்மையான பிளவுகளை இன்னும் ஆழப்படுத்துகின்றது.

பெய்ஜிங்கிற்கு சவாலாக, இந்திய அரசுக்கு சொந்தமான முக்கிய ஆற்றல் நிறுவனங்களில் ஒன்றான ONGL Videsh Ltd. (OVL), தென் சீனக் கடலில் எண்ணெய் ஆய்வுப்பயணத்தை தொடர்வதற்கு வியட்நாமின் அழைப்பை ஏற்றுக்கொண்டது.

OVL மேலாண்மை இயக்குநரான நரேந்திர கே. வேர்மாவை மேற்கோளிட்டு, இந்த மாத தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம், சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலின் “பிளாக் 128” இல் எண்ணெய் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளும் குத்தகைக்கு இரண்டு ஆண்டு நீடிப்பை இந்திய நிறுவனத்திற்கு வியட்நாம் வழங்கியுள்ளதாக தெரிவித்தது. தென் சீனக் கடலில் சீனா உரிமை கோரும் ஒரு பரந்த பகுதியையே இந்த U வடிவ ‘nine-dash line’ இல் உள்ள இந்த பிளாக் இன் ஒரு பகுதி குறிப்பிடுகின்றது, வருடத்திற்கு 5 டிரில்லியன் டாலருக்கும் மேற்பட்ட வர்த்தகத்திற்கு இந்த பாதை வழிவகுக்கின்றது, (மேலும்) இந்த பகுதியின் மீது பிலிப்பைன்ஸ், புரூனி, மலேசியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் உரிமை கோருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும், பிளாக் 128 ஐ ஆய்வு செய்வதற்கு OVL க்கு வழங்கப்பட்ட ஐந்தாவது நீட்டிப்பு இதுவாக இருக்கிறதென இந்தியாவின் Business Standard பத்திரிகை குறிப்பிடுகின்றது.

பெயர் குறிப்பிடாத மூத்த OVL அதிகாரி ஒருவரின் கருத்துப்படி, அங்கு எண்ணெய் அபிவிருத்தி என்பது “உயர் ஆபத்தானதாகவும்,” “மிதமான ஆற்றல் வளமாகவும் மட்டுமே” காணப்படுகின்ற நிலையில், இந்த பிளாக் மீதான ஆர்வமானது “வர்த்தக ரீதியானது என்பதை விட மூலோபாய ரீதியானதாகும்.” மேலும் அந்த அதிகாரி, “தென் சீனக் கடலில் சீனாவின் தலையீடுகளின் காரணமாக வியட்நாம் நாங்களும் அங்கு இருக்க வேண்டுமென விரும்புகின்றது” என்று சேர்த்துக் கூறினார்.

ஜூலை 6 செய்தியாளர் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் நடைபெற்று வரும் எண்ணெய் ஆய்வு மற்றும் தோண்டுதல் வேலை பற்றி கேட்கப்பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ஜெங் ஷூவாங், பெய்ஜிங் “தென் சீனக் கடலில் அதன் பிராந்திய இறையாண்மையையும், கடல்வழி உரிமைகள் மற்றும் நலன்களையும் உறுதியாக பற்றி நிற்கின்றது, (மேலும்) சீன அதிகார எல்லைக்குட்பட்ட நீர்நிலையில் எந்தவொரு நாடோ, வணிக நிறுவனமோ அல்லது அமைப்போ மேற்கொள்ளும் ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றது” என்று கூறினார். எனவே, சூழ்நிலையை சிக்கலாக்கக்கூடிய “செயல்களில் இருந்து விலக” வியட்நாமை அவர் வலியுறுத்தினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வளர்ந்துவரும் ஒரு மூலோபாய பங்காண்மையின் ஒரு பகுதியாக, தென் சீனக் கடலில் எண்ணெய் ஆய்வை மேற்கொள்ள வகை செய்யும் வியட்நாம் உடனான இந்தியாவின் உடன்படிக்கை, இந்த பிராந்தியத்தில் புது தில்லியின் புவிசார் அரசியல் இலட்சியங்களை விரிவுபடுத்துவதையும், சீனாவை எதிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது. புது தில்லியும், ஹனோயும், “விரிவான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு” குறித்த ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டன. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இரு நாடுகளும் ஒரு “மூலோபாய பங்காண்மையை” உருவாக்கின. இந்த பங்காண்மை, உளவுத்துறை ஒத்துழைப்பு, ஆற்றல்வாய்ந்த ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவி ஆகியவற்றை உயர்த்திக் காட்டியதோடு, துணை வெளியுறவு மந்திரி மட்டத்திலான ஒரு “மூலோபாய பேச்சுவார்த்தையையும்” உருவாக்கியது என்று கூட்டறிக்கை அறிவிக்கின்றது.

2014 இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலுக்கு பின்னால் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியுடன் மிகவும் தீர்க்கமான முறையில் நின்று கொண்டு, புது தில்லி ஹனோய் உடனான அதன் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது. வியட்நாம் பிரதம மந்திரி நிகுயென் டான் டங்க் அக்டோபர் 2014 ல் இந்தியாவிற்கு விஜயம் செய்ததோடு, தென் சீனக் கடலில் கூட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான இரண்டு உடன்படிக்கைகள் உட்பட, இராணுவம், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக ஒரு தொடர் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார்.

அதே சமயத்தில், இராணுவ வன்பொருட்களை வாங்க வியட்நாமிற்கு இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர் (US$100 million) மதிப்பிலான கடனை வழங்கியது. 2016 இல், இது 500 மில்லியன் டாலர் ($100 million) மதிப்பிலான “பாதுகாப்பு” கடனாக விரிவுபடுத்தப்பட்டது. வியட்நாம் கடற்படை பயிற்சியாளர்களை இந்தியா பயிற்றுவிப்பதோடு, வியட்நாம் நீர்நிலைகளை கண்காணிப்பதற்காக கடற்படை ரோந்து படகுகளையும், செயற்கைக்கோள் பாதுகாப்பினையும் வழங்குகிறது.

வியட்நாமிற்கு இந்திய பிரஹ்மோஸ் கடல்மார்க்க ஏவுகணை விற்பனைக்கான சாத்தியம் பற்றி புது தில்லியும், ஹனோயும் விவாதிக்கின்றன.

வியட்நாமிய துணை பிரதம மந்திரியும், வெளியுறவு மந்திரியுமான பம் பின்ஹ் மின்ஹ் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, ONL தென் சீனக் கடல் சலுகையை நீட்டிக்கும் வகையில் ஹனோய் இன் சமீபத்திய வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அவர் இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ் உடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். ஹேக்கில் கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம், வாஷிங்டன் மூலம் திட்டமிடப்பட்ட ஒரு வழக்கின் மீது, தென் சீனக் கடலில் பெருமளவிலான சீனாவின் “வரலாற்று ரீதியான உரிமை கோரல்களை” நிராகரித்தது தொடர்பாக அவர்களது பேச்சுவார்த்தைகள் இருந்ததென ஒரு இந்திய அரசாங்க செய்தி வெளியீடு குறிப்பிடுகின்றது. தென் சீனக் கடலில் ஒரு “ஆக்கிரமிப்பாளராக” சீனாவை முத்திரை குத்த அமெரிக்கா பயன்படுத்துவதற்கும், இந்த பிராந்தியத்தில் அதன் பரந்த இராணுவப் படைகளை ஈடுபடுத்துவதை நியாயப்படுத்துவதற்கும் ஒரு சாக்குப்போக்காக, “கடற் போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரம் மற்றும் தடையற்ற வர்த்தகம்” ஆகியவற்றிற்கான புது தில்லியின் ஆதரவை செய்தி வெளியீடு “மீண்டும் வலியுறுத்தியது”.

ஜனவரி 2015 இல், மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், “ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான கூட்டு பார்வை அறிக்கை” ஒன்றை வெளியிட்டதிலிருந்து, தென் சீனக் கடல் குறித்து வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் சீன-விரோதப் பாதையை புது தில்லியும் முறையாக பின்பற்றுகிறது.

சில நாட்களுக்கு முன்னர், வியட்நாம் துணை பிரதம மந்திரியுடனான சுவராஜ் இன் பேச்சுவார்த்தைகள் குறித்த இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை ஒன்று, மோடியும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வாஷிங்டனில் சந்தித்ததாகவும், இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய பங்காண்மையை மேலும் விரிவுபடுத்த உறுதி பூண்டதாகவும் தெரிவித்தது.

தென் சீனக் கடலில் இந்தியாவின் அதிகரித்துவரும் ஈடுபாடு அமெரிக்காவின் வெளிப்படையான ஆதரவைப் பெறுவதுடன், வாஷிங்டனின் முக்கிய பிராந்திய நட்பு நாடுகளான ஜப்பானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய ஒத்துழைப்பின் விரைவான விரிவாக்கத்துடன் இந்தியாவும் சேர்ந்தே இருக்கின்றது.

பெய்ஜிங்கில் இருந்து கோபமடைந்த எதிர்வினையை தூண்டும் வகையில், இந்திய கடற்படை சார்ந்த கிழக்கு கப்பற்படையின் நான்கு இரகசிய போர்க்கப்பல்கள் கடைசி வசந்தகால மற்றும் கோடைகால தென் சீனக் கடல் மற்றும் வட பசிபிக் பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

அமெரிக்கா, தென் சீனக் கடல் உட்பட, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் அதன் போர்க்கப்பல்களுடன் இணைந்து இந்திய கடற்படை, கூட்டு ரோந்துகளை அதிகரிப்பதற்கு பகிரங்கமாக ஊக்கப்படுத்தியது.

திங்களன்று, வங்காள விரிகுடாவில் இந்திய, அமெரிக்க மற்றும் ஜப்பானிய போர்க்கப்பல்கள் போர் பயிற்சிகளை, சமீபத்திய திருத்தமாக வருடாந்திர மலபார் பயிற்சிகளை நடத்தி முடித்துள்ளன. இந்திய பெருங்கடலில் சீனாவின் பெருகிய கடற்படை பிரசன்னம் குறித்த வெளிப்படையான கண்டனமாக, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்முறை மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்த வருட மலபார் பயிற்சிகள் கவனம் செலுத்தியது.

சீனா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் நிலப்பகுதியான, தொலைக்கோடியிலுள்ள ஹிமாலய டோக்ளாம் அல்லது டோங்லாங் பீடபூமி குறித்து பெய்ஜிங்கிற்கும், புது தில்லிக்கும் இடையே நடந்துவரும் இராணுவ நிலைப்பாட்டிற்கு மத்தியில், தென் சீனக் கடலில் இந்தியாவின் உறுதியான நகர்வுகளும் இடம் பெறுகின்றன. இந்த சீன-இந்திய எல்லைப் பிரச்சனை, 1962 இல் இரண்டு நாடுகளும் ஒரு மாத காலம் நீடித்த எல்லைப் போரை நடத்தியதிலிருந்து, அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையேயான மிக கடுமையான விவகாரமாக விவரிக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க முகாமுக்குள் இந்தியா எப்பொழுதும் மிக வெளிப்படையாக நகர்வதை அறிந்த பெய்ஜிங், இந்தியாவின் வளர்ந்துவரும் உறுதிப்பாட்டிற்கும், அமெரிக்க ஆதரவிலான ஆத்திரமூட்டல்களுக்கும் விடையிறுப்பதில் ஒரு அதிகரித்தளவிலான கடுமையான நிலைப்பாட்டை ஏற்கிறது. சீன அரசுக்கு சொந்தமான China Daily பத்திரிகை, ஜூலை 10 அன்று, “இந்தியாவின் நகர்வுகள் கடுமையான விழிப்புநிலையை கோருகின்றன” என்ற தலைப்பிட்டு ஒரு கருத்து கணிப்பை பிரசுரித்ததோடு, வாஷிங்டன் உடனான அதன் வளர்ந்து வரும் உறவுகள் குறித்த இந்தியாவின் கொள்கைகளை தொடர்புபடுத்தியது. அமெரிக்காவிற்கு மோடியின் சமீபத்திய விஜயத்தை குறிப்பிட்டு, இந்திய பிரதம மந்திரி, “புது தில்லியை வாஷிங்டனின் ஒரு முக்கிய பாதுகாப்பு பங்காளராகவும், சீனாவின் எழுச்சிக்கு ஒரு எதிர்விளைவாகவும் செயலாற்ற முடியும் என்ற கருத்தை விற்க முடிந்தது” எனவும் குறிப்பிட்டது.

அதே பதிப்பில் ஒரு தலையங்கம் மலபார் கடற்படை பயிற்சியை “அவர்களது பல்வகைப்பட்ட பயிற்சிகளில் மிகப்பெரிய ஒன்றாக இதுவரை” விவரித்ததுடன், கடந்த வாரம் இந்தியாவிற்கு 365 மில்லியன் டாலர் ($365 million) மதிப்பிலான இராணுவ போக்குவரத்து விமானங்களை விற்பதற்கும், (கடற்படை) கண்காணிப்பு ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) தொடர்பாக 2 பில்லியன் டாலர் ($2 billion) மதிப்பிலான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்கா ஒப்புதல் அளித்ததையும்” சுட்டிக்காட்டியது. மேலும், தலையங்கம் பின்வருமாறு வாதிட்டது: “இந்திய பெருங்கடலில் அதன் வர்த்தகம் மற்றும் எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கியத்துவமளித்து சீனா அதன் ‘பாதுகாப்பு பற்றிய கவலைகளை’ உணர வேண்டும்.”