ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Facebook announces major plan to censor news content

செய்தி விடயங்களைத் தணிக்கை செய்வதற்கான பாரிய திட்டத்தை முகநூல் அறிவிக்கிறது

Andre Damon
13 January 2018

“தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு” ஆதரவாக தனிப்பட்ட பயனாளர்களின் செய்தி ஊட்டங்களின் மீதான அரசியல் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை முன்னுரிமையற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்டு உலகின் மிகப்பெரிய வலைப்பின்னல் பெரும் மாற்றங்களை முன்னெடுக்கிறது என்று வெள்ளிக்கிழமை அன்று முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுக்கர்பேர்க் அறிவித்தார். இந்த மாற்றமானது இணையவழி தகவலை தணிக்கை செய்வதில் இன்றுவரைக்குமான மிக முக்கியமான முயற்சி ஆகும்.

முகநூல் என்பது உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் கணக்கான மக்களுக்கான தற்போதுள்ள பிரதான செய்தி ஆதாரமாகும். உலக முகநூல் பயனர்களின் எண்ணிக்கை 2008ல் 100 மில்லியனில் இருந்து 2 பில்லியனுக்கும் அதிகமானதாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு Pew ஆய்வு கணிப்பின்படி, 45 சதவீத அமெரிக்கர்கள் வேறு எந்த சமூக ஊடக தளத்தையும் விட முகநூலையே செய்தி விடயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். அது எதிர்ப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கான மற்றும் பிரதான ஊடகத் தொழில் கூட்டிணைப்புக்களின் கட்டுப்பாட்டுக்களுக்கு வெளியில் தகவல் பரவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க இயங்குமுறையாக ஆகியுள்ளது. பிரதான முதலாளித்துவ அரசுகளுடன் நெருக்கமாக செயற்படும் இந்த முகநூலானது முடிவுக்குக் கொண்டுவர விரும்புவது இதைத்தான்.

சுக்கர்பேர்க் முடிவை அறிவித்த பின்னர், அவரது நிறுவனமானது “மிக அர்த்தமுள்ள சமூக பரஸ்பர தொடர்புகளை பெறுவதற்கு உங்களுக்கு உதவுவதற்கு பொருத்தமான விடயத்தை நீங்கள் கண்டறிவதற்கு கவனம்செலுத்துவதற்கு நாம் எப்படி முகநூலைக் கட்டமைக்கிறோம் என்பதில் பாரிய மாற்றத்தைச் செய்கிறது” என்று கூறினார்.

அறிக்கையானது ஒரு எதேச்சாதிகார ஆட்சியின் ஆர்வெல்லிய மொழியில் பண்பிடப்பட்ட வகையால் நிரம்பி இருந்தது. மாற்றங்கள், “எமது சேவைகள் பயன்படுத்துவதற்கான வேடிக்கையாக இல்லாமல், மக்கள் நலனுக்கான நல்லதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பொறுப்பால்” உந்தப்பட்டிருப்பதாக சுக்கர்பேர்க் விளக்கினார். செய்தி உள்ளடக்கத்தை தரமிறக்கி விட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து இடுகைகளை பதியுமாறு வலியுறுத்துவதன் மூலம், முகநூலானது அதன் பயனர்கள் “அதிகம் தொடர்பில் உள்ளோராய் மற்றும் குறைந்த தனிமை உடையோராய் உணரவைக்கும்” மற்றும் ஒட்டுமொத்த விளைவும் “எமது நல வாழ்வுக்கான நல்லதாக” இருக்கும் என உறுதிப்படுத்தும்.

வேறுவிதமாகச் சொன்னால், உங்களுக்கு எது நல்லதென்று முகநூல் அறியும், மற்றும் அது உலகின் நிலை பற்றிய செய்தியோ தகவலோ அல்ல. அத்தகைய “பொது விடயம்” முகநூல் வழங்கும் செய்திகளிலிருந்து அதிகரித்த அளவில் அகற்றப்படும், அதேவேளை காட்டப்பட்ட செய்தி இடுகைகள் “மக்களுக்கு இடையிலான அர்த்தமுள்ள பரஸ்பர உறவாடல்களை ஊக்கப்படுத்தும் அதே தரத்தில் வைக்கப்படும்.”

ஜோர்ஜ் ஓர்வலால் தனது புத்தகம் 1984 இல் காட்சிப்படுத்தப்படும் சர்வாதிகாரத்தில் பெரிய அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் போரையும் சர்வாதிகாரத்தையும், அவற்றின் எதிர்நிலையாக: போரை சமாதானம் என்று மாற்றுவதன்மூலம் அதன் தொடர்ந்திருக்கும் நிலைமீது ஊடகம் “புதிது உரையாடல்” என்பதைப் பயன்படுத்துவர். சுக்கர்பேர்க்கின் “வேடிக்கை பேசலில்” தகவலைப் பரிமாற்றும் மக்களின் சக்தியை நசுக்குவதை அந்த விஷயத்திற்காக எம்மிடம் மக்களை நெருக்கமாக கொண்டுவரும்” முயற்சி என விவரிக்கப்படுகிறது. தணிக்கையானது Hallmark வாழ்த்து அட்டை என்ற பெயரில் இருக்கிறது.

மேலும் முகநூலானது “கடந்த ஆண்டே இந்த திசையில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியது என்று சுக்கர்பேர்க் குறிப்பிட்டார், அதாவது, தணிக்கையானது ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த ஆறுமாதங்களாக, முகநூலில் இடுகையிட்ட விடயங்கள், குறிப்பாக காணொளிகள் கடந்தகாலத்தைவிட குறைந்த அளவே சென்றடைகின்றன, என்பதை உலக சோசலிச வலைத் தளம் அவதானித்துள்ளது. அதேவேளை வாசகர்கள் உலக சோசலிச வலைத் தள கட்டுரைகள் தொடர்பான தங்களது சொந்த இடுகைகள் “விரும்பத்தகாதது” என்று அடையாளமிடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த முடிவிற்கான அரசியல் நோக்கம் - இந்நிறுவனத்தின் விடயம் பற்றிய மூலோபாயத்தில் ஏற்பட்ட 180 பாகை மாற்றம் ஆகும்– அது முகநூலில் இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம் என்ற உண்மையால் கோடிட்டுக்காட்டப்படுகிறது. அவரது இடுகையில், சுக்கர்பேர்க் “முகநூலில் மக்கள் பயன்படுத்தும் நேரம் மற்றும் அதில் ஈடுபடும் சில நடவடிக்கைகள் கீழிறங்கலாம்” என தான் எதிர்ப்பார்ப்பதாக உறுதிப்படுத்தினார். “விடயத்தை வெளியிடுவோரிடமிருந்து விளம்பர வருவாயில் ஏற்படும் எதிர்பார்த்த வீழ்ச்சியுடன் இதுவும் சேர்ந்து வெள்ளிக்கிழமை அன்று முகநூல் பங்கில் 9 சதவீத வீழ்ச்சியை விளைவித்தது.

ஆனால் மிகவும் முக்கியமான விடயங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. முகநூல் நடவடிக்கையானது, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருநிறுவன தணிக்கைநிலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தகவலைப் பரப்பல், பகிர்தல் மற்றும் ஒளிபரப்புவதை நோக்கம் எனக் கூறிய நிறுவனங்களிலிருந்து, அவை நசுக்குதல் மட்டும் கட்டுப்படுத்தலின் கருவிகளாக ஆகியுள்ளன.

ஒரு ஆண்டுக்கு முன், சுக்கர்பேர்க் நேற்றுக் குறிப்பிட்ட புள்ளியையும் சேர்த்து, அவரது கூற்றானது “கடந்த சில ஆண்டுகளாக முகநூலில்  இட்ட காணொளி மற்றும் இதர பொது விடயங்களை” பெருமைக்குரியனவாக எடுத்திருக்கலாம். இப்பொழுது அதனை ஆபத்தாக எடுக்கிறார்.

இந்த மாற்றமானது ஜனநாயகக் கட்சியாலும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளாலும் எடுக்கப்படும் பிரச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்பட ஊடக வெளிப்பாடுகளுடன் சேர்ந்து, அவர்கள் அமெரிக்க அரசியலில் ரஷ்ய செல்வாக்கு, பிரதானமாக சமூக ஊடகத்தின் வழியாக “அமெரிக்க ஜனநாயகம்” சீரழிந்துவிட்டது என்ற மக்கார்த்திய வாதத்தை வளர்த்தெடுக்கிறார்கள் மற்றும் அது நாட்டுக்குள்ளே “பிளவுகளை விதைத்துக்கொண்டிருக்கிறது” என்ற வாதம் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இதர அரசுகளால் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் இறுதியில் தொடர்ச்சியான விசாரணைகளில், அமெரிக்க சட்ட வகுப்பாளர்கள் முகநூல், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகியவை அரசியல் பேச்சு மீதாக ஒரு கடுமையான அடக்குமுறையை அமல்படுத்துவன என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகத் தெளிவுபடுத்தினர். கடந்த வாரத்தில்தான் அமெரிக்க பாராளுமன்றத்திலுள்ள ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியலில் ரஷ்யத் தலையீடு என்று கூறப்படுவது மீதாக ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டனர். அது “சமூக ஊடக மேடைகள் ஜனநாயகங்களைக் கீழறுக்கும் தவறான தகவல் பிரச்சாரங்களின் முக்கிய வழியாக இருக்கின்றன என்று” அது முடிவாய் உரைத்தது.

ஆளும் வர்க்கத்தின் உண்மையான கவலை ரஷ்ய “தலையீடு” அல்ல, “மாறாக அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் வளர்ச்சியடைந்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பாகும். ட்ரம்ப் நிர்வாகம் இணைய நடுநிலைத் தன்மையை இல்லாதொழித்தல் உள்பட அதன் பிற்போக்கு, இராணுவவாத மற்றும் ஜனநாயக விரோத நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் அதேவேளை, ஜனநாயகக் கட்சியினர் அச்சுறுத்திவரும் முடிவுறாப் போர் மற்றும் தாக்குப் பிடிக்க முடியாத சமூக சமத்துவமின்மை ஒரு சமூகப் பதட்டத்தை உருவாக்கும்.

ஐந்து மாதங்களுக்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளம், பெரிய தொழில் நிறுவனங்களினாலான தணிக்கை நோக்கிய பரந்த திருப்பத்தின் ஒரு பாகமாக, கூகுள் ஆனது இடதுசாரி, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை தணிக்கை செய்வதை நாடுகிறது என்று எச்சரித்தது. ஜனநாயக உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதலானது அரை ஆண்டில்தான் வேகமாய் வளர்ந்துள்ளது. ஆளும் வர்க்கமானது இந்த ஆண்டு பெரும் போரினையும் சமூக அமைதியின்மையின் ஒரு வெடிப்பையும் எதிர்பார்த்து மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலைமைகளின் கீழ் ஆனைலைன் வெப்மினார், “இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஏற்படுத்து” என வெளியிடும் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் மற்றும் இதழாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் இடையிலான உரையாடல் மிகவும் காலப்பொருத்தமுடையது. இந்த நேரலை காணொளி செவ்வாய், ஜனவரி 16 அன்று 7;00 மணிக்கும் 8;30 மணிக்கும் (EST நேரம்) இடையில் ஒளிபரப்பப்படும். நாம் நமது வாசகர்கள் அனைவரையும் endcensorship.org – இல் இன்று பதிவு செய்யுமாறும் இந்த முக்கிய சர்வதேச நிகழ்வில் பங்கேற்கத் திட்டமிடுமாறும் அழைக்கிறோம்.