ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump to fire National Security Adviser McMaster as personalist circle tightens

தனிநபர் வட்டாரம் நெருக்கமாகின்ற நிலையில், ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டரை பதவியிலிருந்து நீக்கவிருக்கிறார்

By Eric London
16 March 2018

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டரை நீக்க முடிவெடுத்துள்ளார் என ஐந்து வெள்ளை மாளிகை ஆதாரநபர்கள் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் நேற்றிரவு அறிவித்தது.

வெள்ளை மாளிகையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத மற்றும் உடனடியாக நிறைவேற்றப்படக் கூடிய இந்த பணிநீக்கம், ட்ரம்ப் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனை நீக்குவதாக அறிவித்து ஒருசில நாட்களுக்குள் வருகிறது. ட்ரம்பின் ஜனாதிபதி பதவி காலம் மிக மிக குறைவாகவே ஒரு ஜனாதிபதி நிர்வாகத்திற்கு ஒத்துள்ளது, அது அதிகளவில் தலைவருக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தனிநபர்களின் ஒரு கூட்டத்திற்கு ஒத்துள்ளது.

ஏற்கனவே இந்த ஜனாதிபதி பதவிக்காலம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிற்போக்குத்தனமானதாக உள்ள நிலையில், தற்போதைய இந்த மந்திரிசபை மாற்றம் வலதை நோக்கி வேகமாக அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. கோச் சகோதரர்களின் (Koch brothers) அதிவலது கைக்கருவியான சிஐஏ இயக்குனர் மைக்கேல் பொம்பியோவை ரில்லர்சனுக்கு பதிலீடாக ட்ரம்ப் நியமித்துள்ளார். புஷ் நிர்வாகத்தின் போது தாய்லாந்தில் அமெரிக்க நிழலுலக சித்திரவதை மையத்தை நடத்திய ஜினா ஹாஸ்பெல்லை (Gina Haspel), அவர் பொம்பியோவின் இடத்திற்கு நியமித்துள்ளார்.

மெக்மாஸ்டருக்கு சாத்தியமான பதிலீடாக இருப்பவர், அதிதீவிர வலது ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகத்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக இருந்தவரும், ஈரான் மற்றும் வட கொரியாவுக்கு எதிராக மூர்க்கமான போர் ஆலோசகராக உள்ளவருமான ஜோன் போல்டன் ஆவார். Vox எழுதியது, போல்டன் "ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆக்கப்படக்கூடும், இது ட்ரம்பின் எதிர்கால வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தக்க —மற்றும் மிரட்சியூட்டும்— தாக்கங்களைக் கொண்டிருக்கும்,” என்றது.

முழுக்க முழுக்க இராணுவ உளவுத்துறை எந்திரம் செல்வாக்கு செலுத்தும் ஒரு மந்திரிசபையை ட்ரம்ப் அமைத்து வருகின்ற வேளையில், நேற்றிரவு போஸ்ட் செய்தி ட்ரம்பின் தன்மையைச் சித்தரிக்கிறது. போஸ்ட் எழுதியது, “வெளிப்படையான எல்லா சீர்குலைவையும் பொறுத்தமட்டில்,” “ட்ரம்ப் துணிவை உணர்வதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர்", மேலும் அவர் "அவர் குழுவை மதிப்பீடு செய்து மாற்றங்கள் செய்யும் நடைமுறை குறித்தும், தப்பித்திருப்பவர்கள் மற்றும் அவரது வழமைக்குமாறான பாணியை மதிப்பவர்கள் என்று அவர் கருதுபவர்களை அவரது உள்வட்டாரத்தில் நெருக்கமாக வைத்திருக்கும் நடைமுறை குறித்தும் அவர் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.”

“மார்ச்சின் ஏழு நாட்கள்: ட்ரம்ப் நிர்வாகமும், அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும்" என்ற மார்ச் 15 முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளம் முன்வைத்த பகுப்பாய்வை இது ஊர்ஜிதப்படுத்துகிறது. நாம் எழுதினோம்:

ட்ரம்ப் தன்னை இன்னும் கூடுதலாக முசோலினியின் பாணியில் நடத்திக் காட்டுகிறார், மேலும் அமெரிக்க சமூகத்தில் உள்ள எவ்வகையான தவறுகளையும் தன்னால் மட்டுமே தீர்க்கமுடியும் என 2016 பிரச்சாரத்தில் அவர் அடிக்கடி அறிவித்ததை நடைமுறையில் நிறுத்துகிறார். அவர் தன்னை அமெரிக்கா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ, அல்லது இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றின் தலைவராகவோ அல்ல, மாறாக ஒரு தனிப்பட்ட ஆட்சியாளராக, இலத்தீன் அமெரிக்க அல்லது பாசிச பாணியிலான ஒரு எதேச்சதிகாரியாக, அனைத்து பிரதான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்பவராக நடந்து கொள்கிறார்.

இந்த நிகழ்முறையின் கூடுதல் ஆதாரத்தை, ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை முன்னணி உறுப்பினர்கள் Elijah Cummings மற்றும் Eliot Engel உம் இராணுவத்திற்கான வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜோன் கெல்லிக்கும் மற்றும் துணை வெளியுறவுத்துறை செயலர் ஜோன் சுலிவனுக்கும் அனுப்பிய ஒரு கடிதம் வழங்கியிருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் அரசாங்கத்திலிருந்து அரசுத்துறை அதிகாரிகளின் தொழில்வாழ்வை கழித்தொழித்து வருவதாக, இதை ஜனநாயகக் கட்சியினர் "பெரிதும் தொந்தரவூட்டும்" அபிவிருத்தி என்று அழைப்பதாக அக்கடிதம் குற்றஞ்சாட்டுகிறது.

அக்கடிதம் தொடர்ந்து குறிப்பிடுகிறது, “அரசுத்துறை பணியாளர்களின் தொழில் வாழ்க்கை மீதான அரசியல் தாக்குதல்கள் குறித்து கடந்த ஆண்டில் நாம் பல செய்திகளைச் செவிமடுத்துள்ளோம், ஆனால் இதுவரையில் இந்த தாக்குதல்கள் எந்தளவுக்கு பரவலானது, முட்டாள்தனமானது மற்றும் பொருத்தமற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் காணவில்லை.” “ஒபாமா/கிளிண்டன் விசுவாசிகள் ஜனாதிபதி ட்ரம்பின் வெளியுறவு கொள்கை திட்டநிரலுக்கு முற்றிலும் ஆதரவாக இல்லை" என்று குறிப்பிடப்படும் ஒருசில அதிகாரிகளையே ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கி வருவதாக ஜனநாயகக் கட்சியினரின் அக்கடிதம் குற்றஞ்சாட்டுகிறது.

வெளியுறவுத்துறையின் "பகிரங்கப்படுத்துபவரால்" (அதாவது ஜனநாயக கட்சியின் விசுவாசி) கசியவிடப்பட்ட ஆவணங்களை அக்கடிதம் மேற்கோளிடுகிறது. இந்த வெளியேற்றமானது, “முன்னாள் சபாநாயகர் Newt Gingrich, பழமைவாத செயல்பாட்டாளர் Barbara Ledeen, டிக் செனி மற்றும் ஜோன் போல்டனின் முன்னாள் ஆலோசகர் டேவிட் வுர்ம்செர் உட்பட கட்சிக்கு வெளியிலிருக்கும் பழமைவாத வலையமைப்பு ஒன்றால்" ஒழுங்கமைக்கப்படுவதாக அவர் வலியுறுத்துகிறார். அக்கடிதத்தின் குறிப்பொன்று, வெளியுறவுத்துறையில் உள்ள ஜனநாயக கட்சி அதிகாரிகளைத் "தூய்மைப்படுத்துவதற்கு" Gingrich அழைப்புவிடுக்கும் ஒரு மின்னஞ்சலை மேற்கோளிடுகிறது.

மெக்மாஸ்டரின் பணிநீக்கத்தை விவரிக்கும் போஸ்ட் செய்தியும், மேற்கொண்டு பணிநீக்கங்கள் செய்யப்பட இருப்பதாக குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, “சமீப நாட்களாக வெள்ளை மாளிகைக்குள் நிலவும் மனநிலை வெறித்தனத்தின் விளிம்பில் உள்ளது, அதேவேளையில் ட்ரம்ப் அதிகரித்தளவில் அவரின் சொந்த குழுவை தக்க வைக்கிறார், மூத்த உதவியாளர்களோ வதந்திகளுக்கும் உண்மைக்கும் இடையே பதவி இடங்களைத் தீர்மானிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். … சில வெள்ளை மாளிகை அதிகாரிகள் அடுத்து யார் வெளியேறுவார் என்று பந்தயம் கட்ட தொடங்கி உள்ளனர்.”

ட்ரம்ப் அவர் அரசாங்கத்தில் முக்கிய பாத்திரம் வகிக்க அதிகரித்தளவில் அவருக்கு விருப்பமான தொலைக்காட்சி பிரமுகர்களை உள்ளிழுத்து வருகிறார். உருக்கு மற்றும் அலுமினியம் மீது அவரின் இறக்குமதி வரிவிதிப்புகளை ட்ரம்ப் அறிவித்தததும் கடந்த வாரம் பணியிலிருந்து விலகிய கேரி கோஹ்ன் இடத்தில், CNBC தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் Larry Kudlow ஐ அவரின் தலைமை பொருளாதார ஆலோசகராக நிலைநிறுத்த பெயரிட்டுள்ளார். பல்வேறு செய்திகளின்படி, ட்ரம்ப் முன்னாள் இராணுவத்தினர் சார்ந்த விவகாரங்களுக்கான செயலர் டேவிட் சுல்கினை (David Shulkin) நீக்கிவிட்டு அவரிடத்தில் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் Peter Hegseth ஐ நியமிக்கவும் பரிசீலித்து வருகிறார்.

ஜனநாயக கட்சியோ, ட்ரம்ப் நிர்வாகத்தின் உள் நெருக்கடிக்கு அவரது வலதுசாரி வேலைத்திட்டத்தை எதிர்ப்பதன் மூலமாக அல்ல, மாறாக ரஷ்யாவுக்கு எதிராக ட்ரம்ப் இன்னும் அதிக போர்நாடும் நிலைப்பாட்டை எடுக்க நிர்பந்திப்பதன் மூலமாக விடையிறுத்துள்ளது. பணிநீக்கங்களின் இந்த சமீபத்திய சுற்றானது ட்ரம்ப் வணிகங்களை திரும்ப பெறுவதற்கான சிறப்பு ஆலோசகர் ரோபர்ட் முல்லெரின் முடிவுடன் பொருந்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும், பதவிநீக்க குற்றவிசாரணை அல்லது குற்றப்பத்திரிகைக்கான சாத்தியக்கூறு நெருங்கி வருகின்ற நிலையில் ட்ரம்ப் அவரின் உள் வட்டாரங்களை நெருக்கமாக உள்ளிழுத்து வருவதாக முல்லெர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரத்தில், ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடையாணைகளுக்கு கையெழுத்திட்டதன் மூலமாக ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ-உளவுத்துறை முகமைகளுடன் ஒத்துழைத்து செல்ல அவர் விரும்புவதைச் சுட்டிக் காட்டினார். இங்கிலாந்தில் ரஷ்ய முன்னாள் உளவாளி சேர்ஜி ஸ்கிரிப்பால் மற்றும் அவர் மகளைப் படுகொலை செய்ய ரஷ்ய அரசு முயற்சித்தது என்ற ஆதாரமற்ற வாதங்கள் மீது, ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நேட்டோ அதிகாரங்களுடன் சேர்ந்து ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை கண்டனம் செய்துள்ளார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Seven days in March: The Trump administration and the breakdown of American democracy
[15 March 2018]