ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Questions mount about UK allegations over "novichok" poison in Skripal case

ஸ்கிரிபால் விடயத்தில் ‘நோவிசோக்’ நஞ்சு தொடர்பான இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகள் பற்றியதில் கேள்விகளே குவிகின்றன

By Alex Lantier
19 March 2018

மார்ச் 4 அன்று சாலிஸ்பரியில் “நோவிசோக்” உடன் முன்னாள் பிரிட்டிஷ் உளவாளி சேர்ஜி ஸ்கிரிபாலுக்கு நஞ்சூட்டியதாக மாஸ்கோ மீதாக குற்றம்சாட்டி, லண்டன் ரஷ்யாவுடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்துகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் காட்டும் காரணம் மீதாக ராஜீய மற்றும் விஞ்ஞான வட்டாரங்களில் கேள்விகள்தான் குவிந்து வருகின்றன. “நோவிசோக்” என்ற இரசாயன ஆயுதம் உண்மையிலேயே இருக்கிறதா என்பது தெளிவில்லாததாக இருக்கிறது. குறிப்பாக அதன் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக, லண்டன் இன்னும் சரியான ஆதாரங்களை வழங்காத நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான அதன் முழு வழக்கும் பொய்களை அடிப்படையாகக் கொண்டுள்ளனவா என்ற கேள்விகளையே எழுப்புகின்றன.

கடந்தவாரம், ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் சிக்மார் காப்ரியேல் ரஷ்யாவிற்கு எதிரான லண்டனின் குற்றச்சாட்டு “உண்மையில் மோசமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திற்”கான வசனம் போல் இருந்தன என்று அறிவித்த அதேவேளை, உஸ்பெக்கிஸ்தானுக்கான முன்னாள் தூதூவர் கிரெய்க் மர்ரி (Craig Murray) “நோவிசோக்” மீதாக சுருக்கமான ஆனால் அழிவுகரமான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். “நோவிசோக் கதை உண்மையில் இன்னொரு பேரழிவுகர ஆயுத அவதூறு” என்று தலைப்பிடப்பட்ட அவரது கட்டுரை, ஈராக்கின் மீதான 2003 படையெடுப்பை நியாயப்படுத்த உதவிய, ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று கூறிய இழிபுகழ் பெற்ற அமெரிக்க-பிரிட்டிஷ் பொய்களுடன் ரஷ்யா “நோவிசோக்” வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஒப்பிட்டது.

ரஷ்யா “நோவிசோக்” பயன்படுத்தல் என்ற குற்றச்சாட்டுகள், பிரித்தானிய அரசாங்கம் மற்றும் சாலிஸ்பரியிலிருந்து சில கிமீ தொலைவிலுள்ள போர்டன் டவுனில் உள்ள அதன் உயிரி–இரசாயன யுத்த வசதிவாய்ப்பு இடத்திலிருந்து வருகின்றது. ஆயினும், கிரெய்க் மர்ரி சுட்டிக்காட்டியவாறு, போர்ட்டன் டவுனில் உள்ள கண்டுபிடிப்பு ஆய்வகத்தின் தலைவர் டாக்டர். ராபின் பிளாக், அண்மையில் 2016ல் “நோவிசோக்” நரம்பைப்பாதிக்கும் ஊக்கிகளின் இருப்பு பற்றி ஐயம் தெரிவித்திருந்தார்.

ஆன்லைனில் கூகுள் நூலகம் வழியே தகவல் பெறக்கூடிய, விஞ்ஞான படைப்பான இரசாயன யுத்த நச்சுயிலுக்கு (Chemical Warfare Toxicology) பங்களிப்புச் செய்கையில், பிளாக் எழுதினார்:

அண்மை ஆண்டுகளில், நான்காம் தலைமுறை நரம்பியல் பாதிப்புப் பொருள்களான ‘நோவிசோக்’ (புதிய வருகை), பாதுகாப்பு எதிர் நடவடிக்கைகளை சமரசம் செய்யும் வேதிப்பொருள் ஊக்கிகளை கண்டறியும் குறிக்கோளுடன், ஃபோலியன்ட் திட்டத்தின்’ பகுதியாக 1970களில் தொடங்கி ரஷ்யாவில் அபிவிருத்தி செய்யப்பட்டது என்று அதிகமாய் ஊகம் இருக்கிறது. இந்த கூட்டுப் பொருள் பற்றி பொது தளத்தில் குறைவாகவே இருக்கிறது, பெரும்பாலும் ரஷ்ய இராணுவ வேதியியலார் அதிருப்தியாளர் வில் மிர்சாயானோவ் இடமிருந்து உருவானதாக இருக்கிறது. அத்தகைய கூட்டுப் பொருளின் இயல்புகள் மற்றும் கட்டமைப்பு பற்றி வேறு தனிப்பட்ட உறுதிப்படுத்தல் ஒன்றும் இல்லை.

1995ல் “நோவிசோக்” கூட்டுப் பொருள் மீதாக வேலைசெய்திருந்தார் என்று மிர்சாயானோவ் எழுதிய கட்டுரையானது, யாராவது இந்த கூட்டுப்பொருளை செல்தகைமை உள்ளதான ஒரு நரம்பைப் பாதிக்கும் ஊக்கியாக எப்போதாவது அபிவிருத்தி செய்துள்ளார்களா என்று தெளிவுபடுத்தவில்லை. “இரசாயனக் கூட்டுப்பொருள் அல்லது A-232-ன் முன்னோடிப் பொருட்கள் அல்லது அதன் இரட்டைப் பதிப்பு நோவிசோக்-5 என்பன சாதாரண பாஸ்பேட் கொண்ட இயற்கை கூட்டுப்பொருளை வணிக இரசாயனப்பொருள் நிறுவனங்களில் தயாரிக்க முடியும், அவை அத்தகைய பொருட்களை உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் உற்பத்திசெய்கின்றன என்பதை ஒருவர் எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று அவர் எழுதினார்.

மிர்சாயானோவ் 2008ல் அரசு இரகசியம்: ரஷ்யன் இரசாயன யுத்த திட்டம் பற்றி உள்ளிருந்தவர் குறிப்பு என்று தலைப்பிடப்பட்ட நூல் ஒன்றை வெளியிட்டார். மிர்சாயானோவ் வெளியிட்டு அமசனில் இன்றும் விற்பனைக்கு உள்ள இந்த நூலில், அவர் கூறிய இரசாயன  வாய்பாடு சோவியத் இரசாயன ஆயுதங்கள் வேலைத்திட்டத்தில் செயல்படும் கூட்டுப்பொருள் ‘நோவிசோக்’கிற்கானதாகும். இதன்பொருள், உண்மையில் இரசாயன அமைப்புநிலைகளைத் தொடர்புகொள்ள முடியும் எவருக்கும் அபிவிருத்தி செய்ய உதவ முடியும் என்று மிர்சாயானோவ் கூறும் “நோவிசோக்” கூட்டுப்பொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பதாகும்.

எவ்வாறாயினும், “நோவிசோக்” இரசாயன ஆயுத இருப்பை, பிரிட்டனிலும் சரி அல்லது சர்வதேச ரீதியாகவும் சரி, மிர்சாயனோவ் கூற்றுக்கள் விஞ்ஞான சமூகத்தை அறிவார்ந்தமுறையில் இணங்கவைக்கத் தவறிவிட்டன. போர்டன் டவுன் வசதிவாய்ப்பானது மட்டும் அதன் ஐயங்களை எழுப்பவில்லை. 2013ல், கிரெய்க் மர்ரி குறிப்பிட்டவாறு, இரசாயன ஆயுதங்களைத் தடுப்பதற்கான (OPCW) ஐ.நா அலுவலகத்தின் விஞ்ஞான ஆலோசனை வாரியம் (SAB), “நோவிசோக்” கூட்டுப்பொருள்கள் நரம்பைப் பாதிக்கும் ஒரு ஊக்கியாக மாறியிருந்தது என்றதற்கான ஆதாரம் எதையும் கொண்டிருந்ததில்லை என்று அதேபோன்று தெளிவுபடுத்தியது.

OPCW வலைத் தளத்தில் இன்னும் இருக்கும், இந்த அறிக்கையில், SAB அதன் இரசாயன ஆயுதப் பட்டியலில் “நோவிசோக்”-ஐ உள்ளடக்கவில்லை, ஏனெனில் அதில் சம்பந்தப்பட்ட கூட்டுப்பொருள்களை ஒரு இரசாயன ஆயுதமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்பதற்கு அது எந்த ஆதாரத்தையும் பார்த்திருக்கவில்லை என்று விளக்கியது. அது எழுதியது:

உடன்படிக்கையிலுள்ள நச்சு இரசாயனப் பொருள் பற்றிய வரைவிலக்கணம் இரசாயன ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ள அனைத்து இரசாயனங்களையும் உள்ளடக்குகிறது. இரசாயனப்பொருட்கள் பற்றிய பிற்சேர்க்கையில் புதிய நச்சு இரசாயனப்பொருள் பட்டியல் இடப்படவில்லை என்பது தொடர்பாக, இருப்பினும் அது ஐ.நா உடன்படிக்கைக்கு ஒருபோதும் ஆபத்தை ஏற்படுத்தவில்லை, SAB “நோவிசோக்குகள்” பற்றி குறிப்பிட்டது. “நோவிசோக்” என்ற பெயர் முன்னாள் சோவியத் விஞ்ஞானி ஒருவரின் வெளியீட்டில் பயன்படுத்தப்பட்டது, இரட்டை இரசாயன ஆயுதங்களாக பயன்படுத்துவதற்கான பொருத்தமான நரம்பு ஊக்கிகளின் ஒரு புதியவகையை புலனாய்வு செய்வதாக அறிவித்திருந்தார். “நோவிசோக்குகளின்” இயல்புகள் அல்லது இருப்பு பற்றி கருத்துரைப்பதற்கு அதனிடம் போதுமான தகவல்கள் இல்லை என்று SAB கூறுகிறது.

2003 இல் லண்டன் உதவிசெய்து பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்யின் அடிப்படையில் வாஷிங்டன் ஒரு போரைத் தொடுத்த பின்னர், பிரிட்டனின் ரஷ்யாவிற்கெதிரான அதன் விடயத்தில் மையமாக இருக்கும் “நோவிசோக்”கை ரஷ்யா பயன்படுத்துகிறது என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கு காரணம் எதுவும் இல்லை. பதிலாக, பின்வருவன உள்பட அநேக கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

மிர்சாயானோவ்-ஆல் விவரிக்கப்பட்ட கூட்டுப் பொருட்களின் அடிப்படையில் “நோவிசோக்” ஆயுதம் இரகசியமாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால், மற்றும் ஸ்கிரிபாலுக்கு நஞ்சூட்ட அது பயன்படுத்தப்பட்ட பின்னர் அதனை இங்கிலாந்து அதிகாரிகள் கண்டிருந்தால்:

 

 

 

விஞ்ஞான சமூகம் நம்புவதாகத் தெரிகிறவாறு, “நோவிசோக்” என்ற நரம்பைப் பாதிக்கும் வாயு இருக்கவில்லை, ஆகையால் லண்டன் அதனை சாலிஸ்பரியில் கண்டிருக்கவில்லை என்றால், பிறகு ஏன் அது பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்களின் அடிப்படையில் — அதுவும் இத்தருணத்தில், ஒரு பிரதான அணுஆயுத வல்லரசான ரஷ்யாவை இலக்காகக் கொண்டு மீண்டும் ஒரு போர்வெறியைத் தூண்டுகிறது?