ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

75 years ago: French Committee of National Liberation established

75 ஆண்டுகளுக்கு முன்பாக: தேசிய விடுதலைக்கான பிரெஞ்சு கமிட்டி உருவாக்கப்பட்டது


1943 இல் ஜிரோ (இடது) மற்றும் டு கோல்

1943 ஜூன் 3 அன்று, வட ஆபிரிக்காவில் தளபதிகளான சார்ல்ஸ் டு கோல் மற்றும் ஹென்றி ஜிரோ ஆகியோரின் தலைமையிலான பிரெஞ்சு இராணுவப் படைகள் தேசிய விடுதலைக்கான பிரெஞ்சு கமிட்டியை உருவாக்கின. பிரெஞ்சு இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அல்ஜியர்ஸில் நடந்த கலந்தாலோசனைகளுக்குப் பின்னர் பிரகடனம் செய்யப்பட்ட இந்த புதிய அமைப்பானது, 1940 ஜூலையில் உருவாக்கப்பட்டது முதலாக நாஜி ஜேர்மனியுடன் நெருங்கி வேலை செய்து வந்திருந்த பிரான்சில் இருந்த விச்சி ஆட்சிக்கு ஒரு மாற்றாக சிந்திக்கப்பட்டது.

டு கோல் மற்றும் ஜிரோ ஐ ”இணைத் தலைவர்களாக” நியமித்த தேசிய விடுதலைக்கான பிரெஞ்சு கமிட்டியானது, “அனைத்து பிரெஞ்சு சுதந்திரங்கள், குடியரசின் விதிகள் மற்றும் குடியரசு ஆட்சியை மீண்டும் நிறுவுவதே” நோக்கம் என்று தெரிவித்தது. விச்சி அரசாங்கம் மூன்றாம் ரைய்ஹ்கிற்கு ஆதரவளித்த காரணத்தால் அது நீதிக்குப் புறம்பானதாகும் என்றும் அது அறிவித்தது.

நாஜி ஆட்சியும், பிரான்ஸ் மற்றும் வேறெங்கிலும் இருந்த அதன் பினாமிகளும் ஒரு ஆழமான நெருக்கடியில் இருந்த நிலைமைகளின் கீழ் இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது. ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்ராலின் கிராடில், சோவியத் இராணுவம் படையெடுப்பு இராணுவப்படையின் கணிசமான பகுதியை சுற்றிவளைத்து அழித்துக் கொண்டிருந்த நிலையில், ஜேர்மன் படைகள் ஒரு நாசகரமான தோல்வியை சந்தித்தன. கமிட்டி உருவாவதற்கு பல வாரங்களுக்கு முன்பாக, ஜேர்மன் மற்றும் இத்தாலியப் படைகள் வட ஆபிரிக்காவில் அவர்களது கடைசி இராணுவநிலைகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு விட்டிருந்தன.

கமிட்டியின் உருவாக்கத்தை தொடர்ந்து விச்சி ஆட்சிக்கு எதிரான பிரெஞ்சு படைகள் மத்தியிலும், மற்றும் நேச நாடுகள் இடையிலும் கடுமையான மோதல்கள் உண்டாகின. பிரெஞ்சு முதலாளித்துவம் நாஜிக்களுடன் காட்டும் ஒத்துழைப்பு அதனை மதிப்பிழக்கச் செய்து சமூக எழுச்சிகளைத் தூண்டும் என்ற அச்சத்தில், டு கோல், ஆரம்பத்தில் இருந்தே விச்சி ஆட்சியை எதிர்த்து வந்திருந்தார். ஆயினும் ஜிரோ முன்னர் விச்சியின் ஆதரவை அனுபவித்திருந்தார். நேச நாடுகளை நோக்கி அவர் திரும்பியதானது ஒத்துழைப்புவாத ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை அவர் உணர்ந்ததில் தூண்டப்பட்டிருந்ததாக இருந்தது.

பிரெஞ்சு முகாமில் இருந்த பிளவுகள், இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஆபிரிக்காவும் மற்றும் உலகமும் மறுபங்கீடு செய்யப்படுவது தொடர்பாக நேச நாடுகளுக்கு இடையில் பதட்டங்கள் பெருகியமையுடன் குறுக்கிட்டன.

அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், போருக்குப் பின்னர் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, பழைய பிரெஞ்சு சாம்ராஜ்யம் உடைக்கப்பட எதிர்பார்த்தார். ஆசிய மற்றும் ஆபிரிக்க காலனிகளில் பிரெஞ்சு தளங்களைக் கைவிட்டு விடக் கோரும் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு உடன்பட்டிருந்த ஜிரோ ஐ அவர் ஆதரித்தார். பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், டு கோலையும் பிரெஞ்சு காலனித்துவத்தின் தொடர்ந்த இருப்பையும் ஆதரித்தார்; இன்னும் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பராமரிப்பதில் இளைய பங்காளியாகவும், மேலாதிக்கமான உலக சக்தியாக பிரிட்டனை பிரதியிடுவதற்கு அமெரிக்கா செய்த முயற்சிகளுக்கு எதிர்விசை எடையாகவும் அதனை அவர் கண்டார்.

நேச சக்திகள், கமிட்டி உருவாக்கத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், பிளவுகள் தீர்வுகாணப்பட்டிருக்கவில்லை என்பதன் ஒரு அறிகுறியாக, அதனை ஒரு மாற்று பிரெஞ்சு அரசாங்கமாக அங்கீகரிக்காமல் நின்று கொண்டன.

50 years ago: De Gaulle makes television appeal for end to French general strike

50 ஆண்டுகளுக்கு முன்பு: பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர டு கோல் தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடுக்கிறார்

 


சார்ல்ஸ் டு கோல் 1968 ஆம் ஆண்டில்

பிரெஞ்சு பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கி நாட்டை புரட்சியின் விளிம்புக்குக் கொண்டுவந்த, உலக வரலாற்றின் மிகப் பெரியதும் மிகப் பரந்ததுமான வேலைப் புறக்கணிப்புப் போராட்டமாக, 10,000,000 தொழிலாளர்கள் பங்குபெற்ற பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விண்ணப்பிப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டு கோல் 1968 மே 24 அன்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றினார். நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய அவசரகால அதிகாரங்களை அளிப்பதற்கும் “உள்நாட்டுப் போரை நோக்கிய ஓட்டம்” என்று அவர் அழைத்த ஒன்றை நிறுத்துவதற்கும் ஜூனில் ஒரு கருத்துவாக்கெடுப்பு ஒன்றை அவர் அறிவித்தார்.

“பிரான்சின் ஆண்மக்களே பெண்மக்களே”, அவர் அறிவித்தார், “நீங்கள் ஒரு வாக்கின் மூலமாக உங்கள் தீர்ப்பை வழங்கப் போகிறீர்கள். உங்களது பதில் ‘வேண்டாம்’ என்று இருக்குமாயின் அதற்கு மேல் எனது செயல்களை நான் மேற்கொள்ள மாட்டேன்.” அவரது இந்த விண்ணப்பம் மே-ஜூன் நிகழ்வுகளது ஒரு திருப்புமுனையான புள்ளியில் வந்திருந்தது, டு கோலின் உண்மையான பார்வையாளர்களாக இருந்தது, கிளர்ச்சி செய்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது முழுமையாக அனுதாபம் காட்டிய பிரெஞ்சு மக்களின் பரந்த எண்ணிக்கையினர் அல்ல, மாறாக பிரதான தொழிற்சங்கங்கள் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே ஆவர், அணிதிரண்டிருந்த தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரெஞ்சு முதலாளித்துவத்தைப் பாதுகாக்க அவர்களையே அவர் நம்பியிருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், டு கோலின் பிரதமரான ஜோர்ஜ் பொம்பிடு, தொழிற்சங்கத் தலைவர்களுடனும் பிரெஞ்சு முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்த பிரதான அமைப்பான Organisation Patronale உடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடக்கினார், ஊதிய அதிகரிப்புகள் மற்றும் மேம்பட்ட வேலைநிலைமைகளின் விடயத்தில் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுக்கான பிரதிபலனாக பொது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவது, ஆனால், எந்த அரசியல் விட்டுக்கொடுப்புகளையும், எல்லாவற்றுக்கும் மேல் டு கோல் அரசாங்கத்தின் வெளியேற்றத்திற்கான கோரிக்கைகளை தவிர்ப்பது ஆகியவை கொண்ட கிரெனெல் உடன்படிக்கைகளுக்கு இந்த பேச்சுவார்த்தைகள் இட்டுச்செல்ல இருந்தன.

கிரெனெல் உடன்படிக்கை குறைந்தபட்ச ஊதியத்தில் 25 சதவீத அதிகரிப்புக்கும், ஒட்டுமொத்தமாக 10 சதவீத ஊதிய அதிகரிப்புக்கும் அழைப்பு விடுத்தது, ஆனாலும் தொழிலாளர்கள் இந்த சலுகைகளை நிராகரித்து வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். பல்கலைக்கழகங்களில் பெருந்திரள் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன, மாணவர்களும் தொழிலாளர்களும் வலது-சாரி அரசாங்கம் வெளியேற்றப்படுவதற்கும் புதிய தேர்தலுக்கும் கோரினர்.

சமரசம் மற்றும் ஒடுக்குமுறை இரண்டின் ஒரு கலவையைக் கொண்டு டு கோல் தொடர்ந்தார். தனது அரசியல்சட்ட அதிகாரத்தைப் பிரயோகித்து மாணவர் போராட்டத்தின் தலைவர்களுக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கிய அதேநேரத்தில், அவரது அரசாங்கம், மாணவர் தலைவர்களில் ஒருவரான டானியல் கோன்-பென்டிட், Saarbrucken மற்றும் Forbach இடையில் எல்லையிலிருந்த ஒரு நிலையத்தில் மேற்கு ஜேர்மனியில் இருந்து கடந்து வர முயற்சி செய்தபோது அவரை மீண்டும் நாட்டுக்குள் நுழைவதில் இருந்து தடைசெய்தது. அவரை “விரும்பத்தகாதவர்” என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

மே 22 அன்று, பொம்பிடுவின் அரசாங்கம் ஒரு கண்டன வாக்கெடுப்பில் மயிரிழையில் தப்பிப் பிழைத்தது, 485 உறுப்பினர்கள் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் 233 உறுப்பினர்கள் இந்த கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவில் வாக்களித்தனர், அரசாங்கத்தை பதவியிறங்கச் செய்வதற்கு அவசியமாயிருந்த 244 வாக்குகளுக்கு இது 11 வாக்குகள் குறைவாகும்.

50 years ago: Factory occupations sweep France

50 ஆண்டுகளுக்கு முன்பு: தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் பிரான்சை வியாபிக்கின்றன

 


1968 மே-ஜூன் சமயத்தில் தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளுடன் இணையாக நடந்த ஆர்ப்பாட்டங்களது ஒரு பகுதி

1968 மே 14 தொடங்கி, பிரெஞ்சு தொழிலாளர்கள், முந்தைய வாரங்களில் நடந்த பாரிய மாணவர் ஆர்ப்பாட்டங்களால் உத்வேகம் பெற்று, தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளது ஒரு அலைக்கு தொடக்கமளித்தனர், இது முதலாளித்துவ பிரான்சை அதன் அடித்தளம் வரை உலுக்கியது.

முதலாவது ஆக்கிரமிப்புகளில் ஒன்றாக Nantes இல் Sud-Aviation தொழிற்சாலையில் நடந்த ஆக்கிரமிப்பு இருந்தது. இந்த ஆலை ஒரு மாத காலத்திற்கு தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இருந்தது, நிர்வாகக் கட்டிடம் மீது செங்கொடிகள் பறந்தன. பிராந்திய இயக்குநரான Duvochel, 16 நாட்களுக்கு போராட்டக்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார். நாஜி ஒத்துழைப்புவாதியும், போர்க் குற்றவாளியும் 1961 இல் பாரிஸ் போலிஸின் தலைவராய் இருந்த காலத்தில் அல்ஜீரிய போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பானவராகவும் இருந்த மொறிஸ் பப்போன் (Maurice Papon) தான் அச்சமயம் நிறுவனத்தின் பொது மேலாளராய் (general manager) இருந்தார்.

மே 15 தொடங்கி மே 20 வரையிலும் நாடெங்கிலும் நடந்த இந்த தொழிற்சாலை உள்ளிருப்புகளது ஒரு அலையில் மற்ற தொழிற்சாலைகளது தொழிலாளர்களும் அடியொற்றினர். எங்கெங்கிலும் செங்கொடிகள் ஏற்றப்பட்டன, பல தொழிற்சாலைகளில் நிர்வாகம் சிறைப்பிடிக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருந்த Billancourt இல் இருந்த பிரதான ரெனோல்ட் தொழிற்சாலை, மற்றும் Flins, Le Havre, மற்றும் Rouen ஆகிய இடங்களில் இருந்த மற்ற ரெனோல்ட் தொழிற்சாலைகள் உள்ளிட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நடவடிக்கைகளில் பாதிப்படைந்தன. ஓர்லியில் இருந்த பாரிஸ் சர்வதேச விமான நிலையத்தை தொழிலாளர்கள் மூடினர். Lyon இல் இரண்டு தொழிற்சாலைகளில் இருந்தும், பாரிஸில் பல்வேறு செய்தித்தாள்களில் இருந்தும் அவர்கள் வேலைப்புறக்கணிப்பு செய்தனர்.

மே 17க்குள்ளாக, குறைந்தபட்சம் 100,000 தொழிலாளர்கள் பிரான்சில் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர், அத்துடன் Berliet டிரக் தொழிற்சாலை, Lyon இல் உள்ள Rhône-Poulenc இல் இருந்த இரசாயனத் தொழிற்சாலைகள் மற்றும் Rhodiaceta ஜவுளித் தொழிற்சாலை உள்ளிட ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளில் செங்கொடி -சர்வதேச சோசலிசத்தின் அடையாளமாக- பறக்கவிடப்பட்டிருந்தது.

மே 18 அன்று, கான் திரைப்பட விழா நடுவர்கள் தொழிற்சாலை மற்றும் பள்ளி உள்ளிருப்புப் போராட்டங்களது அலையுடன் அனுதாபத்தை வெளிப்படுத்தும் முகமாக இராஜினாமா செய்ததை அடுத்து, விழா அதன் ஒன்பதாவது நாளில் இரத்து செய்யப்பட்டது. அடுத்த நாளில், விழாவுக்கு மறுதுவக்கமளிக்கும் முயற்சிகளை முடக்கும்விதமாக, தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சுற்றியிருந்த பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்கள் (Action committees) முளைத்தன, அவை வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அலுவலர்களுடன் சேர்த்து உள்ளூர்வாசிகள், மாணவர்கள் மற்றும் கல்வி பயிலுவோரையும் ஈர்த்தன. இந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டன, தீவிர அரசியல் விவாதத்திற்கான களங்களாகவும் அபிவிருத்தி கண்டன. பல்கலைக்கழகங்களது விடயத்திலும் இது உண்மையாக இருந்தது, அவை பெருமளவுக்கு மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

மே 20 அன்று, தொழிற்சங்கங்களோ அல்லது வேறு அமைப்புகளோ அத்தகையதொரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை என்கிறபோதும் கூட, ஒட்டுமொத்த நாடும் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்து விட்டிருந்தது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன, உற்பத்தி மற்றும் போக்குவரத்து அமைப்பு முடங்கியிருந்தது. பிரான்சின் 15 மில்லியன் பேர் கொண்ட தொழிலாளர் படையில் பத்து மில்லியன் பேர், அதாவது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற நிலையில், இது, பிரான்சின் அல்லது வேறெந்த நாட்டின் வரலாற்றிலுமான மிகப் பரந்த மற்றும் மிகத் தாக்கம்கொண்டிருந்த பொது வேலைநிறுத்தமாக இருந்தது.

50 years ago: General strike in France backs student protests

50 ஆண்டுகளுக்கு முன்பாக: பிரான்சில் பொது வேலைநிறுத்தம் மாணவர் ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கிறது

 


1968 மாணவர் கிளர்ச்சியின் சமயத்தில் Lyon பல்கலைக்கழக வகுப்பறையில் இருந்த சுவரெழுத்துக்கள்

பிரான்சின் கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களது இரண்டு வார கால ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு -பாரிஸ் வீதிகளில் போலிசுடனான ஆக்ரோசமான மோதல்களை இது கண்டிருந்தது- பின்னர் பிரான்சில் மிக சக்திவாய்ந்த சமூக சக்தியான தொழிலாள வர்க்கமானது அதன் பிரசன்னத்தை உணரும்படி செய்தது.

மே 13 அன்று, மாணவர்களுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். சாமானியத் தொழிலாளர்கள் மத்தியில், போலிஸால் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு எதிராய் தனது சொந்த மோதலுக்கு ஏற்பட்ட உந்துதலின் அதிகரிப்பிலும் உண்டாகியிருந்த கோபத்தை வடியச் செய்வதற்கான ஒரு வழிமுறையாக Confédération Générale du Travail (CGT), Confédération française démocratique du travail (CFDT), மற்றும் Force Ouvrière (CGT-FO)  ஆகிய முக்கிய தொழிற்சங்கங்களால் இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேலைநிறுத்தம் பிரான்சை ஸ்தம்பிக்கச் செய்தது, கிட்டத்தட்ட தனியார் துறை அத்தனையையும், அத்துடன் அநேக போக்குவரத்தையும் மூடச் செய்திருந்தது.

போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் நுழைவானது ஜனாதிபதி சார்லஸ் டு கோலின் அரசாங்கத்தை மிரட்சியடையச் செய்தது. உடனடியாக பிரதமர் ஜோர்ஜ் பொம்பிடு, கைது செய்யப்பட்டிருந்த மாணவர்கள் விடுதலை செய்யப்படுவது மற்றும் சோர்போன் மீண்டும் திறக்கப்படுவது ஆகிய மாணவர்களின் மையமான கோரிக்கைகள் இரண்டையும் அவர் பூர்த்திசெய்வதாக அறிவித்தார். இருந்தபோதிலும், அரசாங்கம் முன்முயற்சியைத் தவற விட்டிருந்தது. நூறாயிரக்கணக்கிலான தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தை பிடித்துக் கொண்டு பாரிஸில் மாணவர்களுடன் இணைந்தனர், சோர்போன் ஆக்கிரமிப்புக்கு போலிசின் தடையரண்களைத் தாண்டி முன்னேறினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தான், மே 11 “தடையரண்களின் இரவு” அன்று, போலிஸ் லத்தீன் வட்டாரத்தில் (Quartier latin) மாணவர் தடையரண்களை வன்முறையாக துடைத்தெறிந்திருந்தது. முன்வந்த நாட்களில், கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆக்கிரமிப்புகள் பிரான்சை வியாபித்தன. பாரிஸில், போலிசின் கரங்களில் அடிவாங்கும் நிலைக்கு முகம்கொடுத்த நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினர், இந்த வன்முறை பிரெஞ்சு தொழிலாளர்களை அதிகமான அளவில் கோபப்படுத்தியது, பத்தாயிரக்கணக்கில் பங்குபெற்ற ஒழுங்குபட்ட பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் அணிதிரட்டியது.

50 years ago: Student protests erupt in Paris

50 ஆண்டுகளுக்கு முன்பாக: பாரிஸில் மாணவர் போராட்டங்கள் வெடிக்கின்றன



பாரிஸில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், மே 1968

1968 மே 2 அன்று, பாரிஸ் நான்ந்தேர் (Nanterre) இல் பல்கலைக்கழகத்தில் கலைக் கல்லூரி மூடப்பட்டதற்கு -புதிதாக கட்டப்பட்டிருந்த இந்த துணைநகர் வளாகம் நடந்து வந்த மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலிறுப்பாக மூடப்பட்டிருந்தது- எதிரான ஒரு மாணவர் போராட்டத்தை அடக்குவதற்கு கலகத் தடுப்பு போலிஸ் முயற்சி செய்தது. அடுத்தநாளில், ஆர்ப்பாட்டங்கள் கவுரவமிக்க சோர்போனுக்கும் பரவியது, நான்ந்தேர் மாணவனான டானியல் கோன்-பென்டிட்டிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் இடம்பெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தை உடைக்க மீண்டும் போலிஸ் அனுப்பப்பட்டது.

ஒரு ஊடக விவரிப்பின் வார்த்தைகளில் சொல்வதானால், மே 3 அன்று இரவு, நான்ந்தேர் மூடப்படுவதற்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்த “சோர்போன் மாணவர்களுடன் கலகத் தடுப்பு போலிசார் லத்திகள் மற்றும் கண்ணீர் புகை கொண்டு கடுமையான மோதல்களில் ஈடுபட்டனர்”. மொத்தம் 573 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பதிலிறுப்பில் அதிகாரிகள், 1253 இல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக, சோர்போனை காலவரையற்று மூடுவதற்கு உத்தரவிட்டனர்.

மே 5 அன்று, பல்கலைக்கழக பேராசிரியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரான்சின் சங்கம் ஒன்று, நான்ந்தேர் மற்றும் சோர்போன் மூடல்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராய் மோசமான போலிஸ் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தது.

மே 6 மற்றும் மே 7 அன்று, Union Nationale des Étudiants de France (UNEF) ஆல் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் வீதிச் சண்டை வெடித்தது. போலிஸ் லத்திகள் மற்றும் கண்ணீர் புகை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தது. பாரிஸின் புரட்சிகரப் பாரம்பரியத்தில் பதிலிறுப்பு செய்த மாணவர்கள், புரட்டிப் போடப்பட்ட கார்களது வீதித் தடையரண்களை உருவாக்கினர், அத்துடன் பாதையோரத்தில் இருந்த கற்களையும் பெட்ரோல் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினர். லத்தீன் வட்டாரத்திலும் (Quartier latin) மற்றும் அண்மைப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் ஐந்து வெவ்வேறு இடங்களில் போலிசுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வீதி மோதல்கள் நடந்தன.

ஒரு சம்பவத்தில், 10,000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் புரட்டிப் போடப்பட்ட பஸ்களைக் கொண்டு Boulevard St. Germain பெரு வீதியை துண்டித்தனர், “அலைக்குப் பின் அலையான போலிஸ் எதிர்த்தாக்குதல்கள் எதிர்த்து நிற்கப்பட்டன” என்று இந்த சம்பவம் குறித்த நியூ யோர்க் டைம்ஸின் செய்தி தெரிவித்தது. ”சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸ் வாகனங்கள் மீது கூரைகள் மீதிருந்து கற்களும் நெருப்புகுண்டுகளும் வீசப்பட்டன. ஏராளமான கதிர்வண்டிகள் மற்றும் போலிஸ் பேருந்துகளது ஜன்னல்கள் உடைத்து நொருக்கப்பட்டன, ஏராளமான புரட்டிப் போடப்பட்ட மற்றும் எரியும் கார்களது வெளிச்சம் Boulevard St. Germain மற்றும் Rue de Rennes ஐ நிரப்பியிருந்தது.