ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Britain’s royal wedding: Recasting the monarchy in the age of identity politics

பிரிட்டனின் அரச குடும்ப திருமணம்: அடையாள அரசியல் காலத்தில் முடியாட்சியின் மறுசித்தரிப்பு

By Paul Mitchell
19 May 2018

இன்று, அமெரிக்க நடிகை ரேச்சல் மெகான் மார்க்கெல் அரச குடும்பத்தின் மதிப்பிற்குரிய வேல்ஸ் இளவரசர் ஹென்றி சார்ல்ஸ் அல்பேர்ட் டேவிட்டை மணம் முடிக்கிறார்—இவர் வேறு பெயரில் இளவரசர் ஹரி என்றறியப்படுகிறார். பெண்ணியத்திற்கான ஒரு திருப்புமுனை என்று கணக்கில் கொள்ளப்படும் ஒன்றாக, மார்க்கெல் வின்ட்சர் அரண்மனையின் செயிண்ட் ஜோர்ஜ் தேவாலய நடைபாதையில் தனியாக நடந்து சென்று, பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸை சந்திப்பார்.

திருமண நிகழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென ஏழு பக்க "முக்கிய வழிகாட்டுதலைப்" பெற்றிருந்த 600 விருந்தினருக்கும், அல்லது திருமணத்திற்குப் பிந்தைய விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த 200 நெருக்கமான நண்பர்களுக்கும் கருவூலத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது. 30 மில்லியன் பவுண்டு செலவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. விருந்தினர்களுக்கு 16,000 ஷாம்பெயின் கோப்பைகளும், 23,000 கேனெப்ஸ் பலகாரமும் செலவாகுமென மதிப்பிடப்படுகிறது.

அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றும் அவற்றிற்கு பின்னணியில் நிற்கக்கூடிய "ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்து" வரும் நூற்றுக் கணக்கான பொதுமக்களின் உறுப்பினர்களுக்கு அதுபோன்ற கவனிப்பு எதுவும் விரிவாக்கப்படவில்லை. அவர்கள் வெட்டவெளி வெயிலில் நிற்க வேண்டியிருக்கும் என்பதுடன், அவ்விடத்தில் உண்ணவோ அல்லது குடிப்பதற்கோ எதுவும் விலை கொடுத்தும் வாங்க முடியாது என்பதால் உணவு பொட்டலங்களைக் கையோடு கொண்டு வருமாறு கூறப்பட்டிருக்கிறார்கள். அரச குடும்பம் மற்றும் அரச மகுட பண்ணையின் நூற்றுக் கணக்கான பணியாளர்களுக்கும், மற்றும் அந்நிகழ்வுகளின் "ஒருங்கிணைந்த" தன்மையைப் பெருமைப்படுத்தும் அர்த்தத்தில் நிறுத்தப்படும் உள்ளூர் பள்ளிக் குழந்தைகளுக்கும் இதே நிலை தான் உண்மையாக இருக்கிறது.

அதேபோல வின்ட்சரில் வீடற்றவர்களது கதியைக் குறித்தும் எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை. வியோமிங்கில் பனிச்சறுக்கில் விடுமுறையைக் கழித்து கொண்டிருந்த பழமைவாத கட்சி உள்ளாட்சி தலைவர் சைமன் டட்லி, தேம்ஸ் ஆற்றுப்படுகை பொலிஸிற்கு ட்வீட் செய்து, “வின்ட்சரில் நாடோடியாக தூங்கி கொண்டிருக்கும் மற்றும் அலைந்து கொண்டிருக்கும் தொற்றுநோய்களுக்கு" எதிராக நடவடிக்கைகள் எடுக்குமாறும், “#அரச திருமணத்திற்கு (#RoyalWedding) முன்னதாக இதை கையாள்வதில் கவனம் செலுத்துமாறும்" வலியுறுத்தினார்.

ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய விதத்தில், அந்த அரச தம்பதியர் 2016 ஜூலையில் இருவரும் சந்தித்ததிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச செய்திகளில் பெரும்பாலும் இடம்பெற்று வந்திருந்தனர். எல்லா விடயங்களையும் அரச குடும்பத்தின் மீது சார்த்தி முகஸ்துதி பாடும் சஞ்சிகை பதிப்பாசிரியர்கள், வதந்திகள் எழுதும் கட்டுரையாளர்கள், அரச குடும்பத்திற்குரிய செய்தி தொடர்பாளர்கள், முன்னணி எழுத்தாளர்களுக்கு இந்த "கற்பனை கலந்த காதல்" அனைத்தையும் பூர்த்தி செய்துவிடுகிறது.

“அமெரிக்க நடிகை மெகான் மார்க்கெலுக்கும் எலிசபெத் இராணியின் பேரன் இளவரசர் ஹரிக்குமான திருமணம், பிரிட்டனின் கறுப்பின சமூகத்திற்கு ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது,” என்று ராய்டர்ஸ் உணர்ச்சி பொங்க எழுதியது. “பிரிட்டிஷ் அரியணைக்குரிய வரிசையில் ஆறாவதாக உள்ள பிரிட்டிஷ் இளவரசருக்கும், மார்க்கெலுக்கும் நடக்கவிருக்கும் திருமணம், இவரின் தந்தை வெள்ளையினத்தவர் மற்றும் அன்னை ஆபிரிக்க-அமெரிக்கர், பிரிட்டன் எந்தளவுக்கு சமநோக்குநிலையை கொண்டுள்ளது மற்றும் இனரீதியில் கலந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக,” குறிப்பிட்டது.

இந்த ஜோடி, நவீன பிரிட்டனின், கலப்பின மற்றும் பன்முக பிரிட்டனின் தலைச்சிறந்த நல்ல விடயங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர்களும் வெளிப்படையாக "நம்மை போலவே இருக்கிறார்கள்!”

ஹரியைப் புத்துயிரூட்டுவது, அரண்மனை தகவல் தொடர்பு எந்திரம் மற்றும் துதிபாடும் பத்திரிகைகளுக்கு சாட்சியாகின்றன. இந்த "கும்பலைக் கிளறிவிடும் இளைஞர்" பத்தாண்டுகள் இராணுவத்தில் "சீர்திருத்தப்பட்டவர்" ஆவார். “குடியேற்றவாசிகள் மற்றும் பழங்குடி மக்களைப்" போன்று மாறுவேடமிட்ட விருந்துக்கு அவர் நாஜி சீருடை அணிந்து வந்ததும், சான்ட்ஹர்ஸ்ட் மாணவர்படையில் அவருக்கு உடனிருந்தவரை "நமது குள்ளமான பாகிஸ்தான் நண்பர்" என்று அழைத்தமையும் சிறிய முட்டாள்தனங்கள் தான். இப்போது இவர் "அறக்கட்டளைகளுக்கான உலக தூதர்", காயமடைந்த மற்றும் ஊனமுற்ற சிப்பாய்களுக்கு வெற்றி-தோல்வியற்ற விளையாட்டுகளுக்கு பாதுகாவலர், சாலையோரம் திரியும் இளைஞர்களுக்கு ஆலோசகர், ஆபிரிக்க பெருங்காடுகளைக் காப்பாற்றுவதற்கு தன்னைத்தானே அர்ப்பணித்து கொண்டவராக உள்ளார்.

ஆனால் மார்க்கெல் தான் இந்த "புதிய முடியாட்சிக்குள்" வரவிருப்பவராக கூறப்படுகிறார்.

பாரம்பரிய கோட்பாடுகளை மற்றும் கீழ் மட்டத்திடமிருந்து ஆளும் உயரடுக்கு எதிர்பார்க்கும் மரியாதையை மீளத்திணித்து, அரச குடும்பத்தின் ஒவ்வொரு திருமணமும், அரசு விவகாரங்களின் மேலிருப்பது வின்ட்சர் சபையே என்று காட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. பிரிட்டிஷ் அரசும் மற்றும் பிரிட்டிஷ் "வாழ்கை முறையும்" நீடித்திருப்பதாகவும், அவ்விதத்தில் சமூக ஸ்திரமின்மைக்கு எதிராக பாதுகாத்து நிற்பதாகவும் பிரகடனப்படுத்துவதை இதுபோன்ற நிகழ்வுகள் அர்த்தப்படுத்துகின்றன.

இந்த தொன்மையான அமைப்பை புதுப்பிப்பது, வெறுப்பூட்டும் அளவுக்கு சமூக சமத்துவமின்மை வளர்ந்திருக்கும் நிலைமைகளின் கீழ் அதிகரித்தளவில் அவசியமாகி விடுகிறது.

1981 இல் டயானா சார்லஸை திருமணம் செய்த போது, அவர் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதற்கும், 1997 இல் அவர் இறந்த போது தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயர் அவரை குணாம்சப்படுத்தியவாறு “மக்களின் இளவரசி" என்பதற்கும் இடைப்பட்ட புனித சின்னமாக சித்தரிக்கப்பட்டார். தாட்சரிசத்திலிருந்து புதிய உழைப்புகள் அதிகளவில் "தகுதி சார்ந்ததாக" மாறியிருந்ததாக கூறப்படும் சூழலில் அந்த அமைப்பு பிழைத்திருக்க வேண்டுமென அவர்கள் விரும்பியதால், அரச குடும்பத்தார் அவர்களின் கருத்துக்களுக்கு சக்தியூட்ட வேண்டுமென கூறுவதற்காக, குழந்தைகள், நிலச்சுரங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயானா செய்த அறப்பணிகளை டோனி பிளேயர் சுட்டிக்காட்டினார்.

அரியணைக்கு வாரிசான, ஆழ்ந்த அனுதாபமற்ற சார்லஸ், திருமதி கமெல்லாவை திருமணம் செய்து கொள்வதற்கு காட்டிய விருப்பம் மட்டுந்தான் இந்தளவுக்கு மறுசித்தரிப்பைச் சாத்தியமாக்கியது. ஆனால் ஆளும் வர்க்கம் பெரும் பிரயத்தனத்துடன், அவர் மகன் இளவரசர் வில்லியத்தைக் கொண்டு முதுமையடைந்து வந்த எலிசபெத் மகாராணியை அரச தலைமையிலிருந்து பிரதியீடு செய்ய விரும்புகின்ற நிலையில், அவர் 2011 இல் "சாதாரண" பெண்மணியான கேட் மிட்டில்டனை திருமணம் செய்ய முக்கிய முதல் படியை எடுத்தார்.

வறிய பெண்களிடையே மாதவிலக்கு கோளாறு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாலின சமத்துவமின்மையை எதிர்ப்பது மற்றும் அகதிகளுக்கு ஆதரவு வழங்குவது ஆகியவை ஏதோவிதத்திலோ இல்லையென்றால் முற்றிலுமாகவோ மார்க்கலின் நன்மதிப்புகளாக உள்ளன—ஆபிரிக்க அமெரிக்கரான இவர், ஒரு கத்தோலிக்கராக வளர்ந்தவர், ஒரு யூதரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்றாலும், “அவருக்குரிய ஆண்மகன்" மீதான அன்பால் இங்கிலாந்து தேவாலயத்தில் உறுதிமொழி ஏற்க விரும்புகிறார். அவர் நிஜத்தில் ஒரு பிரபலம் என்பது மட்டுமல்ல, மாறாக ஐக்கிய நாடுகள் சபைக்கான மனிதாபிமான பணி மற்றும் அறப்பணிகளின் முன்வரலாறு ஆகியவற்றுடன் தன்னை பெண்ணியவாதி என்று கூறிக் கொள்பவராகவும் உள்ளார்.

அவர் அரசியல் விவகாரங்களில் கருத்துரைக்க கூடாதென அரச குடும்ப நெறிமுறைகள் கட்டளையிடுகின்றன என்றாலும், மார்க்கெல் அவரது அரசியல் நன்மதிப்புகளை முன்னெடுத்தார், அவர் அறிவித்தார், “இப்போதைய சூழலில் நாம் நிறைய பிரச்சாரங்களை, அதாவது நான் குறிப்பிடுவது #MeToo மற்றும் Time’s Up ஆகியவற்றை நாம் பார்த்து வருவதாக நினைக்கிறேன், பெண்களின் உணர்வுகளுக்கு அதிகாரமளிப்பதில் வெளிச்சம் பாய்ச்சுவதை உண்மையிலேயே தொடர்வதற்கு இதை விட சிறந்த நேரம் வாய்க்காது, மக்கள் உண்மையிலேயே அவர்களுக்கு ஆதரவாக உதவி வருகிறார்கள்—ஆண்களையும் சேர்த்து தான்... ஆகவே, நாம் சில மாதங்கள் பொறுத்திருந்து விட்டு, முன்நகரும் களத்தில் இறங்கலாம் என்பதே என் கருத்து,” என்றார்.

இந்த அடையாள அரசியல் யுகத்தில் முடியாட்சியின் முடிவான பின்-நவீனத்துவ தயாரிப்புகளுக்கு, மார்க்கெலின் பெண்ணியமும் இனவாத அடையாளமும் அடித்தளத்தை வழங்குகின்றன.

சிறுபிள்ளைத்தனமாக “யார் வேண்டுமானாலும் இளவரசியாகலாம்" என்று அறிவிப்பதற்கு கறுப்பின பெண் பிள்ளைகளை சுழற்றிவிடும் அளவுக்கு, ஊடகங்களோ கறுப்பின பிரிட்டன்வாசிகள் மீது "மெகான் தாக்கத்தை" புகழ்ந்து தள்ளுகின்றன. ஆனால் அனைத்திற்கும் மேலாக இந்த முறையீடு தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கத்தின் உயர்மட்ட அடுக்குகளை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன, அடையாள அரசியலுடனான அவர்களின் இந்த சொந்த ஆவேசம் சமூகத்தில் முன்னேறுவதற்கான அவர்களின் அபிலாஷைகளுடன் பிணைந்துள்ளன.

குடியரசு பிரகடனங்கள் மீதான அவர்களின் முந்தைய அனுதாபங்கள், காலைப் பனி விலகியதைப் போல கலைந்துவிட்டது. கார்டியனின் ஜோன்ஜினா லாடன் ஒப்புக்கொண்டார்: “நான் வழமையாக அரச குடும்பத்தினரை பெரும் மரியாதையோடு பார்ப்பதில்லை, ஆனால் மெகான் மார்க்கெல் அதை மாற்றிவிட்டார். இளவரசர் ஹரியின் வாழ்க்கை துணைவியார் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இன உறவுகளில் உண்மையான மாற்றத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த கலப்பின உறவை அரச குடும்பம் பாதுகாப்பதைச் செவியுற்ற போது சந்தோஷமாக இருந்தது,” என்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றாளர் டெட் பாவோலின் கருத்துரையை Observer வெளியிட்டது, “கலப்பினத்தைச் சேர்ந்த, அவரது பாரம்பரியத்தையும் தழுவியுள்ள, அது பெரிதும் அவரின் பாகமாக இருப்பதாக குறிப்பிடும் ஒருவர் … அரச குடும்பத்தின் ஒரு அங்கத்தவராக ஆகியிருப்பது எந்தளவுக்கு முக்கியத்துவமானது என்பதை விளக்கிக் கூறுவதே சிரமம் தான்… குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகின்ற நிலையில், புலம்பெயர்வோர் கொள்கை மற்றும் விண்ட்ரஷ் மோசடி ஆகிய சர்ச்சைகளுக்கு இடையே, இது பெரிதும் பிரிட்டனுக்கு அனுகூலமாக இருக்கும்.”

ஹரி அவர் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், பிரிட்டன் மக்கள் இனவாதத்தால் பாரியளவில் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள் என்று காட்டும் உள்நோக்கம், அவமரியாதைக்குரியது மற்றும் பொருத்தமற்றது. இன்று, பிரிட்டனில் வாழும் 10 இல் ஒருவர், ஆணோ பெண்ணோ, அவரின் இனக்குழுவைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

ஏதோவொன்று இருக்கிறது என்றால், அட்லாண்டிக் எங்கிலும் உள்ள இதே சமூக அடுக்குகளின் விடையிறுப்பு தான் இப்போதும் அதிகளவில் அவமதிப்பதாக இருக்கிறது. சான்றாக, “ஒரு கறுப்பின பெண்ணியவாதி எவ்வாறு இளவரசிகளின் இரசிகை ஆனார்,” என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரை எழுதி, மாயா ரூபேர்ட், நியூ யோர்க் டைம்ஸ் பக்கங்களை நிரப்பினார்.

“எனக்கு பத்து வயது இருக்கையில் இந்த அரச குடும்ப திருமணம் குறித்து நான் எவ்வளவு குதூகலமாக இருந்தேன் என்பதை நினைத்து நான் அதிர்ச்சியடைகிறேன்,” என்றவர் தொடங்குகிறார். ஆனால் கலாச்சார வழிமுறையாக "வெள்ளையின பெண்மையை" மேலுயர்த்துவது இனி இல்லை என்பதை ரூபேர்ட் இப்போது உணர்கிறார்: “நான் அதை உணர்ந்ததும், எனது இளவரசி-எதிர்ப்பு பெண்ணியம் ஏதோவித அதிக நுட்பமான வேறு விடயங்களுக்கு வழிவிட தொடங்கியது… ஒட்டுமொத்தமாக, இளவரசி கலாச்சாரத்தை நிராகரிப்பதற்குப் பதிலாக, வேறுவேறு இளவரசிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பதாக மாறியிருக்கலாம்.”

சமூகத்தில் அதிகரித்து வரும் கஷ்டங்களுக்கு இடையே ஏமாற்றி பறித்த செல்வ வளத்தில் உயிர் வாழும் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள், அமெரிக்க ஸ்தாபக தந்தையர் எதற்கு எதிராக தங்களை விடுவித்துக் கொள்ள புரட்சிகர போர் தொடுத்தார்களோ, பிரிட்டனின் அந்த ஆளும் குடும்பம், காந்த ஈர்ப்பைக் கொண்டுள்ளது. இவ்விதமாக டைம்ஸ் எழுதுகிறது: “பிரிட்டிஷ் உரிமை ஊதியப் பங்கு 1990 களில் கடுமையான சீரமைப்புக்குள் சென்ற போதினும்,” இரண்டாம் எலிசபெத் மகாராணி இன்று "தொன்மையான பாரம்பரியம், கற்பனை கதை தலைப்புகள் மற்றும் நவீன வாழ்க்கை என இவற்றின் கலவையாக ஆர்வந்தூண்டும் அனுதாப ஈர்ப்புடன் தான் இருக்கிறார்,” என்றது.

அதிர்ஷ்டமற்ற மெகானும் ஹரியும், தங்கள் தோள்களில்தான் சவாரிசெய்கின்றனர்! இப்போது இந்த ஜோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற பல பணிகளை—அதாவது, முடியாட்சியை நவீனப்படுத்துவது, இனம் சார்ந்த பிரிட்டிஷ் மனோபாவங்களை மாற்றுவது, காமன்வெல்த்தை உயிர்பிப்பதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய நெருக்கடியைத் தீர்ப்பது, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு இடையே "சிறப்பு உறவை" ஜோடிப்பது ஆகியவற்றை—மேற்கொள்ள மார்க்கெல் அவரின் நடிப்பு திறமையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

இதில் பெரும்பான்மை மேம்போக்கான அரசியல் இனிப்பு மருந்தாகும். நிகழ்வுகள் ஒன்றுவிடாமல் ஒளிபரப்பப்பட்ட போதும், பிரிட்டனின் 66 மில்லியன் மக்களில் சுமார் பாதி பேர் இன்றைய திருமணத்திற்கு முற்றிலும் மனஸ்தாபம் கொண்டிருந்தனர் என்பதை கருத்துக்கணிப்பு நிறுவனமான YouGov இன் சமீபத்திய ஆய்வுகள் எடுத்துக்காட்டியது. இனம் என்பதை விட வர்க்க ரீதியில் மிகவும் இறுக்கமாக பிளவுபட்ட ஒரு தேசத்தின் வாழ்வில், அந்நிகழ்வு ஒரு திருப்புமுனையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற கருத்தைக் கேட்டு பலரும் நகைத்திருப்பார்கள்.