ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Israel denounces Iran nuclear deal after new missile strikes on Syria

சிரியா மீதான புதிய ஏவுகணை தாக்குதல்களுக்குப் பின்னர், இஸ்ரேல் ஈரான் அணு ஒப்பந்தத்தைக் கண்டிக்கிறது

By Bill Van Auken
1 May 2018

விரிவான கூட்டு நடவடிக்கை திட்டம் (JCPOA) எனப்படும் 2015 அணு ஒப்பந்தத்தைப் பேரம் பேசுவதற்கு முன்னரும், பேரம் பேசிய போதும், அதற்கு பின்னரும் ஈரான் குற்றகரமாக பொய்யுரைத்து வருவதற்காக ஈரான் அரசாங்கத்தை மீண்டும் கண்டித்து இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு திங்கட்கிழமை போர்நாடும் உரை ஒன்றை வழங்கினார்.

நெத்தனியாகுவின் உரை சிரியாவுக்குள் இரண்டு இராணுவ தளங்களுக்கு எதிராக ஞாயிறன்று இரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை உடன் தொடர்ந்து வந்தது. அத்தாக்குதலில் ஏறக்குறைய 18 ஈரானிய இராணுவ ஆலோசகர்களும் அத்துடன் இன்னும் பலரும் கொல்லப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன.

இத்துடன் சேர்ந்து, வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானுக்கு இடையிலான ஒரு நேரடி இராணுவ மோதலைத் தூண்டிவிடும் முயற்சியில் இஸ்ரேல் ஆட்சி ட்ரம்ப் நிர்வாகத்தின் பிரிவுகளுடன் கூடி செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரை நோக்கி செல்லக்கூடிய அதிகரித்த அபாயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

நெத்தனியாகு முதல்முறையாக ஆங்கிலத்தில் அவர் உரையை வழங்கி பின்னர், இரண்டாவதாக ஹீப்ரூவில் உரையாற்றி, அவரது உரையை கேட்பவர்கள் இஸ்ரேலியர்கள் இல்லை, மாறாக வாஷிங்டனில் இருப்பவர்கள் என்பதற்கு சமிக்ஞை செய்தார். நாடகபாணியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த உரை, "ஈரான் பொய்யுரைத்தது" என்ற வாசகத்தை முன்னிலைப்படுத்தி, ஒரு மிகப் பெரிய பவுர்பாயிண்ட் (PowerPoint) விளக்க காட்சியுடன் வழங்கப்பட்டது.

அந்த உரை முன்கூட்டியே ட்ரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நெத்தனியாகு ஞாயிறன்று டெல் அவிவ் இல் உள்ள இஸ்ரேலிய இராணுவ தலைமையகத்தில், ட்ரம்பின் புதிய வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்திருந்தார், அத்துடன் திங்களன்று கேமிராக்களின் முன்னாள் தோன்றுவதற்கு முன்னதாக அவர் ட்ரம்புடன் ஒரு தொலைபேசி உரையாடல் நடத்தியிருந்தார். இரண்டு உரையாடல்களுமே ஈரானை மையப்படுத்தி இருந்தன.

பொம்பியோ, புரூசெல்ஸில் நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு மற்றும் சவூதி அரேபியாவில் ஒரு நிறுத்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் பயணித்தார். இம்மூன்று இடங்களிலுமே, அவர் ஈரானுக்கு எதிராக கண்டனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மீதான அவர் கருத்துக்களில் ஒருங்குவிந்திருந்தார்.

“அவர் [ட்ரம்ப்] அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும், உலக சமாதானத்திற்கும் சரியானதை செய்வார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்,” என்று அவரது திங்கட்கிழமை உரையில் நெத்தனியாகு தெரிவித்தார்.

நெத்தனியாகுவின் தொனியும் அவர் தோன்றிய சூழ்நிலையும், ஈரான் உடன்வரவிருக்கும் நாட்களில் அணுகுண்டுகளை அபிவிருத்தி செய்யவிருப்பதாக கூறப்பட்ட மோசடி கூற்றுகளை எடுத்துக்காட்ட ஒரு வெடிகுண்டின் திரி எரிந்து கொண்டிருப்பதைப் போலவும் ஒரு கேலிச்சித்திரத்தின் முன்னால் அவர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முன்னால் 2012 இல் சிரிப்பூட்டும் வகையில் நின்றுகொண்டுடிருந்ததை தவிர அதற்கு மேலான ஒன்றையும் நினைவூட்டவில்லை.

அந்த பவர்பாயிண்டுக்கு கூடுதலாக, அந்த அரங்கில் எண்ணற்ற கோப்புகளைத் தாங்கிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, சிடி கள் இருப்பதாக பிரதம மந்திரி கூறிய ஒரு கூடை இருந்தது, அவற்றில் எல்லாம், இஸ்ரேலிய உளவாளிகளால் களவாடப்பட்ட "குற்றத்திற்குட்படுத்தும்" ஆவணங்கள் இருப்பதாக அவர் பகட்டாக தெரிவித்தார். அணு திட்டம் சம்பந்தமாக ஈரான் உலகை ஏமாற்றி வருவதை எடுத்துக்காட்டும் "புதிய மற்றும் தீர்க்கமான" ஆதாரங்கள் அவற்றில் இருப்பதாக தெரிவித்தார்.

“ஊளையிடும் ஓநாயைத் தடுக்க முடியாத சிறுவன் மீண்டும் வந்துவிட்டான்,” என்று நெத்தனியாகு உரை குறித்து வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான ஈரானிய அமைச்சர் ஜாவத் ஜரீப் ஒரு ட்வீட் சேதியில் கருத்துரைத்தார்.

நெத்தனியாகு உரைக்குப் பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் அணு உடன்படிக்கை குறித்து அவர் "100 சதவீதம் சரியாக" இருந்ததை அது உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

“என்ன நடக்கிறதென பார்ப்போம், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நான் கூறப் போவதில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார், மே 12 க்கு முன்னரோ அல்லது அன்றோ "முடிவெடுப்போம்" என்பதை உறுதிப்படுத்தினார், அந்த அணு உடன்படிக்கையின் பாகமாக ஈரானுக்கு எதிரான ஒருதலைபட்சமான அமெரிக்க தடையாணை நீக்கத்தைப் புதுப்பிப்பதற்கு மே 12 வெள்ளை மாளிகைக்கான இறுதிநாளாகும்.

அந்த உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா ஈரானுக்கு "150 பில்லியன் டாலரும், 1.8 பில்லியன் டாலர் ரொக்கமாகவும்...” கொடுத்துள்ளது, “நாம் எதையும் பெறவில்லை" என்ற அவர் கூற்றை ட்ரம்ப் மீண்டும் தெரிவித்தார். அணு உடன்படிக்கையின் கீழ் விடுவிக்கப்பட்ட ஈரானிய வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு என்பதாக இந்த 150 பில்லியன் டாலர் அமெரிக்க அரசியல் வலதுசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஜோடிப்பாகும். நிஜமான தொகை 25 பில்லியன் டாலருக்கும் 50 பில்லியன் டாலருக்கும் இடையில் இருக்குமென மதிப்பிடப்படுகிறது. ஓர் ஆயுத உடன்படிக்கையை பூர்த்திசெய்யாததால் அமெரிக்கா ஈரானுக்கு திரும்பி செலுத்த வேண்டி இருந்த ஆனால் ஒருபோதும் செலுத்தப்படாமல் இருந்த ஒரு தொகையை விட சற்று கூடுதலானது தான் இந்த 1.8 பில்லியன் டாலர்.

அந்த உடன்படிக்கையினால் ஈரானிய சந்தை திறந்துவிடப்படுவதால் வரும் எதிர்கால வாய்ப்புகள் அமெரிக்காவை மையமாக கொண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு அல்லாமல், ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யாவின் முதலாளித்துவ நலன்களுக்கே ஆதாயமளிக்குமென அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களுக்குள் பரந்த கவலைகள் இருப்பதையே, ஈரானுக்கு சென்ற பணம் குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானமான கருத்து பிரதிபலிக்கிறது.

ட்ரம்பை சமாதானப்படுத்தி அமெரிக்க தடையாணைகள் நீக்கத்தைப் புதுப்பிக்கவும் மற்றும் ஈரானிய அணு உடன்படிக்கை தோல்வியடைந்தால் அதன் விளைவு ஏறத்தாழ நிச்சயமாக அப்பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய போர் முனைவைத் தீவிரப்படுத்தும் என்ற நிலையில் அதை தடுக்கவும், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அமெரிக்க தலைநகருக்கான அடுத்தடுத்த சமீபத்திய விஜயங்களின் தோல்வியை, இந்த வாரயிறுதிக்குப் பின்னர் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் க்கு இடையிலான ஆரவாரமான தொடர்புகள், சமிக்ஞை செய்வதாக தெரிகிறது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டது, அவரும் பிரெஞ்சு ஜனாதிபதி மற்றும் ஜேர்மன் சான்சிலருடனான ஞாயிறன்று தனித்தனி தொலைபேசி அழைப்பில் அந்த உடன்படிக்கைக்கு அவர்களின் ஆதரவை மறுஉத்தரவாதப்படுத்தி உள்ளதாக அது சுட்டிக்காட்டியது. இதேபோன்ற உரையாடல் மக்ரோன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு இடையே நடந்ததாக இதற்கிடையே மாஸ்கோவும் ஓர் அறிக்கை வெளியிட்டது.

விரிவான கூட்டு நடவடிக்கை உடன்படிக்கையை (JCPOA) முறித்து கொள்ளவும் மற்றும் ஈரானுடன் அதிகரித்த அதிர்வுகளைக் கொண்ட இராணுவ மோதல் பாதையை நோக்கி செல்லவும் ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாகவே தீர்மானகரமாக இருப்பதாக ஐரோப்பிய சக்திகள் பார்க்கின்றன. இது வெறுமனே இலாப நோக்கமுள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கையாக இருக்கக்கூடியதை இழக்கும் சாத்தியக்கூறு மட்டுமல்ல —உண்மையில் அந்த உடன்படிக்கை 2015 இல் கையெழுத்திடப்பட்டதற்குப் பின்னர் இருந்து அவற்றில் சில நிறைவடைந்துவிட்டன— மாறாக அப்பிராந்தியத்தின் நிலைகுலைவு மற்றும் புதிதாக அகதிகள் விரட்டியடிக்கப்படுவது என்ற இரண்டு அர்த்தத்தில் அதுபோன்றவொரு போர் விளைவின் தாக்கத்தை ஐரோப்பா தாங்க வேண்டியதாக இருக்கும்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் புதிய மற்றும் இன்னும் அதிக பேரழிவுகரமான போர் ஏற்படும் சாத்தியக்கூறுகளுடன் சிரியா சம்பவங்கள் நாளாந்தம் தீவிரமடைந்து வருகின்றன.

ஹமா மற்றும் அலெப்போ நகரங்களுக்கு அருகே இரண்டு சிரிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களின் விளைவாக, ஞாயிறன்று இரவு குறைந்தபட்சம் இரண்டு டஜன் பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. தகவல்களின்படி, அதில் இறந்தவர்களில் 11 இல் இருந்து 18 ஈரானிய இராணுவ ஆலோகசகர்களும் உள்ளடங்குவர். ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் சிஐஏ மற்றும் வாஷிங்டனின் ஐரோப்பிய மற்றும் அப்பிராந்திய கூட்டாளிகளால் நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு ஆதரவாக சிரியாவுக்குள் ஈரான் இராணுவ சிப்பாய்களை அனுப்பி உள்ளது.

வானிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை மற்றும் பதுங்குகுழி-தகர்ப்பு குண்டுகளுடன் இதர ஆயுத தளவாடங்களின் கிடங்குகளை வெளிப்படையாகவே இலக்கில் வைத்திருந்த பெரியளவிலான அத்தாக்குதல்களின் தன்மை, ஹமா அருகே 2.6 நில அளவில் நிலநடுக்கம் பதிவானதில் அதன் வெடிப்புகளைப் பதிவு செய்தது.

இஸ்ரேல், அதன் வழமையாக செயல்படும் நடைமுறையைப் போல, அத்தாக்குதல்களைக் குறித்து கருத்து கூற மறுத்தது, அதேவேளையில் சிரியா அத்தாக்குதல்களுக்காக முதலில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸை சாடியிருந்தது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், பக்கவாட்டில் பிரிட்டன் இருக்க, ஓர் இரசாயன ஆயுத தாக்குதலைச் சாக்குபோக்காக பயன்படுத்தி ஏப்ரல் 14 இல் கப்பற்படை ஏவுகணைகளைக் கொண்டு அந்நாட்டை இலக்கு வைத்திருந்தன. அந்த சாக்குபோக்கும் பின்னர் ஒரு ஜோடிப்பு என்பது அம்பலமானது. ஈரானிய அதிகாரிகள் அதன் நாட்டு சிப்பாய்களில் சிலர் அத்தாக்குதல்களில் கொல்லப்பட்டதை முதலில் ஒப்புக் கொண்ட போதினும், தெஹ்ரான் பின்னர் அவ்வாறு ஒன்றுமில்லை என்று மறுத்தது.

டமாஸ்கஸ் மற்றும் தெஹ்ரான் பாகத்தில் இருக்கும் எச்சரிக்கை உணர்வானது, வேகமாக கட்டவிழ்ந்து வரும் சம்பவங்கள் அப்பிராந்தியத்தை ஒரு மிகப்பெரிய புதிய போருக்குள் தள்ளி வருகின்றன என்பது மீதான கவலையைப் பிரதிபலிக்கின்றன. கடந்த மாத தொடக்கத்தில் ஒரு சிரிய விமானத் தளம் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய சிப்பாய்கள் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கப்படுமென ஈரான் ஏற்கனவே அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் டெல் அவிவ் எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதாக இல்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் அவிக்டர் லிபெர்மன் நியூ யோர்க் நகரில் ஜெருசலேம் போஸ்டின் வருடாந்தர மாநாட்டில் ஓர் உரை வழங்கி வெறும் ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் அந்த இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டன. அந்த உரையில் அவர், டெல் அவிவ் "சிரியா முழுவதிலும் நடவடிக்கை மேற்கொள்ளும் சுதந்திரத்தை பேணும்" என்றும், எந்தவொரு ஈரானிய இராணுவ பிரசன்னத்தையும் என்ன விலை கொடுத்தாவது அது எதிர்க்கும் என்பதையும் அறிவித்தார்.

இதற்கிடையே இஸ்ரேலிய நாடாளுமன்றம் (Knesset), "அதிதீவிர சூழ்நிலைகளில்" பாதுகாப்பு அமைச்சர் ஒருவரின் ஒப்புதலுடன் பிரதம மந்திரியை போர் அறிவிக்க அனுமதிக்கும் சட்டமசோதாவுக்கு திங்களன்று ஒப்புதல் வழங்கியது.

அமெரிக்கா அதன் பங்கிற்கு, சிரியாவில் அதன் சொந்த தலையீட்டைத் தீவிரப்படுத்தி வருகிறது, சிரியாவின் டெர் எஜ்ஜார் மாகாண தலைநகரிலிருந்து அந்நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களுக்கு நெருக்கமாக உள்ள கிராம அண்டைபகுதிகளுக்குள் அதன் கட்டுப்பாட்டை விரிவாக்கும் முயற்சியில் சிரிய அரசு படைகளுக்கு எதிராக அமெரிக்க போர்விமானங்கள் ஞாயிறன்று வான் தாக்குதல்கள் நடத்தியதாக செய்திகள் குறிப்பிட்டன.

அமெரிக்க துருப்புகளை "நாட்டிற்கு" அழைத்து வரும் ட்ரம்பின் வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, பென்டகன் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்ட துருப்புகளை மீளபலப்படுத்த 2,000 க்கும் அதிகமான சிறப்பு நடவடிக்கைகளுக்கான அமெரிக்க துருப்புகளை அனுப்பி உள்ளது. இந்த துருப்புகள், பிரதானமாக சிரிய குர்திஷ் YPG போராளிகள் குழுக்களை உள்ளடக்கிய பினாமி தரைப்படைகளோடு சேர்ந்து, அந்நாட்டின் பிரதான எரிசக்தி ஆதாரவளங்கள் உள்ளடங்கலாக அண்ணளவாக சிரியா எல்லையின் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கி அமெரிக்க காபந்து அரசு ஒன்றை துண்டாடி எடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

ரஷ்யாவால் ஆதரிக்கப்பட்டிருக்கும் சிரிய அரசு படைகள் மீதான அமெரிக்க தாக்குதல்கள், டமாஸ்கஸிற்கு வழங்க மாஸ்கோ சூளுரைத்துள்ள ரஷ்ய S-300 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை எவ்விதத்திலும் பயன்படுத்துவதற்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என்ற இஸ்ரேலிய அச்சுறுத்தல்களுடன் சேர்ந்து, இந்த சிரிய மோதல் உலகின் பிரதான அணுஆயுத சக்திகளை உள்ளடக்கிய ஒரு பேரழிவுகரமான போராக தீவிரமடையும் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது.