ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After tariff measures against China

Trump threatens to escalate trade war with Europe

சீனாவுக்கு எதிரான வரிவிதிப்புகளுக்குப் பின்னர்

ட்ரம்ப் ஐரோப்பாவுடன் வர்த்தக போரைத் தீவிரப்படுத்த அச்சுறுத்துகிறார்

By Nick Beams
23 June 2018

எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க வரிவிதிப்புகளுக்கு பதில் நடவடிக்கையாக, ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ மதிப்பில் நேற்று அமெரிக்க பண்டங்கள் மீது வரிவிதிப்புகளைத் திணித்ததும், ஜனாதிபதி ட்ரம்ப் அட்லாண்டிக் இடையிலான நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்த மீண்டும் அச்சுறுத்தினார்.

அமெரிக்க வாகன ஏற்றுமதிகள் மீதான வரிவிதிப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கவில்லையானால், “நாங்கள் அமெரிக்காவிற்குள் வரும் அவர்களின் கார்கள் அனைத்தின் மீதும் 20 சதவீத இறக்குமதி வரிகள் விதிப்போம்,” என்று அறிவித்து, வெள்ளியன்று காலை ட்ரம்ப் ஒரு ட்வீட் சேதி வெளியிட்டார்.

எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு-கட்ட விடையிறுப்பை அறிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்புக்கு (WTO) வழங்கப்பட்ட ஒரு பட்டியலின்படி, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் போர்போன் மதுபான வகைகளில் இருந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் வரையில், பல பண்டங்களின் மீதான 25 சதவீத வரிவிதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்றாண்டுகளுக்குப் பின்னரோ அல்லது உலக வர்த்தக அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தாலோ, மேற்கொண்டும் 3.6 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க பண்டங்கள் மீது வரிகள் விதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய வரி விதிப்புகளைக் குறித்து பேசுகையில், ஐரோப்பிய வர்த்தக ஆணையாளர் Cecilia Malmström கூறினார்: “நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுக்க விரும்பவில்லை தான். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது எஃகு மற்றும் அலுமினிய வரிவிதிப்புகளைத் திணிப்பதென ஒருதலைபட்சமாக நியாயமின்றி அமெரிக்கா எடுத்த முடிவு, எங்களுக்கு வேறெந்த விருப்பத்தெரிவையும் விட்டு வைக்கவில்லை.”

அவர் கூறினார்: “அமெரிக்க பங்காளிகளுடன் கைகோர்த்து நாங்கள் அபிவிருத்தி செய்துள்ள, சர்வதேச வர்த்தக விதிமுறைகளை, எங்களின் பிரதிபலிப்பின்றி மீற முடியாது.”

அமெரிக்கா அதன் தரப்பின் நியாயமாக "தேசிய பாதுகாப்பைக்" கையிலெடுத்து, 1962 வர்த்தக விரிவாக்க சட்டத்தின் 232 ஆம் பிரிவின் கீழ் அதன் வரிவிதிப்புகளைத் திணித்தது. ஐரோப்பிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், கனடா அடுத்த மாதம் வரிவிதிப்புகளைத் திணிக்க உள்ளது, அதேவேளையில் மெக்சிகோ ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளது, இவ்விரு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, அமெரிக்க நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பாக தப்பிக்க முடியாமல் இருந்தன.

எஃகு மற்றும் அலுமினியம் விடயத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே அதே "தேசியப் பாதுகாப்பு" வகைமுறையைப் பயன்படுத்தி, வாகனங்கள் மீதும் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கான ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தல், முக்கியமாக ஜேர்மனியுடன், மிகப் பெரியளவிலான மோதலைத் தூண்டும்.

அமெரிக்கா கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வாகனங்களை இறக்குமதி செய்தது, இவற்றில் 726,300 வாகனங்கள் ஜேர்மனியின் மூன்று மிகப் பெரிய நிறுவனங்களான BMW, டைம்லெர் மற்றும் வோல்ஸ்வாகனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

வரிவிதிப்பு சம்பந்தமான ட்ரம்பின் சமீபத்திய ட்வீட் செய்தியானது, “தேசிய பாதுகாப்பின் பெயரில் வாகன இறக்குமதிகள் மீது பெரும் வரிவிதிப்புகளைத் திணிக்கலாமா என்பதற்காக அவர் நிர்வாகம் தொடங்கிய ஒரு விசாரணை மீது அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை" அடிக்கோடிடுகிறது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது.

வர்த்தக துறைச் செயலர் வில்பர் ரோஸ், இவரின் துறைதான் இந்த விசாரணையை மேற்பார்வையிட்டு வருகிறது என்ற நிலையில், இவ்வாரம் செனட் குழுவுக்குக் கூறுகையில், வரிவிதிப்புகளைப் பரிந்துரைக்கலாமா வேண்டாமா என்பதில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார், அந்த விசாரணை ஆகஸ்ட் தொடக்கத்தில் நிறைவடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த விசாரணை திரும்ப கொண்டு வரப்பட்டிருப்பதாக மே மாதம் ரோஸ் அறிவித்தபோது, பல "தசாப்தங்களாக", “வெளிநாட்டு இறக்குமதிகள் எங்களின் உள்நாட்டு வாகனத் தொழில்துறையை அரித்துவிட்டுள்ளது என்பதற்கு ஆதாரம்" உள்ளன. பொருளாதார பாதுகாப்பே இராணுவ பாதுகாப்பு. பொருளாதார பாதுகாப்பு இல்லாமல், இராணுவ பாதுகாப்பைக் கொண்டிருக்க முடியாது,” என்று கூறி, அவர் தேசிய பாதுகாப்பைப் பலமாக வலியுறுத்தினார்.

ட்ரம்பின் சமீபத்திய ட்வீட் எடுத்துக்காட்டுவதைப் போல, தெளிவாக அவர் இதை முன்னெடுப்பதற்கு அழுத்தமளிக்க பார்த்து வருகிறார். அதை பின்தொடர்ந்து இவ்வார தொடக்கத்தில் மின்னிசொடாவில் நடந்த "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்" கூட்டத்தில் பேசினார், அதில் அவர், “நாங்கள் உங்களிடம் மில்லியன் கணக்கான கார்களை விற்போம், ஆனால், நீங்கள் எதையும் எங்களிடம் விற்க கூடாது,” என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுவதற்காக அதை கண்டித்தார்.

ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கருத்துரைக்க மறுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு ஓர் அதிகாரி கூறினார். “கடந்த வாரங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் … இந்த விடயம் குறித்து நாங்கள் கூற வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கூறியுள்ளோம்.”

வாகனத் தொழில்துறை மீதான அமெரிக்க வர்த்தகத்துறை விசாரணை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட போது, ஐரோப்பிய ஒன்றிய செய்தி தொடர்பாளர் Margaritis Schinas கூறுகையில், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிவிதிப்புகளுக்கு எந்த நியாயப்பாடும் கிடையாது என்றுரைத்ததுடன், “தேசிய பாதுகாப்பைக் கையிலெடுப்பது கார் தொழில்துறை விடயத்தில் இன்னும் அதிகமாக ஏற்றுக்கொள்ள இயலாததாக உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். வரிகள் விதிக்கப்பட்டால் அவை உலகளாவிய கார் தொழில்துறையைத் குழப்பத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் தொழில்துறை வல்லுனர்கள் எச்சரித்தனர்.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க வர்த்தக போர் மற்றும் வாகன வரிவிதிப்புகள் குறித்த அச்சுறுத்தல்கள் ஏற்கனவே ஜேர்மன் கார் தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மெர்சிடஸ் கார் உற்பத்தி நிறுவனமான டைம்லெர், அதிகரித்து வரும் வர்த்தக போர், இலாபங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து இவ்வாரம் ஓர் எச்சரிக்கை வெளியிட்டது. 2018 க்கான இலாபத் தொகை கடந்த ஆண்டின் அளவை விட "சற்றே குறைவாக" இருக்குமென இப்போது அது எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டது. முன்னதாக அது இலாபம் உயருமென அனுமானித்திருந்தது.

அதன் அமெரிக்க ஆலைகளுக்கான பிரதான ஏற்றுமதிச் சந்தை, அதாவது சீனாவுக்கான, அமெரிக்க கார் ஏற்றுமதிகள் மீதான வரி விதிப்பே, இலாபம் குறைவதில் "தீர்க்கமான காரணியாக" இருக்குமென அது குறிப்பிட்டது.

“எதிர்பார்த்ததை விட குறைவான SUV விற்பனைகள், எதிர்பார்த்த விலைகளை விட அதிகமான விலை … ஆகியவற்றை அனுமானிக்கலாம், ஏனென்றால் சீன சந்தைக்குள் அமெரிக்க விற்பனை மீதான அதிகரித்த இறக்குமதி வரிவிதிப்புகளே காரணமாக இருக்கும்,” என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்க வர்த்தக போர் தீவிரப்பாடு சர்வதேச நிதியியல் வட்டாரங்களில் கவலைகளை உருவாக்கத் தொடங்கி உள்ளது. உயர் தொழில்நுட்ப பண்டங்கள் மீதான 50 பில்லியன் டாலர் மதிப்பிலான வரிவிதிப்புகள் அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரவிருப்பதற்கு கூடுதலாக சீனப் பண்டங்கள் மீது 400 பில்லியன் டாலர் மதிப்பில் வரிகளை விதிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலை இவ்வாரம் கண்டது.

இது திட்டநிரலின் மையத்தில் இல்லை என்றாலும், வர்த்தக போரும் மற்றும் அதன் அபாயங்களும், இவ்வாரம் போர்ச்சுக்கல்லின் சின்ட்ராவில் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஒன்றுகூட்டிய மத்திய வங்கியாளர்களின் வருடாந்தர கூட்டத்தில் கருத்துரைகளுக்குரிய மற்றும் எச்சரிக்கைகளுக்குரிய விடயமாக இருந்தன.

“வர்த்தக கொள்கை மாற்றங்களானது, நமது தொலைநோக்கு பார்வை மீது கேள்வி எழுப்பச் செய்யும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் ஒரு குழு விவாதத்தின் போது தெரிவித்தார். “முதல்முறையாக நாம், முதலீடுகளைத் தள்ளி வைப்பது, நியமனங்களைத் தள்ளிப்போடுவது குறித்த முடிவுகளை செவியுறுகிறோம்.”

ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ திராஹி கூறுகையில், பொருளாதார தாக்கம் குறித்து அளவிடுவது இப்போதைக்கு மிகவும் முன்கூட்டிய நடவடிக்கையாக இருக்கும் என்று கூறிய போதும், வணிகங்ளுக்கு இடையே நம்பிக்கை குறைந்து வருவதைக் குறித்து அவர் கவலை வெளியிட்டார்.

வர்த்தக மோதல்கள் மத்திய வங்கியின் நாணய கொள்கை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்பதற்கு இது நேரமில்லை என்றாலும், “அது குறித்து நம்பிக்கையாக இருப்பதற்கு எந்த அடித்தளமும் இல்லை,” என்றார்.

வர்த்தக மோதல்கள் மற்றும் பாதுகாப்புக்கான விளைவுகள் "அனைத்தும் மிகவும் எதிர்மறையானது" என்பதே வரலாற்றிலிருந்து படிக்க வேண்டிய பாடம் என்றும், சர்ச்சைகள் பரவுவது "நாம் அனைவரும் வளர்ந்துள்ள பன்முக கட்டமைப்பைப்" பலவீனப்படுத்தி வருவதாகவும் திராஹி தெரிவித்தார்.

பேங்க் ஆஃப் ஜப்பான் ஆளுநர் ஹருஹிகொ குரோடா கூறுகையில், வர்த்தகப் போர் தாக்கம் சீனாவுக்கு வினியோகம் செய்யும் கிழக்கு ஆசியா எங்கிலுமான பொருளாதார வலையமைப்பை குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்று எச்சரித்தார்.

“உண்மையிலேயே, இந்த தீவிரப்பாட்டை மாற்ற முடியுமென்றும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வழமையான வர்த்தக உறவு மேலோங்கும் என்றும் நான் நம்புகிறேன். இது ஜப்பானைப் பொறுத்த வரையில் மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்,” என்றார்.

மிகவும் கூர்மையான எச்சரிக்கை ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லொவ்விடம் இருந்து வந்தது. வரிவிதிப்புகள் மட்டுமே உலகளாவிய வளர்ச்சியைத் தடம்புரள செய்யாது என்றாலும், அவை சந்தை ஏற்ற-இறக்கத்தைத் தூண்டிவிட்டு, வணிக முடிவுகளைத் தள்ளிப்போடுவதற்கு இட்டுச் செல்லும் என்றார்.

“இதையொரு மிகப்பெரிய உலகளாவிய நிகழ்வாக மாற்றுவதற்கு காத்திருக்கும் வணிகங்களுடன் நிதியியல் சந்தைகள் ஒருங்கிணைய நிறைய நேரமாகாது. இதற்கு மிகக் குறைந்த சாத்தியமே உள்ளது என்றாலும், என்ன நடந்து வருகிறதோ அதனால் நான் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளேன்.”

சுவர்களைக் கட்டமைப்பதன் மூலமாக எந்தவொரு நாடும் செல்வ செழிப்பாக மாறியதில்லை, உற்பத்தியை அதிகரித்து கொண்டதும் இல்லை என்று லொவ் தெரிவித்தார். “என்ன நடந்து வருகிறதோ இவற்றை நான் மிகவும் கவலையுடன் பார்க்கிறேன்,” என்றார்.