ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Right-wing populist Imran Khan sworn in as Pakistan prime minister

வலதுசாரி ஜனரஞ்சகவாதியான இம்ரான் கான் பாக்கிஸ்தான் பிரதமராக பதவியேற்பு

By Sampath Perera
22 August 2018

தேசிய மற்றும் மாகாண சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது நிலவிய பாகிஸ்தானின் “ஆழ்ந்த நிலை” எதிர்க்கட்சிகளைக் குழப்பி தேர்தல் முடிவுகளை மோசமாக்கிய நிலையில், அவர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வலதுசாரி, இஸ்லாமிய ஜனரஞ்சகவாதியான இம்ரான் கான் கடந்த சனியன்று பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஒரு நேரத்தில் கிரிக்கெட் நட்சத்திர விளையாட்டு வீரராக இருந்த கானின், தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (அல்லது நீதிக்கான இயக்கம்) (Pakistan Tehrik-e-Insaaf-PTI or Movement for Justice) என்ற கட்சியும் பாகிஸ்தான் அரசியலில் நீண்டகாலமாக செயல்பட்டுவரும் ஒரு கட்சி என்ற வகையில், பொருளாதாரம் பொறியும் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தற்போது அவர் கைப்பற்றியுள்ளார். அனைத்திற்கும் மேலாக, சர்வதேச நாணய நிதியத்தில் (International Monetary Fund-IMF) இருந்து ஒரு அவசரகால கடனைப் பெற வாஷிங்டன் தடையாக அச்சுறுத்துகின்ற நிலையில், பல தசாப்தகால அதன் மிகமுக்கிய கூட்டாளியான அமெரிக்கா உடனான இஸ்லாமாபாத்தின் உறவுகள் மிகவும் முறிவுற்றுள்ளன.

நாட்டின் பிரதமராக கான் வழங்கிய தனது முதல் தொலைக்காட்சி உரையில், அடுத்தடுத்து நாட்டின் கடைசி இரண்டு அரசாங்கங்களுக்கு தலைமை வகித்ததும் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களாக அதன் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுமான பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (Pakistan Muslim League-Nawaz-PMLN) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People’s Party-PPP) போன்ற கட்சிகள் தான் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பாகும் என்று குற்றம்சாட்டினார். மேலும், “இத்தகைய கடினமான பொருளாதாரச் சூழ்நிலைகளை பாக்கிஸ்தான் வரலாற்றில் நாம் எப்பொழுதாவது எதிர்கொண்டிருக்கிறோமா,” என்று கான் கேள்வி எழுப்பினார். மேலும், “நமது ஒட்டுமொத்த வரலாற்றில்,” “கடந்த பத்து ஆண்டுகளில் நாம் மாறிப்போயிருக்கும்” அளவிற்கு ஒரு நாளும் “நாம் கடன்பட்டவர்களாக இருந்ததில்லை” என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

“செலவுகளைக் குறைப்பதற்காக” தேசியளவிலானதொரு உந்துதலை அதிகரிப்பதற்கென ஒரு குழுவை உருவாக்குவது பற்றி அறிவித்து, மொத்தச் செலவினங்களைக் குறைப்பதற்கு கான் உறுதிபூண்டுள்ளார். மேலும், பாக்கிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை இன்னும் வறுமையில் ஆழ்த்தும் சிக்கன நடவடிக்கை மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான தன்மையைக் கொடுக்கும் ஒரு முயற்சியில், ஊழலை எதிர்த்துப் போராடவும், செல்வந்தர்களிடமிருந்து வரி வசூலிப்புக்களை அதிகரிக்கவும், மேலும் ஐநூறுக்கும் அதிகமான பிரதமரின் தனிப்பட்ட ஊழியர்களை வெறும் இரண்டு பேராக குறைப்பது உட்பட அலுவலக நடைமுறைச் சலுகைகளை நீக்கவும் கான் உறுதிபூண்டார்.

ஜூலை 25 தேர்தலில், 342 தேசிய சட்டமன்ற இடங்களில் 151 ஐ கானின் PTI கைப்பற்றியது. அதன் பாராளுமன்ற பெரும்பான்மை என்பது, கராச்சி-சார்ந்த MQM-P மற்றும் பலூசிஸ்தான் தேசியக் கட்சி-மெங்கல் (Balochistan National Party-Mengal), மற்றும் சுயேட்சைகளும் உட்பட சிறிய கட்சிகளின் ஆதரவையே சார்ந்துள்ளது.

பிரதமரைத் தேர்வு செய்வது தொடர்பாக கடந்த வெள்ளியன்று நடந்த தேசிய சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய PML-N இன் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீஃப்பின் சகோதரருமான ஷெபஸ் ஷெரீஃப் பெற்ற 96 வாக்குகளுக்கு எதிராக கான் 176 வாக்குகளைப் பெற்றார். அரசியல் ரீதியாக நோக்கங்கொண்ட மற்றும் மோசடியாக தொடரப்பட்ட வழக்குகள் என்பதாக பரவலாக கருதப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என அவர் கண்டறியப்பட்ட பின்னர், உச்ச நீதிமன்றம் விடுத்த உத்திரவின் பேரில் ஜூலை 17 அன்று பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் நீக்கப்பட்டதோடு, இந்த ஆண்டு தேர்தலுக்கு முந்தைய காலம் வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கான் மற்றும் அவரது PTI க்கு ஆதரவான இராணுவம், நீதித்துறை மற்றும் அதிகாரத்துவ சதியாலோசனைகளுக்கு எதிராக போராடுவது போல போக்குக் காட்டி ஷெபஸ் ஷெரீஃபுக்கு வாக்களிக்கும் என்று PPP ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியது. ஆனால் முடிவில், பிரதமருக்கான தேர்தலில் PPP வாக்களிக்கவில்லை.

பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை நிறைந்த மாகாணமும் மற்றும் PML-N இன் பாரம்பரிய கோட்டையுமான பஞ்சாபிலும் இதேபோன்ற ஒரு காட்சி நிகழ்ந்தது. அதிகளவு பஞ்சாப் சட்டமன்ற இடங்களை குறுக்குவழியில் PML-N கைப்பற்றியிருந்த போதிலும், PTI மையத்தில் தான் பெற்ற வெற்றியின் உந்துதலைப் பயன்படுத்தி அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரத்திற்கு ஆதரவான ஜெனரல் முஷாரஃப் ஸ்தாபித்த கட்சியான பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்-குவாய்த் [Pakistan Muslim League-Quaid–(PML-Q)] உட்பட சுயேட்சைகளையும் சிறு குழுக்களையும் அதன் பின்னால் அணிவகுக்கச் செய்ய முடிந்தது.

ஜூன் 2013 இல் தொடங்கி நான்கு ஆண்டுகளாக, IMF சிக்கன நடவடிக்கையை திணித்ததும், ஆப்கானிஸ்தானில் போர் தொடுக்க அமெரிக்காவுக்கு ஒத்துழைத்ததும், இராணுவ நீதிமன்றங்கள் மற்றும் மரண தண்டனையை மறுசீரமைத்தல், மற்றும் நாட்டின் பெரும்பகுதிகளுக்கு “பயங்கரவாத-எதிர்ப்பு” நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்தல் என்பவை உள்ளிட்ட பெரும் சக்திகளின் இராணுவ கோரிக்கைகளுக்கு தலை வணங்கியதுமான, ஒரு வலதுசாரி அரசாங்கத்திற்கு நவாஸ் ஷெரீஃப் தலைமை வகித்தார்.

இருப்பினும், இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளைத் தொடரும் ஷெரீஃபின் முயற்சிகள் குறித்தும், மற்றும் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான பூகோள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China Pakistan Economic Corridor-CPEC) மீது சிவிலியன் அரசாங்கம் அல்லது இராணுவம் மேற்பார்வை அதிகாரத்தை பிரயோகப்படுத்துமா என்பது குறித்தும் ஷெரீஃபும் இராணுவமும் வாள் வீசிக் கொண்டனர்.

ஜூலை 25 தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறவில்லை என்பதை மட்டும் மறுக்க முடியாது. ஆனால், PML-N மற்றும் PPP ஆகிய இரு கட்சிகளுக்கும் இருந்த சாமானிய மக்களின் ஆதரவு மீது பெரும் அரிப்பு நிகழ்ந்தது என்பது கூட உண்மை தான், ஏனென்றால், அவற்றின் IMF சிக்கன நடவடிக்கைத் திணிப்பு, ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டும் காணாதது போல இருந்த தன்மை, மற்றும் அப்பட்டமான ஊழல் போன்றவை தான் அதற்கு காரணம்.

தற்போதைக்கு, பாகிஸ்தானின் ஆளும் உயரடுக்கு மற்றும் சர்வதேச மூலதனம் இரண்டும், Economist மற்றும் Financial Times பத்திரிகைகளில் வெளிவந்த கருத்துக் கணிப்புகளைப் போல, சமூக ரீதியில் தீங்குவிளைவிக்கும் செலவினங்களில் வெட்டுக்களை திணிப்பதையும் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தீவிரமாக விற்பனை செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதையும் முக்கிய பணிகளாக கொண்ட ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சிறந்ததொரு முன்னணி நபராக கான் இருக்கிறார் என்ற நிலையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் ஆதரவு கொண்ட ஒரு பிரமுகராகவே கானை பார்க்கின்றன.

வரவிருக்கும் அரசாங்கத்தின் சிக்கன-சார்பு நோக்குநிலையையும் மற்றும் ஒரு சுதந்திர நாடாக அதன் ஏழு தசாப்தங்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட காலமாக பாக்கிஸ்தானை நேரடியாக ஆட்சி செய்துவந்ததுமான மற்றும் அதன் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை திறம்பட கட்டுப்படுத்துவதைத் தொடருவதுமான இராணுவத்துடன் கைகோர்த்து வேலை செய்யும் அதன் உற்சாகத்தையும் கான் அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பதிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

16 அமைச்சர்கள் மற்றும் 5 ஆலோசகர்கள் உள்ளிட்ட 21 உயர்மட்ட பதவியாளர்களில் பன்னிரண்டு பேர் முஷாரஃபின் சர்வாதிகார ஆட்சியில் பணியாற்றியுள்ளனர், மேலும் ஐந்து பேர் முன்னாள் PPP அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

நிதி மற்றும் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான கானின் சந்திப்புகள், PTI க்கும் மற்றும் அதன் முன்னோர்களின் தொழிலாள வர்க்க விரோத மற்றும் ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளுக்கும் இடையிலான பிரிக்கப்படாத இணைப்புக்கு மாதிரி எடுத்துகாட்டாக இருக்கின்றன.

நிதியமைச்சரான ஆசாத் உமர் சமீப காலம் வரை பாக்கிஸ்தானின் மிக உயர்ந்த ஊதியம் பெற்ற ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். சமீபத்திய வாரங்களில், நிர்வாகத்தையும் மற்றும் 200 பொதுத்துறை நிறுவனங்களின் பெருநிறுவன கட்டமைப்பையும் விரைவாக மறு ஒழுங்கமைவு செய்வதற்கான சர்வதேச நாணய நிதிய ஆதரவு பெற்ற ஒரு திட்டம் பற்றி அவர் பெருமையடித்துக் கொண்டார். அதனால் அவை இலாபம் ஈட்டுவது உறுதி என்பதுடன், முதலீட்டாளர்களுக்கு விரைவாக அவற்றை விற்றுவிட முடியும்.

கான் குறிப்பிட்ட அவரது வெளியுறவு அமைச்சரான ஷா மெஹ்மூத் குரேஷி என்பவர், 2008 முதல் 2013 வரையிலான PPP தலைமையிலான அரசாங்கத்தில் அதே பதவியில் இருந்தவர் ஆவார். வாஷிங்டனில் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒரு நபராக குரேஷி அறியப்படுகிறார். வெளியுறவு அமைச்சராக இருந்த அவரது முந்தைய பதவிக் காலத்தின் போது, ஒபாமா நிர்வாகம், பாக்கிஸ்தான் அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் சட்டவிரோதமான அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களை (US drone war) வியத்தகு அளவில் அதிகரிக்கச் செய்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானப் போரை முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுத்தும், வாஷிங்டன் உடனான PPP அரசாங்கத்தின் “அடிமைத்தனமான” உறவுகளை கண்டனம் செய்தும் தான் முதலில் குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவை கான் பெற்றார். இருப்பினும், நீண்ட காலமாக இத்தகைய வாய்வீச்சைக் கொண்டே அவர் மதிப்பிடப்பட்டார். “நேட்டோ அல்லாத முக்கிய கூட்டாளியாக” அதன் நிலைப்பாட்டை அகற்றுவது உட்பட பாக்கிஸ்தானை தண்டிக்க ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தியுள்ள இந்த நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஆப்கானிய போர் மூலோபாயத்தை இன்னும் அதிகளவு அடிமைத்தனத்துடன் பாக்கிஸ்தான் செயல்படுத்தவில்லை என்றால், இஸ்லாமாபாத் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே இன்னும் சமநிலையான உறவைக் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுப்பதில் தனக்குத்தானே சில வரையறைகளை அவர் கொண்டுள்ளார்.

குரேஷியை கான் நியமித்தது, வாஷிங்டனுடன் இணைந்து வேலைகளை சரிசெய்வதற்கு அவரது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதை சமிக்ஞை செய்வதைத் தெளிவாகவே அர்த்தப்படுத்துகிறது.

ஒரு “இஸ்லாமிய நலன்புரி அரசு” குறித்த கானின் வெற்றுத்தனமான வாக்குறுதிகள் என்பது ஒரு கொடூரமான ஏமாற்றமாக விரைவில் நிரூபனமாகும்.

ஒரு சுய-சூளுரைப்பு வலதுசாரியாக, “இஸ்லாமிய மதிப்பீடுகளை,” ஊக்குவிக்கும் ஒரு “மறுபிறப்பெடுத்த முஸ்லீமாக” தன்னைத்தானே கான் ஊக்குவித்துக் கொள்கிறார் என்ற வகையில், நாட்டின் கொடுமையான “தெய்வ நிந்தனை சட்டங்கள்” குறித்த அவரது ஆதரவு மற்றும் அஹமதிய முஸ்லீம் சிறுபான்மையினர் (Ahmadiyya Muslim minority) மீதான அரசு அடக்குமுறை போன்றவை உட்பட இராணுவம் மற்றும் மத உரிமைகளுடனான தனது நெருக்கமான உறவுகளை நீண்ட காலமாக கான் வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

US threatens to nix IMF bailout of Pakistan
[10 August 2018]