ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Seventy thousand attend “Rock against the right wing” in Chemnitz, Germany

ஜேர்மனியில், கெம்னிட்ஸ் இல்“வலதுசாரிகளுக்கு எதிரான ராக்” இசைநிகழ்ச்சியில் எழுபதாயிரம் பேர் கலந்துகொண்டனர்

By our reporters
5 September 2018

ஜேர்மன் நகரமான கெம்னிட்ஸில் நவ நாஜி கலவரங்களுக்கு ஒருவாரம் கழித்து, திங்களன்று அதி வலதுசாரிகளுக்குக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சியில் சுமார் 70,000 பேர் பங்கேற்றனர். கெம்னிட்ஸில் நடைபெற்ற இந்த இசைநிகழ்ச்சியானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கில் “நாம் அதிகமானோர்” என்ற குறிக்கோளின் கீழ் வலதுசாரி தீவிரவாதத்திற்கு ஒரு பெரும் எதிர்ப்பைக்காட்டும் விதமாக நடைபெற்றது.

Toten Hosen, Kraftklub, Marteria மற்றும் Casper உள்பட பிரபலமான ஜேர்மன் இசைக்குழுக்கள் மற்றும் ராப் பாடகர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியானது “நாஜிக்களே வெளியேறுங்கள்” அல்லது “Alerta Alerta Antifascista” போன்ற பாசிச எதிர்ப்பு முழக்கங்களால் திரும்பத்திரும்ப தலையீடு செய்யப்பட்டன. அதேநாளில் மற்ற நகரங்களில் அதிவலதுக்கு எதிரான ஆர்ப்பாட்ங்களும் இடம்பெற்றன. ஹனோவர் நகரில் சுமார் 3000 பேர் வீதிகளில் திரண்டனர் மற்றும் டியூஸ்பேர்க் நகரில் 1500 பேரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தீவிர வலதுசாரி பெஹிடா இயக்கத்தின் 50 ஆதரவாளர்களினால்  தடுக்கப்பட்டது.


கெம்னிட்ஸில் நடந்த இசை நிகழ்ச்சி

உலக சோசலிச வலைத் தளத்திலிருந்து வந்த செய்தியாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான IYSSE இன் உறுப்பினர்கள் “வலதுசாரி பயங்கரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவை” என்று தலைப்பிடப்பட்ட துண்டறிக்கைகளை பெரிய எண்ணிக்கையில் விநியோகித்தனர் மற்றும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றோருடன்  பேசினர்.

“நாம் கெம்னிட்ஸிலிருந்து வருகிறோம் இங்கே நடப்பதை சகித்துக்கொள்ளத் தயாரில்லை,” என பீலிக்ஸ் மற்றும் ஜென்னி கூறினர். “அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் சமூகத்தில் ஏதோ உண்மையில் தவறாக இருக்கிறது என்று காட்டுகின்றன மற்றும் மக்களுக்கு விழிப்பூட்டுகின்றன, அவர்கள் நேரடியாக இதில் சம்பந்தப்படாவிட்டாலும் கூட. அத்தகைய “நிகழ்வுகளில்” என்று மட்டுமல்லாமல், பொதுவிலும் இனி மக்கள் செயலூக்கத்துடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். வலதுசாரிக்கு எதிராக பகிரங்கமாக வீதிகளில் திரள்வார்கள் என நான் நம்புகிறேன்.”


பீலிக்ஸ்

அரசியல் பயிலும் மாணவர் அனிக்கா கூறியதாவது: “நான் இன்று இங்கு இங்கிருக்கிறேன், ஏனெனில் அனைத்து தீவிர வலதுசாரி இயக்கங்களும் கிழக்கு ஜேர்மனியில் மற்றும் சிறப்பாக கெம்னிட்ஸில் என்னை நம்பமுடியாத அளவுக்கு அச்சுறுத்திவிட்டன மற்றும் சினமூட்டி விட்டன. அவற்றை ஒருவர் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் அது 1933ல் போல் ஆகிவிடும். வலதுசாரி தீவிரவாதிகளின் மூர்க்கமான அணிதிரளலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊடகங்கள் செய்வதுபோல் இதில் அரசியல் முக்கிய பாத்திரம் ஆற்றுகிறது. அவை “அகதிகள் நெருக்கடி” அல்லது “திருப்பி அனுப்புதலுக்கு எதிரான தொழிற்துறை” பற்றி தொடர்ச்சியாகப் பேசி வருகின்றன. இவ்வகை மொழிநடையும் செய்தி அறிவிப்பும் இப்பொழுது “சர்வசாதாரணமாகி” விட்டது, இது அதிவலதுசாரிகளைத் தூண்டிவிட மட்டுமே உதவி செய்யும்.”

நடிகை கிறிஸ்டினா விவரித்தார், “அதிவலதுக்கு தளத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என நான் உணர்கிறேன், நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் ஹிட்லருக்கு மரியாதை செலுத்துவதும் மக்களை வீதிகளில் துரத்துவதும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.”

கடந்தவார இறுதியில் நடந்த அதிவலதுசாரி கலவரங்களை ஹில்ட என்பவர் கூட கண்டித்தார் மற்றும் அவர் கூறினார்: “இங்கு கெம்னிட்ஸில் வந்து முடிந்த நிகழ்வு ஜேர்மனி முழுமைக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும்கூட ஒரு எடுத்துகாட்டாய் இருக்கிறது என நான் எண்ணுகிறேன். இந்த விவகாரத்தில் மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டுதற்கு ஒன்றாய்த் திரண்டு வரவேண்டியிருக்கிறது. இப்பொழுது பெருந்திரளான மக்கள் வந்துள்ளனர். AfD க்கு பதினைந்து விகிதத்தினர் வாக்களித்துள்ளனர் மற்றும் மற்ற 85 விகிதத்தினர் தங்களின் வருகை மூலம் தாங்கள் யார் என்பதை உணரச்செய்துள்ளனர்.”

அவருடன் துணையாய் வந்தவரான கிளவுஸ் வலதுசாரித் தீவிரவாதிகளின் கொள்கைகள் ஸ்தாபக கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்ற உண்மையை விமர்சித்தார். “AfD அவ்வாறான கருத்துருக்களுடன் வருகையில், மற்ற கட்சிகள் திடீரென்று ’புகலிடம் கோருவதற்கான விலை’, ‘சுற்றுலா புகலிடம்’ என்றெல்லாம் குறிக்கின்றனர். இந்த முழக்கங்களைப் பயன்படுத்துகையில் நடைமுறையில் AfD ஆல் முன்மொழியப்படும் கொள்கைகளையே அவர்கள் கைக்கொள்கின்றனர்.”

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களும் கெம்னிட்ஸிருந்து வரும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து இப்போதுதான் பட்டம்பெற்ற மரீ மற்றும் றிகாவிடம் பேசினர். “அதி தீவிரவாதக் கருத்துக்கள் மீது அளவுக்கதிகமாக அரசியலில் குவிமையப்படுத்தப்படுகிறது என்று நான் எண்ணுகிறேன்,” என மரீ குறிப்பிட்டார். பகிரங்கமாக விவாதிக்கப்படாத ஜேர்மன் இராணுவவாதத்துக்கு திரும்புதல் மற்றும் ஜேர்மன் இராணுவத்தை பெருமளவில் ஆயுதமாக்கலுக்கல் பற்றிக் கேட்டபொழுது, அவர் விவரித்ததாவது: “இதைப்பற்றி ஒருவரும் பேசுவதில்லை. இந்தப் துறைகளில் பணத்தைக் கொட்டுவதன்மூலம் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஒரு கருத்தும் இல்லை. ஒவ்வொருவருக்கும் இது பற்றி அறிவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஏன் பணம் தேவை என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் அவர்கள் மீளாயுதபாணியாக்க விரும்புகிறார்கள்? எதற்காக?”


மரீ மற்றும் றிகா

றிகா பின்வருமாறு மேலும் தெரிவித்தார்: “அந்தத் தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அரசியல்வாதிகள் பெரும்பான்மையினரைக் கண்டு அஞ்சுகிறார்கள். இனவாதத்திற்கு எதிராக அவ்வளவுபேர் இப்பொழுது எழுந்து நிற்கின்றனர் மற்றும் அதற்கு எதிராக பல குரல்கள் எழுப்பப்படுகின்றன என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது இது அல்ல. என்ன விலைகொடுத்தும் இவற்றைக் கட்டுப்படுத்த அவர்கள் முயல்கின்றனர்.”

ஸ்தாபகக் கட்சிகள் அனைத்தினாலும் இப்பொழுது அரசு தலையிட வேண்டும் என எழுப்பப்பட்டு வரும்  அழைப்பு, உண்மையில் பரந்த மக்களுக்கு எதிராக இயக்கப்படுவது, அதிவலதுக்கு எதிராக இயக்கப்படவில்லை என்பதை றிகா அறிந்திருக்கிறார். “போலீசுக்கு நிறையப் பணத்தை செலவழிக்கப் போவதாக அவர்கள் சொல்கிறார்கள். மக்களைப் பாதுகாக்கப் பணத்தை முதலீடு செய்வதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதுதான் காரணமென்று நான் நினைக்கவில்லை. மக்கள் அந்த வழியில் புரிந்துகொள்கிறார்கள் என நாம் நம்பவில்லை.

“நான் வீதியில் செல்லும்பொழுது, அதிவலதுகளை பார்த்து பயப்படுவதைப்போலவே பொலீசைப் பார்த்து நான் அஞ்சுகிறேன். எங்கணும் பொலீஸ் வாகனங்கள் இருக்கும்பொழுது எனக்கு அசௌகரியமாக உள்ளது. பொலீஸ் படைகளை இன்னும் அதிகமாக வலிமைப்படுத்தப் போவதாக கட்சிகள் இப்போது கூறும்பொழுது இன்னும் பாதுகாப்பற்ற நிலையையே நான் உணர்கிறேன். மக்கள் மீதாக அதிக கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கு அப்பால் அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.”

சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) பிரசுரமானது வலதுசாரி தீவிரவாதிகளின் மூர்க்கமான செயல்பாடுகளுக்கும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளாலும் பின்பற்றப்படும் ஜேர்மன் இராணுவவாதத்துக்குத் திரும்புதல் மற்றும் பலமிக்க பொலீஸ் அரசை வளர்த்தல் என்பவற்றிற்கும் இடையிலான அரசியல் தொடர்புகளை விவரிக்கிறது. பலர் இந்த அறிக்கையை வாங்கிச்சென்று ஆர்வத்துடன் வாசித்தனர். “இந்த அபிவிருத்தியை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் அதி வலதுசாரிகளை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்” என அந்த அறிக்கை விளக்குகிறது.

“சோசலிச சமத்துவக் கட்சி இந்தக் கண்டம் முழுவதும் வர்க்கப் போராட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அழைப்பு விடுக்கிறது. மகா கூட்டணி, உளவுத்துறை சேவைகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் கூட்டுச் சதி தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும் என அது மேலும் குறிக்கிறது.

“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் அதன் பகுதிகளாலும் பேணப்பட்டுவரும், மார்க்ஸ், எங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெஹ்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிச மரபுகளைப் புதுப்பிப்பதற்கான நேரம் இதுவேயாகும். சோசலிச சமத்துவக் கட்சியானது முதலாளித்துவம், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அதன் அணிகளில் இணைந்து போராடுமாறு அழைக்கிறது.”