ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு

சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு

டேவிட் நோரத் உரையாற்றுவார்

வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அக்டோபர் மாத ஆரம்பத்தில், கொழும்பு மற்றும் கண்டியில் நடத்தவுள்ள பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காக உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இந்த கூட்டங்கள், நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு மற்றும் சோ.ச.க.யின் 50 வது ஆண்டு நிறைவின் பேரில், "வரலாற்று படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்" என்ற தொணிப்பொருளில் இடம்பெறவுள்ளன.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான நோர்த், நான்கு தசாப்தங்களாக சர்வதேச சோசலிச இயக்கத்தின் தலைவராக பணியாற்றிவராவர். உலக சோசலிச இயக்கத்தின் வரலாறு பற்றி பரீட்சயமானவரான நோர்த் எழுதிய நூல்களில், நாம் காக்கும் மரபியம், லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாப்பதற்காக, ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும், பிராங்பேர்ட் பள்ளியும் பின் நவீனத்துவமும் போலி இடதுகளின் அரசியலும், கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016, ஆகியவை அடங்கும்.

ரஷ்ய அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. 1917 புரட்சியில் கட்டியெழுப்பப்பட்ட முதலாவது தொழிலாளர் அரசுக்குள், தொழிலாளர்களின் கையில் இருந்து அதிகாரத்தை அபகரித்துக்கொண்டு புரட்சிக்கு புதை குழி தோண்டுவதாக தலைதூக்கிய ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, உலக சோசலிச புரட்சிக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான தலைமையை கட்டியெழுப்புவதே நான்காம் அகிலத்தின் இலக்காகும். அப்போதிருந்தே எட்டு தசாப்தங்களாக அனைத்து பிழையான தலைமைத்துவங்களுக்கும் எதிராக உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத் திட்டத்திற்காக போராடும் கொள்கைப் பிடிப்பான போராட்டத்திற்கு நான்காம் அகிலம் உரிமை கொண்டாடுகின்றது. 1953ல் இருந்து, அது அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் இருக்கின்றது.

சோ.ச.க. முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. அனைத்துலகக் குழுவின் ஏனைய கிளைகளுடன் பு.க.க. 1996ல் சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றப்பட்டது. ஏகாதிபத்தியம் மற்றும் அதன் முகவர்களான தெற்காசியாவில் முதலாளித்துவ ஆளும் தட்டுக்களுக்கும் அவற்றின் துணைப் படைகளான ஸ்ராலினிஸ்டுகள் உட்பட சகல அதிகாரத்துவங்களுக்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிச, அதாவது சோசலிச சர்வதேசியவாத முன்நோக்குக்காக முன்னெடுத்த கொள்கைப்பிடிப்பான போராட்டம் பு.க.க./சோ.ச.க.யின் அரை நூற்றாண்டு கால வரலாற்றில் அடங்கியுள்ளது.

நான்காம் அகிலம் மற்றும் சோ.ச.க., பல தசாப்தங்களாக சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்த போராட்டம், தற்போதைய உலக நெருக்கடியின் மத்தியில் எழுகின்ற அனைத்து புரட்சிகர போராட்டங்களுடனும் ஒருங்கிணைகின்றது. தெற்காசியா மற்றும் உலகெங்கிலும், நான்காம் அகிலத்தின் பகுதியாக சோ.ச.க.யை கட்டியெழுப்புவதற்கு, இந்த புறநிலைமை ஊடாக மிகவும் சக்திவாய்ந்த வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில், நோர்த் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களில் நான்காம் அகிலத்தின் வரலாற்றின் படிப்பினைகளை மதிப்பாய்வு செய்து, இன்று சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு அவற்றின் நெருக்கமான பொருத்தத்தை விளக்குவார். இந்த கூட்டங்களில் பங்கேற்று சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை பற்றிய முக்கியாமன கலந்துரையாடலில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

கூட்டம் நடக்கும் இடங்கள், திகதிகள் மற்றும் நேரங்கள்

அக்டோபர் 3, மாலை 4.30 மணி – பேராதனை பல்கலைக்கழக கலையகம்

அக்டோபர் 7 மாலை 3 மணிக்கு - கொழும்பு புதிய நகர மண்டபம்.