ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government announces plan to undermine pension system

பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வூதிய முறையை அகற்றும் திட்டத்தை அறிவிக்கிறது

By Francis Dubois
28 August 2018

கடந்த வாரம், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கம் ஓய்வூதிய வெட்டுக்கள் மீது ஒருங்குவிந்திருந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு புதிய தொகுப்பை அறிவித்து, அவர் பதவி காலத்தின் முதலாண்டு சமூக தாக்குதல்களைத் தொடர்ந்தார். இந்த இளவேனிற்காலத்தில் இரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான ஒரு வர்க்க போராட்டத்தைத் தடுக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்த பின்னர், மக்ரோன், 1945 இல் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலைக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட அடிப்படை சமூக உரிமைகளை அழிப்பதை நோக்கமாக கொண்ட அவர் தாக்குதலை அதிகரித்து வருகிறார்.

அதன் தீர்மானத்தில் "எப்பாடுபட்டாவது முன்செல்ல" அரசாங்கம் உறுதியாக நிற்கிறது என்றாலும், அது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும் மக்கள் செல்வாக்கிழந்திருப்பதையும் அறிந்துள்ளது. பிரெஞ்சு ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் மக்ரோன் பலவீனமடைந்திருப்பதையும், பொருளாதார வளர்ச்சிக் குறைவை அவர் முகங்கொடுப்பதற்கு கூடுதலாக, அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை அவர் முகங்கொடுத்து வருவதையும் குறித்து பகிரங்கமாக அவற்றின் கவலைகளை வெளியிட்டு வருகின்றன.

கடந்த புதனன்று வெளியிடப்பட்ட Elabe கருத்துக்கணிப்பின்படி, மக்கள்தொகையில் வெறும் 16 சதவீதத்தினர் மட்டுமே மக்ரோனின் கொள்கைகள் நாட்டுக்கு பயனுள்ளதாக இருப்பதாக நம்புகின்றனர். மக்ரோனும் பிரதம மந்திரி எடுவார்ட் பிலிப் உம் அவர்களின் தனிப்பட்ட நிலைமைகளில் இருந்து முன்னேறி வருவதாக வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே நம்புகின்றனர்.

அடிப்படை சமூக உரிமைகளுக்குக் குழிபறிக்கும் நடவடிக்கைகளை அறிவிக்கின்ற அதேவேளையில், அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றுமென பிரகடனப்படுத்தி வருகிறது. “அதன் தனிமைப்படல் மீதான விமர்சனங்களுக்கு அது விடையிறுத்து வருகிறது என்பதை அது எடுத்துக்காட்ட விரும்புவதால், தொழிற்சங்கங்கள் உடனான அதன் உறவுகள் மீது கவனம் செலுத்த … நிர்வாகம் திட்டமிடுகிறது, அவற்றை சமூக சீர்திருத்தங்களுடன் இன்னும் நேரடியாக தொடர்புபடுத்த … ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்,” என்று Le Monde எழுதியது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அடித்துச் செல்லும் ஒரு சமூக வெடிப்புக்கு அஞ்சி, சமூக வெட்டுக்கள் குறித்து உறுதியாக எதுவும் வெளியிடப்படவில்லை, அதை Le Monde “பாடசாலை தொடக்கத்திற்கு பிந்தைய உயர் அபாயம்" என்று குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் நெறிப்படுத்திய ஆழ்ந்த சிக்கன கொள்கைகளை மக்ரோன் அமல்படுத்தி வருகிறார். ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவு திட்டக்கணக்கு உத்தரவுகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிட்டு வரும் பயிலகம் Cour des Comptes கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது: பொருளாதார வளர்ச்சி புள்ளிவிபரங்கள் கூர்மையாக இருந்ததால், “2017 இல், வரவுசெலவு திட்டக்கணக்கு பற்றாக்குறையில் [67.7 பில்லியன் யூரோ] ஏற்பட்டிருந்த மிகச் சிறிய முன்னேற்றமானது, செலவுகள் மற்றும் வரி வரத்துகள் இரண்டிலும் ஏற்பட்ட ஒரு கூர்மையான அதிகரிப்பின் விளைவாகும். பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வேகக்குறைவுக்கு இடையே, இப்போது அது சமூக செலவினங்களில் ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகிறது.”

பிரான்சின் இறையாண்மை கடன் மிக அதிகமாக (ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகவும் அதிகமானவற்றில் ஒன்றாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96.8 சதவீதமாக) உள்ள நிலையில், மக்ரோன் செல்வந்தர்களுக்கு வரி தவிர்க்கவும் மற்றும் பெருநிறுவன வரிகளை வெட்டவும் வேகம் காட்டினார், இது பெரும் செல்வந்தர்களுக்கு பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை ஒப்படைத்தது.

Le Monde தகவல்படி, மக்ரோன் "சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான" தொடக்கமாக "2019 இல் சுமார் 10,000 பொதுத்துறை வேலைகளையும், 2020 இல் இன்னும் கூடுதலாகவும்" வெட்ட திட்டமிடுகிறார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்ரோன் பொதுத்துறையில் 120,000 வேலைகளை வெட்டுவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த தாக்குதல்கள் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் பாதிக்கும் வகையில் சமூக வாழ்வின் இரண்டு முக்கிய துறைகளை மையப்படுத்தி ஒருங்குவிந்திருக்கும்: “மருத்துவமனை சீர்திருத்தம்" என்றழைப்படுவதன் மீதும், மற்றும் அனைத்திற்கும் மேலாக, ஓய்வூதியங்கள் மீதும். ஓய்வூதியங்கள் மீதான வெட்டு இந்தாண்டின் முதல் பாதியில் தொழிற்சங்கங்களுடன் விவாதிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. La Tribune இதை "அமைப்புரீதியிலான சீர்திருத்தம்" என்று குறிப்பிடுகின்ற வேளையில், Le Monde அதை "நிர்வாகத்திற்கு மிகவும் அபாயகரமானதாக" குறிப்பிடுகிறது.

 “உள்செலுத்தப்படும் ஒவ்வொரு யூரோவும், அது எப்போதும் செலுத்தப்பட்டாலும், யாரால் செலுத்தப்பட்டாலும், அனைவருக்கும் ஒரே உரிமையை வழங்கும் அனைவருக்கும் சமமான முறையை" அரசு உருவாக்கி வருவதாக அது உணர்ச்சிகரமாக வாதிடுகிறது. உண்மையில், என்ன தயாரிக்கப்பட்டு வருகிறது என்றால் ஓய்வூதிய முறைக்கு முழுமையாக குழிபறிப்பு தான் நடந்து வருகிறது, இதன் தற்போதைய அடித்தளங்கள், சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர், 1991 இல் இருந்து நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு அனுகூலமாக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், சுதந்திரமடைந்த தேதி வரையில் நீண்டுள்ளது.

"ஓய்வூதிய வயதில் வெளியேறும் போது செலுத்தப்படும்" தற்போதைய முறையை "புள்ளிகளுக்கேற்ற" ஓர் ஓய்வூதிய முறையைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட உள்ளது. ஒருவரின் "நடைமுறை கணக்கில்" சேரும் புள்ளிகளின் அடிப்படையில் ஓய்வூதியங்கள் கணக்கிடப்பட்டு, ஓய்வூ காலத்தில் பணமாக வழங்கப்பட உள்ளன. வேலைவாய்ப்பில்லாத காலங்கள், தற்காலிக வேலை அல்லது வேலை செய்யவியலாத காலங்களின் போது தொழிலாளர்களுக்கு எந்த புள்ளிகளும் கிடைக்காது. இந்த சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த பணிக்கப்பட்ட அதிகாரி Jean-Paul Delevoye அப்பட்டமாக “யாருக்கும் இலவச புள்ளிகள் கிடையாது,” என்று தெரிவித்துள்ளார்.

வேறு பல இயங்குமுறைகளையும் மேற்கொண்டு ஓய்வூதிய தொகைகளைக் குறைக்கும். சான்றாக ஆயுள்காலம் உயர்ந்தால், அவ்விதத்தில் அரசு நீண்டகாலத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கருதுவதால், ஓய்வூதியங்கள் வெட்டப்படும்.

அரசால் இப்போது அதன் விருப்பத்திற்கேற்ப "புள்ளிகளின்" மதிப்பை மாற்றிக் கொள்ள இயலும் என்பதால், நிரந்தரமான மற்றும் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதிய சமூக உரிமை மறைந்து போகும்.

அனைத்திற்கும் மேலாக, சட்டப்பூர்வ ஓய்வூதிய வயது, “புள்ளிகள்" முறைக்கு இனி பொருந்தாது என்பதால், நீக்கப்படும்.

தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதற்குப் போதிய "புள்ளிகள்" பெறும் வரையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம் காலவரையின்றி வேலை செய்து கொண்டே இருப்பது என்றாகிறது: 62 வயது என்பது குறைந்தபட்ச ஓய்வூதிய வயதாக மட்டுமே இருக்கும். Delevoye குறிப்பிட்டார், “புள்ளிகள் முறையில், குறிப்பிட்ட காலத்திற்கான தொழில் வாழ்வு என்ற கருத்து மறைந்துவிடுகிறது. எனக்கு போதிய புள்ளிகள் இருக்கிறதென்றால், என் ஓய்வூதியமும் போதுமானளவுக்கு பெரியளவில் இருக்கும், ஆகவே நான் ஓய்வூ பெறுகிறேன், இல்லை, எனக்கு போதிய புள்ளிகள் இல்லை என்பதற்காக நான் வேலை செய்கிறேன் என்று நீங்கள் பெறும் புள்ளிகள் உங்களைத் தனிப்பட்ட முடிவெடுக்க அனுமதிக்கும்,” என்றார்.

1945 இல் தேசிய எதிர்ப்புக் குழு (CNR) அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட “ஓய்வூதிய வயதில் வெளியேறும் போது செலுத்தப்படும்" ஓய்வூதிய முறை என்பது, 1970 களில் வேலையில் சேர்ந்த வயதான தொழிலாளர்களின் வறுமை விகிதங்கள் குறைவதற்குக் காரணமாக இருந்தது—சென்ற தலைமுறைகளில் வறுமை தன்னியல்பாகவும் பரவலாகவும் இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, “புள்ளிகள்" அடிப்படையிலான ஓய்வூதிய முறையானது அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கும் மற்றும் தனியார் ஓய்வூதிய நிதியங்கள் அமைப்பதற்கும் அனுகூலமாக, தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஓய்வூதியங்களைத் தாங்களே செலுத்த பலவந்தப்படுத்தப்படும் விதத்தில், ஓய்வூதியங்களை முதலீட்டு கணக்குகள் மூலமாக செலுத்துவதற்கு வழி வகுக்கும். 2008 பொறிவுக்குப் பின்னர், பல ஐரோப்பிய ஓய்வூதியதாரர்களும் இவ்விதத்தில் தான் ஓய்வூதியத்தை இழந்தார்கள்.

Delevoye அவரே ஒப்புக் கொள்வதைப் போல, தொழிலாளர்கள் அவர்களின் ஓய்வூதியங்களுக்குத் தனிப்பட்டரீதியில் நிதி வழங்க வேண்டியிருக்கும் என்பதை மக்ரோன் நிராகரித்து விடவில்லை: “அனைவருக்குமான நமது எதிர்கால முறையில், இது அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு அதிகமாக இருக்கும் … பல வடிவங்கள் மேசையில் வைக்கப்பட்டுள்ளன. நமக்கு கட்டாய தனியார் ஓய்வூதியங்கள் தேவையா? அல்லது சாத்தியமாகும் என்றால் மூலதனமயமாக்கல் மூலமாக தனிநபர் கணக்குகள் தேவையா?”

இந்த சீர்திருத்தம் இறந்துபோன தொழிலாளர்களின் மனைவி அல்லது துணைவியாருக்குச் செலுத்தப்படும் "குடும்ப ஓய்வூதியங்களுக்கும்" குழிபறிக்கும். 2016 இல், 4.4 மில்லியன் பேர், அதாவது பிரான்சின் 17.2 மில்லியன் ஓய்வூதியதாரர்களில் ஒரு கால்வாசி பேர், இத்தகைய ஓய்வூதியங்களைச் சார்ந்திருந்தனர்.

எதிர்கால நிதியியல் நெருக்கடிகளின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள வகை செய்யும் விதத்தில், அரசு மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே கூடுதல் வெட்டுக்கள் குறித்து பேரம்பேசும் நடவடிக்கைகளுக்குச் செல்லாமலேயே, கையிருப்பு நிதிகளின் அடிப்படையில் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய தொகைகளைத் தானாகவே ஈடுகட்டுவதற்கு நிர்பந்திப்பது இச்சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய பாதிப்பாக இருக்கும்.

மக்ரோன் அரசாங்கம் அதன் சீர்திருத்தத்தை நிறைவேற்ற, அதற்கு "சிறப்பு முறை" ஓய்வூதியங்கள் என்றழைக்கப்படுவதையும், குறிப்பாக பொதுச்சேவையில் இருப்பதை, நீக்க வேண்டியுள்ளது, இதுவும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டது தான். இது சுமார் 5 மில்லியன் தொழிலாளர்களைப் பாதிக்கும்.