ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tamil Nadu police arrest hundreds of striking Indian autoworkers

வேலைநிறுத்தம் செய்யும் நூற்றுக்கணக்கான இந்திய வாகன தொழிலாளர்களை தமிழ் நாடு போலிஸ் கைது

By Arun Kumar and Moses Rajkumar 
11 October 2018

சமீப வாரங்களில், ஒரகடம்-செங்கல்பட்டு தொழில்துறை மண்டலத்தில் யமஹா மோட்டார் இந்தியா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் மியுங் ஷின் ஆட்டோமோட்டிவை (MSA) சேர்ந்த மோட்டார் வாகன தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைகள், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றை கோருவதற்கு வேலைநிறுத்தங்கள், உள்ளிருப்புகள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தென்மேற்கில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். "ஆசியாவின் டெட்ரோயிட்" என உள்ளூர் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இப்பகுதியில் இந்தியாவின் 7.6 மில்லியன் (76 லட்சம்) வாகன தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் போர்ட், டைம்லெர் ஏஜி, ரெனால்ட்-நிசான், கோமாட்சு, மிட்சுபிஷி மற்றும் டொயோட்டா ஆகியவை உள்பட ஆலைகள் இங்கு உள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நூற்றுக்கணக்கான யமஹா மற்றும் MSA தொழிலாளர்கள் தமது "மனித சங்கிலி" ஆர்ப்பாட்டத்தை தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், நிறுவனத்திற்கு மற்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். யமஹா மற்றும் என்ஃபீல்ட் ஆலைகள் மோட்டார் சைக்கிள்களையும் MSA வாகன உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தொடரான போராட்டங்கள் நடைபெற்றன.

மனிதச் சங்கிலி எதிர்ப்பு போராட்டத்தில் யமஹா தொழிலாளர்கள்

* செப்டம்பர் 21 அன்று, 750 யமஹா நிரந்தரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கினர், மற்றும் உள்ளிருப்பு செய்து இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி கோரிக்கை விடுத்தனர். அந்த ஆலையில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் என்ற புதிய தொழிற்சங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) இந்த தொழிற்சங்கம் இணைந்துள்ளது.

யமஹா இந்தியாவில் வேலைக்கு அமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 2,500 பேரில் 750 க்கும் மேற்பட்டோர் நிரந்தரமாகவும், 1,500 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த முறையிலும், சுமார் 250 பேர் பயிற்சியாளர்களாகவும் உள்ளனர். நிரந்தர தொழிலாளர்களின் மாத சம்பளங்கள் 13,000 ரூபாயிலிருந்து (180 அமெரிக்க டாலர்கள்) 18,000 ரூபாய்கள் வரைக்கும் உள்ளன. ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் சேர விரும்பினர், ஆனால் அவர்களது வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கூறி அவர்களை வேலை நிறுத்தத்தில் இணைய வேண்டாம் என்று தொழிற்சங்கம் அறிவுறுத்தியது.

வேலைநிறுத்தம் "சட்டவிரோதமானது" என்று யமஹா இந்தியா உடனடியாக அறிவித்ததுடன், இந்த சச்சரவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. தொழிற்சாலை வளாகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் தொழிலாளர்களின் எந்த எதிர்ப்பும் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் செப்டம்பர் 26 அன்று தமிழ்நாடு பொலிஸ் ஆலை வளாகத்தில் நுழைந்தது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஆலைகளில் இருந்து வெளியேற்றினர்.

அக்டோபர் 3 ஆம் தேதி, நான்கு யமஹா தொழிலாளர்கள் வீடுகளில் அதிகாலையில் சோதனை நடத்திய பொலிஸார் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு மொபைல் கோபுரங்கள் மீது ஏறினார்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்தனர்.

* செப்டம்பர் 24 ம் தேதி, சுமார் 1,300 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பிற கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கினார். பணிக்குத் திரும்பவில்லை என்றால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கம்பனி பயிற்சியாளர்களை அச்சுறுத்தியது. நீதிமன்ற ஆணையை பலமாக கைகளில் வைத்துக் கொண்டு, யமஹா வேலைநிறுத்தக்காரர்களை  தாக்கிய அதே நாளில் என்ஃபீல்ட் ஆலையில் போலிஸ் அதிரடி தாக்குதல் நடத்தி வேலைநிறுத்தக்காரர்களை பலவந்தமாக வெளியேற்றியது.

தொழிற்சங்க அலுவலர்களின் கோரிக்கைக்கு இணங்கி, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள் செப்டம்பர் 30 அன்று தங்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டனர். வேலைநிறுத்தக்காரர்கள் மேல் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் இருக்காது என்று நிறுவனத்துடன் ஒரு உடன்பாட்டை அடைந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறியது. CITU உடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய தொழிற்சங்கம் -ராயல் என்ஃபீல்ட் ஊழியர் சங்கம் (REEU)- சமீபத்தில் ஆலையில் நிறுவப்பட்டது, ஆனால் நிறுவனம் அதனை அங்கீகரிக்கவில்லை.

உடன்பாடு ஏற்பட்டதாக கூறியபோதிலும், யூனியன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான ஊதியத்தை நிர்வாகம் வெட்டியது, எட்டு ஊழியர்கள் மீது ஒழுக்க நடவடிக்கைக எடுத்தது, ஒருவரை வேலை நீக்கம் செய்தது. மேலும் தொழிலாளர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களை ஆலைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்தது. கிட்டத்தட்ட 700 நிரந்தர தொழிலாளர்கள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவனத்துடன் தொழிற்சங்க பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, என்ஃபீல்ட் வேலைநிறுத்தகாரர்கள் அக்டோபர் 5 அன்று மறுபடியும் வேலைக்குத் திரும்பினர், அங்கு அவர்கள் மற்றொரு நிர்வாக ஆத்திரமூட்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக ”மன்னிப்பு” கேட்பதாகவும், ஒரு "நல்ல நடத்தை" உடன் செயல்படுவோம் என்றும் கையெழுத்து போடும்படியும் அவர்கள் கேட்கப்பட்டார்கள்.

இந்த கோரிக்கைகளால் கோபமடைந்த தொழிலாளர்கள் ஆலை உள்ளிருப்பில் ஈடுபட்டனர், பொலிசார் அவர்கள் மீது தாக்கி சுமார் 600 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். அவர்களை அருகிலுள்ள கல்யாண மண்டபத்தில் அன்று மாலை வரை வைத்திருந்தனர்.

நிர்வாகம் மற்றும் பொலிசார், யமஹா மற்றும் என்ஃபீல்ட் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைத் தொடுக்கின்ற அதேவேளை, சிஐடியு ஒரு தொழிற்துறை பொலிஸ் படையாக செயல்பட்டது, நீதிமன்ற உத்தரவுகளை "மதிக்க" வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு "ஆலோசனை" வழங்கினர்.

* செப்டம்பர் 5 ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் நிறுவனத்திற்கு ஒரு விநியோகஸ்தராக இருக்கும் MSA இன் 150 நிரந்தர ஊழியர்கள் உட்பட, 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள், ஒரு நீண்டகால ஊதிய உயர்வு தொகையை வழங்குமாறு கோரி வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்பை தொடங்கினர்.

வேலைநிறுத்தத்தில் யமஹா தொழிலாளர்கள்

செப்டெம்பர் 27 அன்று, அவர்கள் சென்னையில் உள்ள தென் கொரிய தூதரகத்தில் ஒரு மறியல் போராட்டத்தை நடத்த MSA தொழிலாளர்கள் திட்டமிட்டபோது பொலிசார் அவர்களை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் மாலையில் விடுவிக்கும் வரை வைத்திருந்தனர்.

தமிழ் நாடு வணிகர் தலைவர்கள் அலையாக எழுகின்ற தொழிற்துறை நடவடிக்கைகளை கண்டனம் செய்ததுடன் மாநில அரசாங்கம் வேலை நிறுத்தங்களை நசுக்கும்படி கோருகின்றனர்.

இந்தியாவின் தொழிற்துறை மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளையின் தலைவரான ஆர் ஆர். எம் அருண், இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "MNC க்கள் [பன்னாட்டு நிறுவனங்கள்] அத்தகைய சிக்கல்களில், மாட்டிச் சிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமே கிடையாது. சுற்றுச்சூழல் தங்கள் வியாபாரத்திற்கு உகந்ததாக இல்லை என்றால், அவர்களுக்கு பல தேர்ந்தெடுப்பு கிடையாது"

”வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிகளை சிங்கப்பூர் பிரதமர் எப்படி உறுதியாக கையாண்டார் என்ற முன்மாதிரியை” மாநில அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று அருண் அழைப்பு விடுத்தார். இது முன்னைய சிங்கப்பூர் சர்வாதிகாரி லீ குவான் யூ 1980 களில் விமானிகளின் வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்காக விடுத்த அச்சுறுத்தல் பற்றிய குறிப்பாகும்.

இந்திய பெருவணிகம், பூகோள முதலீட்டாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவை தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக உழைக்கின்றன, அவை வர்க்கப் போராட்டங்களின் எந்த ஒரு சுயாதீனமான எழுச்சியையும் ஒடுக்குவதற்கு உறுதி பூண்டுள்ளன. இந்த விஷயத்தில் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

2012 இல், மாருதி சுஜூகி தொழிலாளர்கள் ஒரு நிர்வாக கட்டுப்பாட்டு சங்கத்தை நிராகரித்த பின்னர் ஒரு சுயாதீனமான தொழிற்சங்கத்தை உருவாக்கினர். அந்த நிறுவனம் ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களைத் தொடங்க பொலிஸ் மற்றும் இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியது. இவை மாருதி சுஜூகி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதில் முடிந்தது. CPM மற்றும் CITU ஆகியவை ஐக்கியப்பட்ட தேசிய நடவடிக்கைக்கான கோரிக்கைகளை நிராகரித்தன, பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தினர்.

யமஹா, என்ஃபீல்ட் மற்றும் MSA தொழிலாளர்கள் போராடுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ள நிலையில், சிபிஎம் மற்றும் சிஐடியு ஒருங்கிணைந்த தொழில்துறை நடவடிக்கையைத் தடுக்க மீண்டும் மீண்டும் தலையீடு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் மீது பிரமைகளை ஊக்குவிப்பதற்கான மற்றொரு சந்தர்ப்பமாக சிஐடியு, அலுவலர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தினர். சிஐடியு மாவட்டத் தலைவர் முத்து குமார், "ஒரு சுமூகமான தீர்வைக் காணும்படி" ஆளும் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK) வலதுசாரி வகுப்புவாதக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

யமஹா தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசுகின்றனர்

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கியப்பட்ட ஐக்கியப்பட்ட தேசியளவிலான தொழிற்துறை நடவடிக்கையின் தேவையை வலியுறுத்தும் மற்றும் சிஐடியு பாத்திரத்தை அம்பலப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சமீபத்தில் விநியோகித்தனர்.

பல யமஹா தொழிலாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர், இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் அணிதிரட்ட மறுத்த தொழிற்சங்கங்கள் மீது குற்றம் சாட்டினர். அந்த பகுதியை விட்டு உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல தொழிற்சங்க அலுவலர்கள் மீண்டும் மீண்டும் தலையீடு செய்தனர்.

கடந்த வாரம் தொழிலாளர்கள், WSWS செய்தியாளர்களிடம் பேசுவதை தொழிற்சங்க அலுவலர்கள் தடை செய்தனர். ஞாயிற்றுக்கிழமை சிஐடியு தலைவர்கள் முத்து குமார் மற்றும் எஸ். கண்ணன் சரீர ரீதியான வன்முறைக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கார் நிறுவனங்களுக்காக வேலை செய்வதாக கண்ணன் கூறினார். அடுத்த முறை: "சிபிஎம் தோழர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்." என்று அவர் அறிவித்தார்.

இந்த அச்சுறுத்தல்கள், சிபிஎம் மற்றும் சிஐடியு ஆகியவை வாகன தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போர்க்குணம் குறித்து மிகவும் பதட்டம் அடைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அவர்களின் அரசியல் பதிவு குறித்த மற்றும் அவர்களின் பெருவணிக சார்பு நிலை பற்றிய அம்பலப்பபடுத்தல்களுக்கு அஞ்சுகின்றன. அவ்வப்போது அவர்களின் "இடது" வாய் முழக்கங்கள் இருந்தபோதிலும்கூட, இந்திய ஸ்ராலினிஸ்டுகள், அவர்கள் ஆட்சி செய்த மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய முதலாளித்துவ உயரடுக்குகள் விடுக்கும் எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றுவார்கள் என்பதை எடுத்துக் காட்டியள்ளனர்.

ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள்:

The frame-up of the Maruti Suzuki workers: A travesty of justice

 [5 April 2017].

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் மக்கள் அதிருப்தியை முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்குள் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் [PDF]

[15 September 2018]

சுஸூகி கார்ப்பரேஷன் என்ற ஒரு ஈவிரக்கமற்ற நாடுகடந்த நிறுவனத்தின் தோற்றச்சித்திரம் [PDF]

[06 April 2017]