ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Inviting Trump to Paris, Macron evokes the specter of fascism and the 1930s

பாரிசுக்கு ட்ரம்ப்பை அழைக்கையில், மக்ரோன் பாசிசம் மற்றும் 1930 களின் கோரக்காட்சியை தூண்டுகிறார்

By Alex Lantier
5 November 2018

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையின் நூற்றாண்டு நினைவு கொண்டாட்டத்திற்காக பாரிசில் அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கத் தாயார்செய்யும் அதேவேளை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் Ouest France க்கு கடந்த வாரம் நீண்ட நேர்காணலை வழங்கினார். அதில் முதலாம் உலகப்போர், பாசிசத்தின் எழுச்சி மற்றும் 1939ல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கும் இடையிலான ஆண்டுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளது போல் இன்று ஐரோப்பா அதே அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அவர் எச்சரித்தார்.

அவரது கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கோபம் எழுச்சியடைந்து வருகையில், “செல்வந்தர்களின் ஜனாதிபதி” தேசியவாதத்தின் "முற்போக்கான" எதிர்ப்பாளராகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மத்தேயு சல்வீனி மற்றும் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஆர்பான் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் அதி வலது விமர்சகர்களுக்கு எதிர்ப்பாளராகவும் தன்னைக் காட்டிக்கொள்ளும் வெற்றுத்தனத்தைத் தொடர்ந்தார். நவம்பர் 11 ம் தேதி ட்ரம்ப்பின் வருகைக்கு எதிராகவும், நவம்பர் 17 ம் தேதி சிக்கன நடவடிக்கை மற்றும் எரிபொருள் விலை உயர்வுகளுக்கு எதிராகவும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள வேளையில், சர்வாதிகாரம் மற்றும் போர் பற்றிய மக்களின் கவலைகளை பற்றிப் பேச முயற்சித்தார்.

அவர் அறிவித்தார்: “நாம் வசிக்கும் காலத்திற்கும் போருக்கிடையிலான காலகட்டத்திற்கும் இடையிலான ஒப்புமையால் நான் கவரப்பட்டேன். ஐரோப்பாவில் அதாவது இன்று அச்சங்களாலும் தேசியவாத அதிருப்திகளாலும், பொருளாதார நெருக்கடியின் விளையன்களாலும் பிளவுபட்டுள்ளன, முதலாம் உலகப் போர் முடிவிற்கும் 1929 பங்குச் சந்தைப் பொறிவுக்கும் இடையில் ஐரோப்பாவில் வாழ்வை வடிவமைத்த எல்லாம் கிட்டத்தட்ட வழிமுறை ரீதியிலான மறுவெளிப்பாட்டை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கட்டாயம் இதனை நினைவில் வைத்திருக்க வேண்டும், எளிதாகப் புரிந்துகொள்ளுகிறவாறு, இதனை எப்படி எதிர்ப்பது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்”.

மக்ரோனின் கூற்று, உலகம் முழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதற்கு பிரெஞ்சு அரசின் தலைவரிடமிருந்து ஒரு உறுதிப்படுத்தலைச் சேர்க்கிறது: போர் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி யதார்த்தமாகிறது மற்றும் வளர்கிறது. இருந்தும் “முற்போக்கு” என்று கூறப்படும் முதலீட்டு வங்கியாளர் மக்ரோன் முன்மொழியும் கொள்கைகள் முதலாளித்துவத்தின் விசித்திரமான சமூக சமத்துவமின்மை மற்றும் வரலாற்று திவாலில் வேரூன்றி உள்ள இந்த அபாயங்களை உக்கிரப்படுத்த மட்டுமே செய்கிறது. 1930களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்பச்செல்லும் ஆபத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னேறுவதற்கான வழியை வழங்கக் கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கமாகும்.

மக்ரோன் தேசியவாதம் தொடர்பான அவரது விமர்சனங்களை, இராணுவவாத மற்றும் சமூக விரோதக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு பாசிச தேசியவாதத்தையும் புலம்பெயர் விரோதக் கொள்கைகளையும் வேறு எவரையும் விட அதிகமாகத் தூண்டிவிடுவதை உருவகப்படுத்தும், ஒட்டுண்ணி மில்லியனர், ட்ரம்ப்பிற்கான அவரது வரவேற்புடன் சரிசெய்வதற்கு கூட மக்ரோன் முயலவில்லை.

இருவாரங்களுக்கும் முன்னர், ட்ரம்ப் இடைத்தர அணுஆயுத ஒப்பந்தத்தை (INF) இரத்துசெய்திருந்தார். அதற்கு சற்று முன்னர்தான், நேட்டோவுக்கான அமெரிக்கத் தூதுவரான Kay Bailey Hutchinson உடன்படிக்கையை மீறியதாகக் கூறுவதை “அகற்றும்” பொருட்டு ரஷ்யா மீது குண்டு வீசப்போவதாக அச்சுறுத்தினார். ட்ரம்ப் INF உடன்படிக்கையை முறிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா இரண்டுடனுமான அணுவாயுதப் போட்டியில் அணுவாயுதங்கள் உற்பத்தி நடவடிக்கை எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ட்ரம்ப் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களை மெக்சிகோ எல்லைக்கு அனுப்பி பெரிய சிறைமுகாம்களை அமைக்கவும் புகலிடம் கோரும் பாதுகாப்பற்ற புலம்பெயர்ந்தோரை சுட்டுவீழ்த்தப்போவதாக அச்சுறுத்தியும் வருகின்றார்.

சல்வீனி மற்றும் ஆர்பன் ஆகியோரை பைத்தியகாரத்தனமாக கண்டனம் செய்யும் அதேவேளை, மக்ரோன் பாரிஸில் ட்ரம்ப்பை வரவேற்கிறார்.

ட்ரம்ப் அல்லது ஐரோப்பாவில் உள்ள மக்ரோனின் நவ பாசிசப் போட்டியாளர்கள் போலவே அதே வர்க்க நலன்களுக்கே மக்ரோன் சேவை சேவைசெய்வதால், இந்தக் கண்டனங்கள் அடிப்படையிலேயே போலியானவை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரது திட்டங்கள், நூறாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை இராணுவத்திற்கு செலவழிக்கவும் ஓய்வூதிய வெட்டுக்கள், இரயில் தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ ஏகாதிபத்திய முகாமாக உருகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மக்ரோன் Ouest France க்கு விளக்கியது போல, ஐரோப்பாவில் தேசியவாதத்தை வாயளவில் விமர்சிப்பது இந்தக்கூட்டின் சிதைந்துவரும் ஐக்கியத்தைப் பேணுதற்கும் அதன் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்குமான நோக்கங்கொண்டது.

அவர் சொன்னார்: “எமது சகாப்தம் வல்லரசுகள் தங்களின் கொள்கைகளை பூகோள அளவில் அபிவிருத்தி செய்யக் கூடிய அரசுகளின் சகாப்தம்; போட்டிக்கான விதிகள் மற்றும் ஆணை  இனிமேல்தான் ஏற்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பா ஒரு  அபாயத்தை எதிர்கொள்கிறது: தேசியவாத புற்றுநோயால் கிழிபடலாம், வெளிநாட்டு சக்திகளால் தூக்கி எறியப்படலாம், மற்றும் அதன் இறையாண்மையை இழக்கலாம். இதன் பொருள் அதன் பாதுகாப்பிற்கு அமெரிக்க முடிவுகளைச் சார்ந்திருத்தல், முக்கிய உட்கட்டமைப்பு வேலைகளில் சீனா அதிகம் சம்பந்தப்பட்டிருத்தல், ரஷ்யா சிலநேரங்களில் சூழ்ச்சிக்கையாளலால் சபலத்திற்காளாகலாம், பெருநிதிய நலன்கள், சந்தைகள் சிலவேளை அரசால் முடியக்கூடய எடைக்கும் அப்பால் போகலாம்.”

உண்மையில், மக்ரோனின் ஜனதிபதிப் பதவியானது அதிவலதிற்கு ஒரு ஜனநாயக மாற்று என காட்டிக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனில் ஒரு முறிவைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு, ட்ரம்ப் தேர்வை வரவேற்ற நவ பாசிச வேட்பாளர் மரின் லூ பென்னிற்கு எதிராக வேறொரு மாற்றீடு இன்மை காரணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்ரோன் ஒருவேளை ட்ரம்ப் தேர்தல் காலத்திற்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகக் கட்சியுடனான ஒரு கூட்டின் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தை புதிய “சுதந்திர உலகின் தலைவராக,” ஆக்கக்கூடிய ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெலின் பின்நிற்பவராக மக்ரோன் புகழப்பட்டார்.

ஒரு ஆண்டு கழிந்த பின்னர், இந்த நடிப்புக்கள் எல்லாம் கிழிந்து தொங்கின. ஜேர்மனியை மீள ஆயுதமயப்படுத்தல், ஜேர்மன் இராணுவவாதத்தை சட்டரீதியாக்கல் மற்றும் ஜேர்மன் பாசிச மரபுகளை முன்னுக்குக் கொணர்தல் இவற்றுக்கு ஆக்ரோஷமாய் பிரச்சாரம் செய்வதன் மத்தியில் மேர்க்கெல் சான்செலராக அவரது பணிஓய்வை அறிவித்திருக்கிறார். உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோபர், அரசுக்கும் அதி வலது வட்டங்களுக்கும் இடையில் உறவுகள் அதிகரித்துவரும் சாட்சியங்களின் மத்தியில் மற்றும் ஜேர்மனி முழுவதும் நூறாயிரக் கணக்கானோரை அணிதிரட்டும் வெகுஜன எதிர்ப்புக்கள் இவற்றின் மத்தியில், கெம்னிட்ஸில் நடைபெற்ற நவபாசிச கலவரத்தில் தானும் சேர்ந்திருக்கலாம் என்று அறிவித்தார்.

ஜேர்மன் உளவுத்துறையானது சோசலிச சமத்துவக் கட்சியை (SGP, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பகுதி) அதி வலது இராணுவவாதத்தை எதிர்க்கும் “இடது தீவிரவாதக் குழுக்கள்” என்ற பட்டியலில் கூட இட்டிருக்கிறது, அதேவேளை SGP வன்முறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அங்கீகரிக்கிறது.

பேர்லினில், மக்ரோனின் கூட்டாளிகள் அதிவலது பாதைப் போக்கை தயாரித்தல் மற்றும் உள்நாட்டில் எதிர்ப்பு உணர்வை நசுக்க அச்சுறுத்துவது போல், மக்ரோனும் அடிப்படையில் அதே பாதையில் பயணிக்கிறார். இரயில் தொழிலாளர்களால்  அபரிமிதமான எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கை இருந்தபோதும், தேசிய இரயில்வேயில் (SNCF) அவரது பலவந்ததமான தனியார்மயமாக்கல் மற்றும் ஊதியத்தை வெட்டல், ஜனநாயக உரிமைகளை இரத்துச்செய்து திணிக்கும் அவசரகால நிலைமையின் கீழ் முன்மொழியப்பட்டதானது, அவரது சிக்கன நடவடிக்கை நிகழ்ச்சிநிரலை செல்வாக்கிழக்க வைத்து அவரது ஜனாதிபதி பதவியையும் ஆட்டங்காண வைத்தது.

ஜனாதிபதி பதவி வேட்பாளர் ஜோன் லூக் மெலோன்சோன் 20 சதவிகித வாக்குளைப் பெற்ற ஒரு அமைப்பான அடிபணியா பிரான்ஸ் (LFI) மீதான திடீர்ச் சோதனை, பிரெஞ்சு அவசரகால நிலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்ட பொலீஸ் அரசு அதிகாரங்கள் அமைதியான அரசியல் எதிர்ப்புக்கு எதிராக அணிதிரட்டப்பட முடியும் மற்றும் திரட்டப்படலாம் என்பதை சமிக்கை செய்கிறது.

இந்தப் பரிணாம வளர்ச்சியானது (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் குதியான Parti de l’égalité socialiste) சோசலிச சமத்துவக் கட்சி ஆல் 2017 தேர்தலின் பொழுது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை நிரூபணம் செய்கிறது. எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு இயக்கத்தைக் கட்டுவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாட்டை வழங்கும்பொருட்டு, மக்ரோன் மற்றும் லூ பென் இடையிலான தேர்தல் போட்டியைப் புறக்கணிக்குமாறு அது அழைப்புவிடுத்தது. அவ்வாறு செய்கையில், PES பிரான்சில் ஒரு எதேச்சாதிகார ஆட்சியின் அபாயம் பற்றி எண்ணத்தில் கொள்ளாத நிலையில் இருக்கவில்லை. ஆயினும், அதிவலது ஆபத்திற்கும் லூ பென்னால் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியவாத வெறிக்கூச்சலுக்கும் மக்ரோன் ஒரு மாற்று அல்ல என்பதை சரியாகவே எச்சரித்தது.

முதலாம் உலகப் போரின் முடிவில் பதவியில் இருந்த பிரெஞ்சு ஜனாதிபதி Georges Clemenceau வை மக்ரோன் தனது முன்மாதிரி என்று Ouest France இடம் வலியுறுத்தினார். ஜேர்மனியை முடக்கவும் அவமதிக்கவும் நோக்கங்கொண்டு வேர்சாய் உடன்படிக்கையின் கடும் ஆதரவாளரான  Clemenceau போர் எதிர்ப்புப் படையினர்களை தூக்கில் போடவும் சோசலிஸ்டுகள், போர்விரோத உணர்வு கொண்டோரை கொடூரமாய் நசுக்கவும் கோரினார். “Clemenceau வின் செய்தியைப் பாராட்டி”, அனைவரும் இழந்து போனதாய்க் காண்கையில் மற்றும் துருப்புக்கள் நம்பிக்கை இழக்கையில், அவர் அடிபணியாது இருந்தார்” “வெற்றியின் தந்தை” என அவரை மக்ரோன் பாராட்டினார்.

உண்மையில், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் சர்வதேச எழுச்சி என்பது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருமளவில் தொழிலாளர்கள் நகர்கின்றன என்பதற்கான ஒரு அறிகுறி ஆகும். ஐரோப்பா முழுமையும் அதிவலது அரசியலுக்கு எதிராக எழுச்சியடைந்து வரும் இயக்கமானது, தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றும் பிரச்சினையை முன்வைக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றும் தொழிலாளர் அரசுகளைக் கட்டி அமைப்பதையும் முன்வைக்கும் ஒரு அரசியற் போராட்டமாக மட்டுமே தொடுக்கப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பியப் பகுதிகள் வலியுறுத்துகிறவாறு, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான போராட்டம் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமென இது விளக்கிக் காட்டுகிறது.