ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists to hold meeting on 80 years of the Fourth International

நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகள் குறித்து இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பொதுக்கூட்டம்

6 November 2018

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சென்னை பொதுக் கூட்டமொன்றுக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, விஞ்ஞான மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் முழு பாரம்பரியத்தையும் உள்ளடக்கியுள்ளது. பாசிசம் மற்றும் சர்வாதிகாரம், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் உலக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு போராடும் ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே.

1917 ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியினால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலம் நிறுவப்பட்டது. அது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வாழ்வா, சாவா போராட்டத்தில் ஸ்ராலினிசம் உட்பட அதன் அனைத்து ஏஜன்டுகளுக்கும் எதிராக நிறுவப்பட்டது. ஸ்ராலினிசம், சோவியத் ஒன்றியத்தில், ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நலன்களுக்காக தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை  வன்முறையில் கைப்பற்றியதுடன் உலகப் புரட்சியின் முன்னோக்கை நிராகரித்தது..

1953 இலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழி நடத்தப்படும், நான்காம் அகிலம், எட்டு தசாப்தங்கள் நீடித்த கொள்கைப் பிடிப்பான, புரட்சிகரமான போராட்ட வரலாற்று பதிவை கொண்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தப் போராட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1968 இல் நிறுவப்பட்டது, அது முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு எதிராக, இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகவும்,போராடி வரும் ஒரு கறையற்ற சாதனை பதிவை கொண்டுள்ளது.

ட்ரொட்ஸ்கிசத்திற்கான இந்த போராட்டம் இப்போது இந்தியா உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியுடன் ஒன்றித்து செல்கிறது. சோசலிசத்தின் பக்கமாக அதிகமாக ஈர்க்கப்பட்டு வரும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் உள்ளடங்கியிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் கல்வியூட்டப்பட வேண்டும்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினர், சென்னை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள (WSWS) வாசகர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தில் பங்கேற்கும்படியும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

விவரங்கள்:

தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, மாலை 4 மணிக்கு

இடம்: பத்திரிகை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild)

சேப்பாக்கம், சென்னை – 600 005

(சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகில் மற்றும் அரசு விருந்தினர் மாளிகைக்கு பின்னால்)

தொடர்புகளுக்கு: 06 37 99 41 408