ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan political crisis: Pseudo-left NSSP promotes UNP campaign

இலங்கை அரசியல் நெருக்கடி: போலி-இடது நவ சம சமாஜக் கட்சி , ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார இயக்கத்தை ஊக்குவிக்கிறது

By K. Ratnayake
5 November 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விக்ரமசிங்கவை அக்டோபர் 26 அன்று பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய பின், ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க) யின் பிரச்சார இயக்கத்தில் நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க) இன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன முன்னிலை வகிக்கின்றார்.

விக்ரமசிங்கவை நீக்கிய பின் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு, உறுப்பினர்களை இலஞ்சம் கொடுத்து தன்வசம் இழுப்பதற்காக, பாராளுமன்றம் கூடுவதை நவம்பர் 16 வரை ஒத்திவைத்தார். 2005 முதல் 2015 வரை, ராஜபக்ஸவின் ஆட்சி காலம் அதன் ஜனநாயக விரோத சர்வாதிகார போக்குக்குக்கா இழிபெயர் பெற்றதாகும்.

ஆனால் விக்ரமசிங்க, பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அதனை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தினார். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இந்த பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர். பெரும் சக்திகளின் அழுத்தங்களுக்கு இணங்கி, சிறிசேன, பாராளுமன்றத்தை இரண்டு நாட்கள் முன்னதாகவே நவம்பர் 14 அன்று கூட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறிசேனவும் இராஜபக்ஷவும், அதேபோல விக்ரமசிங்கவும் கூட "பாராளுமன்ற ஜனநாயகத்தை" ஆதரிப்பதாக பொய்யாக அறிவிக்கின்றனர். ஆனால் ஆளும் வர்கத்தின் இந்த கடுமையான கோஷ்டி மோதல், இரு தரப்பும் தங்களின் பங்கிற்காக சண்டையிட்டு கொள்வதையே குறிக்கின்றது. அனைவரும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது பெருந்தாக்குதல் தொடுக்கவே, உறுதி பூண்டுள்ளனர்.

ந.ச.ச.க உட்பட அனைத்து போலி இடது அமைப்புகளும், ஊடகங்கள் மற்றும் கல்வித்துறையின் ஒரு பகுதியினரும், உடனடியாக பாராளுமன்றம் கூடுவதே அரசியல் நெருக்கடிக்கு "தீர்வு" என கோருகிறார்கள். அவர்கள், ஆளும் வர்க்கத்தினர் மத்தியில் நடக்கும் இவ்வகையான மோதல்கள், நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவத்தின் அழுகிய தன்மை மற்றும் பாராளுமன்ற மோசடியினை வெளிக்கொணரும், என்று அஞ்சுகின்றனர்.

விக்ரமசிங்கவின் நெடுநாளைய கூட்டாளியான கருணாரட்ண ஜ,தே.க.யின் பிரச்சாரத்தை ஊக்குவித்து பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரமைகளை விதைக்கிறார். கருணாரட்ண ஜ.தே.க. வின் கூட்டங்களில் பேசுகின்றார், செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகின்றார், எதிர்ப்பு மறியலை நடத்த உதவுகிறார், மேலும் ஊடங்கங்களுக்கு எழுதுகிறார்.

அக்டோபர் 30 அன்று ஜ.தே.க. வின் கூட்டத்தில் பேசுகையில், அவர் பின் வருமாறு கூறினார், "நான் இங்கு வந்தேன் ஏனென்றால், இங்குதான் ஜனநாயகம் உள்ளது. விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றங்களை நிறுத்த, அவர் மீண்டும் (பிரதமராக) அமர்த்தப்பட வேண்டும், மேலும் ஆட்சியை கைப்பற்றியுள்ள திருடர்கள், விரட்டியடிக்கப்பட வேண்டும்.”

விக்ரமசிங்கவை உழைக்கும் மக்களின் போராளியாக சித்தரிக்க முயற்சிக்கும் கருணாரட்ண கூறினார், "யார் இந்த நாட்டு மக்கள் சார்பாக பேசுகிறார்? யார் தொழிலாளர் வர்க்கம் சார்பாக பேசுகிறார்? யார் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே மக்களாய் அவர்களை ஆதரித்து பேசுகின்றார்? இது மொத்த உலகத்துக்கும் இன்று தெரிகிறது."

எவ்வளவு அப்பட்டமான பொய்கள்! 1977ல், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்க, வெறுக்கப்பட்ட வலதுசாரி ஜே. ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கு பெற்றார்.

ஜெயவர்த்தன ஆட்சி இரக்கமின்றி, "திறந்த சந்தைப்" பொருளாதார கொள்கைகளை நிறைவேற்றியதன் மூலம், தொழிலாளர் மற்றும் ஏழைகளின் வேலைகளை மற்றும் சமூக உரிமைகளை அழித்தது. பின்னர் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு 30 ஆண்டு கால அழிவுகரமான போரை தூண்டியது.

விக்ரமசிங்க, அரசாங்கத்திலோ அல்லது எதிர் கட்சியிலோ இருக்கும்போது, ஒருபோதும் பெரு வணிகத்தையும் முதலாளித்துவ அமைப்பையும் பாதுக்காக்கும் நிலையிலிருந்து தடுமாறியது கிடையாது.

கடந்த நான்கு வருடங்களாக, "தேசிய ஐக்கிய அரசாங்கம்" என்று அழைக்கப்படும் விக்ரமசிங்க மற்றும் சிறிசேனவின் அரசாங்கம், இராஜபக்ஷ ஆட்சியின், தொழிலாளர் விரோத தாக்குதல்களை முறையாக ஆழப்படுத்தி, IMF இன் ஆணைகளை அமுல்படுத்தியது.

விக்ரமசிங்கவை உயர்த்திப் பிடிக்கும் கருணாரட்னவின் இந்த பணி, IMF-ன் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தலும், அமெரிக்க சார்பு வலதுசாரி ஐ.தே.க உடன் தொழிலாளர்களை பிணைப்பதும், ஒரு சுயாதீன தொழிலாளர் வர்க்க வளர்ச்சியின் நகர்வை தடுக்கும் ஆற்றொணா முயற்சியாகும்.

விக்ரமசிங்க மற்றும் ஐ.தே.க. வுக்கான கருணாரட்னவின் ஆதரவு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் புவிசார்-அரசியல் தேவைகளுக்கு சேவை செய்கிறது.

ஜனவரி 2015 அதிபர் தேர்தலின்போது, கருணாரட்ன உள்ளிட்ட பல போலி இடதுகளும் கல்வியாளர்களும் ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்தனர், அது சிறிசேன மற்றும் அவர் கூட்டணியிலிருந்த விக்ரமசிங்கவின் ஐ.தே.க வை ஆட்சியில் அமர்த்தியது. கருணாரட்ன அபத்தமாக இந்த சதி வேலையை "ஜனநாயக புரட்சி" என்று கூறினார்.

சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தை ஆட்சியில் அமர்த்தியமை, இந்தியாவின் அரசியல் ஆதரவுடன், அமெரிக்காவால் திட்டமிடப்பட்டதாகும். அமெரிக்காவிற்கு இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சி பற்றி எந்த வேறுபாடும் இல்லை, ஆனால் அதன் புவிசார்-மூலோபாய கணிப்பீடுகளின் வழியில் உள்ளது. பீஜிங்குடனான அவரது நெருங்கிய தொடர்பு காரணமாக, அவரை கவிழ்க்க எண்ணியது.

அமெரிக்காவும் ஏனைய பெரும் சக்திகளும், விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளித்து, சிறிசேன மீது அரசியல் அழுத்தத்தை அதிகரித்து, விக்ரமசிங்கவின் பதவி நீக்கத்திற்கு பதில் அளித்துள்ளனர். வாஷிங்டன், இராஜபக்ஷவை சீன சார்புள்ளவர் என்று கருதி, அவர் மீண்டும் அரசியலில் நுழைவதை விரும்பவில்லை.

கடந்த வாரம் அமெரிக்கா, இலங்கைக்கு கொடுக்க வேண்டிய 500 மில்லியன் டாலர் வளர்ச்சி நிதியை நிறுத்தி வைத்துள்ளது, மேலும் ஜப்பான் பளுவற்ற- புகையிரத திட்டத்திற்காக 1.4 பில்லியன் டாலர் "இலகுவான கடனை", முடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும், GSP-வரிச் சலுகைகளை இலங்கையின் ஏற்றுமதிக்கு கொடுப்பதை மீளாய்வு செய்வதாய் உணர்த்தியுள்ளது. இலங்கை மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம்.

கருணாரட்ன தன்னுடைய ஐ.தே.க சார்பு பிரச்சாரத்திற்கு தீவிரவாத சாயம் கொடுக்க முற்படுகிறார். புதன் அன்று நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் கூறினார், மக்கள், பாராளுமன்றத்தை புறந்தள்ளுபவர்களுக்கு எதிராக செயல்பட தயாராக உள்ளனர், மேலும் அவர் "பொது வேலை நிறுத்தம் மற்றும் மக்கள் கலவரத்தை" பரிந்துரைத்தார். சிறிசேன, விக்ரமசிங்கவை, நீக்கியதற்கு எதிராக ஐ.தே.க வினால் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் வந்த ஒரு நாளுக்கு பிறகு அவரது கருத்துக்கள் வெளியாகின.

இரிதா லக்பிம என்ற வார இதழுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் ந.ச.ச.க தலைவர் அதன் சாராம்சத்தை விளக்குகிறார். பாராளுமன்ற கூட்டத்தை தள்ளிப்போட்டமையை சுட்டிக்காட்டி, அவர் சொன்னார், "ஜனநாயகம் என்பது [சிறிசேன மற்றும் இராஜபக்ஷவின்] சித்தம் மற்றும் ஆடம்பரத்திற்கு ஏற்றாற்போல் இயற்றப்படும் சட்டமாக மற்றும் கைச்சாத்திடும் அமைப்பாக மாறியுள்ளது. இதற்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டுமா என்பதை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.”

"குறைந்த பட்சம் பொதுத் துறையிலாவது ஒரு வேலைநிறுத்தம், [அரசாங்கத்தின்] ஆட்சியை சரிய வைக்கும்," மேலும் சர்வாதிகாரத்தை தோற்கடிக்கும்." என்று கருணாரட்ண கூறினார். “ஹிட்லர்கள் பலசாலிகளாக ஆவது, மக்கள் பொய்களுக்கு முகம் கொடுக்கையில் அமைதியாக இருப்பதால்தான். மக்கள் பொய்களை சோம்பேறித்தனம் காரணமாக ஆரத்தழுவினால், எந்த ஒரு பைத்தியக்கார மனிதனும் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி இழுக்க முடியும்." என்று அவர் எழுதினார்.

என்ன ஒரு துரோக பிரச்சாரம்!

உழைக்கும் மக்கள், வரலாற்றில் அப்பட்டமாக சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கிய ஆளும் வர்க்கத்தின் ஒரு வலதுசாரி கன்னையை இன்னொன்றுக்கு எதிராக (அதுவும் இதுபோல இரக்கமற்றது) காப்பாற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இராஜபக்ஷவை ஹிட்லர் மற்றும் பாசிசத்துடன் கருணாரட்ன செய்யும் ஒப்பீடுகள், விக்ரமசிங்கவின் சொந்த ஜனநாயக விரோத பதிவுகளை பூசி மெழுகவே ஆகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கசப்பான வரலாற்று அனுபவங்கள் காட்டியிருப்பது என்னவென்றால், ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் ந.ச.ச.க. போன்ற "இடதுகள்" உள்ளிட்ட சந்தர்ப்பவாத தலைமைகள் தொழிலாள வர்க்கத்தை காட்டி கொடுத்தமையே பாசிசம் மற்றும் சர்வாதிகாரங்கள் ஆட்சிக்கு வருவதற்கான காரணிகள் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரையில் சிறிசேன-இராஜபக்ஷ மற்றும் விக்ரமசிங்க என்ற கோஷ்டிகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எந்த ஒரு கட்சியோ கூட்டணியோ ஆட்சியைக் காப்பாற்றினாலும், அவர்கள் தொழிலாளர் மற்றும் ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இரக்கமற்ற தாக்குதலை கட்டவிழ்ப்பார்கள்.

சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை, இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பாக கூறுவது போல். "விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்த சிறிசேனவின் இந்த அரசியலமைப்புக்கு விரோதமான செயலானது, இலங்கை 'விடுதலை' அடைந்து 1948-ல் தொடங்கிய நாடாளுமன்ற ஆட்சியின் ஒரு நீடித்த சீரழிவின் உச்சக்கட்டம் ஆகும். இலங்கையில் அரசியல் சதி என்பது, மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கூர்மை அடைந்து வரும் முக்கியமாக அமெரிக்கா சீனா மத்தியிலான புவிசார்- அரசியல் பதட்டங்கள், மற்றும் வர்க்க போராட்டங்கள் சர்வதேச ரீதியாக மீழெழுச்சி பெறுவதன், ஒரு கூர்மையான வெளிப்பாடாகும்."

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச-சிந்தனை கொண்ட புத்திஜீவிகள், ந.ச.ச.க தலைவரின் இந்த எதிர் புரட்சிகர முயற்சிகளை நிராகரிக்க வேண்டும். தொழிலாள வர்க்கம், ஆளும் வர்கத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராடுவதன் மூலமே தன் வர்க்க நலன்களை பாதுகாக்க முடியும்.

சோ.ச.க. மற்றும் அதன் இளைஞர் அணியான, சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு மட்டுமே, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் போராடி வருகிறது.

ஆசிரியர் இதையும் பரிந்துரைக்கிறார்:

Sri Lanka: Pseudo-left NSSP celebrates alliances with capitalist parties

[1 February 2017]