ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Polish government officials march with the far-right

போலந்து அரசாங்க அதிகாரிகள் அதி-வலதுசாரிகளுடன் அணிவகுப்பு

By Clara Weiss
13 November 2018

ஞாயிறு அன்று, சட்டம் மற்றும் நீதி (PiS) அரசாங்கத்தின் அதிகாரிகள் போலந்தின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு நவ–பாசிச சக்திகளுடன் சேர்ந்து பகிரங்கமாக அணிவகுத்து சென்றனர். போலந்து பொலீசாரின் தகவலின்படி, வார்சோவில் “சுதந்திர பேரணி” சுமார் 25,000 பேர்களை ஈர்த்தது. இது இரண்டு மில்லியன் மக்கள் கொண்ட ஒரு நகரமான வார்சோவின் வரலாற்றில் மிகப் பெரிய தனி ஒரு பேரணியாகும். நாடு முழுவதும் வேறு சிறிய ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

நவம்பர் 11, 1918 அன்று போலந்திற்கு அப்போதைய சோவியத் ரஷ்யா, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிடமிருந்து உத்தியோகபூர்வமாய் சுதந்திரம் வழங்கப்பட்டது. இது முன்னாளில் போலிஷ்-லித்துவேனிய பொதுநல அமைப்பு என அழைக்கப்பட்டது. இதனை சுமார் 123 ஆண்டுகளாக ஹாப்ஸ்பேர்க் பேரரசு, ரஷ்யப் பேரரசு மற்றும் பிரஷ்ய அரசாட்சியினர் தம்மிடையே பிரித்து ஆண்டு வந்தனர். சுதந்திரத்தை அடுத்த 21 ஆண்டுகளில் 1939ல் நாஜிக்களின் ஆக்கிரமிப்புவரை, போலந்தானது சோவியத் ஒன்றியத்திற்கெதிரான பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்டத்தில் அவர்களின் ஒரு பெரிய கோட்டையாக இருந்து வந்தது.

பல ஆண்டுகளாக, இந்த ஆண்டுவிழா போலந்து தேசியவாதிகளாலும் பாசிஸ்டுகளாலும் சுரண்டிக்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயினும், சுதந்திரதினமானது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தாராளவாத எதிர்க்கட்சியினர் உட்பட, ஏனைய சக்திகளாலும் உரிமை கோரிக் கொண்டாடி வரப்படுகிறது. இந்த தாராளவாத பிரிவினர் நீண்டகாலம் முன்பே போருக்கிடையிலான காலகட்டத்தில் போலந்தை ஆண்ட எதேச்சாதிகாரி Piłsudski ஆட்சியைப் புகழ்வதில் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் 11 அதிவலது சக்திகளின் சர்வதேச ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுகூடலுக்கான நிகழ்வாக இருந்தது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் உட்பட, சுமார் 60,000 பங்கேற்பாளர்களுடன், ஐரோப்பிய வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தையதில் மிகப்பெரிய அதி-வலது பேரணியாக அது இருந்தது. உலகம் முழுவதையும் அதிர்ச்சி அலைகளை அனுப்பிய, பேரணியில் இடம்பெற்ற பதாகைகளில், உள்ளடங்கியவை: “சகோதரத்துவ மக்களின் வெள்ளை ஐரோப்பா,” “ஐரோப்பா வெள்ளையாக இருக்கும் அல்லது மக்கள்தொகை அகற்றப்படும்,” “தூய போலந்து வெள்ளைப் போலந்து,” “தாய்நாட்டின் எதிரிகளுக்கு மரணம்,” “இஸ்லாமிய மனித அழிப்புக்காக பிரார்த்தனை,” மற்றும் “அகதிகளே, வெளியேறுங்கள்” ஆகியன உள்ளடங்கும்.(see: “Sixty thousand fascists march in Warsaw”)

National Radical Camp (ONR) போன்ற அதிவலது தேசியவாத குழுக்களுடன் அணிவகுப்பில், ஜனாதிபதி அந்திரேஜ் டூடா -Andrzej Duda- மற்றும் பிரதமர் மாரேயுஷ் மோரோவிக்கி -Mateusz Morawiecki- உள்பட, அரசாங்க அதிகாரிகள் கலந்துகொள்வர் என்ற அறிவிப்பு வெள்ளிக்கிழமை அன்றுதான் வெளிவந்தது. ONR ஒரு வெளிப்படையான நவபாசிச அமைப்பாகும். யுத்தத்திற்கு இடையிலான காலகட்டத்தில் 1930களில் தொழிலாளர் அமைப்புக்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக அவற்றைத் துடைத்தழித்த பாசிச பயங்கரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமைப்பின் பெயரால் குறிக்கப்பட்டதாகும். போலந்தை நாஜிக்கள் ஆக்கிரமிக்கும் முன்னர், ONR அடோல்ஃப் ஹிட்லரையும் நாஜி ஜேர்மனியையும் குறிப்பாக அதன் யூத எதிர்ப்புக் கொள்கைகளை அதிகமாய் புகழ்ந்தும் அதன்பால் கவரப்பட்டும் தன்னேயே வேறுபடுத்திக் காட்டிக்கொண்டது. அந்த யூத எதிர்ப்புக் கொள்கைகளே ONR-ன் சொந்த அரசியல் வேலைத்திட்டத்திற்கு ஊக்கமளிப்பாய் விளங்கியது.

இன்னொரு கூட்டு-ஒழுங்கமைப்பாளர் அதி-வலதான அகில போலந்து இளைஞர் அமைப்பு (Młodzież Wszechpolska), போருக்கிடையில் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு என அதேபெயரில் அழைக்கப்பட்டதானது, பல்கலைக்கழகங்களில் யூத விரோத தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்தது. அதனுடைய டுவிட்டர் பக்கத்தில், அவ்வமைப்பானது அதன் ஊர்வலத்தின் படம் ஒன்றை “தேசத்திற்காக வாழ்வும் சாவும்” என்ற குறிப்புடன் பதிவிட்டது.

அரசாங்க அதிகாரிகள் அரசாங்கம், தாராளவாத எதிர்ப்பு மற்றும் அதி-வலதை உள்ளடக்கிய ஒழுங்கமைப்பாளர்களின் ஒரு கூட்டை அமைக்க முயற்சித்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும், அது தோல்வியடைந்தது மற்றும் தாராளவாத எதிர்ப்புக் கட்சிகள் பேரணியை எதிர்ப்பதுடன் போய்முடிந்தது. எதிர்க்கட்சியான Civic Platform (PO) இலிருந்து, பதவிக்காலம் முடியப்போகும் வார்சோவின் மேயரால் கடந்தவாரம் எடுக்கப்பட்ட பேரணிக்குத் தடைவிதிக்கும் முயற்சியான நீதிமன்ற முடிவால் தடுக்கப்பட்டது.

பேரணியில் டூடா மற்றும் மோரோவிக்கி பங்கேற்று இருப்பது பாரிசில் அதேநாளில் முதலாம் உலகப்போர் முடிவின் கொண்டாட்டங்களிலிருந்து அவர்கள் விலகி இருந்தனர் என்ற உண்மையினால் கோடிட்டுக்காட்டப்பட்டது.

பேரணியில் பங்கேற்றோரைப் பாதுகாப்பதற்கு இராணுவ பொலீசார் இறக்கப்பட்டனர் மற்றும் போலந்து படைவீரர்கள் ONR மற்றும் இத்தாலிய நவபாசிசக் கட்சியான Forza Nueva உறுப்பினர்களுடன் அக்கம்பக்கமாக நின்றுகொண்டிருந்தனர். பேரணியின் தொடக்கத்தில், டூடா அதி-வலது கூட்டத்தில் பேசினார், அவர் கூறியதாவது: “நாம் நமது வெள்ளை மற்றும் சிவப்பு பதாகைகளின் கீழ் (போலந்து தேசிய கொடியின் நிறங்கள்) ஒன்றாக சந்தோஷமாக நடப்பதற்கு விரும்புகிறேன். போலந்துக்காக போராடியோரை கௌரவிக்க மற்றும் அது தளையின்றி, இறையாண்மையுடன் மற்றும் சுதந்திரமாக இருக்கிறது என சந்தோஷப்படுங்கள்.” பின்னர் அவர் “நாயகர்களுக்கு புகழும் பாராட்டும்” என்று முழங்கி கூட்டத்தை வழிநடத்தினார் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது.

பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் போலந்து கொடிகளை ஏந்தி வந்தனர், ஆனால் சிலர் 1930களில் ஐரோப்பிய பாசிசத்தின் அடையாளமாக இருந்த மற்றும் ONR இன் பிரதான அடையாளமாக இருக்கும், அதேபோல Celtic cross போன்ற வெள்ளை மேலாதிக்கவாத அடையாளங்களாகவும் இருக்கும் Falanga வையும் காட்டிக்கொண்டு வந்தனர். இனவெறி கூச்சல்கள் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய கொடி வலதுகளால் எரிக்கப்பட்டு, “ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக” என்று முழங்கப்பட்டது.

டூடாவினதும் அரசாங்கத்திடதும் பேச்சாளர்கள் பேரணியில் அதி-வலது சக்திகள் பங்கேற்றதின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்ட முயற்சித்தனர், ஆனால் அரசாங்கம் அதிவலதுடன் வெளிப்படையாய் கூட்டுச் சேர்ந்தது ஒரு கணிப்பிடப்பட்ட அரசியல் நகர்வு எனத் தெளிவாய்த் தெரிகிறது. ஐரோப்பாவிலுள்ள முழு ஆளும் வர்க்கத்தாலான வலதுக்கான திடீர் பொது நகர்வால் அது ஊக்குவிக்கப்பட்டது மற்றும் அது முதலாளித்துவ வர்க்கத்தின் போர் மற்றும் சிக்கன நடவடிக்களை எதிர்க்கும் போலந்து மற்றும் ஐரோப்பாவிலுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஆத்திரமூட்டும் நோக்கங்கொண்டது.

PiS தான் அதிவலதுடன் பேரணியில் இணைந்து அணிவகுத்து போகப்போவதாகக் கூறிய சிலநாட்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இரண்டாம் உலகப் போரின் பொழுதான ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் பாசிச சர்வாதிகாரி பிலிப் பெத்தானை மாவீரர் (பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை புகழ்கிறார்) எனப் புகழ்ந்தார். பக்கத்திலுள்ள ஜேர்மனியில் ஜேர்மனிக்கான அதி-வலது மாற்று (AfD) அரசில் உள்ள முன்னணி வட்டாரங்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிவருகிறது. அது முழு ஊடகத்தாலும் அரசியல் ஸ்தாபகத்தாலும் முன்னிலைப்படுத்தப்பட்டு, பாராளுமன்றத்தில் முன்னணி எதிர்க்கட்சியாக அதிகாரபூர்வ நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகமானது அதிவலது இனவாதத்தையும் யூத எதிர்ப்பையும், திட்டமிட்டு ஊக்குவித்து வருவது, இடைத்தேர்தல்களுக்கு முன்னரே பிட்ஸ்பேர்க் யூத தேவாலயத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளடங்கலாக பல்வேறு வன்முறை ரீதியான தாக்குதல்களை விளைவித்துள்ளது.

போலந்தில் PiS பல ஆண்டுகளாக அதி-வலதை ஊக்கப்படுத்தி வந்ததுடன், அரசு எந்திரத்திலும் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மசிரேவிஷ் அவர்தாமே இழிபுகழ்பெற்ற யூத எதிர்ப்பாளராவார். அவரின் மேற்பார்வையின் கீழ் ஒரு பெரிய துணைநிலை இராணுவ ஆயுதப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சக்தியானது பெருமளவில் ஒழுங்கமைக்கப்பட்ட அதி–வலதில் தங்கி இருக்கிறது.

அரசாங்கமானது பல ஆண்டுகளாக அகதிகளின்பால் யூத எதிர்ப்பு மற்றும் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி வந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது யூதர்கள் படுகொலையில் போலிஷ் தேசியவாதகள் சம்பந்தப்பட்டிருப்பதைக் குறிப்பிடும் மனித இன ஒழிப்பு மீதான பேச்சை தணிக்கை செய்யும் சட்டத்தை (law censoring speech on the Holocaust) நிறைவேற்றியது. மிக அண்மையில், பிரதமர் மாரேயுஷ் மோரோவிக்கி ஆல் 2014ல் இருந்து குறிப்பிடப்படும் யூத எதிர்ப்புக் கருத்துக்கள் கசிந்த நாடா ஒன்று வெளிச்சம் போட்டுக் காட்டியது.

PiS இன் அரசியலானது எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்குமான தயாரிப்புக்களுக்காக அதி-வலதில் தங்கியிருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன், அது போருக்கு இடையிலான காலத்தின் “Intermarium” மூலோபாயத்தின் ஒரு புத்துயிர்ப்பை பின்பற்றி வருகிறது, இதில் பில்சுட்சிக்கியின் ஆட்சியானது பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் செல்வந்த தட்டின் பகுதிகளின் ஆதரவுடன், கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிலுள்ள வலதுசாரி தேசிவாத ஆட்சியுடனான ஒரு கூட்டின் மூலம், சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மனியைக் கீழறுக்க நாடியது. அதைப்போலவே இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் PiS அரசாங்கமானது, புரட்சியின் அச்சுறுத்தலை முறியடிக்கவும் ஐரோப்பாவில் ஜேர்மனியின் நிலையைக் கீழறுக்கவும் ரஷ்யாவிற்கெதிரான ஒரு போருக்கு தயாரிப்பு செய்வதற்கும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் அதி-வலது அரசுகளைக் கட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் பொழுது நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் பாசிச பயங்கரம் மற்றும் அழிவின் மையமாக ஆகியிருந்த போலந்து உட்பட, ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாசிசத்திற்கு எதிரான ஒரு பரந்த அளவிலான வெறுப்பு இருக்கிறது. 6 மில்லியன் யூதர்கள் இன அழிப்பு செய்யப்பட்டதின் புவிசார் மையமாக போலந்து இருந்தது. போருக்கு முந்தைய போலந்தில் 3 மில்லியனுக்கும் மேலான யூதர்கள் வாழ்ந்து வந்தனர்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளே போருக்கும் பாசிசத்திற்கும் எதிர்ப்பானது உண்மையான வெளிப்பாட்டைக் காணமுடியாது. முதலாளித்துவ வர்க்கத்தினாலான போருக்கும் உள்நாட்டுப் போருக்குமான தயாரிப்பையும் அதி-வலதுகளை அது முன்னிலைப்படுத்தலையும் எதிர்த்துப் போராட, தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சர்வதேசிய மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை நோக்கித் திரும்புவது அவசியமாக இருக்கிறது.