ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The state funeral for George H. W. Bush and the ritual of oligarchy

ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் அரசு இறுதிமரியாதையும், செல்வந்த அடுக்கின் சம்பிரதாயமும்

Patrick Martin
5 December 2018

புதன்கிழமையன்று, அமெரிக்க நிதியியல் உயரடுக்கால் கடந்த வெள்ளிக்கிழமை இறந்த முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷிற்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அமெரிக்க-சீன வர்த்தகப் போர் மீதான கவலைகள் மற்றும் வரவிருக்கின்ற உலகளாவிய மந்தநிலைமைக்கான அறிகுறிகள் மீதான கவலைகள், பிரான்சில் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெடித்திருப்பது மீதான அச்சங்களால் தூண்டப்பட்டு, செவ்வாயன்று 800 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு மீண்டு வருவதற்காக வோல் ஸ்ட்ரீட்டுக்கு கூடுதலாக 24 மணி நேரம் வழங்கும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இறுதிஅஞ்சலி செலுத்துவதற்கான தேசிய விடுமுறை தினத்தில் நியூ யோர்க் பங்குச் சந்தையும் மூடப்பட்டது.

வாஷிங்டன் டி.சி. இன் தேசிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட புஷ்ஷின் நினைவாஞ்சலி நிகழ்வில் ட்ரம்பும் மற்றும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும், அத்துடன் நூற்றுக் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும், பெடரல் அதிகாரிகளும், நீதிபதிகள், தளபதிகள் மற்றும் பெருநிறுவன முதலாளிகளும் கலந்து கொண்டனர். அந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சுய-பச்சாதாப கருத்துக்களில் உச்சத்தை அடைந்து, அவரது தந்தை மற்றும் இப்போது அவரது மனைவி பார்பரா மற்றும் 60 க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்னர் லுக்கேமியா நோயால் (leukemia) இறந்த அவரது மழலை மகள் ரோபினுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டார் என்ற தவிர்க்கவியலாத முடிவோடு, சோகத்தில் மூழ்கிய ஒரு நிகழ்வாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக, ஐ.நா. சபை தூதராக, குடியரசு கட்சியின் தேசிய குழு தலைவராக, சிஐஏ இயக்குனராக மற்றும் துணை ஜனாதிபதியாக முன்னர் இருந்திருந்த ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கான நினைவாஞ்சலி குறிப்பிடத்தக்க விதத்தில் அரசியலற்றதாக இருந்தது. ஆகஸ்டில் செனட்டர் மெக்கெயினின் நினைவாஞ்சலி நிகழ்வில் மெகன் மெக்கெயின் பேசிய ட்ரம்ப்-விரோத கருத்துக்கள் போன்ற எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காக, “பதவியிலிருக்கும் ஜனாதிபதி உட்பட யாரும் அசௌகரியத்தை உணர்வது [தங்களுக்கு] விருப்பமில்லை" என்று புஷ் குடும்பம் வெள்ளை மாளிகைக்கு வலியுறுத்தி இருந்ததாக திங்களன்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. இவ்விதத்தில் நம்பிக்கை மீட்டளிக்கப்பட்டு, ஒபாமாக்கள், கிளிண்டன்கள், காட்டர்கள் மற்றும் புஷ்களுடன் சேர்ந்து, தேவாலயத்தின் முதல் வரிசையில் ட்ரம்ப் அமர்ந்திருந்தார்.

ஆதீத பயனற்ற விரிவாக்கப்பட்ட பல சம்பிரதாயங்கள் மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் பிரமுகர்களின் பாசாங்குத்தனமான முகஸ்துதிகளின் ஒரு வடிவத்தையே புஷ் இறுதிச்சடங்கும் தொடர்கிறது, இதில் அவர்களின் வாழ்க்கை மற்றும் தனிமனித இயல்பு குறித்த புகழுரைகளுக்கும், பதவியிலிருந்த போது அவர்களின் நடவடிக்கைகளோ அல்லது மக்களுக்காக அவர்கள் ஏற்றிருந்த நிலைப்பாட்டிற்கோ எந்த சம்பந்தமும் இல்லை. இது 1994 இல் ரிச்சார்ட் நிக்சனின் இறுதிச்சடங்கில் இருந்து தொடங்கி, ரோனால்ட் ரீகன் (2004) மற்றும் ஜெரால்ட் ஃபோர்ட் (2006) ஆகியோருக்கும் தொடர்ந்தது, இந்தாண்டின் தொடக்கத்தில் மீண்டும் ஜோன் மெக்கெயினுக்காக மீண்டும் மேற்கொள்ளப்பட்டு, இப்போது ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் க்கும் தொடர்கிறது. இதுபோன்ற மரியாதை வெறும் அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. NBC இன் "Meet the Press” நிகழ்ச்சியின் நெறியாளர், இப்போதிருந்து நீண்டகாலத்திற்கு முன்னரே நினைவிலிருந்து மறைந்து போன, டிம் ரூஸ்செர்டுக்கும் பத்தாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது.

இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்தளவில் பிரபுத்துவ சூழலைப் பிரதிபலிக்கின்றன என்பதோடு, இதில் இறந்து போனவர்களுக்கான இறுதி அஞ்சலி சம்பிரதாயங்கள் ஒரு ஜனநாயக குடியரசின் முன்னாள் அரசு தலைவருக்குரியவை என்பதை விட அதிகமாக ஒரு முடியாட்சியாளருக்குப் பொருந்திய மத மற்றும் அரசு மரியாதையின் கலவையாக இருக்கின்றன.

அரசியல் நடைமுறை மரபானது, அதன் அடியில் அமைந்துள்ள சமூக கட்டமைப்புக்கு இணங்கிய விதத்தில் கொண்டு வரப்பட்டு வருகிறது என்பதையே மிகவும் அடிப்படை மட்டத்தில் இது அர்த்தப்படுத்துகிறது.

1776 அமெரிக்க உள்நாட்டு போரைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை, லிங்கன் அறிவித்ததைப் போல, “மக்களின் அரசு, மக்களால் நடத்தப்படும் அரசு, மக்களுக்கான அரசை புவியிலிருந்து அழிக்கவே முடியாதவாறு" உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்பட்டிருந்தாலும், இன்றைய அமெரிக்கா, 1776 அமெரிக்காவை விட பெரிதும் ஜாரிச ரஷ்யாவுக்கு ஒத்த விதத்தில் அல்லது பூர்போன்களின் பிரான்சுக்கு ஒத்த விதத்தில் மிகப்பெரும் செல்வந்தர்களின் ஒரு சிறிய பிரபுத்துவம் பெருந்திரளான மக்கள் மீது கோலோச்சுகிறது — அல்லது, அவர்கள் கூற விரும்புவதைப் போல, “மக்களுக்காக சேவையாற்றுகிறது.”

செல்வந்த அடுக்கின் ஆட்சியினது உண்மையான பொருளாதார உறவுகளுக்கும் எஞ்சியுள்ள ஜனநாயக அரசியல் பொறிமுறைகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடு தான், கடந்த ஐந்து நாட்களின் இடைவிடாத பாசாங்குத்தனம் மற்றும் சிடுமூஞ்சித்தனங்களுக்கான புறநிலை அடித்தளமாகும்.

அமெரிக்கா பொய்களின் பெருநிலமாகி உள்ளது. அதன் ஆளும் உயரடுக்குகள் அமெரிக்க மக்களுக்கும், உலகிற்கும், மிகவும் பரிதாபகரமாக அனைவருக்கும், அவர்களுக்கே கூட பொய்யுரைக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சியானது, ஒருகாலத்தில் ஜோர்ஜ் வாஷிங்டன் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் வீற்றிருந்த பதவியில் ஓர் அரசியல் கோமாளியும் பாசிசவாத ஆத்திரமூட்டல்காரருமான டொனால்ட் ட்ரம்பை நிறுத்தி உள்ள தற்போதைய அரசியல் சூழல் ஒருபுறம் இருக்கட்டும், ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் மரணத்தால் வெள்ளமென கட்டவிழ்த்து விடப்பட்ட கருத்துரைகளில், ஏறத்தாழ முழுமையாக, அவர் வாழ்க்கை குறித்தோ, அவரின் ஜனாதிபதி பதவிகாலம், அல்லது அவர் மகனின் ஜனாதிபதி பதவிகாலம் குறித்தோ பேசப்பட்டதில் ஒரேயொரு நேர்மையான வார்த்தையைக் கூட காண்பது சாத்தியமில்லை.

ஊடக செய்திகளில் உள்நோக்கம் உள்ளது, அத்துடன் கிளிண்டன் மற்றும் ஒபாமா போன்ற அரசியல் பிரமுகர்களின் பேச்சுக்கள், ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் கண்ணியம் மற்றும் மேன்மை என்று கூறப்படுவதுடன் ட்ரம்பின் கொடூரத்தனமும் வக்கிரமும் எதிர்முரணாக இருப்பதாக கூற நோக்கம் கொண்டிருந்தன. இது பெரிதும் விருப்பத்திற்குரிய சிந்தனையாக உள்ளது, ஏனென்றால் அங்கே டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கக்கூட எதுவும் மூத்த புஷ்ஷின் நிர்வாகத்திலோ, அவர் மகனின் நிர்வாகத்திலுமே கூட, குறைவாகவே உள்ளது.

மொத்தத்தில், மூத்த புஷ் பனாமா மீது படையெடுக்கவும் மற்றும் ஈராக்கில் கட்டாய இராணுவச் சேவை துருப்புகளைக் கொண்டு பாரிய படுகொலைகளை நடத்தவுமே வெள்ளை மாளிகையில் அவர் பதவியைப் பயன்படுத்தினார், அது வாஷிங்டனின் பொருளாதார வீழ்ச்சியை அதன் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி சமப்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமான முடிவில்லா போரைக் கொண்டு வந்தது. களவாடப்பட்ட தேர்தல் மூலமாக பதவிக்கு வந்த அவர் மகன், ஆப்கானிஸ்தானில் ஒரு தூண்டுதலற்ற போரைத் தொடங்கவும், பொய்களின் அடிப்படையில் ஈராக் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கவும் முன்நகர்ந்தார், இந்த போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதே மோசடியான “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பாகமாக, அவர் காலவரையற்ற தடுப்புக்காவல், பெருந்திரளான மக்கள் மீதான கண்காணிப்பு, சித்திரவதையைக் கொண்டு வந்தார், இக்கொள்கைகள் ஒபாமாவால் கைவிடப்படவில்லை என்பதோடு விரிவாக்கப்பட்டு தொடரப்பட்டது.

ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் மற்றும் ட்ரம்புக்கு இடையே பரந்த வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது, தன்னைத்தானே சுயமாக ஏமாற்றிக் கொள்ளும் ஒரு நடைமுறையாகும். சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய "ஒருமுனை தருணம்", “புதிய உலக ஒழுங்கு," “வரலாறு முடிந்து விட்டது" என்ற பிரமைகளில் இருந்து, சீனா போன்ற புதிய போட்டியாளர்களின் சவால்களையும் மற்றும் ஜேர்மனி போன்று கூட்டாளிகளே சாத்தியமான அச்சுறுத்தல்களாக மாறி வருகின்ற சவால்களையும் முகங்கொடுத்து உலக மேலாதிக்க சக்தி என்பதிலிருந்து வீழ்ச்சி அடைந்து வரும் அமெரிக்காவின் கடுமையான யதார்த்தம் வரையில், உலக அந்தஸ்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் கடுமையான வீழ்ச்சியைக் குறித்து தான் முதலாளித்துவம் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷில் இருந்து ட்ரம்ப் வரையிலான மாற்றத்தில் துயரம் கொள்கிறது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கினது வீழ்ச்சியின் நிஜமான அளவீடு புஷ்ஷில் இருந்து ட்ரம்ப் வரையிலான மாற்றத்தில் இல்லை, மாறாக அமெரிக்க புரட்சிக்குப் பிந்தைய முதல் தசாப்தங்களில் இருந்த அறிவார்ந்த குடும்ப பரம்பரைக்கும்—ஜனாதிபதி ஜோன் ஆதம்ஸ்; அவர் மகன் ஜோன் குவின்ஸி ஆதம்ஸ், இவரும் ஜனாதிபதி தான்; அவர் பேரன் மற்றும் லிங்கனின் கீழ் தூதராக இருந்த சார்லஸ் பிரான்சிஸ் ஆதம்ஸ்; நாவலாசிரியர், வரலாற்றாளர் மற்றும் கட்டுரையாளருமான கொள்ளு-பேரன் ஹென்றி ஆதம்ஸ் ஆகியோருக்கும்—பயங்கரமான புஷ் பரம்பரைக்கும் இடையிலான முரண்பாட்டில் தங்கியுள்ளது. ஆதம்ஸ் வம்சம் அமெரிக்க ஜனநாயகத்தின் எழுச்சியின் விளைபொருளாக இருந்தது, அதேவேளையில் புஷ்ஷின் வம்சம் அதன் முழு ஊழல் மற்றும் சீரழிவுக்கு ஆளுருவாக இருந்தது.

ஆனால் அங்கே மற்றொரு அமெரிக்காவும் உள்ளது, அது பாரிய பெரும்பான்மை மக்களான தொழிலாள வர்க்கத்தினது. ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் நினைவாஞ்சலிக்கான தேசிய விடுமுறை தினமானது, உழைக்கும் மக்களுக்கு அஞ்சல் வினியோகிக்கப்படாமல், தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூடியதை மட்டுமே தாக்கமாக கொண்டிருந்தது. புஷ் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்காவில் பிறந்த அல்லது அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த மக்களில் பாதி பேர், அவரை யார் என்று நினைவுகூர்ந்தால், அவர் மரணம் குறித்து அவர்கள் சிறிதும் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது.

ஜனாதிபதி புஷ்ஷின் மரணம் அமெரிக்க மக்களிடையே சிறியளவிலும் கூட மனப்பூர்வமான நினைவாஞ்சலியை தூண்டவில்லை. தொலைக்காட்சிகளில் புஷ்ஷைப் போல பேசும் டானா கார்வே இறந்தபோது கூட அங்கே அதிக கண்ணீர் இருந்திருக்கும், அவர்கள் அதிகளவில் நிஜமான கண்ணீர் சிந்திருப்பார்கள். புதனன்று தேசிய தேவாலயத்தில் கூடியிருந்த கூட்டத்தைப் பொறுத்த வரையில், அவர்கள் துயரத்தில் மூழ்கி இருந்தார்கள் என்றால், அது முற்றிலும் சாதாரண பிரமுகரான ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷூக்காக இல்லை. அவர்களின் கண்ணீர், அவர்களின் சொந்த செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளுக்கு ஆதாரமாக அவர்கள் பாதுகாத்து வந்துள்ள அமைப்புமுறையானது, அதிகரித்தளவில் அடிமட்டத்திலிருந்து ஓர் இயக்கம் அபிவிருத்தி அடைந்து வருவதால் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதற்காக இருந்திருக்கும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் கூடுதல் கட்டுரை:

Media, political establishment laud George H. W. Bush
[3 December 2018]