ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China’s economic slowdown: The political issues confronting the working class

சீனப்பொருளாதார மந்தம் : தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள்

Nick Beams
15 December 2018

சீனப் பொருளாதாரத்தில் மந்தத்தைக் குறித்துக் காட்டுகின்ற, நேற்று வெளியிடப்பட்ட விவரங்கள், பெய்ஜிங்கிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடுக்கப்பட்ட ஈவிரக்கமற்ற மற்றும் அபாயகரமான பொருளாதாரப் போரிலிருந்து அமெரிக்கா, சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கின்ற பெரும் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

சீன அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தரவுகளின்படி, நவம்பரில் சில்லறை விற்பனையானது 15 ஆண்டுகளில் மந்த வேகத்திலேயே வளர்ந்துள்ளது, அதேவேளை தொழில்துறை உற்பத்தியானது கிட்டத்திட்ட மூன்று ஆண்டுகளிலும் பார்க்க மிகக் குறைந்த மட்டத்திலேயே உயர்ந்துள்ளது. சில்லறைச் செலவினத்தின் முக்கிய பகுதியான சீன வாகன சந்தையானது, 1990களுக்குப் பின்னரான அதன் முதலாம் ஆண்டுவிற்பனைச் சரிவில் போய்க்கொண்டு இருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக யுத்த நடவடிக்கைகளின் பாதிப்புக்கள், இப்பொழுது பொருளாதாரப் புள்ளிவிவரங்களில் மட்டும் காட்டத் தொடங்கி இருப்பது, 2008-2009-ன் உலக நிதிய நெருக்கடிக்குப் பின்னர் இந்த ஆண்டு அதன் மிகக்குறைந்த மட்டத்தைத் தொட்ட பின்னர், வரும் மாதங்களில் வளர்ச்சி வீதங்கள் மேலும் வீழ்ச்சியடைய இருப்பதை அர்த்தப்படுத்துகிறது.

சீனப் பொருளாதார மந்தமானது உலக நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பாகமாகும். 2017ல் உயர்வுக்குப் பின்னரான, ஐரோப்பாவில் வளர்ச்சியானது, நான்கு ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த புள்ளிக்கு வீழ்ந்திருக்கிறது மற்றும் ஜப்பான் மூன்றாவது காலாண்டில் சுருக்கத்தை அனுபவித்திருக்கிறது. பத்தாண்டுக்கு முன்னர், நிதிய நெருக்கடியால்  உருவாக்கப்பட்ட ஆழமான பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின்னர், உலகப் பொருளாதாரம் இறுதியில் “வெற்றி காண ஆரம்பித்துவிட்டது” என்ற மோசடிக் கூற்றை அம்பலப்படுத்தியுள்ளது.

சீனப் பொருளாதார மந்தம் பற்றிய செய்திகளுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பதிலானது,  உலகப் பொருளாதாரமானது 1930களின் மாபெரும் உலகப் பொருளாதார மந்தநிலையை ஆழப்படுத்திய மற்றும் இரண்டாவது உலகப் போருக்கான நிலைமைகளை உண்டுபண்ணிய 1930களின் துன்பகரமான தசாப்தத்தை நினைவூட்டும் வகையில்  சென்று கொண்டிருக்கிறது.

அவர்களுடனான எமது வர்த்தகப் போரின் காரணமாக “தங்களது பொருளாதாரம் தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மிக மெதுவாக வளர்கிறது என்று சீனா இப்போது அறிவித்துள்ளது“ என்று அவரது டுவிட்டுரையில் ட்ரம்ப் எழுதினார். “அமெரிக்கா நன்றாகச் செயற்படுகிறது. சீனா ஒரு பெரிய மற்றும் விரிவான பேரத்தைச் செய்ய விரும்புகிறது. அது விரைவிலேயே நடக்கும்!”

ட்ரம்ப் நிர்வாகத்தின் “அமெரிக்கா முதலில்” என்ற முன்னோக்கின் நிலைப்பாட்டிலிருந்து, உலகப் பொருளாதாரம் ஒரு வகைப் பூச்சிய தொகை விளையாட்டாக இருக்கிறது, அதில் அதன் போட்டியாளர்கள் இழப்பை ஏற்பது அமெரிக்கா இலாபத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் இந்த பிறபோக்குக் கருத்தானது பொருளாதார உண்மைகளால் முரண்படுகிறது. உலகப் பொருளாதாரமானது வரிசையான தனித்தனித் தேசிய பகுதிகளின் ஒரு கூட்டு அல்ல, அதில் ஒரு பகுதியின் இலாபமானது இன்னொன்றின் இழப்பால் ஏற்படுகிறது, ஆனால் என்றுமிராத அளவில் ஒட்டுமொத்தமும் நெருக்கமாகப் ஒருங்கிணைந்துள்ள நிலையில், பில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் உழைப்பும் பொருளாதார தலைவிதியும் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளன.

பிற்போக்குப் பொருளாதார தேசியவாதம் எனும் புகழாரங்கள் 1930களில் ஒரு பேரழிவை ஏற்படுத்தின. இப்பொழுது அவை இன்னும் பெரிய நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்குகின்றன, ஏனெனில் எட்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையைக்காட்டிலும் பொருளாதார ஒருங்கிணைப்பானது அதிவேகமாக அதிகரித்துள்ளது.

ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது அவரால் முன்னெடுக்கப்பட்ட கருத்து,  மற்றும் அதையடுத்து அமெரிக்கப் பொருளாதாரம் எப்படியோ உலகப் பொருளாதாரத்திலிருந்து துண்டிக்கப்பட்டுவிடும் மற்றும் அதன் போட்டியாளர்களின் இழப்பில் “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாகச் செய்தல்” மூலம் அமெரிக்கத் தொழிலாளர்கள் ஆதாயமடையக்கூடும் என்பது நிகழ்வுகளால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாகன தொழிற்துறையில் பரந்த கதவடைப்புக்கள் பற்றிய அறிவிப்புக்கள் மற்றும் நிறைய வர இருக்கும் அச்சுறுத்தல்கள் இந்த பொருளாதார உண்மையின் ஒரு அறிகுறியாகும். இன்னொன்று உலகப் பொருளாதார மந்தம் மற்றும் வர்த்தக யுத்தம் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட  நிதியச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகும். சீனாவிலிருந்து வந்த பொருளாதாரச் செய்தியில் நேற்று டோவ் 500 புள்ளிகள் வீழ்ந்ததானது — 2008 ஐவிடவும் பெரிய நெருக்கடியைத் தொடங்கிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

“மஞ்சள் சீருடை இயக்கத்தில்” பிரதிபலித்திருக்கும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியால் உலுப்பப்பட்டிருக்கும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மற்றும் பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், அவர்களின் பொது உலகப் எதிரியாக — முதலாளித்துவ அமைப்பை எதிர்கொள்ளும் உண்மையை நேருக்குநேர் கொண்டு வந்துள்ளது.

அதேபோல, ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி சீனத் தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் முன்னோக்கு பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றது.

40 ஆண்டுகளுக்கும் முன்னால், சீன மாவோயிச-ஸ்ராலினிசத் தலைமையானது, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற அதன் தேசியவாத வறட்டுக் கோட்பாட்டால் உண்டு பண்ணப்பட்ட பொருளாதார முட்டுச்சந்தை எதிர்கொண்டு, சமூகத்தை பொருளாதார ரீதியாக ஒழுங்கமைக்க, முதலாளித்துவ சந்தையை நோக்கித் திரும்பும் திருப்பத்தை எடுத்தது.

வாய்ப்புவளம் முதலாளித்துவ மீட்சியில் வைக்கப்பட்டுள்ளது என்பது —1989ல் தொழிலாள வர்க்கத்தின் மீது இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறை மூலம் நிறைவேற்றப்பட்டது— சீனாவை “அமைதியான முறையில் எழுவதை” அனுபவிக்க அனுமதிக்கும் மற்றும் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் என்பதாக இருந்தது.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக சந்தேகத்திற்கிடமில்லாத பொருளாதார வளர்ச்சி மற்றும் சீனா உலக முன்னணி உற்பத்தித் தொழில்துறை மையமாக மாறி இருப்பது சீன மக்கள் எதிர்கொண்ட மாபெரும் வரலாற்றுப் பிரச்சனையைத் தாண்டிவர முடியாதிருக்கிறது. மாறாக, அவை இந்தப் பிரச்சினைகளை புதியதும், மிகவும் வெடிப்புமிக்க வடிவங்களுக்கும் கூட உயர்த்தியுள்ளன.

சீனத் தொழிலாளர்களின் தலைவிதி உலகப் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதும் சர்வதேச ரீதியாக தொழிலாளர்களுடன் அவர்களுக்கு உள்ள உறவும், பத்தாண்டுகளுக்கு முன்னர் சீனப் பொருளாதாரம் சரிந்தபொழுது 23 மில்லியனுக்கும் மேலான தொழிலாளர்கள் உண்மையில் ஒரே நாளிரவு தங்களின் வேலைகளை இழந்ததைக் கோடிட்டுக்காட்டுகிறது.

பொருளாதார வளர்ச்சியை நீடித்திருக்க வைக்கவும் அதன் ஆட்சியைப் பராமரிக்கவும்  ஆட்சியானது, பரந்த அரசாங்க முதலீட்டு வேலைத் திட்டத்துடன் மற்றும் உலகப் பொருளாதார வரலாற்றிலேயே கடன் வழங்கும் மிகப் பெரிய விரிவாக்கத்துடன் பதிலிறுத்தது.

ஆனால் பரந்த அளவில் வீடு கட்டும் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வழிவகுத்த இந்த வேலைத்திட்டமானது, உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான விகிதாசரா அளவில் கடன் அதிகரிப்பு வீதம் 143 சதவீதத்திலிருந்து 260 சதவீதமாக அதிகரித்ததைப் பார்த்திருக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தை தொடர்வது விரைவாக ஒரு நிதிய பேரழிவுக்கும் பரந்த சமூகப் போராட்டங்களுக்கும் இட்டுச்செல்லும் என்ற உண்மையை எதிர்கொள்கையில்,  சீன ஆட்சியானது, ஜனாதிபதி Xi Jinping தலைமையில் நாட்டின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னெடுப்பதன் ஊடாக – ‘சீன தயாரிப்பு 2025’ வேலைத்திட்டத்திற்கான அடிப்படை மூலம் ஒரு புதிய அடித்தளத்தை வழங்க முயன்றது.

ஆயினும் இந்த வேலைத்திட்டம், அமெரிக்காவுடன் ஒரு கண்மூடித்தனமான  மோதலுக்கு போயிருக்கிறது, அது சீனாவை தனது பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்க இருப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக கருதி, சீனாவின் பொருளாதார எழுச்சியையும் முக்கிய துறைகளில் அதன் அபிவிருத்தியையும் தடுப்பதில் தீர்மானகரமாக இருக்கிறது.

அந்த வாய்ப்பு வளத்தை, தேவைப்பட்டால் எல்லா வழிகளாலும் முறியடிக்க வாஷிங்டன் தீர்மானகரமாக இருக்கிறது. ட்ரம்ப்பின் மிக அண்மைய டுவிட்டுரையில் சுட்டிக்காட்டியவாறு, சீனப் பொருளாதாரத்தை நசுக்குவது உட்பட, மற்றும்  தேவைப்பட்டால் இராணுவ வழிமுறைகளால்கூட மோதுவதற்கு தீர்மானகரமாக இருப்பது போருக்காக அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை ஸ்தாகபக அமைப்புக்களில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் ஆழமான தயாரிப்புக்களில்  பிரிதிபலிக்கிறது. அது ஏற்றுக்கொள்ளும் ஒரே கொள்கை, சீனாவை அமெரிக்காவின் ஒரு பொருளாதார அரைக்காலனியாக மாற்றுவது மட்டுந்தான்.

ஆனால் இந்த ஏகாதிபத்திய வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பானது, Xi Jinping ஆல் தலைமை வகிக்கப்படும் பில்லியனர் முதலாளித்துவ செல்வந்தர்களது பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ சூழ்ச்சிக்கையாளலுக்கான இன்னொரு தேசியவாத திருப்பம் அல்லது ஆதரவை அடிப்படையாக கொண்டிருக்க முடியாது. வர்க்கப் போராட்டத்தின் தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு புதிய, சுயாதீனமான அரசியல் முன்னோக்கு கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அங்கே சீனத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியின் வளர்ந்துவரும் அறிகுறிகள்  காணப்படுகின்றன. அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் அவர்களது சகாக்கள் எதிர்கொள்ளும் பரந்த ஆலைமூடல்கள் மற்றும் சமூக நிலைமைகளில் ஆழமடைந்து வரும் தாக்குதல்களை சீனத் தொழிலாளர்கள் எதிர்கொள்கையில், இந்தப் போராட்டங்கள் எதிர்வரும் காலத்தில் நிச்சயமாய் மிகவும் வெளிப்படையான வடிவங்களை எடுக்க இருக்கின்றன.

அமெரிக்கா மற்றும் உள்ள பிரதான முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் பொருளாதார தேசியவாத வேலைத்திட்டம் என்பது ஒரு பிற்போக்கு முட்டுச்சந்தாக இருப்பதைப்போல, அது பல மில்லியன் சீனத் தொழிலாள வர்க்கத்திற்கும் அந்தவிதத்தில் குறைவானதொன்றுமில்லை.

இப்பொழுது கட்டவிழ்ந்து வரும் நிகழ்வுகளில் நாள்தோறும் நிரூபணமாவதைப் போல், வாழ்வின் இந்தப் பொருளாதார மற்றும் அரசியல் உண்மையை அங்கீகரிப்பது என்பது, முதலாளித்துவ இலாபநோக்கு தேசிய அரசு அமைப்பு முறைக்குள்ளே முன்னெடுப்பதற்கு வேறு வழி இல்லை என்பதை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட, ஒரு புதிய அரசியல் முன்னோக்கை முன்னெடுப்பதற்கான தொடக்கப் புள்ளியாக கட்டாயம் ஆக வேண்டும்.

அமெரிக்கா, சீனா மற்றும் சர்வதேச ரீதியாக உள்ள தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே சாத்தியமுள்ள வேலைத்திட்டம் எதுவென்றால், சோசலிச சர்வதேசியம் — போர் மற்றும் பொருளாதாரச் சீரழிவின் ஊற்றுமூலமான, காலாவதியாகிப் போன தேசிய அரசு அமைப்பு முறையை முடிவுக்குக் கொண்டு வரும் தொழிலாள வர்க்கத்தால் ஆன ஒரு பொதுப்போராட்டமும் அதற்குத் தலைமைதாங்க சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவதுமாகும்.