ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Slanders depicting “Yellow Vest” protesters as violent neo-fascists collapse

“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களை வன்முறையான நவ-பாசிசவாதிகளாக சித்தரிக்கும் அவதூறுகள் தோல்வியடைகின்றன

By our reporter
28 November 2018

பாரீஸில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் சாம்ப்ஸ்-எலிசே வீதியின் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசியல் வசை மழையைக் கட்டவிழ்த்துள்ளன. அமைச்சர்களும், பொலிஸ் மற்றும் ஊடகங்களும் மஞ்சள் சீருடையாளர்களில் போராடிய தொழிலாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை "அதிதீவிர-இடது" அல்லது நவ-நாஜிக்கள் என்று குற்றஞ்சாட்டுவதில் ஒருவரை விஞ்ச ஒருவர் போட்டியிடுகின்றனர்.

பொது கணக்குத்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன், “ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மஞ்சள் சீருடையாளர்கள் இல்லை, மாறாக பழுப்புநிறக் கிருமிகள் [அதிவலது],” என்று அறிவித்து, உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னரை எதிரொலித்தார். இரண்டாவது குறிப்பிடப்பட்டவர் போராட்டக்காரர்களை "அரசுக்கு எதிராக தூண்டிவிடுபவர்கள்" என்று அழைத்ததுடன், அவர்கள் நவ-பாசிசவாத தலைவர் "[தேசிய பேரணி தலைவர்] மரீன் லு பென் விடுத்த அழைப்புக்கு விடையிறுத்ததாக" தெரிவித்திருந்தார். மரீன் லு பென் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் போராடியதும் கிடையாது அல்லது அவர் வன்முறைக்கு அழைப்புவிடுக்கவும் இல்லை.

பொலிஸ் உயரதிகாரிகள் "வன்முறையான அதிதீவிர-வலது மற்றும் அதிதீவிர-இடது வலையமைப்புகளின்" அச்சுறுத்தலை மேற்கோளிட்டு அவர் படைகளின் காட்டுமிராண்டித்தனத்தைப் பாதுகாத்தார். “சாம்ப்ஸ் எலிசே வீதியைச் சூறையாடிய இந்த போலி 'மஞ்சள் சீருடையாளர்கள்', ஒருங்கிணைந்த அதிதீவிர-வலது மற்றும் அதிதீவிர-இடது" என்று Marianne குற்றஞ்சாட்டிய அதேவேளையில், BFM-TV இன் Ruth Elkrief போராட்டக்காரர்கள் மீது "அதிதீவிர வலது மற்றும் அதிதீவிர இடதின் ... பல கட்சிகள் செல்வாக்கு" செலுத்துவது குறித்து கவலை வெளியிட்டார்.

பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகள், "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களை அபாயகரமான நவ-பாசிசவாதிகள் என்று சித்தரிப்பதற்காக டார்மனன் கூறியதைப் போன்ற அதே அவதூறுகளைப் பரப்பின. நடுத்தர வர்க்க புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிக்கு நெருக்கமான Mediapart, “வலதுசாரி ஆர்ப்பாட்டங்களை" ஒழுங்கமைத்ததற்காக அல்லது "சிறிது பழுப்பு" நிறத்தில் இருப்பதாகவும் கூட அவர்களைத் தாக்கியது.

சனிக்கிழமை பொலிஸ், போராட்டக்காரர்களில் மிகவும் அபாயகரமானவர்கள் என்று கூறி பெருந்திரளான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிகாரிகள் பாரீசின் பாதுகாப்பு கேமராக்களில் இருந்து எடுத்த காணொளி காட்சிகளையும், நகரத்திற்கு மேலே மிகுதியாக சுற்றிக் கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் வழங்கிய தரவுகளையும் வெட்டி ஒட்டி புனைந்துரைத்தனர். இந்த வாரயிறுதியில், 101 நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாயஜால உலகில், அமைச்சர்களும் பத்திரிகையாளர்களும், சனிக்கிழமை தலைநகரில் தாக்குதல் நடத்தியவர்களான, இரத்தத் தாகமெடுத்து அலறிக் கொண்டிருக்கும் இனப்படுகொலை யூத-எதிர்ப்புவாதிகள் மற்றும் அராஜகவாதிகளின் கும்பலினது கருமையத்தைத் தனிமைப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது என ஊக்குவித்தனர்.

பொலிஸ் என்ன கண்டறிந்தது? சுருக்கமாக கூறுவதானால், ஒன்றும் கண்டறியவில்லை. காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில், அதிக பெரும்பான்மையினர், சமூக சமத்துவமின்மை மற்றும் இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வந்த தொழிலாளர்கள், “மஞ்சள் சீருடை" போராட்டக்காரரின் வழக்கமான கருத்துக்களோடு பொருந்தியிருந்தனர்.

Le Figaro நேற்று பின்வருமாறு ஒப்புக் கொண்டது: “மஞ்சள் சீருடையாளர்களது கிளர்ச்சியின் போது பாரீசில் இவ்வாரயிறுதியில் கைது செய்யப்பட்டவர்களில் எவர் மீதும், அதிதீவிர-வலது என்றோ அல்லது அதிதீவிர-இடது என்றோ, எந்த குற்றச்சாட்டும் இல்லை. ... எண்ணற்ற அறிகுறிகளும் கோஷங்களும் அதிதீவிர-இடது, குறிப்பாக அராஜகவாத முத்திரைகளைக் காட்டும் அடையாளங்கள் வீதியெங்கிலும் விடப்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் ஒருவர் ஆதாரத்தைப் பார்க்க வேண்டும்: பெரும்பான்மையினர் ... உண்மையில் கோபமுற்றிருந்த சாதாரண மக்கள் கூட்டு நடவடிக்கையின் பெயரில் தைரியமாக கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள், சமையல்காரர்கள், தச்சு வேலை செய்பவர்கள், விவசாயிகள் மற்றும் குழாய் வேலை செய்பவர்கள்.”

அவர்கள் மிகப்பெரிய அபாயத்தை முன்னிறுத்தினார்கள் எனக் கூறி அதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த "மஞ்சள் சீருடையாளர்களில்" இருந்தவர்களில்: ஒரு 25 வயதான பயிற்சி பேருந்து ஓட்டுனர், 40 வயதான சிறைக்காவலர் ஆகியோரும் இருந்தனர், இவர்கள் "பொதுச்சேவை சீரழிக்கப்படுவதற்கு எதிராக போராடுவதற்காக,” வந்திருந்தனர், தனித்து வாழும் தாயார் ஒருவரும் இருந்தார், பொலிஸ் மீது கருப்பு பெயின்ட் வீசியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

போராட்டக்காரர்களிடையே ஓர் அரசியல் தலைமை இல்லாததால், முதலாளித்துவ வர்க்க பிரிவுகள் இயக்கத்தின் தலைமையில் அதிவலதை நிறுத்த முயல்வதன் மூலமாக விடையிறுக்கும் அபாயம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் போராட்டக்காரர்களின் அதிக பெரும்பான்மையினரை இயக்கமூட்டி வரும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான பாதுகாப்புணர்வு மற்றும் சமத்துவத்திற்கான உணர்வுடன் இந்த தலைமைக்கு எந்த பொதுவான சம்பந்தமும் இல்லை.

அமைச்சர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக கட்டவிழ்த்து விட்ட வார்த்தை வசைமழை, சமத்துவத்தின் மீதான மற்றும் பணக்காரர்களின் ஜனாதிபதியான மக்ரோனுக்கு எதிரான ஆழ்ந்த சமூக கோபத்தின் ஓர் இயக்கத்தை நோக்கி ஆளும் வட்டாரங்களின் பதட்டத்தைப் பிரதிபலிக்கிறது.

இதற்கிடையே, ஊடகங்களோ, தொழிலாளர்களிடையே மிகவும் இரத்த தாகமெடுத்த எதிர்புரட்சிகர சக்திகள் பலமடைந்து வருவதாக வதந்திகளைப் பரப்பி, மக்களின் அச்சங்களை அதிகரிக்கத் தொடர்ந்து புதிய புதிய காரணங்களைக் கண்டறிகின்றன. பிரெஞ்சு முடியாட்சி கொடி fleur-de-lys தன்னை பிரிட்டனி தேசியவாத கொடியின் fleur-de-lys இன் பின்னால் மறைந்திருக்கிறதா, என்ன? தீவிர-முடியாட்சியாளர் Action Française க்கு நெருக்கமான நவ-பாசிசவாத தலைவர், மரிஷால்-லு பென் சாம்ப்ஸ்-எலிசே வீதிக்கு சென்றாரா? யாருடன் சென்றார்?

இந்த விடயம் மீது எந்த உறுதியான தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மரிஷால் லு பென் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் குறித்து அதைரியப்படுத்தும் ஒரு கருத்தை வழங்கினார், அது நலன்களைக் கொண்டிருக்காமல் இல்லை. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு சாம்ப்ஸ்-எலிசே வீதிக்கு வந்த அவர், அச் சாலையை அபாயகரமான கம்யூனிஸ்டுகள் ஆக்கிரமித்திருப்பதாக கூறி முடித்தார்: “இந்த இயக்கம் முற்றிலுமாக தீவிர இடது போராளிகளால் உள்ளீர்க்கப்பட்டது. 'முதலாளித்துவம் சாகட்டும்' என்ற வார்த்தைகளை ஒருவர் கேட்டிருக்கலாம், அது அதிவலதாக இருந்திருந்தால், பின் விடயங்கள் உண்மையிலேயே மாறியிருக்கும்,” என்றார்.