ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German workers express solidarity with “yellow vest” protests in France

ஜேர்மன் தொழிலாளர்கள் பிரான்சில் உள்ள “மஞ்சள் சீருடை” எதிர்ப்புக்களுடன் ஐக்கியத்தை வெளிப்படுத்துகின்றனர்

By our reporters
10 December 2018

ஜேர்மன் தொழிலாளர்கள், பிரான்சில் நடைபெறும் “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களின் பரந்த எதிர்ப்புக்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியில் உள்ள பல தொழிலாளர்கள் தாங்களும் கூட செல்வந்தர்களுக்கு ஆதரவான கொள்கைகளுடன் மோதுவதை உணரும் மற்றும் அதேவிதமான துன்பங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வெள்ளிக் கிழமை அன்று பல இடங்களில் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) இன் வேட்பாளர்கள் நேர்காணல் செய்தவேளையில், இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.

மேற்கு ஃபிராங்க்பேர்ட்டில் Höchst தொழிற்துறைப் பூங்காவில் சுமார் 90 நிறுவனங்கள் 20,000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலையில் அமர்த்தி உள்ளன. இங்கே பல தொழிலாளர்கள் பிரான்சில் நடைபெறும் நிகழ்வுகளைக் கணிசமான கவனத்துடன் கவனித்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வேதியியல் தொழில்நுட்பவியலராக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் எரிக், பிரான்சில் நடைபெறும் எதிர்ப்புக்களை நியாயமெனக் காண்கிறார். ஜேர்மனியில் உள்ள தொழிலாளர்கள் மஞ்சள் சீருடையினரிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு விடயத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று, 2019 ஐரோப்பியத் தேர்தல்களில் SGP சார்பில் நிற்கும் Marianne Arens இடம் அவர் கூறினார். “எல்லாவற்றையும் அவர்கள் சர்வசாதாரணமாய் பதிவிடுவதில்லை.” அவர் அவர்களின் இயக்கத்தை முகநூலில் பின்தொடர்கிறார்: ”செய்திகள் புறநிலை ரீதியானதாக இல்லை. அவை மஞ்சள் சீருடையை மோசமானதாகப் பார்க்கிறவாறு செய்ய வருகின்றன, ஏனெனில் அவர்கள் அது இங்கும் பரவுமென அச்சப்படுகின்றனர்” என்றார் அவர்.

Höchst தொழிற்துறைப் பூங்காவில் பலரும் அதிருப்தியில் இருக்க நிறையக் காரணங்கள் இருக்கின்றன: பிரெஞ்சு பன்னாட்டு மருந்து நிறுவனமான: Sanofi 300 க்கும் அதிகமான வேலைகளைத் துடைத்துக்கட்டும் நிகழ்ச்சிப்போக்கில் இருக்கிறது. பாயர் ஏஜி (Bayer AG) இல் உள்ள வேலைகள் கூட பாதுக்காப்பானதாக இல்லை. பிராங்க்ஃபேர்ட்டில் ஆராய்ச்சித் துறையை இயக்கிவரும் மற்றும் ஒரு பூச்சிக்கொல்லி உற்றபத்தி நிறுவனத்தை நடத்திவரும் பாயர் 12,000 வேலைகளைத் துடைத்துக்கட்டப் போவதாக அறிவித்துள்ளது. கடந்து செல்கின்ற ஒவ்வொருவரும் பாயரிலிருந்து யாரோ ஒருவருக்கு அறிமுகமானவராயும் எதிர்காலம் பற்றிய அவர்களது ஆர்வத்தை அறிபவராகவும் இருக்கின்றனர். மோன்சான்ட்டோவை (Monsanto) வாங்க பாயர் பில்லியன்கள் செலவழிக்க [US$66 billion] இப்பொழுது தொழிலாளர்கள் செலுத்த வேண்டி இருக்கிறது” என ஒரு வேதியியல் தொழிலாளி கூறினார்.

தொழிற்துறைப் பூங்காவில் பணியாற்றும் ஒரு தற்காலிகத் தொழிலாளி, “பிரெஞ்சுக்காரர்கள் துல்லியமாக சரியானதைத்தான் செய்கிறார்கள்” என்றார். சில வருடங்களுக்கு முன்னர், (அப்போது ஜேர்மன் வேதியியல் நிறுவனமாக இருந்த) Hoechst AG க்காக நிரந்தரப் பணியாளராக அவர் தொடங்கினார், ஆனால் Sanofi மருந்து வணிகத்தை வாங்கியபொழுது, அவர் இழப்பீட்டுப் பொதியைப் பெற்றுக்கொண்டு,  வேலையை விட்டார். Jörg விவரித்தார்: “இந்த அபிவிருத்திகள் கூட ஜேர்மனியில் விமர்சிக்கப்பட்டன, ஆனால் இறுதியில், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரெஞ்சுக்காரர்கள் வீதிக்கு வந்து எதிர்த்துப் போராடுகிறார்கள். தேவையானால், நாங்களும் சேர்ந்து எதிர்ப்போம். அது நல்லது என நான் நினைக்கிறேன். நாம் இது அனைத்தையும் வைத்திருக்க வேண்டியது இல்லை.”

எடுத்துக்காட்டாக, அரசாங்கம் பணி ஓய்வுக்கான வயதை 67 ஆக உயர்த்தி இருக்கிறது என்று Jörg சுட்டிக்காட்டினார். “தொழிலாளியாக 15 வயதில் தொடங்கி மற்றும் 40 வருடங்களாக ஷிப்டு வேலை செய்து, 67 வரைக்கும் அதனைப் பராமரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என ஒவ்வொருவரும் அறிவர். இறுதியில், அனைத்தும் ஓய்வூதிய  வெட்டுக்களுக்கு வந்து சேரும்!”  பிரான்சில்  நடைபெறும் இயக்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட Jörg, ஜேர்மன் தொழிலாளர்கள் அதற்கு தங்களின் ஐக்கியத்தையும் காட்ட வேண்டும் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும், இல்லையெனில் விடயங்கள் மாறும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது” என்று அவர் வலியுறுத்தினார்.

Berlin-Spandau வில் உள்ள BMW நிறுவனத்தில், பிரான்சில் நடைபெறும் எதிர்ப்புக்களுக்குப் பல தொழிலாளர்களும் கூட சாதகமாகவே பிரதிபலித்தனர். மஞ்சள் சீருடைக்கு பிரதிபலிப்பை கேட்டபொழுது, சில தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கட்டை விரலை உயர்த்தி முழங்கினர், “இங்கே நாங்கள் செய்ய வேண்டியது, சரியாக அதுதான்!” ஆயினும், முதலில் சில தொழிலாளர்கள், கலவரம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்ததால், எச்சரிக்கையுடன் பதில் கூறினர்.

“அதன் காரணமாகத்தான் பல ஊடக நிலையங்கள் அதனைத் தவறாகக் காட்டுகின்றன” என்று BMW நிறுவனத்தில் ஃபோர்க்லிஃப்ட் இயக்கும் பென்னி கூறினார். “அவை இந்த இயக்கம் எதற்காக நிற்கிறது என்று விவாதிக்கவில்லை. அது இனி வெறுமனே எரிபொருள் விலை பற்றியது அல்ல, மாறாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிப்பு, பற்றியது மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரானது.”

இந்தக் கேள்விகள் ஜேர்மனிக்கும் மிகப் பொருத்தம் உடையனவென அவர் தெரிவித்தார். “உண்மையில், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைநிறுத்தம் செய்யும் வரைக்கும் விடயங்கள் நகராது. பிரான்சில் உள்ள இயக்கம் ஒரு ஐரோப்பிய இயக்கமாக மாறவேண்டும்.” என்றார் அவர்.

ஒரு உணவு தொழில்நுட்ப பயிற்சியாளராக பயிற்சி முடித்திருந்தாலும், 27 வயதான அவர், வருடக்கணக்காக பல்வேறு தற்காலிக வேலைவாய்ப்பு முகவாண்மைகளில் பணியாற்றினார். பென்னி முதலில் BMW நிறுவனத்தில்  துணை ஒப்ந்ததாரருக்காக தற்காலிகப் பணியாளராகத்தான்  பணியமர்த்தப்பட்டார், பின்னர் அங்கு நேரடியாகவே ஆனால் குறைந்த கால ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்பட்டார். “இப்பொழுது அவர்கள் எனக்கு மேலும் ஒரு ஆண்டுக்குப் பணி நீட்டிப்புச் செய்துள்ளார்கள். சிறப்பாகப் பணியாற்றி குறைந்த நோய்விடுப்பே எடுத்திருந்தாலும், நான் நிலையான பணியைப் பெற முடியவில்லை” என்றார் அவர்.

அதன் விளைவாக, பென்னி தனது எதிர்காலத்தைத் திட்டமிட முடியவில்லை. அவர் அவரது பெண் நண்பியோடு மூன்றாண்டுகளாகச் சேந்திருக்கிறார் மற்றும் இப்போது இவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். “நம்மால் தாங்க முடியாத அளவுக்கு குழந்தைகள் வைத்திருப்பது என்பது இப்போது ஒரு ஆடம்பரமாக மாறிவிட்டது” என்கிறார். ஒவ்வொரு ஆண்டும் செலவு கூடிக்கொண்டே போகும் ஆனால் அவர்களின் வருமானம் கூடவேகூடாது.

பென்னி ஏற்கனவே SGP இன் தேர்தல் அறிக்கையை வாசித்திருக்கிறார் மற்றும் கட்சியானது நல்ல கொள்கைகளை வைத்திருப்பதாக நம்புகிறார்.  சமூக சமத்துவம்தான் சமூகத்தை ஒழுங்கமைப்பதற்கான கோட்பாடாக கட்டாயம் இருக்கவேண்டும் என்கிறார்.

மிக்கையிலும் கூட பிரான்சில் நடைபெறும் இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார் மற்றும் அது நீடிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளார். “நாம் ஒவ்வொருவரும் வேலை நிறுத்தத்தில், ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினால் பின்னர் சில மாறும்!” என்றார். 48 வயதான மிக்கையில் மிகப்பெரிய ஜேர்மன் பேரங்காடி சங்கிலித் தொடரான எடிக்கா (Edeka) வில் பணியாற்றுகிறார். அதிகரித்த கட்டுப்பாட்டையும் அழுத்தத்தையும் தொழிலாளர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவர் விளக்கினார். அவர்தாமே மாற்றிடத்தை அமைத்துக்கொண்டார், இப்போது நாள்தோறும் பயணத்திற்கே இரண்டு மணி நேரம் ஆகிறது. அவர் வேறிடம் மாற விரும்புகிறார், ஆனால் உயர்ந்துவரும் வாடகையால் அது அவ்வளவு எளிதல்ல. “இது மேலும் மேலும் அமெரிக்காவைப்போல் ஆகிறது. தாக்குப் பிடித்து அப்படியே வைத்துக்கொள்ள உங்களுக்கு மூன்று வேலைகள்  தேவைப்படுகின்றன.

மிக்கைலைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களோடு மோசமான அனுபவங்களைப் பெற்றிருந்ததால், தொழிற்சங்கங்களுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான மஞ்சள் சீருடையானது குறிப்பாக குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. “அவர்கள் (தொழிற் சங்கங்கள்) சும்மா பிதற்றுவார்கள், ஏதோ கொஞ்சம் செய்வார்கள், பிறகு எளிதாய் நிறுத்திவிடுவார்கள்” என்றார்.

பேர்லின் தீயணைப்புப் படையினரை மஞ்சள் சீருடை பற்றிக் கேட்டபொழுது, அதேபோன்ற அனுபவங்களைத்தான் விவரித்தனர். அவர்கள் வருடக்கணக்காக, மோசமான வேலைநிலைமைகளை எதிர்கொண்டிருப்பதால், தீயணைப்புப்படையினர் நேரடியாகவே Verdi (பிரதான ஜேர்மன் தொழிற்சங்கம்) ஐயும் பேர்லின் செனெட்டையும் (தற்போது சமூக ஜனநாயகக் கட்சியினர், இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டில் உள்ளது) எதிர்க்கின்றனர்.

பேர்லின் தீயணைப்பு படையினர் கடந்த வாரம் BerlinBrennt e.V (“பேர்லின் எரிகிறது”) என்பதில் சிறந்த வேலை நிலைமைகளுக்கு பிரச்சாரம் செய்வதற்காக இணைந்தனர். அவர்கள் அலவன்ஸ் அதிகரிப்பு, வழக்கமான போக்குவரத்து வசதி மற்றும் நெகிழ்வான பட்டியல் திட்டமிடல் இவற்றைக் கோரினர். பணியாளர்கள் 12 மணிநேர ஷிப்டாலும் குறைவான பணியாளர்களாலும் சுமையை எதிர்கொள்கின்றனர். ”1995க்குப் பினர் இருந்து அங்கு பட்ஜெட் வெட்டைத் தவிர வேறொன்றுமில்லை” என BerlinBrennt e.V தலைவர் Reinhard Hampel கூறினார். பேர்லினின் சமூகக் கட்டமைப்பு தீவிரமாய் பலவீனமாயிருக்கிறது, குறிப்பாக இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி கூட்டணியில். இன்று இருகட்சிகளும் பசுமைக் கட்சியினரின் ஆதரவுடன் இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மற்றும் ஏப்ரலில் நூற்றுக் கணக்கான தீயணைப்புப் படையினர் மக்களின் வாழ்வுக்கு ஆபத்தாக இருக்கும், மோசமான வேலைநிலைமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர், பின்னர் Verdi யும் செனெட்டும் சிறு மேம்படுத்தல்களுக்கு உடன்பட்டனர், ஆனால் அதற்கான காலக்கெடு இல்லை. உறுதி அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புக்கள் மற்றும் புதிய சாதனங்கள் வருவதாக இருந்தால் கூட, அவை கூடையில்தான் போடப்படும்.

அதனால்தான் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களிலிருந்து எதிர்ப்பை எதிர் கொள்கையில், பேர்லின் மாநகர அரங்குக்கு வெளியே மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரான்சில் உள்ள எதிர்ப்பாளர்களைப் போன்று சிலர் மஞ்சள் பாதுகாப்பு உடுப்பை அணிந்துள்ளனர்.

இது பிரெஞ்சு சம்பவங்களோடு நேரடித் தொடர்பு ஒன்றையும் கொண்டிருக்கவில்லை என்று Hampel விளக்கினார். ஆர்ப்பாட்டங்களின் பொழுது தடை செய்யப்பட்ட அலுவலர்கள் சீருடைகள் அணியக்கூடாது என்ற தடைக்குப் பதில்வினையாகவே அது இருந்தது. ஆகையால் தீயணைப்புப் படையினர் மஞ்சள் சீருடையை அணிந்தனர்.

உண்மையில், பேர்லின் தீயணைப்புப் படையினர் எதிர்ப்புக்கும் பிரான்சில் மஞ்சள் இயக்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது என, அடுத்த ஆண்டு ஐரோப்பியத் தேர்தல்களில் SGP வேட்பாளராக நிற்கும் Markus Klein விளக்கினார். Hampel உடனான கலந்துரையாடலின்போது Klein கூறினார்: “பிரான்சைப் போலவே, தொழிலாளர்கள் அரசாங்கத்திலிருந்து மட்டும் தாக்குதல்களை பெறவில்லை, தொழிற்சங்கங்களிடமிருந்தும் எதிர்கொள்கின்றனர். ஐரோப்பா முழுமையும் தொழிலாளர்கள் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றனர், எனவே பிரான்சில் நடைபெறும் இயக்கம் மிகவும் புறநிலை ரீதியாக ஒரு ஐரோப்பிய இயக்கத்தின் ஒரு வெளிப்பாடாகும்.”

ஆகையால் மையப்பிரச்சினை என்னவென்றால், கண்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஒன்றிணைப்பதாகும். இந்த முன்னோக்கிற்காகத்தான், SGP ஆனது தனது சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து பிரான்சில் போராடுகிறது மற்றும் இங்கிலாந்தில் வரவிருக்கும் ஐரோப்பியத் தேர்தல்களில் போட்டியிடுகிறது.