ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists celebrate 80 years of the Fourth International

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகளை பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்

By our correspondents 
23 November 2018

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள், நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவையும் அதன் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவையும் நினைவுகூர்வதற்கு கடந்த ஞாயிறு அன்று சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 30 தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்பப்பெண்கள் மற்றும் அறிவுஜீவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கெடுப்பதற்காக, பலர் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கான பிரச்சார இயக்கத்தின் வேளையில்,​​ ICFI ஆதரவாளர்கள், சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழில்துறை பகுதிகளிலுள்ள வாகனத் தொழிலாளர்கள் மற்றும் நகரத்திலுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடனும் கலந்துரையாடினர்.


சென்னை கூட்டத்தின் ஒரு பகுதியினர்

இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த மோசஸ் ராஜ்குமார், பிரதான பேச்சாளரான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணை செயலாளர் தீபால் ஜெயசேகராவை அன்புடன் வரவேற்றார்.

ராஜ்குமார் கூறியதாவது: "இப்படியான ஆண்டு நிறைவுகளை குறிக்கும் வகையில், அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக நான்காம் அகிலத்தின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அறுபது வருடங்களுக்கு மேலாக நடத்தி வரும் சமரசமற்ற போராட்டத்திற்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்.’

ICFI இன் இந்திய ஆதரவாளர்கள் குழுவை சேர்ந்த அருண் குமார் பேசுகையில் “பெருகிவரும் ஏகாதிபத்திய உலக யுத்த அபாயம் மற்றும் எங்குமே ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார மற்றும் பாசிச வடிவங்களை கொண்ட ஆட்சியை நோக்கி இயங்கி வருவதற்கு எதிராகவும் உலக தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த போராடும் ஒரே கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டும் தான்” என்று கூறினார்.

உலகளாவிய முதலாளித்துவத்தின் முறிவு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகள் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி அதன் பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்காக, பூகோளரீதியில் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பூகோள-அரசியல் பதட்டங்களின் சூழலில், கூட்டம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

உலகளாவிய முதலாளித்துவத்தின் முறிவு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்காக இராணுவ வலிமையை பயன்படுத்தும் முயற்சிகளில் இருந்து எழும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் பூகோளரீதியிலும் தெற்காசிய பிராந்தியத்திலும் அதிகரித்து வரும் உள்ளடக்கத்தில் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்று குமார் குறிப்பிட்டார்.

குமார் விளக்கியதாவது: "இந்த சூழ்நிலையில், இந்திய வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவின் பக்கமாக அதிகமாக சாய்ந்து வருகிறது. காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி தலைமையில் ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள், நாட்டின் இராணுவ மற்றும் மூலோபாய கூட்டுறவை அமெரிக்காவுடன் ஆழப்படுத்தியுள்ளன. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் சீனாவுக்கு எதிரான அமெரிக்கத் திட்டத்தின் முன்னணி நிலையில் இந்தியாவை நிறுத்தியள்ளது. "

ஆழமடைந்துவரும் உலக நெருக்கடியும் கூட தொழிலாள வர்க்கத்தை சமூக மற்றும் அரசியல் போராட்டங்களுக்குள் தள்ளுகிறது என்று குமார் கூறினார். சென்னையிலிருந்து 55 கிமீ தொலைவில் ஓரகடத்திலுள்ள யமஹா இந்தியா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் மியுங் ஷின் இந்தியா ஆட்டோமோட்டிப் ஆகிய ஆலைகளை சேர்ந்த சுமார் 3,000 வாகனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை குமார் மீளாய்வு செய்தார்.

ஸ்ராலினிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும், வளர்ந்து வரும் இயக்கத்தை நசுக்குவதற்கும், முதலாளித்துவக் கட்சிகளுடன் அரசியல் மோதல் வளர விடாமல் தடுப்பதற்கும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் எச்சரித்தார்.

அதையொட்டி, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) அக்டோபர் 30 அன்று "அனைத்து கட்சி கூட்டம்" நடத்தியது, அது காங்கிரஸ் உட்பட முதலாளித்துவ எதிர்க் கட்சிகளிடம் இருந்து வேலைநிறுத்தத்திற்கு அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக என்ற போலியான சாக்கில் கூட்டப்பட்டது.

“இது வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை இந்திய ஆளும் தட்டின் பெரு வணிக சார்பு கட்சிகளுக்கு கீழ்ப்படுத்தி தடம் புரளச் செய்யும் ஸ்ராலினிஸ்டுகள் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பாகமாகும்” என்று குமார் கூறினார்.

ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அனைத்து வடிவங்களிலான தேசிய-சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக லியோன் ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் நடத்திய போராட்டங்களின் வரலாற்று படிப்பினைகள் குறித்து ஜெயசேகரா மிக விரிவாக பேசினார்.

20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களைப் படிப்பதன் தற்காலத்திய முக்கியத்துவம் குறித்து பேச்சாளர் வலியுறுத்தினார்.

"20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சம்பவம் 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியாகும், இது வரலாற்றில் முதல் முறையாக தொழிலாள வர்க்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தது," என்று ஜெயசேகரா கூறினார்.

"முதலாம் உலகப் போரின் பேரழிவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட உலக முதலாளித்துவத்தின் முறிவில் இருந்து அக்டோபர் புரட்சி தோன்றியது. அந்தப் புரட்சி ஒரு தேசிய அபிவிருத்தி அல்ல, ஆனால் ஒரு உலக நிகழ்வாகும். ரஷ்யாவில் நிலைமைகள் சோசலிசப் புரட்சிக்காக பழுத்து விட்டன என்பதனால் அது தோன்றவில்லை, ஆனால் சர்வதேச நிலைமைகள், உலக முதலாளித்துவம் தூக்கி வீசப்படுவதை அவசியப்படுத்தியது என்பதனால் தான்."

நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் படிப்பதன் மூலமாக மட்டுமே சோசலிசம் மீது அதிகமான ஆர்வம் கொண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியல் ரீதியாக சரியான முறையில் நோக்கு நிலைப்படுத்தப்பட்டு இன்று முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு தம்மை தயார் செய்ய முடியும் என்று ஜெயசேகரா விளக்கினார்.

1935 ல் லங்கா சாச சமாஜக் கட்சியை (ல.ச.ச.க.) நிறுவிய முன்னோடி இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் நடத்தப்பட்ட போராட்டங்கள் உட்பட, தெற்காசிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை அவர் குறிப்பிட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, 1942 இல் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை (BLPI), நான்காம் அகிலத்தின் அனைத்திந்திய பகுதியாக ஸ்தாபிக்கப்பட்டதன் என்றும் நிலைத்திருக்கக்கூடிய அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார். அது, பிரிட்டன் காலனித்துவவாதிகளுக்கும் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் ஆளும் தட்டுக்களுக்கு எதிராகவும் தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்து முதலாளித்துவ இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 1964 இல் ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்த ல.ச.ச.க.க்கு எதிரான போராட்டத்தில் சோ.ச.க.வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1968 ல் ஸ்தாபிக்கப்பட்டது என்று ஜெயசேகரா விளக்கினார்.

பேச்சாளர் இவ்வாறு கூறினார்: "ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கான போராட்டம் தான் கடந்த 50 ஆண்டுகளில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் மையத்தில் இருந்தது. இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஒரு தாமதமான முதலாளித்துவ வளர்ச்சி கண்ட நாடுகளில் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை வழிநடத்தும் திறன் தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமே உண்டு என்று இது வலியுறுத்துகிறது. உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கம் இந்த ஜனநாயகப் பணிகளை நிறைவேற்றும்."

அறிக்கைகளை தொடர்ந்து, நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு முஸ்லீம் பெரும்பான்மை பாகிஸ்தானுக்கும் இந்து மேலாதிக்க இந்தியாவுக்கும் வழிவகுத்த இந்தியாவின் 1947 பிரிவினை குறித்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் எதிர்ப்பு பற்றி விளக்குமாறு ஒரு இளம் தொழிலாளி கேட்டார்.

இதற்கு பதிலளிக்கையில், 1944 ஆம் ஆண்டு BLPI மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இருந்து ஜெயசேகரா மேற்கோள் காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார். அது பாகிஸ்தான் நாட்டுக்கான அறைகூவலை "அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானது மற்றும் தத்துவார்த்த ரீதியாக தவறானது" என்று குறிப்பிட்டு பின்வருமாறு எச்சரித்தது: "அது முஸ்லீம் வெகுஜனங்கள் மத்தியில் வளர்ச்சி கண்டு வந்த அதிருப்தியை அவர்களது உண்மையான எதிரிகளான பிரித்தானிய ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்நாட்டு கூட்டாளிகளுக்கு எதிரானதாக இல்லாமல் திசைதிருப்பி, இந்துக்களுக்கு எதிரான வகுப்புவாத உணர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒரு முயற்சியை கொண்டுள்ளது.”

ஜெயசேகர மேலும் கூறியதாவது: "சிறு இனக்குழு மற்றும் மத வழிகளை கடந்து இந்தியா முழுவதும் போராட்டங்களுக்குள் நுழையும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக பிரிவினை மேற்கொள்ளப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான அதன் போராட்டத்தின் பாகமாக பிரிவினைக்கு எதிராக BLPI போராடியது. எதிர்கால இராணுவ மோதல்களுக்கு பிரிவினை வழிவகுக்கும் என்று அது எச்சரித்தது. அந்த எச்சரிக்கை ஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வெடித்த மூன்று போர்கள் மூலமாக துயரமான முறையில் நிரூபிக்கப்பட்டது, மேலும் தொடர்ந்து நீடிக்கும் பதட்டங்கள் இன்னும் பேரழிவுகரமான மோதல்கள் ஏற்படுவதற்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளன."

பங்கெடுத்த பலர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச முன்னோக்கைப் பற்றி மேலும் கலந்துரையாடலில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். கலந்து கொண்டவர்கள் 550 ரூபாய் நன்கொடை மற்றும் 800 ரூபாய் மதிப்புள்ள நூல்களை வாங்கினர்.