ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian workers need revolutionary socialist program to combat social devastation and political reaction

சமூக பேரழிவையும் அரசியல் பிற்போக்கையும் எதிர்த்து போராட இந்திய தொழிலாளர்களுக்கு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் தேவை

By Deepal Jayesekera and Keith Jones,
8 January 2019

கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், இந்த செவ்வாய் மற்றும் புதன் அன்று நிகழும் அனைத்து இந்திய வேலைநிறுத்தத்தில், பா.ஜ.க. அரசாங்கத்தின் சமூக அழிவுகரமான, "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகளுக்கு எதிராக கலந்து கொள்ளவார்கள்--- அதாவது, கடுமையான சிக்கன நடவடிக்கை, தனியார்மயமாக்கல், பாதுகாப்பற்ற ஒப்பந்த வேலைகளை ஊக்குவித்தல், சுற்று சூழல் மற்றும் பணி இட பாதுகாப்பு தரத்தை தகர்த்தல், பெறுவணிகத்துக்கு மற்றும் பணக்காரர்களுக்கு ஏராளமான வரி சலுகைகள் மற்றும் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மீது சுமைமிக்க வரி ஏற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தில் இவர்கள் இறங்கியுள்ளனர்.

நிதி தியாகங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் வேலை நீக்க அபாயங்களையும் கூட மீறி, பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிராக போராட நிற்கும் தொழிலாளர்களின் தயார்நிலையை உலக சோசலிச வலைத் தளம் வரவேற்கிறது.

அனில் மற்றும் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி மற்றும் ஏனைய கோடீஸ்வரர்களின் (பில்லியனர்) சிறு குழு ஆட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போர் தாக்குகளை உக்கிரப்படுத்தவும் இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாஷைகளை மிக தீவிரமாக மேலும் முன்னெடுக்கவும் தான், நரேந்திர மோடியையும் இந்து மேலாதிக்க பா.ஜ.க வையும் ஆட்சியில் அமர்த்தியது. அவர்களும், அதைத்தான் செய்துள்ளார்கள். நான்கரை ஆண்டுகால பா.ஜ.க அரசாங்கம் வகுப்புவாத பிற்போக்கை தூண்டிவிட்டுள்ளது, அரசின் ஒடுக்கு முறை இயந்திரத்தை பலப்படுத்தியுள்ளது (மின்னணு தொடர்புகள் மற்றும் தகவல்களை உளவு பார்க்கும் உரிமையை பலப்படுத்தியமை உள்ளிட்டவை), அத்துடன் அமெரிக்க முதலாளித்துவத்துடனான இராணுவ-மூலோபாய உறவை விஷ்தரித்துள்ளது, மேலும் பூகோள முதலாளித்துவத்துக்கான முதன்மையான மலிவு விலை கூலித் தளமாக இந்தியாவை ஆக்கும் ஆளும் வர்க்கத்தின் உந்துதலை முடுக்கி விட்டுள்ளது.

ஆனால் தொழிலார்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஜனவரி 8-9 வேலைநிறுத்தம், இந்திய ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பாகமாக இருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் அரசியல் ரீதியாக தலைமை தாங்கப்படுகிறது, மேலும் அவை இந்தியாவின் முதலாளித்துவ மேல்தட்டின் கால் நூற்றாண்டுக்கும் மேலான "சந்தை சார்பு” கொள்கையை நிறைவேற்றுவதிலும், அதற்கு எதிர்ப்பினை நசுக்குவதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்து உள்ளன.

இது வெறும் INTUC (காங்கிரஸின் தொழிற்சங்கம்) பற்றிய உண்மை அல்ல மாறாக தொ.மு.ச வும் (DMK யின் தொழிற்சங்கம்) இதில் அடங்கும். CITU (CPM இன் தொழிற்சங்கம்) மற்றும் AITUC (CPI இன் தொழிற்சங்கம்) பற்றியும் கூட இது நிதர்சனமான உண்மையே.

ஸ்ராலினிசவாதிகளும் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஜனவரி 8-9 நடவடிக்கையை "பொது வேலைநிறுத்தம்" என்று முன்னெடுக்கும் போது, அவர்கள் சிடுமூஞ்சித்தனமான அரசியல் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

பொது வேலை நிறுத்தம் என்பது, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகளுடன் எப்போதும் நினைவுகூரப்படும்- அந்த முயற்சி சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியின் மூலமாக, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக வளர்ந்து பின்னர் லெனின், ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சி தலைமையில் தொழிலாளர் ஆட்சியை கைப்பற்றுவதில் முடிவடைகிறது.

ஆனால் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுயாதீனமாக அணிதிரட்டுவதிலிருந்து வெகு தூரம் சென்று ஸ்ராலினிசவாதிகளும் அதன் தொழிற்சங்கங்களும் அதனை மழுங்கடிக்கவே முயற்சிக்கின்றனர்.

அவர்களது குறிக்கோள், இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் போர்க்குணமிக்க எதிர்ப்பினை மட்டுப்படுத்தி இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் பின்னால் திசைதிருப்பி, ஒரு மாற்று வலது சாரி அரசாங்கத்தை ஏப்ரல் மே தேர்தலுக்கு பின் ஆட்சியில் அமர்த்துவதே ஆகும்.

ஸ்ராலினிசவாதிகளை பொறுத்தவரையில். இந்த வேலைநிறுத்தமானது முற்றிலுமாக 2019 தேர்தல்களுக்கு கீழ்ப்படிந்ததாக உள்ளது அல்லது சிபிஎம் அழைக்கும் ”பெரும் போர்” முன்னே மற்றும் ”ஒரு மாற்று மதசார்பற்ற அரசாங்கத்தை” தேர்ந்தெடுப்பதற்கு அவசியமான ஓட்டுகளை திரட்டுவதற்கான அவர்களது முயற்சிகளாகும். அதாவது டெல்லியில் பாஜக அல்லாத ஒரு பெரும் வணிக அரசாங்கத்தை கொண்டுவருவது தான்.

அத்தகைய ஒரு அரசாங்கம் வரிசையாக வந்த "மதச்சார்பற்ற" அரசாங்கங்களை போன்றதாக இருக்கும், அவற்றில் பெரும்பாலனவை காங்கிரஸ் கட்சியினால் தலைமை தாங்கப்பட்டவை, CPM மற்றும் அதன் இடது முன்னணி 1989 முதல் 2008 வரை பாராளுமன்றத்தில் அவற்றுக்கு முட்டுக் கொடுத்து உதவின, மற்றும் அவை முதலாளித்துவத்தின் சமூக விரோத, நவீன தாராளவாத செயல் திட்டங்களை அமுல்படுத்தின, மேலும் அதேவேளை வாஷிங்டனுடனன் நெருக்கமான உறவுகளை உருவாக்கியது.

இன்றைய தினம் 2008 நிதியியல் நெருக்கடிக்கு ஒரு தசாப்தத்திற்கு பின்னர், உலக முதலாளித்துவம் முழுமையான அமைப்புரீதியான நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த அரசாங்கம், இந்திய மற்றும் பூகோள மூலதனத்தின் திட்டங்களை இன்னும் இரக்கமற்ற முறையில் செயல்படுத்த வேண்டும். அதன் உள் சேர்க்கை, BJP அல்லது ஒரு ஸ்ராலினிச ஆதரவுடைய "மதச்சார்பற்ற" கூட்டணி, அல்லது காங்கிரஸ் அல்லது பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளின் அடிப்படையிலான "மூன்றாம் அணி" ஆக அமைக்கப்பட்டாலும் சரி, அடுத்த அரசாங்கமானது இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மீதான சுரண்டலை மிக கடுமையாக தீவிரப்படுத்தும், அவ்வாறு செய்வது வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், வெளிநாட்டு சந்தைகளை கைப்பற்றுவதற்கும் ஆகும்.

பா.ஜ.க.விற்கு எதிரான போராட்டத்தில், உழைக்கும் மக்களின் முக்கிய கூட்டாளியாக, முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியை முன் நிறுத்தும் ஸ்ராலினிசவாதிகளின் முயற்சிகளினால் கிடைத்த பலன்களை காங்கிரஸ் அறுவடை செய்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலாள வர்க்கத்தின் "நண்பன்" என்றும் எதிர்கால ”முற்போக்கு அரசாங்கத்தின்" எதிர்கால தலைவர் என்றும் முன் நிறுத்த ஐ.என்.டி.யு.சி தலைவர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜி.சஞ்சீ ரெட்டி "பொது வேலைநிறுத்தத்தை" வெட்கமின்றி பயன்படுத்துகிறார்.

ஜோடிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களை பாதுகாக்க, சிபிஎம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஏன் மறுக்கின்றன

வர்க்கப் போராட்டம் குறித்த ஸ்ராலினிசவாதிகளின் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் உண்மையான அணுகுமுறை, வெட்ட வெளிச்சமாக தெரிவது எதில் என்றால், ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 13 மாருதி சுசூகி கார் தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க போராட மறுத்துவிட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்கையில் அவர்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்பதில் தான் இருக்கிறது. இந்த தொழிலாளர்கள் செய்த ஒரே "குற்றம்". இந்தியாவின் புதிய பூகோள ரீதியாக இணைக்கப்பட்ட உற்பத்தித் தொழில்துறைகளில் நிலவும் கடுமையான வேலை நிலைமைகளை சவால் செய்தது தான். இருப்பினும், தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக "மாருதி சுசுகியில் செய்தது" போன்று செய்வோம் என்று முதலாளிகள் அச்சுறுத்துவது வழக்கமாகி உள்ள நிலையிலும் கூட.

ஸ்ராலினிசவாதிகள், அவர்களை 19 ம் நூற்றாண்டு தென்னிந்தியாவில், தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டவர்கள் போலவே நடத்துகின்றனர்.

மாருதி சுஜூகி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க முன் மாதிரியைக் கண்டு ஸ்ராலினிசவாதிகள் பயப்படுகின்றனர், அதனால் அவர்களை கைவிட்டுள்ளனர், இன்னும் முக்கியமாக, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதாவது மாருதி சுஜூகி தொழிலாளர்களை பாதுகாக்கும் பிரச்சார இயக்கத்தை, வறுமை ஊதியங்கள் மற்றும் ஆபத்தான நிலையற்ற வேலைகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பது என்பது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மற்றும் அவர்களது சங்கங்கள், பெருவணிகத்துடன் வைத்திருக்கும் நெருக்கமான பெருநிறுவன உறவுகளை உடைத்து விடும் என்பதை ஆகும்.

ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பாத்திரம் தொடர்பாக, அவசரமான விமர்சன ரீதியான இருப்பு நிலை ஆய்வை தொழிலாள வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் மேலும் புதிய மூலோபாயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்—அந்த ஒரு மூலோபாயம், முதலாளித்துவத்தின் அனைத்து கோஷ்டிகளில் இருந்தும், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக சுயாதீனமாக ஒருங்கிணைத்து அதன் பின்னால் கிராமபுற மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரை அணிதிரட்டி ஒரு தொழிலாள விவசாய அரசாங்கத்திற்காக போராட வேண்டும் மற்றும் சமூகத்தை சோசலிச மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

கடந்த மூன்று தசாப்தங்களாக செய்தது போல், ஸ்ராலினிசவாதிகள், பா.ஜ. க. மற்றும் இந்து வலது கூட்டாளிகளின் குற்றங்களை சுட்டி காட்டுவது, இந்திய முதலாளித்துவத்தின் மீது குற்றம் சுமத்தி மற்றும் ஆளும் வர்க்கம் பிற்போக்கை ஆரத்தழுவி இருப்பது குறித்து மற்றும் இந்திய ஜனநாயகம் வேகமான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தோ தொழிலாள வார்க்கத்தை எச்சரிக்கை செய்வதற்கு அல்ல; ஆனால் மாறாக தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் மற்றும் வலதுசாரி பிராந்தியவாத மற்றும் சாதிவாத கட்சிகளுக்கு கீழ்ப்படிய செய்வதற்கு போலி நியாயம் கற்பிக்க தான்.

2019 தேர்தல் நெருங்க-நெருங்க, ஒரு பெருவணிக, பா.ஜ.க அற்ற அரசாங்கத்தை நிறுவ ஆதரவளிப்பதன் மூலமாக உழைக்கும் மக்கள் "ஜனநாயகத்தை காக்க" மற்றும் "அரசியல் சாசனத்தை” காக்க வேண்டும் என்று ஸ்ராலினிசவாதிகள் கோஷம் எழுப்புகிறார்கள்".

பா.ஜ.க. உழைக்கும் மக்களின் பரம விரோதி என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. ஆனால் இந்திய தொழிலாளர்கள், முதலாளித்துவ கட்சிகளின் வால்பிடித்தும் நாற்றமெடுக்கும் இந்திய அரசின் "ஜனநாயக" ஸ்தாபனங்களின்- இந்த ஸ்தாபனங்கள் தொடர்ந்து தொழிலாளர் உரிமையை வெறித்தனமாக நசுக்கியும் ஒன்றன் பின் ஒன்றாக வகுப்புவாத அட்டூழியங்களை நடத்துவதில் மற்றும் மூடி மறைப்பதில் முழுப்பங்கு வகுத்துள்ளன - மீது நம்பிக்கை வைத்தும் பிற்போக்கை தோற்கடிக்கலாம் என்பதும் ஜனநாயக உரிமைகளை காக்கலாம் என்பதும் ஒரு மோசமான பொய்.

உண்மையிலே, வலதுசாரி இந்துக்கள் இப்படி ஒரு ஆபத்தாக வளர்ந்தமைக்கு, ஸ்ராலினிசவாதிகள் பின்பற்றிய குற்றவியல் கொள்கைகளே காரணம். அவர்கள் வர்க்க போராட்டத்தை தீர்க்கமாக கட்டுப்படுத்தி வைத்தமை; மேலும் அவர்கள் ஆண்ட மாநிலமான மேற்கு வங்கத்தில் அவர்களே கூறுவது போல் முதலீட்டாளர் கொள்கையை அமுல்படுத்தியமை மற்றும் வலது சாரி இந்துக்களை எதிர்க்கும் பேரில் காங்கிரஸ் மற்றும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ் படிய செய்தமை- ஆகியவை – பிற்போக்கு வளர்வதற்கான தளத்தை செழுமைப்படுத்தியது.

தொழிலாள வர்க்கம், சமூக நெருக்கடிக்கு தனது சோசலிச தீர்வை முன்னெடுப்பதிலிருந்து தடுக்கப்பட்ட பட்சத்தில் ஸ்ராலினிசவாதிகளின் ஆதரவுடன் பல "மதசார்பற்ற" அரசாங்கங்கள் பின்பற்றிய புதிய பொருளாதார கொள்கையின் அழிவுகரமான விளைவால் அவற்றை பா.ஜ.க. வாய்சவடால் செய்து பரந்த ஆத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடிந்தது.

முதலாளித்துவ நெருக்கடி மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சரிவு

மோடி அரசாங்கம், பூகோள நிலைமைகளின் இந்திய வெளிப்பாடு ஆகும். உலக முதலாளித்துவம், 1930 களில் இருந்த நெருக்கடி நிலையில் சிக்கி, தற்போது பிற்போக்கை கக்குகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில், ஏனைய ஏகாதிபத்தியங்கள் எல்லாம் துரிதமாக மறுபடியும் ஆயுதங்களை விஸ்தரிக்கின்றார்கள். எங்கும் ஆளும் வர்க்கம் வலது பக்கம் நகர்கிறார்கள், தேசிய-இன மற்றும் வகுப்புவாத பிரிவினைகளை எரியூட்டுகிறார்கள் மேலும் சர்வாதிகார போக்கு ஆட்சிக்கு திரும்புகிறார்கள்.

பாசிச எண்ணம் கொண்ட ட்ரம்ப் மட்டுமில்லாமல், இத்தாலியில் அதி-வலது LEGA, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ நவ-நாஜி AfD மற்றும் பிரேசிலில் தீவிர வலது, இராணுவ-சார்பு அதிபர் ஜைர் போல்சோனரோ, அனைவரும் முதலாளித்துவ ஜனநாயக மாண்புகளை நிராகரிக்கின்றனர். மேலும், அவ்வாறாகத் தான் தாராளவாதத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுபவர்களும் நடக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குறிப்பாக போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச கருத்துக்கள் பரவாமல் தடுக்க இணையதளத்தை தணிக்கை செய்யும் பிரச்சாரத்தில் தலைமை வகிக்கின்றனர். அரண்மனை சதி முறைகளால் ஜனநாயகவாதிகள் ட்ரம்பை கவிழ்க்க இராணுவ-உளவு இயந்திரங்களுடன் கூடி சூழ்ச்சி செய்கின்றனர், ஏனென்றால் அவர்கள் வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிராக அபாயகர கொள்கைகளை முன்னெடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். பிரான்சின் அதிபர் இமானுவல் மக்ரோன் "அவசரகால நிலை" "பயங்கரவாத எதிர்ப்பு" சக்திகளை, இயல்பாக்கி அதனை தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீது ஒரு பரந்த தாக்குதல் நடத்த பயன்படுத்துகிறார்.

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் பிற்போக்கை தோற்கடிக்கவும் சாத்தியமான ஒரே மூலோபாயம் சர்வதேச வர்க்க போராட்டத்தின் அடிப்படையில் நோயுற்ற முதலாளித்துவ சமூக ஒழுங்கை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது தான்.

2018 இல், தொழிலாள வர்க்கமானது, CPM மற்றும் INTUC இன் சர்வதேச பங்காளிகளான முதலாளித்துவ சார்பு தொழிசாங்கங்கள், மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் கிரேக்கத்திலுள்ள சிரிசா (SYRIZA) போன்ற போலி இடது கட்சிகள் உருவாக்கிய போராட்ட தடைகளை உடைக்க தொடங்கியுள்ளனர். பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டம் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைக்கு எதிரான பூகோள எழுச்சிக்கு உதாரணமாக திகழ்கிறது, மேலும் இந்த எதிர்ப்பு, ஆளும் நிறுவனத்தின் "இடது" கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து உடைத்துக் கொண்டு அதிகமாக வெளிப்படையான எதிர்ப்புடன் தொழிலாள வர்க்க எதிர்ப்பு வளர்ச்சி அடைகிறது.

தங்களது வர்க்க நலன்களை நிலைநாட்ட இந்தியாவில் தொழிலாளர்களுக்கு போராட்டத்திற்கான புது இயக்கங்கள் தேவை, அவை ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்ககளில் இருந்து முழுமையாக சுயாதீனமாகவும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்திய தொழிலாளர்கள் இலங்கை தோட்ட தொழிலாளர்களின் உதாரணத்தை எடுக்க வேண்டும், அதாவது அபோட்ஸ்லேக் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலங்கையில் முதலாளிகளின் தாக்குதல்களை நிறைவேற்ற தொழிற்சங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் அளிக்கும் வகையில் தங்கள் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்க சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அமைத்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்கு தனது போராட்டங்களை உலக அளவில் விஸ்தரிக்கவும் தொழிலாளர் ஆட்சிக்கான போராட்டத்தை தலைமை வகிக்க ஒரு புரட்சிகரக் கட்சி தேவை. அந்த கட்சி நான்காம் அகிலமும் அதன் தேசிய பகுதிகளும் தான், இதில் தெற்காசியாவில் சோசலிச சமத்துவ கட்சி (இலங்கை) உள்ளடங்கும்.

1938-இல் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட நான்காம் அகிலம், சர்வதேச சோசலிசத்துக்கான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்து, ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அனைத்து கையாள்களிடம் இருந்தும், அனைத்திற்கும் மேலாக சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திடமிருந்து (CPM மற்றும் CPI இன் அரசியல் ஆசான்கள்) பாதுகாத்து வந்துள்ளது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாத பதாகையின் கீழ் 1917 ரஷ்ய புரட்சியை காட்டிக்கொடுத்து, இறுதியாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவத்தை நிறுவியது. 1953 முதல் அனைத்துலக குழுவால் வழிகாட்டப்பட்ட நான்காம் அகிலம் (ICFI), கடந்த நூற்றாண்டு மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களின் வெற்றிகள் மற்றும் தோல்விகள் உள்ளிட்ட சர்வ்தேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய படிப்பினைகள் அனைத்தின் முழுவடிவமாக உள்ளது.

தொழிலாளர்களே மற்றும் இளைஞர்களே: சமூக சமத்துவமின்மை, முதலாளித்துவ பிற்போக்கு மற்றும் போரை எதிர்ப்போம். சர்வதேச சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தை கையிலெடுங்கள். ICFI இன் இந்திய பகுதியை கட்டியெழுப்புவோம்.