ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian government fires hundreds of teachers as Tamil Nadu strike faces a crossroads

தமிழ்நாடு வேலைநிறுத்தம் முக்கிய திருப்பத்தை எதிர்நோக்குகையில் இந்திய அரசாங்கம் நூற்றுக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்கிறது

By Arun Kumar
30 January 2019

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களால் நடத்தப்பட்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு அரசியல் திருப்பத்தை எட்டியுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர், அ.தி.மு.க தலைமையிலான அரசாங்கத்தால் மாபெரும் அரசு ஒடுக்குமுறையை சந்திக்கும் அதே வேளை தொழிற்சங்கங்களால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரி 29 அன்று 700 வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை மேலும் 1200 மாநில அரசாங்க ஊழியர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் அரசாங்கம் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அவர்களது பணியிடங்கள் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அந்த பணியிடங்கள் கடந்த வெள்ளி முதல், மாதம் 10,000 ரூபாய் ($140) மாத சம்பளத்துக்கு, வேலைநிறுத்தத்தை உடைக்கும் தற்காலிக ஊழியர்களினால் நிரப்பப்படும்.

ஆசிரியர்களும் மற்றும் இதர மாநில அரசாங்க ஊழியர்களும், ஜனவரி 22 அன்று பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (CPS) நீக்குதல், மற்றும் பழைய அரசாங்க-நிதியில் ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமைத்தல் மற்றும் அதிக சம்பளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வேலைநிலமைகள் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

நெடுங்காலமாக நிலுவையில் இருக்கும் இந்த கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசாங்கம் தொடக்கம் முதலே திட்டவட்டமாக நிராகரித்ததுடன், பல தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளான பரந்துபட்ட தற்காலிக மற்றும் நிரந்தர பணிநீக்கங்கள், வேலைநிறுத்தம் மற்றும் போராட்டம் செய்பவர்களை பொலிஸ் கைது செய்தல் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை கருங்காலிகளாக பணியில் அமர்த்தல் உள்ளிட்டவைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் இதர அரசாங்க ஊழியர்கள் மாநிலம் முழுக்க நடத்தி வரும் போராட்டத்தின் மூலம், தங்களது போராட தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளனர், ஆனால், அதன் உறுப்பினர்களிடம் இருந்து வரும் அழுத்தத்தின் காரணமாக இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதற்கு தள்ளப்பட்ட JACTTO-GEO தொழிற்சங்கம், இந்த வேலைநிறுத்தம் பரந்து விரிவதை எதிர்க்கின்றது.

இந்த வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்துவதன் மூலம், நூறாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட JACTTO-GEO மாநில அரசாங்கத்தின் ஜனநாயக விரோத தாக்குதல்களை அதிகரிப்பதற்கு வழியை திறந்துவிட்டுள்ளது.

திங்களன்று மாநில அரசாங்கம், தொழிற்சங்கத்தை சந்திக்காது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியது. JACTTO-GEO விற்கான வழக்கறிஞர் நீதிமன்றத்தில், பேசுகையில் அவர்களது தொழிற்சங்க கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைக்க ஒப்புக் கொண்டால் "உடனே" வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

நீதிமன்றம் ஆசிரியர்களை பணிக்குதிரும்பும்படி கோரியது, மேலும் கூறியதாவது, அரசாங்கம் இல்லையாம், வேலைநிறுத்தம் செய்வோர் தான், இறுதி தேர்வில் அமரவிருக்கும் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்திகிறார்கள். அந்த நாளில் பிறகு, பொலிஸ் 3000 ஆசிரியர்களை கைது செய்து அவர்களின் போராட்டத்தை உடைத்தது. அவர்கள் பல்வேறு சத்திரங்களில் காவலில் வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டின் பிரதான கல்வி அதிகாரி திருவாரூர் செல்வி, ஊடகங்களுக்கு கூறியதாவது, மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் 99.9 சதவீத பள்ளிகளில் முக்கால்வாசி ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பியதால் நிலைமை மீண்டும் இயல்புக்குத் திரும்பியது. விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இதர மாவட்டங்களில் மற்ற ஆசிரியர்களும் பணிக்கு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மற்ற ஊடங்கங்களின் செய்தி படி, 96,000 ஆசிரியர்கள் அல்லது தொடக்கக்கல்வி பள்ளிகளில் உள்ள 63 சதவீத ஆசிரியர்கள் அரசாங்கத்தின் ஆணையை மறுத்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாநில அரசாங்கத்தை சேரந்த ஏனைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். கடந்த செவ்வாய் அன்று மாநிலத்தின் தென் மாவட்டங்களில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபின்னர் 15,000 அரசாங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். திருச்சி பகுதியில், 11,000 JACTTO-GEO உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர். செவ்வாய் அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த நாளில் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களின் போராட்டத்தில் பங்குபெற்றனர் அல்லது அவர்களுக்கு ஆதரவான தங்களது போராட்டத்தை நடத்தினர். உதகமண்டலத்தில் (ஊட்டி), கலைக்கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரை ஆதரித்து சாலை மறியலில் ஈடுபட்டதற்காக பொலிஸ் அவர்களை சிறையில் அடைத்தது. ஜனவரி 29 அன்று, திண்டிவனம் மற்றும் புதுக்கோட்டையில், அரசாங்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலைநிறுத்தம் அதன் கட்டுப்பாட்டை கடந்து விரிவடைவதுடன் இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளையும் ஊக்கப்படுத்தி செயலில் இறங்க செய்யும் என்று அஞ்சும் JACTTO-GEO, இந்தியாவின் இதர பகுதிகளால் அதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஆதரவு கோரி விண்ணப்பிக்க அல்லது தொழில்துறை நடவடிக்கையை விரிவுபடுத்து குறித்த எதையுமே எதிர்க்கிறது. வேலைநிறுத்தம் செய்பவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட தொழில்துறை நடவடிக்கையானது, அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தை பணியச் செய்யும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கத்தின் பெருவணிக கொள்கைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவில் 180 மில்லியன் தொழிலாளர்கள், ஜனவரி 8 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.

எவ்வாறாயினும், JACTTO-GEO, அதன் உறுப்பினர்களை பொது வேலைநிறுத்தத்தில் இணையும்படி அழைக்கவில்லை, அந்த வேலை நிறுத்த கோரிக்கைகளில், புதிய ஓய்வூதிய திட்டத்தை (CPS) அகற்றுவது, மேலும் அரசாங்கத் துறைகளை தனியார்மயமாக்குதல் மற்றும் வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது ஆகியவற்றை எதிர்ப்பதும் உள்ளடங்கியிருந்தது — அதே பிரச்சினைகள் தான் தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களை வேலைநிறுத்தத்திற்கு தள்ளியது.

ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களை தனிமைப்படுத்த அனைத்தையும் செய்தபின், அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று JACTTO-GEO கூறியது. வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவர்களுக்கு ஒரு மானத்தை காப்பாற்றும் உடன்படிக்கை வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆற்றொணா நிலையில் அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கின்றனர்.

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை- தமிழ்நாட்டின் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவை முறையே சிபிஎம் மற்றும் சிபிஐ இன் தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஆகும். அவை JACTTO-GEO வின் பங்காளிகளாக உள்ளனர்.

பல லட்சக்கணக்கானவர்களை தம் வசம் உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த அமைப்புகள், AIADMK அரசாங்கத்தை விமர்சித்து பல்வேறு அநாவசியமான அறிக்கைகள் வெளியிட்டுள்ளன, அவை பொலிஸ் கைதுகள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை கண்டனம் செய்கின்றன.

நேற்று, இடது முன்னணி என்று அழைக்கப்படும் மற்றும் தமிழ் நாடு தலைமை செயலக அதிகாரிகளின் சங்கம் உட்பட அதனுடன் தொடர்புடைய ஐந்து தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. CPS திட்டத்தை அகற்றுவது உட்பட அதேபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த வேலைநிறுத்தம் ஒரே ஒரு நோக்கத்தை தான் கொண்டது — அது கோபத்தை தணிப்பது மற்றும் அரசாங்க தாக்குதல்களுக்கு எதிரான உண்மையான போராட்டத்திற்கான பெருகி வரும் தொழிலாள வர்க்க கோரிக்கைகளை சிதறடிப்பது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகள், வட அமெரிக்க, மெக்சிக்கோ, ஐரோப்பா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பிற இடங்களில் வளர்ச்சி கண்டு வரும் மீள் எழுச்சியுடைய சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் ஒரு பாகமாகும், அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு வேலைநிறுத்தகாரர்கள், இந்தியா, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுடன் தங்கள் ஐக்கியத்தை வளர்த்து, அமெரிக்கா மற்றும் இதர பகுதிகளிலுள்ள ஆசிரியர்களுடன் கரம் கோர்த்து ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் போராட வேண்டும்.

தங்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத் தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் செய்யும் மெக்சிக்கன் வாகனத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும், அத்துடன் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுக்களில், தொழிலாளர்கள் தங்கள் சொந்த கோரிக்கைகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக முறையில் விவாதித்து முடிவு செய்யலாம், மற்றும் அவர்களது போராட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சர்வதேச அரசியல் வேலைத்திட்டத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த போராட்டத்திற்கான மையமாக இருப்பது, சிபிஎம் மற்றும் சிபிஐ இன் தேசியவாத அரசியல் செயற்பட்டியலை நிராகரிப்பதாகும். இந்த ஸ்ராலினிச அமைப்புக்களுக்கு, இந்து வகுப்புவாத பிஜேபி மற்றும் AIADMK உடன் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது. அவர்களது நோக்கம் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் மீது சமூகத் தாக்குதல்களை ஆழப்படுத்துவதன் மூலம் பெருவணிகத்திற்கு இந்தியாவை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக, காங்கிரஸ் கட்சியோ அல்லது பல்வேறு வலதுசாரி பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியின் தலைமையிலான "மாற்று" முதலாளித்துவ அரசாங்கங்களின் மூலமாக இந்த கட்சிகளை (பிஜேபி மற்றும் AIADMK) பிரதியீடு செய்வது தான்.