ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French “yellow vests” step up protests as Macron’s “national debate” begins

மக்ரோனின்  தேசிய விவாதம் ஆரம்பிக்கையில் பிரெஞ்சு “மஞ்சள் சீருடைகள்” எதிர்ப்புக்களை தீவிரமாக்குகின்றனர்

By Anthony Torres
22 January 2019

இந்த கிழமை ஆரம்பமாகும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் “மாபெரும் தேசிய விவாதம்” ஒரு பொறி என்று நிராகரித்து, மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்கள் இந்த சனிக்கிழமை அன்று பெரிய எண்ணிக்கையில் அணிதிரண்டனர். உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் போன்றே 84,000 எதிர்பாளர்கள் அன்று இருந்ததாக, எதிர்ப்பின் அளவைக் குறைத்துக்காட்டியது.

மாகாண நகரங்களில் இதுவரை இல்லாதளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். Bordeaux இல் 4000, Marseille மற்றும் Grenoble இல் 2,500 மற்றும் Caen இல் 3,000 பேர் பங்கேற்றனர். Toulouse இல் 10,000 பேர் திரண்டனர். இது ஒரு  மாகாணத் தலைநகரத்தில் மஞ்சள் சீருடை இயக்கத்திற்கான ஒரு சாதனையான அளவுதான். “உமது விவாதம் தேவை இல்லை மக்ரோனே வெளியேறு” எனும் பதாகையின் பின்னே அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.


இந்த ஆட்சி வீழ வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்

பொலீஸ் ஆத்திரமூட்டல் பல நகரங்களில் மோதலுக்கு இட்டுச்சென்றது. Marseille இல் 1000 “மஞ்சள் சீருடையாளர்கள் கலவரத்தடுப்பு போலீசால் முற்றுகை இடப்பட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டபொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

லியோனில் நதிக்கரையில், அமைதியாக பேரணி நடத்திய எதிர்ப்பாளர்கள் போலீசாரால் திருப்பிவிடப்பட்ட பகுதியிலிருந்து நகரின் அவர்கள் வணிகத் தெருக்களுக்குத் அவர்கள் திரும்பு முனைகையில், கண்ணீர்ப்புகைக் குண்டுகளாலும் சத்தவெடி குண்டுகளாலும் சுடப்பட்டனர். அங்கு 7 பேர்கள் கைது செய்யப்பட்டனர். பாரிசில் போலீஸ் 30 பேரைக் கைது செய்தது.

பாரசில் “மஞ்சள் சீருடையாளர்கள்” “பாரிசில் மில்லியன் மக்கள்” என்ற முழக்கத்தின் கீழ் காலை 11.00 மணி அளவில் Invalides  நினைவுச்சின்னத்திற்கு வெளியே எதிர்ப்பை ஆரம்பித்தனர். எதிர்ப்பாளர்களின் வரிசை கடந்த வாரத்தைவிட அதிகமிருப்பினும், பாரிஸ் பொலீஸ் தரப்பில் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்தவாரம் இருந்த 8000 இலிருந்து 7000 ஆக சற்றே வீழ்ச்சியடைந்ததாக அறிவித்தனர்.

“மஞ்சள் சீருடை” இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் அதனை நிராகரித்த தொழிற்சங்கங்கள் இப்பொழுது அதில் தலையீடு செய்வதற்கு முயலுகையில், எதிர்ப்பாளர்கள் ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பை (CGT) அணிவகுப்பில் இருந்து ஒதுக்கிவைத்தனர். Le Monde அறிவித்தது,“Boulevard Raspail மூலையில் CGT ஐ குறிக்கும் அடையாளங்களை அணிந்த சிறு குழுவினரை ஒரு பருத்த ஆள் வந்து நிறுத்தினார், ’நீங்கள் எங்களோடு வருவிரும்பினால் உங்கள் கொடிகளை தூர வையுங்கள்’ என அவர் கட்டளையிட்டார். ‘CGT, 40 வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை மற்றும் நீங்கள் மக்ரோனுக்காக வாக்களிக்கும்படி கேட்டீர்கள்’ என்று இன்னொருவர் கூறினர்”.

பாரிசில் மஞ்சள் சீருடைகள் “பாரிசே எழுக!, மக்ரோன் சர்வாதிகாரி,” “மக்ரோன் சிறையில்” (உள்துறை அமைச்சர்) Castaner நரகத்தில்,” அல்லது “தேசிய விவாதம், வெற்றொலியும் வெறும்புகையும்” என முழங்கினர். உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் கட்டுமானத் தொழிலில் மேற்பார்வையாளராக இருக்கும் Frédéric மற்றும் Christelle-இடம் பேசினர்.


ஒடுக்குமுறை அணிவகுப்பில்

Frédéric, எனது மகள்களை, எனது நண்பர்களை சிக்கலில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் நினைத்து இங்கு வந்ததாக கூறினார். அதிகாலை எழுந்து வேலைக்குச்செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள் அல்லது சிலநேரங்களில் அடிப்படையில் ஒன்றும் உழைக்காவர்களும் மாதம் முடிவுவரை நாளைக் கடத்த முடியாதவர்களும் இருக்கிறார்கள். மாதத்தின் 10 அல்லது 15ம் நாள் வங்கிக் கணக்கில் காலியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இது ஏற்க முடியாதது, இது போதும்” என்றார்.

Christelle சொன்னார், “நான் பலபேர்களிடம், 50 அல்லது 60 வயதுகளில் உள்ளவர்களுடன் பேசினேன்………. தங்களின் வாழ்க்கைக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதி வேலை செய்தவர்கள் மற்றும் அவர்கள் அவர்களிடம் ஒன்றுமில்லை, அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னரும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது அல்லது வேலையை இழக்கையில் இன்னொரு வேலையைப் பெற முடியாது. அதன் பின்னர் இன்னொரு வேலையை அவர்களால் தேட முடியாது. அந்தவகையில் தனிப்பட்ட ரீதியில் எனது தந்தையை நினைக்கிறேன், அவரது முழுவாழ்க்கையிலும் உழைத்தார் மற்றும் இறுதியில் அவர் வேலையற்றோராய் இருந்துபோனார், அது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.

Christelle மக்ரோனுக்கும் அவரது “தேசிய விவாதத்திற்கும்” குரோதத்தை தெரிவித்தார்: நான் அதை விரைவாகப் பார்த்தேன், ஏனெனில் நான் வேலையற்றவள், மக்ரோனால் எனது நிறுவனம் மூடப்பட இருக்கிறது. அதனால், சில விவரங்களில் அவரை புரிந்துகொள்வதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இறுதியில், அவர் பிரதானமாக ஒன்றுமில்லாமல் எவ்வாறு நாம் வாழமுடியும் என்று நமக்குச் சொன்னார். பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று அவர் சொல்லவில்லை. ஒன்றுமில்லாது எப்படி அவற்றை பெற முயற்சிப்பது என்பதற்கான தீர்வுகளையே எமக்குத் தருகிறார். கார்கள் வைத்திருக்காமல், சாப்பிடாமல், தலைக்குமேலே ஒரு கூரையில்லாமல் நாம் வாழ முடியாது.


Frédéric et Christelle Frédéric

“மஞ்சள் சீருடை இயக்கத்தில் தொழிற்சங்கம் இல்லாமை பற்றி Frédéric குறிப்பிட்டார், “தொழிற்சங்கங்களுடன் போதுமான அனுபவத்தை நான் வைத்திருக்கிறேன். தனிப்பட்டரீதியாக, ஒரு மேற்பார்வையாளர் என்ற வகையில் தொழிறசங்கங்களோடு நாம் ஒருவகையில் களைத்துப்போய்விட்டோம். அதனால்தான் நான் எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினர் கிடையாது, நான் தொழிற்சங்கப் பதாகைக்கு ஆதரவாளன் இல்லை மற்றும் நவம்பர் 17ல் இந்த எதிர்ப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன், அங்கு ஏதாவது தொழிற்சங்கம் உள்ளிடுமாயின், நான் மஞ்சள் சீருடையினருடன் இருக்க மாட்டேன்” என்று.

வன்முறைக்குக் காரணமான நவபாசிஸ்டுகள் அல்லது மற்ற சக்திகள் இருப்பதாக ஊடகம் கண்டனம் செய்வது பற்றி, Christelle குறிப்பிட்டார், “மக்கள் இந்த இயக்கத்தைப் பற்றி மக்கள் அச்சங்கொள்ளவும் அதனோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் இது செய்யப்படுகிறது. அது அங்கு வன்முறை ஏற்படுகிறது என்றால் உங்களைப்போலோ என்னைப்போலோ உடையணிந்த ஒரு சிலர் இருப்பர், ஆனால் தலைக்கவசத்துடன். அவர்கள் மஞ்சள் சீருடை அணிகளுக்குள் வந்து நிற்கும் போலீசார். அவர்களைக் கவனித்தால், ஊர்வலத்தின் பொழுது அவர்களோடு நிற்கும்பொழுது, அவர்கள்தான் மற்றவர்களை ஈர்ப்பதற்காக கூழாங்கற்களை வீசும் முதலாவது நபராக இருப்பார்கள். இதுபோல அவர்கள் “மஞ்சள் சீருடையினர் வன்முறையாளர்கள் என்று காட்டுதற்கு செய்வார்கள். முக்கால்வாசி சமயங்களில் என்சொந்தக் கண்களால் அதைப் பார்த்திருக்கிறேன், தமது சொந்த சகாக்கள் மீது கற்கள் வீசக்கூடியவர்கள், மஞ்சள் சீருடையாளர்கள் மத்தியில் இருப்பதை என் சொந்தக் கண்களால் பார்த்திருக்கிறேன் என்றார். சண்டை முடிந்ததும், தங்களின் சகாக்களைப் பார்க்க அவர்கள் மறுபுறம் போய்விடுவாவார்கள் மற்றும் அவர்கள் அவர்களால் தாக்கப்பட மாட்டார்கள்.”


அனைத்து புலம்பெர்ந்தோரும் வரவேற்கப்படுகிறார்கள்

போராட்டத்தை சர்வதேச ரீதியாக தொழிலாளர்களோடு ஐக்கியப்படுத்துவதற்கான தேவை பற்றி, Frédéric குறிப்பிட்டார், “முகநூலில்தான் பலர் மஞ்சள் சீருடையாளர்கள் பற்றிப் பேசுவதைக் காணலாம் மற்றும் மஞ்சள் சீருடையாளர்கள் எங்கும் உள்ளதை காணலாம்.  ஆனால் பிரெஞ்சு ஊடகங்கள் எமக்குச் அதைப்பற்றி சொல்வதில்லை, மாறாக அவர்கள் விஷயத்தை அமுக்கி வைக்கின்றனர்.”

உலக சோசலிச வலைத் தளம் ஒரு வரலாற்று மாணவி Hugo வை சந்தித்தது, “இமானுவல் மக்ரோனின் ஒட்டுமொத்த கொள்கை மீது, வெறும் ஒரு தனிப்பட்ட புள்ளியில் மட்டும் அல்ல, மாறாக மக்களது உண்மையான வாழ்க்கையிலிருந்து தொடர்பற்று இருக்கின்ற, அவரது முழு சுதந்திர சந்தைக் கொள்கைக்கும் எதிர்ப்பானவர். அவர் குடிமக்கள் தொடங்கும் சர்வஜனவாக்கெடுப்பு அமைக்க அழைப்பு விடுகிறார். ஏனெனில் அரசியல் பிரதிநிதித்துவ நெருக்கடியை நாமும் கூடக் கொண்டிருக்கிறோம், தேசிய நாடாளுமன்றத்தை பார்த்தால்  மக்ரோனின் கட்சிக்கு 300 பிரதிநிதிகள் இருக்கின்றனர்…… செல்வந்தர்களுக்கு வரிவிதிக்க நாம் திரும்ப வேண்டிய தேவை இருக்கிறது.”

மக்ரோனின் தேசிய விவாதத்தை Hugo ஒரு ஏமாற்று என்று அழைத்தார்: “ஆகையால் மாபெரும் விவாதம். பெருந்தோல்வியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆம், அவர் அவரது நிலைப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் இந்த இயக்கம் நீண்ட காலம் செயல்பட வேண்டியது தொடர்கிறது. அவர் மேலும் குறிப்பிட்டார், “மக்ரோனின் விவாதம் இது போலித்தனமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். அதில் அவர் மேயர்கள் போன்ற இடைத்தர அடுக்குக்கு உரையாற்றுகிறார். அவர் நேரடியாக மக்களைக் கேட்கவில்லை அல்லது மக்களை ஒரு வாக்கெடுப்பு மூலம் தீர்மானிப்பதற்கு அவர்களை விடவில்லை. அது அவரை அம்பலப்படுத்திவிடும் என்று அவர் அறிவார், ஆகையால் அது ஒரு ஏமற்றுத்தான்.”


பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அடையாள அட்டை

உலக சோசலிச வலைத் தளம் சமூக உளவியலில் முதுமானி ஆய்வு மாணவரும் தன்னை யார் எனக் காட்டிக்கொள்ள விரும்பாதவருமான ஒருவரிடம் பேசியது, இவர் “பிரான்சில் பல தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கிய சுதந்திர சந்தை கொள்கைகளைக் கண்டித்து” இங்கே வந்து கலந்து கொண்டார். சிக்கனப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொதுச் சேவைகளை வெட்டல் மக்களில் சிறிய அடுக்கில் செல்வக்குவிப்புக்கு வழிவகுத்தது, அதில் மக்ரோனும் ஒரு பகுதி.”

தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிக் கேட்கையில், அவர் சொன்னார்: “பிரான்சில் உள்ள அரசியல் கட்சிகளும் தொழிறசங்கங்களும் இன்று அபரிமிதமான ஏமாற்றத்தை அளித்துள்ளனர்; இன்று முன்வைக்கப்பட்டுள்ள சமூகக் கடமைகளை தீர்க்கும் அளவிற்கு சிறிதும் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. மக்கள் அவர்களை விரும்பவில்லை மற்றும் அவர்களிடமிருந்து விடுபடவே விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இன்று ஐரோப்பா முழுவதிலும் போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டியதன் தேவை பற்றி அவர் ஆர்வத்துடன் கூறினார், “ஐரோப்பிய வேலை நிறுத்தம் என்ற ஒன்று வந்தால் அது அற்புதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்; அது உண்மையில் அசாதாரணமானது ஏனெனில் இந்தப் பிரச்சினையில் முக்கிய பிரச்சனை பணமும் பொருளாதாரமுமாகும். நமது தாக்குதலை அங்கேதான் இறக்க வேண்டும். அது அருமையான தீர்வாக இருக்கும்.”