ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One-day national strike paralyzes Belgium

ஒருநாள் தேசிய வேலைநிறுத்தம் பெல்ஜியத்தை முடக்குகிறது

By Will Morrow 
14 February 2019

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி மற்றும் ஓய்வூதியங்கள், பிற சமூக உரிமைகள் மீதான அரசாங்கத் தாக்குதல்களை எதிர்த்தும் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு தேசிய 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் இணைந்ததால் பெல்ஜியத்தின் பெருமளவான பகுதிகள் நேற்று முற்றாக செயலிழந்தன.

இந்த வேலைநிறுத்தம் ஒரு கடுமையான முரண்பாடுகளால் குணாதிசயப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரு புறத்தில், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை அது நிரூபித்தது. வலதுசாரி அரசாங்க பிரதமர் சார்ல்ஸ் மிஷேல் மற்றும் அவரது சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான முன்னோடி எலியோ டி ரூபோ (2011-2014) ஆகியோரால் திணிக்கப்பட்ட ஒரு தசாப்த காலத்திற்கு மேலான ஆழ்ந்த சமூக சிக்கன நடவடிக்கை தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை தூண்டியது.

மறுபுறத்தில், வேலைநிறுத்தம் மூன்று பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளால் அழைப்புவிடப்பட்டுள்ளது. அவை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் பலத்தை அணிதிரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக அதிகரித்துவரும்  தொழிலாள வர்க்க எதிர்ப்பை பலமிழக்கசெய்யவும் அதன் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கவும் முனைகின்றது. தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் சிக்கன நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தைகளை நாளை தொடங்குகின்றன.

வணிக சார்பு தினசரி பத்திரிகை Le Soir மூலம் இந்த உண்மை எடுத்துக்காட்டப்பட்டது. அப் பத்திரிகை நேற்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துடன் தொடர "மிகவும் உறுதியாக உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தது, ஏனெனில் அவை மஞ்சள் சீருடை இயக்கத்தினால் ஆச்சரியமடைந்துள்ளதாகவும், அவை அரசியல் ஆளும்தட்டினரைபோல் இதை செய்ய தாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டது.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் மீது தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சீற்றம் என்பவற்றிற்கு தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. பேர்லினில் 70,000 ஆசிரியர்கள், சமூசேவை தொழிலாளர்கள் மற்றும் பிற பொதுத்துறை ஊழியர்கள் நேற்று நகரம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்; சுமார் 20,000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் போர்க்குணத்திற்கு அஞ்சி இந்த "எச்சரிக்கை வேலைநிறுத்தத்திற்கு" அழைப்பதற்கு தொழிற்சங்கங்கள் நிர்பந்திக்கப்பட்டன. ஆபிரிக்காவிலும் அமெரிக்காவிலும் ஆசிரியர்களின் மற்றைய வேலைநிறுத்தங்கள் சர்வதேச அளவில் நடந்து வருகின்றன.

பெல்ஜியத்தில், நேற்றைய வேலைநிறுத்தம் பொது மற்றும் தனியார் துறைகளை பாதித்ததுடன், நாட்டின் தெற்கு பிரெஞ்சு மொழி பேசும் பகுதியையும், வடக்கு பிளேமிஷ் மொழி பேசும் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது. அன்ட்வெர்ப் மற்றும் ஜென்ட்  ஆகிய முக்கிய துறைமுகங்களில் உள்ள தொழிலாளர்கள் பொருட்கள் ஏற்றுவதை தடைசெய்து சர்வதேச வர்த்தகத்தை நிறுத்தி, இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். அதே நேரத்தில் ஜென்ட்டில் கூட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் "நூற்றுக்கணக்கான" தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தது.

நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் செல்லும் எல்லா பயணிகள் விமானங்களும் நாள் முழுவதும் நிறுத்தப்பட்டது. தேசிய விமான போக்குவரத்து ஆணையம், ஷ்கெயெஸ் (Skeyes), செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது, "பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாததால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முக்கிய பதவிகளை பொறுத்தவரை எந்த நிச்சயமும் இல்லை” என்று அறிவித்தது. பிரஸ்ஸல்ஸ் மற்றும் சார்லுருவா விமான நிலையங்கள் மூடப்பட்டன, அதே நேரத்தில் TUI Fly விமான சேவை மற்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு லீல், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நெதர்லாந்து என்பவற்றுக்கு திருப்பி விடப்பட்டன. ரையன் எயர் உட்பட மற்றைய சர்வதேச விமான சேவைகளும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாட்டின் பிராந்தியத்தை பொறுத்து, 80 மற்றும் 100 க்கு இடைப்பட்ட பேருந்துகள் மற்றும் டிராம் ஆகியவை இரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் மெட்ரோபொலிட்டன் இரயில்கள் சட்டரீதியான குறைந்தபட்ச அளவிற்கு இணங்க, வழமையான எண்ணிக்கையிலும் அரைவாசியளவு இரயில்கள் சேவையில் ஈடுபட்டன. மருத்துவமனைகள் மற்றும் தீயணைப்பு படையினரின் நிர்வாக ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மருத்துவமனைகள், குறைந்தபட்சம் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன அல்லது நோயாளிகளை ஒன்றன் பின் ஒன்றாக  பார்வையிட்டன.

தனியார் துறையில், இந்த வேலைநிறுத்தம் 600-க்கும் அதிகமான நிறுவனங்கள் உலோகவியல் மற்றும் ஆடைத் தொழில்துறையினை தாக்கியது என தேசிய கிறிஸ்துவ தொழிற்சங்கத்தின் தலைவரான பெல்கா வில்லியம் வொன் எர்டகேகெம் (Belga William Van Erdegehem) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. தொழிற்துறை வலையங்களின் நுழைவாயில்களை மறித்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்குபற்றனர். தொழில்துறை இயந்திரங்கள் உற்பத்தியாளரான செராரெக் (Ceratec) இன் கொமைன்ஸ் (Comines) ஆலைக்கு வெளியேயும் போராட்டம் இடம்பெற்றதாக Voix du Nord  தினசரி பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. மிகவும் குறைந்த எண்ணிக்கையான பல்பொருள் அங்காடிகள் நாடு முழுவதும் மூடப்பட்டன: Carrefour இனது மொத்தம் 800 கடைகளில் 44 கடைகள் மூடப்பட்டன Delhaize இனது 650 இல் 68 மூடப்பட்டன.

நேற்றைய வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தொழிற்சங்க அறிக்கைகள் தெளிவுபடுத்துவது என்னவெனில், 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கு பின்னர் அவர்கள் செய்தது போலவே, அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் சிக்கன வெட்டுக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவை முனைகின்றன.

முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் இந்த ஆண்டு வருடாந்த சம்பள உயர்வுக்கு என்ன எல்லை நிர்ணயிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததன் பின்னர் வேலைநிறுத்தம் ஜனவரி மாதம் அழைக்கப்பட்டிருந்தது.  ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத அமைப்புமுறையின்படி, தொழிற்சங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதரவுடன், பெல்ஜிய "போட்டித்தன்மையை" பராமரித்தல் பெயரில். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் ஊதிய உயர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டின் படி, பெல்ஜியத்தில் ஊதிய உயர்வு ஒவ்வொரு ஆண்டும் மட்டுப்படுத்தப்படுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெல்ஜிய தொழிலாளர்கள் அதிக இலாபங்களுக்கான முடிவில்லா பெருநிறுவன கோரிக்கைகளை பூர்த்தி செய்ய மற்ற நாடுகளில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளோடு போட்டியிட வேண்டும். இந்த "தொழில்களுக்கு அப்பாற்பட்ட உடன்படிக்கை" என்பது "சமூக பேச்சுவார்த்தை" என்றழைக்கப்படுவதன் ஒரு கூறு ஆகும். இதில் தொழிற்சங்கங்கள், கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் முதலாளிகள் என்ற பெருநிறுவன கூட்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஈடுபட்டுள்ளது.

பெல்ஜிய பொது தொழிலாளர் கூட்டமைப்பின் (FGTB) தலைவரான ராபர்ட் வெர்டினுயில் (Robert Verteneuil) நேற்று Le Soir  இடம் கூறினார்: "வேலைநிறுத்தம் தொழில்களுக்கு அப்பாற்பட்ட உடன்படிக்கைக்கு எதிரானது அல்ல, ஆனால் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு தொழில்களுக்கு அப்பாற்பட்ட ஒப்பந்தத்திற்க்கானதாகும்." அவர் வேலைவாய்ப்பு அமைச்சர் கிறிஸ்டியன் பீட்டர்ஸ் "தனது வேலையைச் செய்யுங்கள்" மற்றும் "சமூக பேச்சுவார்த்தையை  பேணிக்கொண்டு" என்று அவர் கோரினார்.

தொழிற்சங்க தலைவர்களின் உத்தியோகபூர்வ கோரிக்கைகள் கூட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வறுமை-நிலை ஊதியங்கள் என்பதையே அர்த்தப்படுத்தும். முதலாளிகள் சங்கங்கள் ஊதிய உயர்வு 0.8 சதவிகிதமாக இருக்க கோருகின்றன, உணவுஉபசரிப்பு தொழிலாளிக்கு மாதம் ஒன்றிற்கு 9 யூரோ ஊதிய உயர்வை அளிக்க கோரி தொழிற்சங்கங்கள் 1.4 சதவிகிதம் கோருகின்றன. அதே கணக்கீட்டின்படி, இது மாதாந்தம் 15 யூரோ அதிகரிப்பாகும்.

சென்ற அக்டோபரில் ஐரோப்பிய புள்ளிவிவர நிறுவனம் யூரோஸ்டாட் (Eurostat) வெளியிட்ட ஒரு அறிக்கையில், 20 சதவிகித மக்கள் அல்லது 2.3 மில்லியன் மக்கள், வறுமை அல்லது சமூக வீழ்ச்சி ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகிறார்கள். எட்டு பெல்ஜியர்களில் ஒருவர் மிக குறைந்த அளவிலான வேலைவாய்ப்பு கொண்ட ஒரு குடும்பத்தில் வாழ்கிறார். ஐரோப்பிய சராசரி 9.3 சதவிகிதத்தை விட இது அதிகம்.

தலைநகரான புருஸ்ஸல்ஸில், மூன்றில் ஒரு பகுதி மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழான வருமானத்தில் வாழ்கின்றனர். இது ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கு 260 யூரோவாக, அல்லது நான்கு அங்கத்தவர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு மாதத்திற்கு 546 யூரோவாக அமைகிறது. பிரஸ்ஸல்ஸில் ஐந்து பேரில் ஒருவருக்கு சமூக உதவியில் தங்கியிருக்கின்றனர். தெற்கு வலோனியா பிராந்தியத்தில், நான்கு நபர்களில் ஒருவர் வறுமையால் அச்சுறுத்தப்படுகிறார்; 20 சதவிகிதத்திற்கும் மேல் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். ஒற்றை-பெற்றோர் குடும்பங்களுக்கு, வறுமை சதவீதம் 46.7% ஆகும்.

டி ரூபாவின் கீழ் சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன வெட்டுக்களைத் தொடர்ந்து, 2014 இல் அதிகாரத்திற்கு வந்த மிஷேல் அரசாங்கம் மிருகத்தனமான சிக்கன தாக்குதல்களை தொடங்கியது. கலாச்சார மற்றும் விஞ்ஞான வரவு-செலவுத் திட்டங்களுக்கு 20 சதவிகித வெட்டுக்கள், தனியார்மயமாக்கல், ஓய்வூதிய வெட்டுக்கள் ஆகியவை அடங்கும். அரசாங்கத்தின் 2016-2017 தொழிலாளர் சட்டங்கள் வாரத்துக்கு 38 மணி நேர வேலை, ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான வழியாக, ஓய்வூதிய அளவுகள் நேரடியாக பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக மிஷேல் இன் 2018 இராணுவ வரவு-செலவு திட்டத்தில் இராணுவ செலவு ஒதுக்கீடுகளுக்கு வரவு-செலவு திட்டத்தில் முன்மதிப்பிட்டிராத ஐந்து மடங்கு அதிகரிப்பு உள்ளடங்குகிறது; 2020 மற்றும் 2030 க்கு இடையில் இராணுவ தளபாடங்களுக்கான செலவில் 9.2 பில்லியன் யூரோ செலவை கொண்டுள்ளது.

தமது போராட்டத்தை முன்னடுக்க முனையும் தொழிலாளர்களின் முன்னுள்ள முக்கிய கேள்வி பெருநிறுவனங்கள் சார்பான தொழிற்சங்கங்களிடம் இருந்து போராட்டத்தை தமது கைகளில் எடுப்பதாகும். தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலும்  ஜனநாயகரீதியில் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் என்ற சுயாதீனமான அமைப்புக்கள் தேவையாக உள்ளது. அத்தகைய குழுக்கள், ஐரோப்பா முழுவதும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளிடம் தங்கள் போராட்டத்தை கொண்டுசெல்லவும், ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்களுக்கு உதவும்.