ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fascist deputies disrupt Holocaust memorial in Germany

மாநில பாராளுமன்ற பாசிச பிரதிநிதிகள் ஜேர்மனியில் ஹோலோகோஸ்ட் நினைவு தினத்தில் குழப்பம் விளைவித்தனர்

Peter Schwarz and Andre Damon
26 January 2019

புதனன்று, ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் பிரதிநிதிகள் பவேரியாவின் மாநில சட்டமன்றத்தில் ஒரு ஹோலோகோஸ்ட் (Holocaust) நினைவுதினத்தில் குழப்பம் விளைவித்தனர். சபையில் இருந்து ஒரு டசினுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேறியதுடன் ஒரு உறுப்பினர் ஹோலோகோஸ்ட் இல் இருந்து உயிர்தப்பிய பேச்சாளர் மீது தூற்றும் கருத்தை வெளியிட்டார்.

இந்த வார நிகழ்வு, அடொல்ப் ஹிட்லர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அவரது இழிபுகள்பெற்ற மூனிச் மதுபானசாலை சதியை (Munich Beer Hall Putsch) நடாத்திய அதே நகரில் நடந்தது. இது ஜேர்மனில் நாஜி ஆட்சி மற்றும் ஹோலோகோஸ்ட் ஆகியவற்றை தற்போது மறுபுனருத்தானம் செய்வதை வெளிப்படுத்தி காட்டுகின்றது.

AfD கட்சியின் நவ-நாஜிக்கள் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் துணிவு பெற்றதற்கு காரணம், பாரிய கூட்டணி அரசாங்கம் குடியேற்ற எதிர்ப்பு, இனவெறி மற்றும் இறுதியில் யூத-எதிர்ப்புக் கொள்கைகளை ஊக்குவிப்பதுடன் நியாயப்படுத்துவதாலாகும். ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளால் அவர்கள் தீவிரமாக விமர்சிக்கப்படுவதில்லை என்று பாசிஸ்டுகள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் AfD இன் இந்த பிரச்சாரத்தை தமதாக்கிக் கொண்டன.

ஜேர்மனியின் “வரவேற்கும் கலாச்சாரம்" பற்றி AfD இன் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டதால் பெருங் கூட்டணி ஜேர்மனியின் எல்லைக்குள் அகதிகளுக்கு இடைத்தங்கல் அகதி முகாம்களை அமைத்துள்ளது. இதற்கிடையில், நவ நாஜிக்கள் ஜேர்மன் நகரங்களின் தெருக்களில் அட்டூழியம் செய்ய போலிசாரால் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு அவர்கள் கெம்னிட்ஸ் நகரில் வெளிநாட்டவர், அகதிகள், இடதுசாரிகள் மற்றும் யூத உணவகங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

புதனன்று நினைவுதினம் AfD உறுப்பினர்களால் இலக்கு வைக்கப்பட்டது. Charlotte Knobloch எனும் ஹோலோகோஸ்டில் உயிர் பிழைத்தவரும் மற்றும் மூனிச்சில் யூத சமுதாயத்தின் தலைவருமான அவர், உத்தியோகபூர்வ ஜேர்மானிய அரசியலில் எந்த ஒருவரும் பேச துணியாத அடிப்படை உண்மைகளைப் பற்றிப் பேசிய பின்னர் புதனன்று நினைவுதினம் AfD உறுப்பினர்களால் இலக்கு வைக்கப்பட்டது.

“AfD, வெறுமனே வெறுப்பு மற்றும் விலக்கிவைத்தல் ஆகியவற்றின் மீது தனது  அரசியலை அடிப்படையாகக் கொண்டது” என்று Knobloch கூறினார். “கற்பனைசெய்யமுடியாத ஒன்றை மீண்டும் நிகழாதிருக்க செய்வது என்பது நமது பொறுப்பாகும்" AfD இன் அரசியல் எங்கு செல்கிறது என்பது கூர்மையான ஒரு எச்சரிக்கையாகும் என மேலும் அவர் கூறினார்.

ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த உரையைப் பாராட்டிய போது AfD கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பை காட்ட சபையை விட்டு வெளியேறினர்.

ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், AfD உறுப்பினரான Ulrich Singer ஹோலோகோஸ்டில் தப்பிய அப்பேச்சாளரை பொய்கள், இகழ்வு, அவமதிப்பு, முட்டாள்த்தனம் மற்றும் சிறுபிள்ளைத்தனம் என்று விமர்சித்து எழுதியிருந்தார். அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் அவதூறுகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை தான் பெற்றதாக Knobloch கூறினார்.

Charlotte Knobloch 1932 ஆம் ஆண்டில் மூனிச் நகரில் பிறந்தார். அவருக்கு ஆறு வயதான போது கிறிஸ்டால் இரவு என்ற நிகழ்வின் போது யூத தேவாலையம் எரிக்கப்பட்டதை நேரில் கண்டார். அங்குள்ள கத்தோலிக்க குடும்பம் ஒன்று அவரை மறைத்து, தங்கள் சொந்த மகளின் சட்டவிரோதமான குழந்தை என்று நடித்ததால் மட்டுமே அவர் ஹோலோகோஸ்ட்டில் தப்பிப் பிழைத்தார். அவர் ஜேர்மனியிலேயை தங்கி இருந்தார். பின்னர் யூத அமைப்புக்களில் முக்கிய பங்கு வகித்தார்.

AfD இன் தலைவர் ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட யூதர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்டதன் வரலாற்று முக்கியத்துவத்தை நிராகரித்து ஹிட்லரின் ஆட்சியை நியாயப்படுத்தி சட்டபூர்வமானதாக்கினர். ஹோலோகோஸ்டின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுக்க முற்பட்டார்.

நாஜி சர்வாதிகாரம் “ஜேர்மன் வரலாற்றின் வெற்றிகரமான ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பறவை எச்சத்தை போன்றது" என AfD தலைவர் அலெக்சாட்ண்டர் கௌலாண்ட் பகிரங்கமாகக் கூறியுள்ளார். துரிங்கியா மாநிலத்தில் உள்ள AfD இன் தலைவரான பியோர்ண் ஹோக்க, பேர்லின் நகரிலுள்ள ஹோலோகோஸ்ட் நினைவகத்தை “வெட்கங்கெட்ட நினைவுச் சின்னம்,” என்று குறிப்பிட்டதோடு ஹோலோகோஸ்ட் பற்றிய நாட்டின் அணுகுமுறையில் 180 பாகை திருப்பம் வேண்டும் எனக்கோரினார்.

ஜேர்மனியின் செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபகமும் AfD இன் எழுச்சியை முறையாக ஊக்குவித்தன. 2014 ஆம் ஆண்டில், ஜேர்மன் செய்தி வாராந்த இதழ் Der Spiegel, இரண்டாம் உலகப் போருக்காக ஜேர்மனியின் பொறுப்புக்களை குறைத்துக்காட்டுவதற்காக ஒரு முக்கிய கதையை அர்ப்பணித்தது. ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி (Jörg Baberowski) இனை மேற்கோளிட்டு “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்லர், அவர் தீயவர் அல்லர், அவர் யூதர்களை அழிப்பது பற்றி தனது மேசையில் பேசுவதை விரும்பவில்லை" என்று கூறினார்.

இதை அடுத்த ஆண்டுகளில், செய்தி ஊடகம் தீவிர வலது, குடிபெயர்ந்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்துள்ளது. மேலும் AfD இன் எழுச்சியை, மக்களின் உணர்வுகளின் நியாயபூர்வமான வெளிப்பாடு என்று கூறியதுடன், ஜேர்மானிய அரசியல் ஸ்தாபகத்தின் தீவிர வலது நோக்கிய திருப்பத்திற்கு வலுவான அரசியல் சூழலை உருவாக்குகின்றது.

இதற்கிடையில், AfD உடன் தொடர்புடைய நபர்கள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பெருங் கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய அரசியல் நிலைப்டை முன்னெடுக்க ஊக்கமளித்துள்ளன. இதில் ஜேர்மன் இரகசிய சேவை முன்னாள் தலைவர் ஹான்ஸ்-கியோர்க் மாஸனும் அடங்குவார். AfD க்கு ஆதரவளித்து பதவி உயர்வு பெற்றார். அத்துடன் கெம்னிட்ஸில் நவ நாஜி கலகத்தைத் தூண்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) மற்றும் அதன் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்புமே நாஜிக்களின் மறுபுனருத்தானம் செய்வதற்கு எதிராக நிற்கும் அரசியல் அமைப்புக்கள் ஆகும்.

ஜேர்மனியின் ஆக்கிரோஷ ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவவாதத்திற்கு ஜேர்மனி திரும்புவதற்கு “20 ஆம் நூற்றாண்டின் ஒரு புதிய கட்டுக்கதை தேவை, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைக் குறைத்து நியாயப்படுத்துகின்ற வகையில் வரலாற்றை பொய்மைப்படுத்த வேண்டும்" என SGP ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரித்தது.

ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பார்பெரொவ்ஸ்கி போன்றவர்களின் விமர்சனங்களின் விளைவாக SEP உம் IYSSE உம் ஜேர்மனியின் முக்கிய செய்தித் தாள்களில் கடுமையான கண்டனங்களின் இலக்குகளாக மாறியது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் SPD தலைவர் சபீன குன்ஸ்ட், பகிரங்கமாக ஜோர்க் பார்பெரொவ்ஸ்கியை பாதுகாத்து அவரது நவ-நாஜி கருத்துக்கள் மீதான விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றார்.

AfD கீழே இருந்து அல்ல, ஆனால் மேலே இருந்து அரசியல் ஆளுமதட்டிலிருந்து ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு மூலம் ஊக்குவிக்கப்பட்டது. இதற்கிடையில், மக்கள் அவர்களது செயல்களை வெறுப்புடன் பார்க்கின்றனர். நவ-நாஜிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நூறாயிரக் கணக்கான மக்களை ஈர்த்துள்ளன. ஆனால் AfD இந்த பரந்த எதிர்ப்பை உத்தியோகபூர்வ அரசியலில் வெளிப்படுத்தப்படவில்லை.

அரசியல் கட்சிகளின் மத்தியில் நிலவுகின்ற அமைதி மற்றும் உடந்தையாக இருப்பதற்கு மாறாக, SEP மற்றும் IYSSE தீவிர வலதுசாரி முன்னெடுப்பை அம்பலப்படுத்துவதற்கு ஒரு கொள்கை ரீதியான போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன.

இதன் விளைவாக, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பாராளுமன்றத்திற்கான மிகவும் சமீபத்திய தேர்தலில் IYSSE அதன் வாக்குகளில் கணிசமான அதிகரிப்பைக் கண்டது. மிகவும் பரந்த ஆதரவளிக்கப்பட்ட மாணவர் குழுக்களில் ஒன்றாக உருவானது. மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு கோழைத்தனமாக அடிபணிந்த இடது கட்சியை விட அதிகமான வாக்குகளை பெற்றது.

உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டத்திற்கான வெடிப்பிற்கு மத்தியில், IYSSE மற்றும் SGP முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் அடிப்படையில் பாசிச எழுச்சிக்கு எதிரான போராட்டத்தை தொடரும்.

ஜேர்மனியில் பாசிசத்தின் மீள் எழுச்சி மற்றும் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் தட்டினரால் நவ நாஜிகள் அணைத்துக்கொள்ளப்படுபவை ஆகியவை ஜேர்மன் பாசிசம் ஒரு விதிவிலக்கல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. மாறாக முதலாளித்துவத்தின் மிக அடிப்படைப் போக்குகளான போர் பிற்போக்குத்தனம் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டம், வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சோசலிதத்திற்கான போராட்டம் ஆகும்.