ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Supreme Court clears reopening of polluting Sterlite copper plant in Tuticorin

இந்திய உச்சநீதிமன்றம் தூத்துக்குடியிலிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்குகிறது

By Shibu Vavara
11 February 2019

தமிழ்நாட்டின் தென்பகுதியான தூத்துக்குடியிலிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறப்பதற்கு நாட்டின் உயர்ந்த நீதிதுறையான இந்திய உச்சநீதிமன்றம் ஜனவரி 8 அன்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆலையானது ஆபத்தான சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தியற்காக பரந்த மக்கள் எதிர்ப்புகளுக்குப் பின்னர் கடந்த வருடத்தின் மத்தியில் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆலையின் மூலம் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசடைந்ததன் காரணமாக ஆபத்தான சுகாதார நிலமைகளில் மாதக்கணக்கான வெகுஜனப் போராட்டங்களுக்குப் பின்னரே மூடப்பட்டது. நாட்டின் பசுமை நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவற்றால் வழங்கப்பட்ட டிசம்பர் 15 ஆணையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இது வேதாந்தா தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆணையை ஒதுக்கி வைத்துள்ளது.

இந்த அபிவிருத்திகள் இந்திய அதிகாரிகளை பிரதானமாக நீதித்துறை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பவர்கள் என கூறிக்கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என வெளிப்படுத்தியிருக்கின்றது. இவர்கள் பத்தாயிரக்கணக்கான கிராமத்தவர்களின் சுகாதார நலன்களை விற்று பெரு நிறுவனங்களின் வணிக இலாப நோக்குகளைப் பாதுகாப்பதற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்த வருட மே 26 உலக சோசலிச வலைத் தள முன்னோக்கு கட்டுரை தலைப்பான தூத்துக்குடி படுகொலையும், மோடியின் இந்தியாவும் அதில் “வேதாந்தா ஆகக்குறைந்த சுற்றுச்சூழல் தரமுறைகளைக் கூட கடைபிடிக்கவில்லை என்பதால் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட அவர்கள் (இந்திய அதிகாரிகள்) நிர்பந்திக்கப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களைப் போலவே, தாமதிக்காமல், விரைவிலேயே, அவர்கள் அந்த உருக்காலையை மீண்டும் திறக்க பச்சைக்கொடி காட்டுவார்கள்.” என இதனை ஒரு எச்சரிக்கையாக வெளியிட்டிருந்தது.

மூன்று வாரத்திற்குள் வேதாந்தா தாமிர உருக்காலையை திறக்க ஒப்புதல் அளிக்கும் புதுப்பிக்கப்பட்ட ஒரு புதிய ஆணையை வழங்கும்படி தமிழ்நாடு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கட்டளையிட்டது. ஆலையால் ஏற்படும் உடல் நல ஆபத்துக்களை முழுமையாக அலட்சியம் செய்து அதனை மூடி மறைக்கும் முயற்சியில், அந்தப் பகுதியில் மக்கள் நலனுக்காக மூன்று வருடத்திற்குள் 10 மில்லியன் ரூபாய்கள் ($US140,450) செலவு செய்ய வேண்டுமென அந்த நிறுவனத்திற்கு கூறியிருக்கிறது. தேசிய பசுமை தீப்பாயத்தின் விசாரணையின்போது, அந்த பணமானது நீர் விநியோகம், மருத்துவமனை, சுகாதார நல சேவைகள் மற்றும் திறன் வளர்ச்சி போன்ற திட்டங்களுக்காக செலவிடப்படலாம் என உருக்காலையின் ஆலோசணைக்குழு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் உருக்காலையை மூடுவதற்கு முன்னதாக நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டடனர் என கடந்தமாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்களின் குழுவானது கூறியுள்ளது. பல தசாப்தங்களாக ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியே விடுவதற்கு இந்திய நீதிமன்றத்தைப் போன்று மற்ற அரச எந்திரங்களும், அரசியல் ஸ்தாபனமும் வேதாந்தா மற்றும் அதன் பல கோடி கோடீஸ்வர (பில்லியன்) முதலாளி அனில் அகர்வாலுக்கு பச்சை விளக்கு காட்டினர்.

மே மாத ஆரம்பத்தில், ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையானது 14 பேரை சுட்டுக்கொன்றதுடன் 100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், வெகுஜன கோபத்தை எதிர்கொண்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மாசுபடுத்தும் ஆலையை இழுத்து மூடினர். சென்னை உயர்நீதிமன்றமும் தற்போது ஆண்டுக்கு இரண்டு மடங்கு 4,00,000 டன்கள் உற்பத்திசெய்வதற்கான ஆலையின் திட்டங்களை நிறுத்திவிட்டது. ஆலையை மூடுவதற்கும், மின்விநியோகத்தை துண்டிப்பதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் பொறியாளர் மே 18-19 இல் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுத்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஏப்ரலில் உற்பத்தியை நிறுத்துவதற்கு முந்தைய வாரியத்தின் உத்தரவுக்கும், சுற்றுச்சூழல் அனுமதி நீட்டிப்பு நிலுவையில் இருப்பற்கும் மாறாக உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பிதற்கு ஆலையினர் தயாரித்துக்கொண்டிருக்கின்னர் என அவர் அறிக்கையளித்துள்ளார். எவ்வாறாக இருந்தபோதிலும் அரசு அதிகாரிகளைக் கொண்டு காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட பொதுமக்களின் சீற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கை தெளிவாக இருந்தது. ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் சமூக பதட்டங்களால் தூத்துக்குடியில் ஏற்பட்ட அரசு ஒடுக்குமுறையின் காரணமாக வன்முறை தீவிரமாகிவிடும் என இந்திய ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் பயந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுசூழல் மாசுபடுத்தலுக்கு எதிராக மே மாத இறுதியில் ஏற்பட்ட பிரபல போராட்டத்தை மிகக் கொடூரமாக நசுக்குவதற்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினரை அனுப்பியிருந்ததுடன் மேலும் “பொது ஒழுங்கைப்” பாதுகாப்பதற்கு அத்தியாவசிய நடவடிக்கையாக எதிர்ப்பாளர்களின் படுகொலைகள் இருந்தாக நியாயப்படுத்திய அஇஅதிமுக அரசாங்கம் இந்தப் பிரச்சனையில் எந்தப்பக்கத்தில் நிற்கிறார்கள் என்பது ஒரு தெளிவான அறிகுறியாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் உருக்காலை 1996 இல் திறக்கப்பட்ட நாளிலிருந்து தூத்துக்குடி மக்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது சுற்றுசூழலை மாசுபடுத்துவதற்கான மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை உதாசீனம் செய்ததுடன் மேலும் ஆலையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு அனுமதித்தார்கள். நச்சுக் கழிவுகளுக்காக அதிகாரிகள் ஆலை மூடலுக்கான உத்தரவிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கமானது ஆலையை விரைவில் மீண்டும் திறப்பதறாக அனுமதி வழங்கியிருக்கிறது.

பிப்ரவரியில் ஒரு ஆர்ப்பாட்ட அலை தொடங்கியது, அது மே மாதத்தில் 14 எதிர்ப்பாளர்களை கொன்றதுடன் முடிவுற்றது. ஆர்சனிக், ஈயம் மற்றும் சல்பர் டைஆக்சைடு போன்றவைகளால் நிலத்தடி நீரை நஞ்சாக மாறுவதற்கும் ஆபத்தான உடல்நல கேடுகளை விளைவிப்பதற்கும் காரணமான நச்சுக்கழிவுகளை தேக்கும் ஆலையை மூடுவதற்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கைவைத்தனர். இந்த உருக்காலை குறித்த வெகுஜன எதிர்ப்பானது இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள் மற்றும் வேலை மற்றும் வாழ்க்கை நிலமைகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமத்தின் உழைப்பாளர்கள் போன்றவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சமூக போராட்டங்களின் ஒரு பாகமாகும்.

ஆலை மீண்டும் திறப்பதற்கான தேசிய பசுமை தீப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தூத்துக்குடியிலும் மற்றும் மாநில தலைநகர் சென்னையிலும் தீடீரென போராட்டங்கள் மீண்டும் வெடிக்கலாம் என தமிழ்நாடு அரசாங்கமும், அதிகாரிகளும் அச்சமடைந்துள்ளனர். பல்வேறு வடிவிலான போராட்டங்ளை ஆலையைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் நடத்தியிருக்கிறார்கள். இந்த உத்தரவுக்கு தங்களுடைய எதிர்ப்புகளத் தெரிவிப்பதற்காக கறுப்புக் கொடிகளைக் காண்பித்து உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார்கள். இருந்தபோதிலும், காவல்துறையினர் எதிப்பாளர்களிடமிருந்து கொடிகளை பிடுங்கினர், அதன் பின்னர் கிராமத்து மக்கள் தங்களது சேலைகளை கிழித்து அவற்றிலிருந்து கொடிகளை செய்தனர்.

டிசம்பர் 20 அன்று தூத்துக்குடியிலிருந்து மாணவர்கள் குழு ஒன்று ஸ்டெர்லைட்டின் மாசுபடுத்தலுக்கு எதிராக சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்கள். தூத்துக்குடியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாணவர் சங்கத்தின் 10 உறுப்பினர்களாகிய அவர்கள் 11 மணியளவில் ஸ்டெர்லைட்க்கு எதிரான வார்த்தைகளைக் கொண்ட அட்டைகளையும் துணியில் எழுதிய பதாகைகளையும் எடுத்துக் கொண்டு பத்திரிகையாளர் சங்கத்திற்கு அருகில் வந்தார்கள். காவல்துறை குழுவொன்று அவர்களை சுற்றிவளைத்து கைதுசெய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றார்கள். மாணவர்களின் திட்டத்தை அறிந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் முன்கூட்டியே அந்த இடத்துக்கு வந்து கைதுசெய்தனர். அந்த மாணவர்கள் அதே தினம் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சமூக நெருக்கடிகளினால் வரும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கு எவ்வாறு தமிழ்நாட்டு அரசாங்கம் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கின்றன என்பதே காவல்துறையின் நடவடிக்கைகள் கூறுகின்றன.

வேதாந்தா சொத்துகளில் 70 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் கோடீஸ்வரரான அனில் அகரவால், உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிராக இந்திய தேசியவாதத்தை தூண்டிவிடுவதற்கு முயற்சித்துள்ளார், இந்தியாவை இறக்குமதியிலேயே தங்கிருக்க செய்வதற்கான இந்த பிரச்சாரம் ஒரு “வெளிநாட்டு சதி” என்று கூறியுள்ளார். அஇஅதிமுகவும் அதன் அரசாங்கமும் தேசிய பசுமை தீப்பாயத்தின் முடிவுக்கு எதிராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்திருப்பதாகவும் அறிக்கை அளித்திருக்கிறது. பொதுமக்களின் சமூக சீற்றம் அவர்களுடைய தேர்தல் வெற்றிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அது கருதுகிறது.

இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியாக இருக்கும் தமிழ்நாட்டு பிராந்திய கட்சியான திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) போன்ற உத்தியோகபூர்வ பாராளுமன்ற கட்சிகள் பொதுமக்களின் சீற்றத்தை சுரண்டுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றன, அவர்களின் முயற்சிகள் அங்கே வசிப்பவர்களின் உடல் நலன் மற்றும் வாழ்க்கை நிலமைகள் குறித்து எதுவும் கிடையாது. இந்த ஆண்டு தேசிய தேர்தல்களை எதிர்கொள்ளும் மத்தியில் ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக கட்சி (பிஜேபி) ஆட்சியை .மற்றும் அஇஅதிமுக மாநில அரசாங்கத்திற்கு எதிராக தங்களது தேர்தல் ஆதாயங்களை பலப்படுத்த முயற்சிக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான எந்த அணிதிரட்டலையும் இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் பகுதியாக இருக்கும் ஸ்ராலினிச சிபிஎம் கட்சி எதிர்க்கிறது. அதன் கூட்டாளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உடன் சேர்ந்து சிபிஎம் வெகுஜன சீற்றத்தை திசை திருப்புவதற்கும் மற்றும் காங்கிரஸ், திமுக மற்றும் இதர பிராந்திய கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக கீழ்படிய வைப்பதற்கும் வேலை செய்கின்றன. மே 22 படுகொலைகளைத் தொடர்ந்து, சிபிஎம் மற்றும் சிபிஐ யும் சேர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக வுடன் இணைந்து கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு அறை கூவல்விடுத்தன. அந்த இரு கட்சிகளும்தான் உள்ளூர் மக்களின் வாழ்வாதரங்கள் மற்றும் உயிர்களை விற்று அதிகப்படியாக லாபங்களை உறிஞ்சுவதற்கு வேதாந்தாவை அனுமதித்த முதல் குற்றவாளிகளாவர்.

இவ்வாறாக வளர்ச்சி கண்டுவரம் எதிர்ப்பு, மோடி அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க சவாலாக அரசியல் வடிவம் எடுப்பதிலிருந்து அதனை தடுத்தது, ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பின்பற்றி வந்த துரோக கொள்கைகள் தான். பல தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகள் வர்க்க போராட்டங்களை முறையாக அடக்கிவைத்து அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்தனர். பிஜேபி மற்றும் பிற்போக்கை, முதலாளித்துவம் தழுவலுக்கு பதிலிறுப்பாக அவர்கள் மேலும் வலது பக்கமாக திரும்பினர், மற்றும் , காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டணியைத் தொடர்கின்றனர், அந்த கட்சி தான் கடந்த கால் நூற்றாண்டாக நவீன தாராளவாத சீர்திருந்தத்தை முன்னெடுத்த கட்சியாகவும், வாஷிங்டனுடன் இந்தியா “பூகோள மூலோபாயக் கூட்டு” உருவாக்குவதையும் முன்னெடுத்தது.

சுற்றுசூழல் விதிகளை நீக்குதல் மற்றும் முதலாளிகளின் இஷ்டப்படி தொழிலாளர்களை எந்தவொரு இழுப்பீடுமின்றி வேலையைவிட்டு நீக்ககூடிய ஒரு புதிய “குறிப்பிட்ட கால வேலை” பிரிவை உருவாக்குதல் உட்பட முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை மோடி அரசாங்கமானது முடுக்கிவிட்டுள்ளது. ஆது சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னிலை நாடாக திறம்பட மாற்றியிருக்கிறது.

மேலும் அதனது தீவிர வலதுசாரி செயல்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை பலவீனப்படுத்துகிறதுவதற்கும் பிரிப்பதற்குமான முயற்சியில் அது இந்து வகுப்புவாதத்தை முறையாக ஊக்குவித்துள்ளது. அண்மையில் ஐந்து மாநிலங்களில் நடந்த பொதுத் தேர்தல்களில் பிஜேபி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டிலுள்ள கணினிகள் மற்றும் மொபைல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 அரசு முகமைகளுக்கு அரசாங்கத்தின் ஆணை அனுமதியளித்துள்ளது. இந்த வகையான தீவிர முடிவுகள், சமூக சீற்றத்தினை குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற மின்னணு ஊடகங்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் உருக்காலைக்கு எதிரான ஆர்ப்பாட்டமானது இந்தியாவின் பூகோளரீதியாக இணைக்கப்பட்ட வாகனத்துறை மற்றும் பிற நிறுவனங்களின் தொழிலாளர்கள், நகர மற்றும் கிராமப்புற ஏழை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் ஈடுபட்டு வரும் இந்தியா முழுவதும் பெருகிவரும் சமூக பதட்ட அலையின் ஒரு பகுதியாகும்.

“சந்தை சார்பு” சீர்திருத்தத்தின் ஒரு கால் நூற்றாண்டு உலகின் அதிக ஏற்றத்தாழ்வான மற்றும் துருவப்படுத்தப்பட்ட சமூகங்களாக இந்தியாவை உருமாற்றியிருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதத்தினர், கிட்டத்தட்ட எல்லா வருமானங்களில் ஒரு கால்வாசியையும் 60 சதவீத நாட்டின் செல்வத்தையும் வைத்திருக்கின்றனர். இந்தியாவின் மேல்தட்டினர், உலகம் முழுவதும் அதன் வகையறாக்களைப் போலவே கீழேயிருந்து வரும் எதிப்பை மற்றும் அதன் சொந்த அமைப்பின் செயலிலழந்த தன்மையை கண்டு அஞ்சுகிறது, அவை சந்தை, லாபம் மற்றும் புவிசார் அரசின் நலன்களுக்காக இன்னும் மோசமான வெறியுடனும், பயங்கர பதட்டங்களையும் தூண்டிக்கொண்டிருக்கிறது.