ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Matamoros strike grows as Mexican ruling class warns of national strike wave

மெக்சிக்கன் ஆளும் வர்க்கம் தேசிய வேலைநிறுத்த அலை பற்றி எச்சரிக்கையில், மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் மேலும் அபிவிருத்தி காண்கிறது

By Eric London and Andrea Lobo 
2 February 2019

பல்லாயிரக்கணக்கான மத்தாமோரொஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இந்த வாரம், நீர் சுத்திகரிப்பு, பால் உற்பத்தி, கோகோ கோலா தயாரிப்பு நிறுவனங்களின் தொழிலாளர்களும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அவர்களது மத்தாமோரொஸ் பணியிடங்களை விட்டு வெளிநடப்பு செய்தனர் என்ற வகையில் மக்கில்லாடோராவைக் கடந்து அது பரவத் தொடங்கியுள்ளது.

Spellman, Toyoda Gosei Rubber மற்றும் Tapex போன்ற நிறுவனங்கள் உட்பட, சென்ற வார இறுதியில், கூடுதலாக பல வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி மக்கில்லாடோராக்களும் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டுள்ளன. ஒரு டசினுக்கு அதிகமான ஆலைகள் 20 சதவிகித ஊதிய உயர்வும், 1,700 டாலர் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட்ட பின்னர் வேலைக்கு திரும்பியுள்ளன என்றாலும், 25 க்கும் அதிகமான நிறுவனங்களில் வேலைநிறுத்தம் இன்னும் தொடர்கின்ற நிலையில், பெரும்பாலான அமெரிக்க அடிப்படையிலான நிறுவனங்கள் நாளொன்றுக்கு 37 மில்லியன் டாலர் அளவிற்கு பெரும் இழப்பை சந்திக்கின்றன.

அதே நேரத்தில், தொழில்துறை மையங்களை, மிச்சோவாகானில் (Michoacan) லஜாரோ கார்டெநஸ் (Lazaro Cardenas) மற்றும் கோலிமாவில் (Colima) மான்ஜானில்லோ (Manzanillo) போன்ற முக்கிய பசிபிக் துறைமுகங்களுடன் இணைக்கும் இரயில் பாதைகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மறியல் செய்தது உட்பட, மிச்சோவாகான் மாநிலத்தில் 30,000 ஆசிரியர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட மூன்றாவது வார இறுதியை நெருங்கியுள்ளது. சென்ற திங்களன்று, மேலும், ஒக்சாகாவின் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

Noticieros Televisa ஊடகம் வியாழனன்று, ஆசிரியர்களின் முற்றுகைகள் “தேசிய தொழில்துறைகளில் மட்டுமல்லாது, ஆசியாவில் அவற்றின் முக்கிய வர்த்தக பங்காளர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், குவாநாஜூவாட்டோவில் (Guanajuato), விநியோக பாதைகளிலும் இது ஒரு தாக்கத்தை கொண்டுள்ளதாக வாகனத் தொழில்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டது.

மெக்சிக்கன் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோப்பேஸ் ஒபரடோர் (AMLO) திங்களன்று, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், அவர்கள் வேலைக்கு திரும்ப வேண்டுமென உத்திரவிட்டும், அவர்களை வலதுசாரி என அபத்தமாக அழைத்தும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினார்: “இடதுசாரி அரசியலுடன் இதற்கு எந்தவித தொடர்பும் இல்லை,” என்றும், “இந்த தீவிரவாத போக்கு பழமைவாதத்துடன் சேர்ந்து அனைத்தையும் செய்வதாகவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்சிக்கன் ஆளும் வர்க்கம் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தைக் கண்டு பெரும் பீதியடைந்துள்ளது.

மெக்சிக்கோவின் முக்கிய வர்த்தக செய்தியிதழான El Financiero இல் வியாழனன்று வெளிவந்த “தொழிலாளர் ஸ்திரத்தன்மையின் முடிவு,” என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை, “தசாப்த காலங்களாக மட்டும், மெக்சிக்கோ ஒரேயடியாக நடைபெறும் 44 வேலைநிறுத்தங்கள் என்பதை முன்னிறுத்தவில்லை” என்று எச்சரித்தது. சமீபத்திய வாரங்களுடன் ஒப்பிடுகையில், விசென்டே (Vicente), ஃபெலிப்பே கால்டெரோன் (Felipe Calderon) மற்றும் என்ரிக் பெனா (Enrique Pena) ஆகியோரின் ஆறு ஆண்டு காலம் கொண்ட ஜனாதிபதி பதவிக்காலங்கள், முறையே 49, 40 மற்றும் 23 என்ற எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்களை மட்டும் கண்டன.

“ஒன்று இரண்டு மூன்று என எளிதான வகையில், பல தசாப்தங்களாக நூறாயிரக்கணக்கான வெற்றிகர ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைக் கொண்டு நாம் பாதுகாத்து வைத்த தொழிலாளர் ஸ்திரப்பாடு முறிந்துவிட்டது. மேலும், இதை நிறுத்த முடியாது,” என்று El Financiero குறிப்பட்டதோடு, எதிர்காலம் “துருவமுனைப்படுதலை” கொண்டுவரும் என்பதுடன், “மூலதனம் மற்றும் தொழிலாளர் இடையேயான முரண்பாடுகளையும் அதிகரிக்கச் செய்யும். தொழிலாளர் அமைதியின் முடிவாக இது உள்ளது” என்றும் எச்சரித்தது.

வெள்ளியன்று வெளியான ஒரு கூட்டு செய்தி அறிக்கை, வேலைநிறுத்தத்தை முறித்து, ஊதியங்களை நசுக்க முனையும் AMLO இன் தொழிலாள வர்க்க விரோதத்தை அம்பலப்படுத்துகிறது. AP கட்டுரையில் மேற்கோளிட்டுக்காட்டப்பட்ட வர்த்தக பிரதிநிதிகளைப் பொறுத்தவரை, AMLO உம், அவரது தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் (Movement of National Regeneration-Morena) தலைவர்களும், “ஊதிய உயர்வை பெற முனைவதில் இருந்து மத்தாமோரொஸ் தொழிற்சங்கத்தை தீவிரமாக ஊக்கமிழக்கச் செய்துள்ளனர்”.

ஊதிய அதிகரிப்பை தொழிற்சங்கம் ஒன்றும் கோரவில்லை, ஆனால் தொழிற்சங்கத்தின் வெளிப்படையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களே கோரினர். தற்போது, ஒரு தேசியளவிலான வேலைநிறுத்த இயக்கத்தின் அபிவிருத்தியை தடுக்க தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் பக்கம் ஆளும் வர்க்கம் கடுமையாக சாய்ந்து வருகிறது.

Milenio செய்தியிதழ், “தங்களது வருமானங்களும் அதிகரிக்கும் என மில்லியன் கணக்காணவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள எல்லைப்புறப் பகுதிக்கும் இது தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது” என எச்சரித்தது. மேலும், “இது முன்நிகழாத ஒன்றாக உள்ளது. இந்த நாட்டில் உற்பத்திக்கான எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இங்கே எது குறிக்கும் என்பதில் நாம் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்” என்று ஒரு அநாமதேய வர்த்தகத் தலைவர் கூறியதாகவும் செய்தித்தாள் மேற்கோளிட்டுக் காட்டுகிறது.

தொழில்துறை வலைத் தளமான Manufactura.mx, வேலைநிறுத்தங்கள் பரவக்கூடும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற நிலையில், 20 சதவிகித ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலமாக தொழில்துறை தொழிலாளர்கள் “கறைபடிந்தவர்கள்” ஆகியுள்ளனர் என்று ஒரு பெருநிறுவன பிரதிநிதி கூறியதாக தெரிவித்தது. மேலும், “தொழிற்சங்கத்துடன் ஒரு மகத்தான உறவை நாம் கொண்டுள்ளோம்” என்ற நிலையில், இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்க நிறுவனங்களுக்கு தொழிற்சங்கம் உதவும் என்று நம்பியதாக வர்த்தக பிரதிநிதி தெரிவித்தார்.

Noticieros Televisa ஊடகச் செய்தியின் படி, “பாஜா கலிஃபோர்னியாவில் உள்ள மக்கில்லாடோரா தொழில்துறையிலும் [மக்கில்லாடோராவின் பெரு நகரமான திஜூவானா (Tijuana) அங்கு அமைந்துள்ளது], தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்ய தொடங்குவார்களோ என்ற பயம் நிலவுகின்றது.” மேலும், Noticieros Televisa  ஊடகம், “தொழிலாளர் வேலைநிறுத்தத்தை தவிர்க்க நோக்கம் கொண்டுள்ள தொழில்துறை தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளை” மக்கில்லாடோராக்கள் பராமரித்து வருகின்றன எனத் தெரிவிக்கிறது.

வேலைநிறுத்தத்தின் வளர்ச்சி பற்றியும் சரி, மற்றும் தொழிலாளர்களுடன் எந்தவிதமான ஒப்பந்தத்தை எட்டியிருந்தாலும் அவற்றை காட்டிக்கொடுக்க நிறுவனங்கள் திட்டமிடுவது குறித்து கவலையடைவது பற்றியும் சரி இரண்டுமே தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதாகவே உள்ளன.

ஒரு மத்தாமோரொஸ் வேலைநிறுத்தக்காரர், “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வெளியேற வேண்டும். நாம் ஐக்கியப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று தொழிற்சங்கம் பயப்படுகிறது. நம்மில் பெரும்பாலானோர் ஏற்கனவே வெளியே சென்றுவிட்டனர். பிரச்சினை என்னவென்றால், தொழிற்சங்கம் எங்களுக்கு உதவவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் மறுக்கிறது. இந்நிலையில், நாம் வெளியேறி பாதுகாப்புக்களை ஒழுங்கமைக்க வேண்டும். நாங்கள் பரிசுகளைக் கோரவில்லை, எங்களுக்கு பெற உரிமையுள்ளதையே கோருகிறோம்” என்று தெரிவித்தார். ஒரு தொழிற்சங்க அதிகாரி, “நீங்கள் வெளிநடப்பு செய்யும் அளவிற்கு முக்கியமானவர்கள் இல்லை” என்று கூறியதாகத் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் செய்யும் Kearfott நிறுவனத் தொழிலாளி ஒருவர், “புதிய வேலைநிறுத்தக்காரர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்தபட்ச ஊதியத்துடனான சமவிகித ஊதிய அதிகரிப்பை தேவைப்படுத்தும் சட்டவிதியின் உட்கூறைக் கொண்டுள்ள அவர்களது ஒப்பந்தங்களின் படி, எல்லை எங்கிலுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்” என்று WSWS இடம் தெரிவித்தார். “அதே நிறுவனங்கள் தான் அதை வகுத்த நிலையில், அவர்கள் தான் வழங்க வேண்டும். நாங்கள் மிகவும் சுரண்டப்பட்ட, குறைந்த வெகுமதியைப் பெறும் வர்க்கமாக இருக்கிறோம். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், எங்களுக்கு அவர்கள் மீண்டும் அதை வழங்குவதற்கான சரியான நேரம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

Autoliv தொழிலாளி ஒருவர், தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நிறுவனம் ஒப்புக் கொண்ட பின்னர், “அவர்கள் பணிநீக்கம் செய்யத் தொடங்குவதற்கு முன்னர், வெகு விரைவாக நாங்கள் வேலைக்கு திரும்பினோம்” என்று WSWS க்கு விவரித்தார்.

ஊதிய உயர்வையும், மேலதிக கொடுப்பனவையும் வழங்க ஒப்புக்கொண்ட Tyco ஆலையின் தொழிலாளி ஒருவரும் கூட, பழிவாங்குதலில் இருந்து சக தொழிலாளர்களை பாதுகாக்க மீண்டும் வேலைநிறுத்தத்தில் இறங்குவதற்கான அதிகரித்துவரும் மனநிலை இருப்பதாக WSWS க்கு தெரிவித்தார்.

“Autoliv இல், கடுமையான நடவடிக்கை அல்லது மேலதிக கொடுப்பனவு என்று எதுவும் இல்லாமல் கொத்து கொத்தாக மக்களை அவர்கள் பணிநீக்கம் செய்து வருகின்றனர். தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து மேலாளர் அவர்களை பரிகசிப்பதோடு, அவர்களது மேலதிக கொடுப்பனவை வழங்கவோ அல்லது கடும் நடவடிக்கை எடுக்கவோ போவதில்லை என்றும் அவர்களிடம் கூறுகிறார். அவர்கள் சமரசத்திற்கான மற்றும் நடுவர் சபைக்கு அனுப்பப்பட்டு வருவதோடு, இந்த விடயங்களுக்கு தீர்வை எட்ட அரை அல்லது ஒரு ஆண்டு காலம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில், இந்த சபை Autoliv இன் பக்கம் உள்ளது.

“திடீர் வேலைநிறுத்தத்தில் கூட பங்கு பெறாத பலரில் இருந்து, தற்போது வேலை செய்யும் பெரும்பாலானோர் அனைவரும், பணிநீக்கம் செய்யப்பட்ட அவர்களது சக தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் ஏற்கனவே தங்களது மேலதிக கொடுப்பனவையும் ஊதிய உயர்வையும் பெற்றுள்ளார்கள். எப்படி வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று அறியாத ஒரு புதிய தலைமுறையினராக நாங்கள் இருக்கிறோம். இதை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாங்கள் மரியாதையைப் பெற்றுவிட்டோம். ஒருவேளை எங்களுக்கு தேவையான அனைத்து மரியாதையும் கிடைக்காமல் இருக்கலாம், என்றாலும் இது எங்களது முதல் வேலைநிறுத்தம் என்ற நிலையில், முன்வைத்த கோரிக்கைகளுக்கு சிறந்த பதிலிறுப்பு கிடைக்காவிட்டாலும், எங்களது இரண்டாவது வேலைநிறுத்தம் இன்னும் சிறப்பாக ஒழுங்கமைந்ததாக இருக்கும்.”

ஒரு பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து, மெக்சிக்கோ வேலைநிறுத்தங்களின் தாக்கங்கள் பற்றி செய்தியளிக்க அமெரிக்க வர்த்தக ஊடகங்கள் தொடங்கியுள்ள போதிலும், சர்வதேச சோசலிச அமைப்பு (International Socialist Organization – ISO) மற்றும் சோசலிச மாற்று (Socialist Alternative), அத்துடன், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிசவாதிகள் (Democratic Socialists of America’s - DSA) போன்ற அமைப்புக்களின் இணைய தளங்கள் மற்றும் Jacobin இதழ் என அனைத்தும் வேலைநிறுத்தம் பற்றிய செய்திகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளன. தொழிலாள வர்க்க விரோத, சோசலிச விரோத அமைப்புக்களான இவை எதுவும், மெக்சிக்கன் மக்கில்லாடோரா தொழிலாளர்களின் கிளர்ச்சி பற்றிய ஒரு கட்டுரையை கூட பிரசுரிக்கவில்லை என்பதே உண்மை.