ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Unions betray Tamil Nadu teachers’ and government workers’ strike

இந்தியா: தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுக்கின்றன.

By Arun Kumar
1 February 2019

JACTTO-GEO (தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு தொழிற்சங்கம்) திடீரென்று தங்களுடைய பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் வேலைநிறுத்தத்தை புதனன்று முடிவுக்கு கொண்டுவந்தது.

ஜனவரி 22 அன்று அது அழைத்த இந்த வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த அனைத்தும் செய்து விட்டு, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு முழுவதும் இந்த தொழிற்துறை நடவடிக்கையை நிறுத்துவது "தற்காலிகமானதே" என்று JACTTO-GEO சிடுமூஞ்சித்தனமாக கோருகிறது.

2016 முதல் நிலுவையில் இருக்கும் வேலைநிறுத்தக்காரர்களின் எந்தவொரு ஒன்பது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றில் அடங்கியிருப்பவை பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை (CPS) இரத்து செய்தல், பழைய அரசாங்க நிதியின் மூலம் வழங்கப்பட்ட ஓய்வு ஊதியத்தை திரும்ப கொண்டு வருதல், சம்பள உயர்வு மற்றும் அரசாங்க சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பு செய்வதை நிறுத்து போன்றவையாகும்.

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தொழிலாளர்களின் எந்த ஒரு கூட்டத்தையும், தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டவில்லை. மேலும் பழிவாங்கப்பட்ட மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் தலையெழுத்து பற்றி எந்த விவரமும் அது கொடுக்கவில்லை.

அடுத்தடுத்த மத்திய மற்றும் மாநில அளவிலான அரசாங்கங்களினால், பின்னோக்கி தள்ளும் பங்களிப்பு ஓய்வூதிய முறை மேலும் அவர்களது சம்பளங்கள் மற்றும் வேலைநிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, JACTTO-GEO அதன் உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விட நிர்ப்பந்திக்கப்பட்டது.

அ.தி.மு.க தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை திட்டவட்டமாக நிராகரித்தது, மேலும் வேலைநிறுத்தத்தை உடைக்க கடுமையான நடவடிக்கைகளை தொடங்கியது. வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வோரை கொத்து கொத்தாக கைது செய்தல் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை கருங்காலிகளாக நியமனம் செய்தல் முதலியன இதில் அடங்கும்.

JACTTO-GEO, மாநில அரசாங்கத்திடம் ஆற்றொணா மன்றாடல் மூலம் பதிலிறுத்தது, அரசாங்கம் பேச்சு வார்த்தையை தொடங்கினால் உடனே இந்த தொழிற்துறை நடவடிக்கை கைவிடப்படும் என்று மேலும் கூறியது.

இந்த வேலைநிறுத்தத்தை விஸ்தரிக்கும் முயற்சிக்கு, JACTTO-GEO வின் எதிர்ப்பையும் மற்றும், தொழிற்சங்க கூட்டமைப்பின் தொடர்ச்சியான மாநில அரசாங்கத்துக்கு விசுவாசமான அடிமைத்தனமான உத்தரவாதங்களையும் முகம் கொடுத்த ஆசிரியர்கள், முக்கால்வாசிப்பேர் தலைநகரமான சென்னையில் செவ்வாயன்று வேலைக்கு திரும்பினார்.

ஆனால், மாநிலத்தின் மற்ற இடங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள், அரசாங்க ஒடுக்குமுறை மற்றும் பணிநீக்க அச்சுறுத்தல்களை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். JACTTO-GEO தனது உறுப்பினர்களை வேலைக்கு திரும்ப சொன்ன அதே நாள், பல ஆயிரக்கணக்கான வேலை நிறுத்தம் செய்வோர், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல்களில் பல மாவட்டங்களில் ஈடுப்பட்டு இருந்தனர்.

மாணவர்களும் அவர்களது பெற்றோரும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டனர், நாடுமுழுக்க தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தட்டுக்களை ஒன்றிணைக்கும் சாத்தியக்கூறுகளை அது எடுத்துக்காட்டியது. ஏனைய துறைகளை சேர்ந்த தொழிலாளர்களான மத்திய அரசாங்க ஊழியர்கள், மாநில மின்வாரியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசாங்கம் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அதனால் கொடுக்க முடியாது என்று கோரியது. அ.தி.மு.க அரசாங்கம் சார்பு ஊடகம் மற்றும் ஏனைய வலது சாரி கூறுகளும் ஒடுக்கப்பட்ட தட்டுக்களை, ஆசிரியர்களும் அரசாங்க ஊழியர்களும் சலுகை மிகுந்த அதிக சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பெறுபவர்கள் என்று கூறி வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக திருப்ப முயன்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர்கள் உண்மையில் பேரழிவுகரமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். கடந்த ஆண்டின் முடிவில், மாநில அரசாங்கம் 3000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் சுமார் 8000 சத்துணவுக் கூடங்களை மூடுவதாக அறிவித்தது. பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற பிரபலமான கல்வியாளர், தமிழ்நாட்டில் அரசாங்க பள்ளிகளில் மிகவும் ஆட்கள் குறைவு மற்றும் முகம் குறைவான நிதியுதவி வழங்கப்படுகிறது என்றார்.

"எந்தவொரு சுகாதார தொழிலாளியோ, காவலாளியோ, உடற்கல்வி ஆசிரியரோ, தொடக்கப்பள்ளிகளில் நியமிக்கப்படுவது இல்லை," பாபு தன்னுடைய கட்டுரையில் கடந்த வருடம் கூறி இருந்தார். அலுவலகப்பணிகள், மற்றும் பள்ளிகளை சுத்தம் செய்தல் உட்பட, ஆசிரியர்கள் ஐந்து பாடங்கள் பயிற்றுவிக்க பொறுப்பேற்று இருந்தனர். இவ்வாறு இருக்கையில் "பெற்றோர் எப்படி தங்கள் குழந்தைகளை இத்தகைய பள்ளியில் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கின்றீர்கள்?" என அவர் கேட்டார்.

இந்தியாவின் ஸ்ராலினிச கட்சிகள் இந்த வேலை நிறுத்தத்தை முடிக்க மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுப்பதில், குற்றவியல் பாத்திரம் வகித்தனர்.

CPM, CPI மற்றும் அதன் கூட்டாளிகளான மாவோவாத CPI (ML) விடுதலை மற்றும் SUCI (கம்யூனிஸ்ட்) இடம் இருந்து புதனன்று ஒரு துரோகத்தனமான கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை "மாணவர்களின் நன்மை மற்றும் பெற்றோரின் அபிலாஷைகளை" கருத்தில் கொண்டு இந்த வேலைநிறுத்தத்தை முடிக்கும் படி JACTTO-GEO விற்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்கங்கள் வியாழனன்று ஒப்புக்கு செய்ய இருந்த ஒரு நாள் வேலைநிறுத்ததையும் இரத்து செய்தன.

வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் மட்டும், CPS மற்றும் அரசாங்க சேவைகளை தனியார்மயமாக்குவதை எதிர்ப்பதில் தனித்து இல்லை. மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்கள் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் மற்றம் பல மாநில அரசாங்கங்கள் மேற்கொண்ட இம்மாதிரியான தாக்குதலைகளை எதிர்கொள்கின்றனர்.

சில வாரங்கள் முன்பு 180 மில்லியன் தொழிலாளர்கள் வரை இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் - ஜனவரி 8 மற்றும் 9 அன்று - பா. ஜ.க அரசாங்கத்தின் பெறுவணிக சார்பு கொள்கைகளை எதிர்த்து போராட கலந்து கொண்டனர். ஆனால் JACTTO-GEO தனது உறுப்பினர்களை  இந்த தேசிய வேலைநிறுத்தத்தில் இணையும்படி அழைப்பு விடுக்க மறுத்து விட்டது.

இந்த வார காட்டிக் கொடுப்பு மற்றும் சமீபத்திய தேசிய பொது வேலை நிறுத்தம் எடுத்துக்காட்டியது போல், ஸ்ராலினிச அமைப்புகளுக்கும் இந்து வகுப்புவாத பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. அவர்களது குறிக்கோள், இந்த கட்சிகளை "மாற்று" முதலாளித்துவ கட்சிகளான காங்கிரஸ் தலைமை அல்லது பல வலது சாரி கட்சிகளின் கூட்டணி கொண்டு ஆட்சியில் அமர வைத்து, தொழிலாள வர்கத்தின் மீதான சமூக தாக்குதல்களை ஆழப்படுத்துவதன் மூலம் இந்தியாவை பெருவணிகத்துக்கு கவர்ச்சியான தளமாக மாற்றுவதே ஆகும்.

தமிழக வேலைநிறுத்ததின் காட்டிக்கொடுப்பானது மீண்டும் தொழிற்சங்கங்களில் இருந்து உடைந்து சுயாதீன தொழிலாள வர்க்க அமைப்பினை கட்டியெழுப்பவதற்கான தேவையை நம் முன் வைக்கிறது.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த மற்றும் கண்ணியமான அரசாங்க-நிதியில் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் இதர அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் மெக்சிக்கோவின் வாகனத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உதாரணத்தை பின்பற்றி தங்களின் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

இந்த ஜனநாயக ரீதியாக-கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள், இந்தியா மற்றும் உலகம் முழுக்க உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுடன் சேர்ந்து தொழிற்துறை நடவடிக்கை மற்றும் தங்கள் வேலை, வாழும் நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அரசியல் கோரிக்கைகளை முன் வைக்க தயாராக வேண்டும்.

இந்த போராட்டத்தின் மையமாய் இருப்பது CPM, CPI மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை நிராகரித்து  ஆசியா மற்றும் சர்வதேச ரீதியாக புதிய சோசலிச தலைமையை கட்டியெழுப்ப திரும்ப வேண்டும்.