ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan tea plantation workers committee supports call for February 9 demonstration in Detroit

இலங்கை தேயிலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழு பெப்பிரவரி 9 டெட்ராயிட்டில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றது

By our reporters 
7 February 2019

இலங்கையில் தேயிலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2018 இல் நிர்வாக-சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்கள் தமது போராட்டத்தை ஏற்பாடு செய்யவும் இயக்கவும் மற்றும் விரிவாக்குவதற்கும், சாமானிய உறுப்பினர்களின் நடவடிக்கை குழுவாக, எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவை ஸ்தாபித்தனர். இந்தக் குழு, வேலை அழிப்புகள் மற்றும் சலுகை வெட்டுக்களுக்கும் எதிராக டெட்ராயிட்டில் ஜெனரல் மோடர்ஸ் தலைமையகத்துக்கு முன்பாக பெப்பிரவரி 9 பிற்பகல் 2 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்குமாறு அமெரிக்க மற்றும் கனேடிய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் பின்வரும் அறிக்கையை அனுப்பியுள்ளது.

***

உலக சோசலிச வலைத் தள வாகனத் தொழிலாளர் செய்தி இதழும் ஜெனரல் மோடர்ஸின் சாமினிய உறுப்பினர்கள் குழுக்களின் கூட்டமைப்பின் செயற் குழுவும், பெப்பிரவரி 9 அன்று, டெட்ரொயிட்டில் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமையகத்துக்கு முன்னால் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, இலங்கையில் எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழுவினராகிய நாம், எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஐந்து தொழிற்சாலைகளை மூடி, மணித்தியால மற்றும் முழுநேர தொழிலாளர்களில் சுமார் 15,000 பேரை அகற்றுவதற்கு ஜெனரல் மோடர்ஸ் திட்டமிட்டுள்ளதை நாங்கள் அறிவோம். இது வாகன தொழில்துறையை உலகளாவிய ரீதியில் மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாகும் என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான பிளவை விரிவுபடுத்தும், அதீத இலாபத்திற்கான பெருவணிகதின் உந்துதலே ஆகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களும், அதேபோல் இங்குள்ள ஏனைய தொழிலாள வர்க்கத் தட்டினரும் எதிர்கொள்ளும் நிலைமையும் கூட, இலாப வெறிகொண்ட பெரும் வர்த்தக பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் வங்கிகளின் இதே போன்ற கொள்கையின் விளைவே ஆகும்.

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்ற வகையில், ஆட்சியில் இருக்கும் அவர்களது அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் முதலாளிமார்களால் முன்னெடுக்கப்படும் கொடூரமான கொள்கைகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம். இங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அண்மைய வேலை நிறுத்த அலையின் போது, முதலாளிமார்களுடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் இயக்கம் ஒன்றுக்கான ஒரு சர்வதேசிய அரசியல் முன்நோக்கை கொண்டு வருவதற்கு நாங்கள் தலையிட வேண்டியிருந்தது. தேசிய அரச எல்லைகளைக் கடந்து, சர்வதேச மட்டத்தில் அணிதிரள்வதற்காக சாமானிய உறுப்பினர்கள் குழுவின் கூட்டமைப்பைப் போன்று ஒரு சுயாதீனமான அமைப்பின் அவசியத்தை நாங்களும் எங்களது சொந்த அனுபவத்தின் ஊடாக புரிந்துகொண்டுள்ளோம்.

அந்த வகையில், சமானிய உறுப்பினர்கள் குழுக்களின் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அமெரிக்க வாகனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த உலகத் தொழிலாளர்களின் சார்பிலும் தொடுக்கப்பட்டுள்ள ஒரு பெரும் தாக்குதலாகும். நாங்கள் சர்வதேச ரீதியில் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியை நெருக்கமாக அவதானித்து வருவதோடு சமூக எதிர்ப் புரட்சி மற்றும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான ஒரு பொது மூலோபாயத்தின் அடிப்படையில் அவற்றை இணைப்பதற்காக எங்களைத் தயார்படுத்தி வருகின்றோம்.

தோழமையான வாழ்த்துக்கள்

எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழு, இலங்கை.

***

பெப்ரவரி 9 பிற்பகல் 2 மணிக்கு, ஆலை மூடல்கள், வெகுஜன வேலை அழிப்புகள் மற்றும் சலுகை வெட்டுக்களுக்கும் எதிராகப் போராடுவதற்கு, உலக சோலிச வலைத் தள வாகன தொழிலாளர் செய்தி இதழ் ஆர்ப்பாட்டமொன்றை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்கான மேலதிக விபரங்களுக்கு, wsws.org/auto என்ற முகவரியில் பிரவேசிப்பதோடு முகநூலிலும் நிகழ்வு பகுதியில் தகவல் பெறலாம்.