ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Russian Revolution and the Unfinished Twentieth Century published in Tamil

ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத  இருபதாம் நூற்றாண்டும்  தமிழில் வெளியிடப்பட்டது

1 February 2019

டேவிட் நோர்த் எழுதிய ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் எனும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வெளியீடான தொழிலாளர் பாதை வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துக்குமான இந்த விலைமதிப்பற்ற பங்களிப்பின் தமிழ் பதிப்பை வெளியிடுவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI), குறிப்பாக இலங்கை மற்றும் ஐரோப்பாவில் அதன் பகுதிகளினதும் இந்திய ஆதரவாளர்களினதும் அறிவுசார், தொழில்நுட்ப மற்றும் நிதி வளங்கள் மூலமாகவே சாத்தியமானது. மேலும் 2016 இல் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இதன் சிங்கள பதிப்பை வெளியிட்டது.

இந்த நூலானது 1917 ரஷ்யப் புரட்சி, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டம், நிரந்தரப் புரட்சித் தத்துவம், பாசிசத்தின் எழுச்சி, இரண்டாம் உலகப் போரின் மூலங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் வரலாற்றுப் பரிணாமம் என்பவற்றை பற்றி தா்க்க ரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்ட பெறுமதியான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்நூலின் ஜேர்மன் பதிப்பின் வெளியீட்டிற்கு லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்ட அறிமுக உரையும் 1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நினைவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழங்கப்பட்ட ஐந்து உரைகளில் முதலாவதான “ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?” என்ற டேவிட் நோர்த்தின் உரையும் சேர்க்கப்பட்டுள்ளது.

டேவிட் நோர்த், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் ஆவார்.

1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்தமையை தொடர்ந்து வந்த முதலாளித்துவ வெற்றிக் கூச்சல்களுக்கு எதிராக, ஏன் 20 ஆம் நூற்றாண்டு “முடிவுறாததாக” பண்புமயப்படுத்தப்படுகின்றது என்பதை நோர்த் விளக்குகிறார்.

"சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது நிச்சயமாக ஒரு மிக முக்கிய சம்பவம்தான் என்றபோதினும், அது அதிர்ச்சிதரும் வகையில் சோசலிசத்தின் முடிவைக் குறிக்காது" என்று அவர் எழுதுகிறார். "வரலாறு தொடரும். மற்றும் இருபதாம் நூற்றாண்டு, ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு சகாப்தமாக வரையறுக்கப்பட்டு, போர்கள் மற்றும் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் அளவிற்கு, அது ‘முடிவடையாமல்’ இருக்கின்றது என குறிப்பிடப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது."

கடந்த 65 ஆண்டுகளாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ், நான்காம் அகிலம் முன்னெடுத்த மார்க்சிசத்திற்கான 80 ஆண்டுகால அரசியல் மற்றும் தத்துவார்த்தரீதியான போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு சர்வதேச எழுச்சியுடன் இரண்டறக் கலக்கின்றது. இந்த மாற்றமடைந்துள்ள சூழ்நிலையின் மத்தியிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைத்துவ நெருக்கடியை தீர்ப்பதற்கான அவசரத் தேவையின் கீழும், ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் மொழிபெயர்ப்பானது இலங்கை, தென் இந்தியா மற்றும் உலகம் பூராவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு விலைமதிப்பற்ற ஆக்கமாக இருக்கும்.

நூலின் தமிழ் பதிப்பை, இலங்கை அல்லது ஐரோப்பாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளை அல்லது இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழுவை தொடர்பு கொள்வதன் மூலம் வாங்கிக்கொள்ள செய்ய முடியும்.

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி, தொலைபேசி: +94113096987, மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

இந்தியா: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழு

தொலைபேசி: +91 637 9941 408, மின்னஞ்சல்: wsindia2013@gmail.com

ஐரோப்பா: மின்னஞ்சல்: lepesfrance@gmail.com