ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On eve of US-orchestrated border confrontation
Washington’s “aid” provocation reportedly claims first victims in Venezuela

அமெரிக்க-ஒழுங்கமைப்பு எல்லை மோதல் வேளையில்

வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் "உதவி" வெனிசுவேலாவில் முதல் பாதிப்பை ஏற்படுத்தியது

By Barry Grey 
23 February 2019

வெள்ளிக்கிழமை காலை, பிரேசிலின் எல்லைக்கு அருகே ஒரு சோதனைச்சாவடியை வலுப்படுத்த அனுப்பப்பட்ட இராணுவத் தொடரணியை தடுக்க முயன்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வெனிசுவேலா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு கணவனும் மனைவியும் கொல்லப்பட்டதுடன் ஒரு டசின் பேர் காயமடைந்தனர் என எதிர்ப்பு தரப்பின் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இது எழுதிக்கொண்டிருக்கும் வரை, சம்பவம் தொடர்பான எந்த அறிக்கையும் நிக்கோலாஸ் மதுரோ அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம், தெற்கு கிராமமான குமாரகப்பாயில் (Kumarakapay) இடம்பெற்றது. இது பெமோன் (Pemon) மொழி பேசும் பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதியும் வெனிசுவேலா மற்றும் பிரேசில் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய பாதை மீதும் அமைந்திருக்கிறது. அயலிலுள்ள கொலம்பியா மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்து நாட்டிற்குள் மனிதாபிமான உதவிகளைக் கொண்டுவர போலித்தனத்தனமாக வாஷிங்டனால் நியமிக்கப்பட்ட "இடைக்கால ஜனாதிபதியான" குவான் குவைடோவின் தலைமையிலான எதிர்த்தரப்பு சக்திகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுரோவின் விசுவாசமான படைகளுக்கும் இடையே மோதலை தூண்டும் நோக்கில், சனிக்கிழமை மாலை அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கை இடம்பெற்றது.

இரு நாடுகளின் வலதுசாரி அரசாங்கங்களும் முதலாளித்துவ தேசியவாத மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்தை மேற்கொள்வதற்கு வாஷிங்டனின் முயற்சியின் பின்னால் அணிதிரண்டுள்ளன.

தீவிர வலதுசாரி Voluntad Popular (சாமானிய பிரஜைகள் விருப்பம்) கட்சியின் ஓரளவு அறியப்பட்ட அதிகாரியான, தன்னை "இடைக்கால ஜனாதிபதி" என்று குவைடோ சுயமாக அறிவித்து ஒரு மாதத்திற்கு பின்னர், வெனிசுவேலா இராணுவத்தை மதுரோவில் இருந்து பிரிப்பதற்கான அதன் இயலாமையால் விரக்தியடைந்த "ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலா இராணுவதிற்கும் எதிர்த்தரப்பு போரட்டக்காரர்களுக்கும் இடையே ஒரு நேரடியான இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தும் வகையில் மோதலை தூண்டும் நோக்கத்தை கொண்டுள்ளது.

தென்கிழக்கு வெனிசுவேலாவில் வெள்ளிக்கிழமை நடந்த மோதல்கள் சனிக்கிழமையன்று இரண்டில் ஒன்று அல்லது இரண்டு எல்லைகளிலும் நடைபெறவிருக்கும் இரத்தக்களரி மோதல்களின் ஒரு சிறிய மாதிரியாக இருக்க முடியும். வெனிசுவேலாவின் அமெரிக்க-நட்பு அயல் நாடுகளால், அமெரிக்காவால், அல்லது மூன்று நாடுகளினதும் கூட்டு இராணுவத் தலையீட்டால் ஒரு உள்நாட்டு யுத்தத்தை தூண்டிவிடுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு பகுதியையும் பேரழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் ஒரு வன்முறையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

வெள்ளியன்று நடந்த சம்பவத்தின் உள்ளடக்கமானது, வெனிசுவேலாவிற்குள் மருத்துவ வசதிகளையும் உணவுகளையும் கட்டாயமாக கொண்டு செல்வதாகும், வெனிசுவேலா எல்லையில் உள்ள பிரேசிலிய மற்றும் கொலம்பியா நகரங்களில் அமெரிக்க விநியோகங்களை கட்டமைத்து அரசாங்க தடைகளையும் இராணுவத்தினரையும் உடல்ரீதியாக எதிர்கொள்ள, குறிப்பாக கொலம்பியா நகரான குகூடாவின் எல்லையில் ஆயிரம் இல்லையெனில் நூற்றுக்கணக்கானவர்களை அரசாங்க-விரோத எதிர்ப்பின் கீழ் அணிதிரட்டும் எதிரணியின் முயற்சிகள் ஆகும். குவைடோ எல்லையில் "மனிதாபிமான அணை" ஒன்றை அணிதிரட்ட திட்டமிட்டுள்ளார் என்றார்.

கொலம்பிய எல்லைக்கு அருகே உள்ள மிகப்பெரிய வெனிசுவேலா நகரமான சான் கிறிஸ்டோபலில் நடவடிக்கையை மேற்பார்வையிட எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர். எல்லைக்கூடாக பாதுகாப்பாக உதவிப்பொதிகளை கொண்டுவர குகூட்டாவுடன் எல்லை நகரங்களை இணைக்கும் நான்கு சர்வதேச பாலங்களுக்கு பஸ்களில் தொண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் கொடிகளை ஏந்திக்கொண்டு சான் கிறிஸ்டோபல் இராணுவ முகாம்களை நோக்கி அணிவகுப்பார்கள் என்று எதிர் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

சனிக்கிழமையின் தயாரிப்பிற்கு, மதுரோ, உதவிகளுக்கு தடை விதிக்கப்பட எல்லைப் பகுதிக்கு துருப்புக்களை நகர்த்தி, வெனிசுவேலாவின் பிரேசில் எல்லையை மூடினார். நாடு முழுவதும் உள்ள தனியார் ஜெட் போக்குவரத்தை நிறுத்துவதற்கு கட்டளையிட்டதுடன், வெனிசுவேலாவுக்கும் அமெரிக்காவில் இருந்து பொருட்கள் வியாழக்கிழமை வந்தடைந்த அருகிலுள்ள டச்சு தீவு குராஸ்கோவிற்கும் இடையே வான் மற்றும் கடல் பயணத்தைத் தடை செய்தார்.

வெள்ளியன்று, ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து, ட்ரம்ப்பின் ஆட்சி மாற்ற நடவடிக்கையை முழுமையாகவும் மற்றும் மோசடி "மனிதாபிமான" உதவி முயற்சியை ஆதரிக்கின்ற நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் டி.சி.யில் அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழுவில் உள்ள Adrienne Arsht இலத்தீன் அமெரிக்கா மையத்தின் இயக்குனர் ஜேசன் மார்க்சாக் (Jason Marczak) ஐ மேற்கோளிட்டு, "வெனிசுவேலாவின் எல்லைப் பகுதிகள் அதிஉயர் அழுத்தம் கொண்ட ஒரு வெடிமருந்து பீப்பாய் போன்றது, இதன் பொருள் எந்த தவறான வழிநடத்தலும் வன்முறையின் அலைகளை கட்டவிழ்த்துவிடும் என்பதாகும். பிரதான கேள்வியானது யார் முதலில் வேட்டு தீர்க்கப்போகிறார் என்பதாகும்".

ட்ரம்ப் மற்றும் அவருடைய தீவிர வலதுசாரி ஆலோசகர்களான செயலாளர் மைக் பொம்பேயோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் மற்றும் வெனிசுவேலா தொடர்பாக ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட எலியோட் ஆப்ராம்ஸ் ஆகியோர்களால் மேற்கொள்ளப்படும் வெட்கக்கேடான மற்றும் பொறுப்பற்ற கொள்கையின் சாத்தியமான விளைவுகளின் மீது அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் கவலைகள் உள்ளன. இது வியாழனன்று பொது ஒளிபரப்பு சேவை மாலைநேர செய்திகளில் அமெரிக்க மற்றும் வாஷிங்டனின் கைப்பொம்மையான குவைடோவின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கும் வெனிசுவேலா குடிமக்களின் நேர்காணலில் பிரதிபலித்தது.

வாஷிங்டனின் மனிதாபிமான அக்கறை மற்றும் ஜனநாயக அறநெறிப் போக்குகள் முற்றிலும் அபத்தமானவை. வெனிசுலாவை வெடிக்கச் செய்யும் பொருளாதார நெருக்கடி என்பது எண்ணெய் விலையின் சரிவு, அமெரிக்க பொருளாதாரத் தடைகள், மதுரோ ஆட்சியின் முதலாளித்துவ சார்பு கொள்கைகள் மற்றும் பூகோள முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் விளைவுகளாகும். "பொலிவாரிய சோசலிசத்திற்கான" அதன் கூற்றுக்கள் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய வங்கிகளுக்கான அதன் கடன்களைத் தொடர்ந்து செலுத்தி வந்ததோடு, உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்தின் நலன்களையும் பாதுகாத்து வந்திருக்கிறது.

அமெரிக்கா, நாட்டிற்கு மனிதாபிமான உதவியின் பாகமாக 20 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்திற்கு உறுதியளித்துள்ளது, அதேவேளை கடந்த மாதம் நாட்டின் எண்ணெய் தொழிற்துறையின் மீது விதிக்கப்பட்ட தடையால், வெனிசுவேலா ஒவ்வொரு நாளும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான வருவாயை இழந்துள்ளது. அமெரிக்கா ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை தக்கவைத்துக் கொள்ள நாட்டைத் திணற வைத்துள்ளது. ஜனவரி மாதத்தில் விதிக்கப்பட்ட தடைகளின் விளைவாக, வெனிசுவேலாவின் ஏற்றுமதிச் சந்தைகளில் ஏற்பட்ட குறைப்பு காரணமாக, நாட்டின் எண்ணெய் கையிருப்பு 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளியன்று அறிவித்துள்ளது. ஒரு அமெரிக்க ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு பலியாக்க நாட்டை பட்டினியில் தள்ளுகிறது.

உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை கொண்டுள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் தொழிற்துறையை கைப்பற்ற விரும்புவதாலும் மற்றும் சீனா, ரஷ்யாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை நாட்டிலும், பிராந்தியத்திலும் இல்லாதொழித்து, இலத்தீன் அமெரிக்கா முழுவதுமே தடையற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக, மதுரோ ஆட்சியை துக்கிவீசுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

சமீபத்தில், ஜோன் போல்டன் ஃபாக்ஸ் நியூஸில் கூறினார்: “அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவில் உள்ள எண்ணெய் திறன்களில் முதலீடு செய்து உற்பத்தி செய்ய முடியுமானால் அது அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்."

ட்ரம்ப், வெனிசுவேலாவில் “சோசலிச” அரசாங்கத்தின் மீதான தாக்குதல், சோசலிசத்தின் மீதான பாசிச தாக்குதலுக்கான தாக்குமுகப்பாக இருக்கும் என்றார். மியாமியில் உள்ள வெனிசுவேலா, கியூபாவிலிருந்து குடிபெயர்ந்த அதி-வலதுசாரிகள் மற்றும் குடியரசுக் கட்சிக் கூட்டாளிகளின் மத்தியில் கடந்த திங்கட்கிழமையன்று ட்ரம்ப், "மேற்கு அரைக்கோளத்தில் சோசலிசத்தின் மங்கல்", மற்றும் நிக்கரகுவா, கியூபாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தின் முன்னோடியாகும்” என பிரகடனப்படுத்தினார்.

புதன்கிழமை, ஜோன் போல்டன் இந்த திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார்: "ஜனாதிபதி ட்ரம்ப் திங்களன்று கூறியது போல், ஓர்டேகாவின் நாட்கள் எண்ணப்படுகின்றன, நிக்காராகுவா மக்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்."

1980 களில் ஐக்கிய அமெரிக்க அரசின் முன்னெடுப்புகளில் ஜோன் போல்டனும் எலியோட் ஆப்ராம்சும் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர். "மனிதாபிமான உதவி" என்ற போர்வையில், நிக்கராகுவன் கொன்ட்ராஸ் பயங்கரவாதிகள் மற்றும் சால்வடார் கொலைக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதும் இதில் அடங்கும்.

வாஷிங்டனின் C-17 விமானப்படை சரக்கு விமானங்கள் கூகுட்டாவிற்குள் உணவு மற்றும் மருத்துவ பொருட்களுடன் சேர்த்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் கொண்டு பறந்து செல்லும் சாத்தியம் மிகவும் உள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் "உதவி நடவடிக்கை" "இராணுவ நடவடிக்கையை நடத்துவதற்கான ஒரு வசதியான சாக்குப்போக்கு" என்று கண்டனம் செய்துள்ளது. அத்துடன் "வெனிசுவேலா பிரதேசத்திற்கு அருகே சிறப்புப் படைகளும் உபகரணங்களும்" பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கா எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய தயாராகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகோவோவா, வெள்ளியன்று செய்தியாளர்களிடம் என்று கூறினார். "கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாங்கப்பட்ட ஆயுதங்கள்", "பெரிய இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணை ஏவிகள், தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் மனிதனால் தூக்கிச் செல்லக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்" என்று அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று என்ன நடந்தாலும், ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவில் தனது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளை விரிவாக்க தயாராகி வருகிறது. தனிப்பட்ட முறையில் கடந்த மாதம் தன்னை "இடைக்கால ஜனாதிபதி" ஆக அறிவிக்க, குவைடோவுக்கு ஆதரவு கொடுத்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், லீமா குழுமத்துடனான ஒரு சந்திப்பிற்காக திங்களன்று கொலம்பியாவுக்கு செல்கிறார், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒரு கூட்டணியும் கனடாவும் மதுரோவை அகற்றுவதற்கான வாஷிங்டனின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்சிக்கவிழ்ப்பின் அடுத்த கட்டத்தை திட்டமிடும் கலந்துரையாடல்களில் அவர் குவைடோவுடன் இணைவார்.