ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May asks Brussels for Brexit extension amid worsening political crisis

மோசமடையும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மே பிரெக்ஸிட் காலக்கெடு நீடிப்புக்காக புருசெல்ஸ்ஸை கேட்கிறார்

By Chris Marsden 
20 March 2019

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுதல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பிரதமர் தெரேசா மே காலக்கெடு நீடிப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வியாழனன்று நடைபெறும் உச்சிமாநாட்டில் புருசெல்ஸால் இது நிராகரிக்கப்பட்டால், இன்னும் ஒன்பது நாட்களில், மார்ச் 29 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம் (பிரெக்ஸிட்) நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு குறுகிய கால நீடிப்பையா (ஜூன் 30 க்கு அதிகரிக்கப்பட்டது) அல்லது ஐரோப்பிய தேர்தல்களில் இங்கிலாந்து பங்கு கொள்ளவேண்டியிருக்கும் கோடை காலத்துக்கும் அப்பாலான ஒரு நீடிப்பையா மே கேட்பார் என எவருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது. மே இனுடைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்திற்கு, பாராளுமன்றத்தின் உடன்பாடு சாத்தியமில்லை என்றால், ஒரு இரண்டு வருட தாமதத்துடன் இணைந்த ஒரு குறுகிய நீடிப்பை கேட்பதை அவர் நிராகரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலக்கெடு நீடிப்பை ஒத்துக்கொள்ளும் சாத்தியக்கூறு மிகவும் குறைவாக உள்ளது. இது இங்கிலாந்துக்கு அரசியல் மற்றும் நிதி செலவினங்களைக் கொண்டு வரும் என்பதை வலியுறுத்தி தாம் நிராகரிப்பதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அதன் தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற பேச்சாளர் ஜோன் பேர்கோவின் தலையீடு தோல்வியடைந்தபின் மூன்றாவது "அர்த்தமுள்ள வாக்கெடுப்பிற்கு"  பாராளுமன்றத்திற்கு தனது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை திரும்ப கொண்டு வரும் திட்டத்திற்கு பின்னர் தனது அமைச்சரவையை மே நேற்று சந்தித்தார். 1604 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட பாராளுமன்ற சட்டவிதிப்படி இரண்டாவது தடவை 149 பெரும்பான்மையுடன் ஏற்கெனவே இருமுறை நிராகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இன்னொரு வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது செவ்வாய்க்கிழமை ஒன்றியத்துடன் இருக்கவேண்டும் என்ற பழைமைவாதிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட வட அயர்லாந்து எல்லைக் கட்டுப்பாட்டினால் சுங்கக் கட்டுப்பாடுகளை ஒருதலைப்பட்சமாக விட்டுச் செல்வதற்கான இங்கிலாந்தின் உரிமையின் மீது தேவையான சலுகைகளை மே பெறவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

"மார்ச் 12 ம் தேதி பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட அதேயளவான அல்லது ஏறத்தாழ அதேமாதிரியானதல்லாத, ஒரு புதிய முன்மொழிவு தேவை" என்று பேர்கோவ் தெரிவித்தார். இந்த ஆளும் "இந்த விடயத்தில் இதை எனது கடைசி முடிவு எனக் கருதப்படக்கூடாது, சாத்தியமான ஒரு இணக்கப்பாட்டை பரிந்துரைக்கின்றேன்" என்று அவர் மேலும் கூறினார். ஆனால் வழக்கறிஞர் ஜெனரல் ரொபேட் பக்லண்ட் தனது தலையீட்டை ஒரு "அரசியலமைப்பு நெருக்கடி" என்று விபரித்தார், இதை உடனடியாக மே ஒப்புக்கொண்டார்.

90 நிமிட பழமைவாதக் கட்சி அமைச்சரவைக் கூட்டம் கசப்பாகவும் மற்றும் கோபமாகவும் இருந்தது. கட்சி உறுப்பினர் ஒருவர் அதை "ரோம் பேரரசின் முடிவு நாட்கள்" உடன் ஒப்பிட்டார்.

ஒற்றை ஐரோப்பிய சந்தைக்கு சுங்க வரியற்ற அணுகுதலை இழத்தல் மற்றும் ஒரு "கடுமையான பிரெக்ஸிட்” க்கு பயப்படும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மே கொண்டுள்ளார். ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை ஆட்சியமைக்க மே தங்கியுள்ள கடுமையான பிரெக்ஸிட் பழமைவாத பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஜனநாயக ஒன்றிய கட்சியையும் (DUP), அவரது "மென்மையான பிரெக்ஸிட்" ஒப்பந்தம் "உடன்பாடற்ற பிரெக்ஸிட்" இல்லை ஆனால் தொடர்ச்சியான ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை நீடித்தல் என்பதை ஏற்றுக்கொள்ள செய்ய வலியுறுத்துவதே மே இன் நோக்கமாகும். தாமதமானது 2016 ஆம் ஆண்டின் முடிவை மாற்றக்கூடிய இரண்டாவது வாக்கெடுப்புக்கான நிலைமைகளை அல்லது ஒருவேளை ஒரு பொதுத் தேர்தலைக்கூட உருவாக்கும் என  அவர்கள் பயப்படுவதையும் அவர் கணக்கில் எடுத்துள்ளார்.

போதுமானளவு பழமைவாத கிளர்ச்சியாளர்களும் 10 DUP பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், மே இன் ஒப்பந்தத்திற்கான மூன்றாவது வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடக்கக்கூடும் என்று பிரெக்ஸிட் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே கருத்து தெரிவித்தமைக்கு, மே இன் நெருங்கிய கூட்டாளிகள் முரண்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தினர். “நீங்கள் ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால் மற்றும் உடன்பாடற்ற ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதை தவிர பாராளுமன்றம் [சட்டவிதி 50] வேறு எந்த தேர்வையும் விட்டுவைக்கவில்லை” என்று பார்க்லே எச்சரித்தார்.

அவருடைய உடன்படிக்கை நிராகரிக்கப்படுவது ஒரு தேசிய நெருக்கடியை தூண்டிவிடும் என்ற மே இன் முன்னைய எச்சரிக்கையை ஒரு உத்தியோகபூர்வ கட்சி செய்தி தொடர்பாளர் மீண்டும் வலியுறுத்தினார். ஏனைய பிரிவினர் மகாராணி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து இந்த அமர்வு முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை மீண்டும் திறக்கலாம் என்றும், எனவே பேர்கோவின் "இரண்டாவது வாக்கெடுப்பு" என்ற உத்தரவு இனிமேல் செல்லாது என்று ஊகிக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பின் 50-வது பிரிவை முன்வைப்பதற்கு முன்னர் எந்த நீடிப்புக்கும் 27 உறுப்பு நாடுகளும் உடன்பட வேண்டும். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் "மார்ச் 29 ம் தேதி கடைசி நேரம் வரை ஒரு ஒழுங்கான வெளியேற்றத்திற்காக போராட வேண்டும்" என்று உறுதியளித்தார், ஆனால் அவருடைய ஐரோப்பிய அமைச்சர் மிக்கையில் ரோத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறுமையை "உண்மையில் இந்த நேரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதைப் பற்றி" பேசியதோடு, "பிரித்தானியா ஏன்" நீடிப்பை விரும்புகிறது" என்பது பற்றிய "திட்டவட்டமான முன்மொழிவை" முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மே இனால் மீளாலோசிக்கப்பட்ட உடன்படிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது மற்றும் ஒரு உடன்பாடற்ற பிரெக்ஸிட்டிற்கு அச்சுறுத்துகையில் ஒரு இரண்டாவது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் ஏற்றுக்கொள்வாரானால் ஒரு இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பிற்கான பாராளுமன்ற பெரும்பான்மை இருக்கின்றதா என்பது பற்றி தீவிரமாக மோதிக்கொள்கின்றனர்.

இதற்கிடையில் ஒரு இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதற்கு ஆதரவளிப்பார் என்று கோர்பின் இன்னும் கூறவில்லை. ஒன்றியத்துடன் இருப்பதற்கு வாக்களிக்குமாறு தூண்டும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, ஜனநாயக தாராளவாதக் கட்சி, Plaid Cymru மற்றும் பசுமைக் கட்சியின் தலைவர்களை அவர் சந்தித்தார். ஆனால் அவர் “Norway Plus” என்றழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறுப்பினர் அல்லாத சுதந்திர வர்த்தக ஏற்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசுகிறார். அந்த குழு உறுப்பினர்களில் பழமைவாதக் கட்சியின் நிக் போல்ஸ் மற்றும் ஒலிவர் லெட்வின் மற்றும் தொழிற் கட்சியின் ஸ்டீபன் கின்னொக் மற்றும் லூசி போவெல் ஆகியோர் உள்ளனர்.

சுங்க வரியற்ற ஐரோப்பிய ஒன்றிய அணுகல் உட்பட தனது சொந்த பிரெக்ஸிட் மூலோபாயத்திற்காக போராட கோர்பின் இன்னும் பரிந்துரைக்கிறார். மே இன் முன்மொழிவுகள் தோல்வியுற்றால், அரசாங்கத்தில் மற்றொரு நம்பிக்கையில்லாத பிரேரணையை அவர் அறிவிக்க வேண்டும் என ஞாயிறன்று அவர் பரிந்துரைத்தார். "அந்த நேரத்தில் ஒரு பொதுத் தேர்தல் வேண்டும் என்று நாங்கள் கூற வேண்டும், எனவே உள்ளூராட்சி சபைககளில் முதலீடு செய்யும், சமத்துவமின்மை, அநீதி மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு உறவை வைத்திருந்து வேலைகளை பாதுகாத்து எதிர்காலத்திற்கான எங்கள் வர்த்தகத்தை உறுதிப்படுத்தும் ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் வேண்டுமா என்று இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்க முடியும்" என்று அவர் கூறினார்.

பிரெக்ஸிட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் மற்றும் அவரது தலைமையின் கீழ் ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தை வன்மையாக எதிர்க்கும் பிளேயரிச எதிர்ப்பாளர்களுக்கு கோர்பின் வெறுக்கத்தக்கவர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டு உருவாக்கிய (ஐரோப்பிய ஒன்றிய சார்பு) சுயேட்சைக் குழு மற்றும் பெரிய எண்ணிக்கையில் அமைந்த உட்கட்சி எதிர்ப்பு, தொழிற் கட்சி துணைத் தலைவர் டொம் வாட்சன் தலைமையிலான எதிர்கால குழு (Future Group) ஆகியவற்றுக்கு இடையே உண்மையான அரசியல் பிளவு ஏதும் இல்லை.

மே தனது அரசியல் எதிர்காலத்திற்காக போராடுகையில், தொழிற் கட்சியின் நிழல் அமைச்சரவையின் "மூத்த உறுப்பினர்கள்" Evening Standard   பத்திரிகைக்கு கோர்பின் "சோர்வடைந்தும் வெறுப்படைந்தும்" விட்டதுடன் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகவும் தயாராக உள்ளார் எனக் கூறினர். அதே நாளில், கோர்பினை அகற்றும் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றுவதற்காக பிளேயரிசவாத பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த ஒரு சியோனிச அமைப்பான யூத தொழிலாளர் இயக்கம் (JLM), அடுத்த கட்சி மாநாட்டில் கோர்பின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க வேண்டும் என்று அறிவித்தது.

கோர்பினை ஒரு யூத-விரோதராக அவதூறு சுமத்தும் நடவடிக்கை தொடர்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால், யூத எதிர்ப்பிற்கு எதிரான போராட்டத்தில் "கூட்டாளிகளாக இல்லாத" தொழிற் கட்சி வேட்பாளர்களுக்கான அதாவது கோர்பினுக்கு ஆதரவு அளிப்பவர்களின் அனைத்து பிரச்சாரங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதே JLM இன் நோக்கம் என தீர்மானம் தெரிவிக்கிறது. இந்த யூத எதிர்ப்பு நெருக்கடி மற்றும் கட்சி அதை சமாளிக்க தவறியமை என்பவற்றுக்கு கரணம் ஜெர்மி கோர்பின் தான். எனவே அவர் பிரதமராக இருப்பதற்கு பொருத்தமற்றவர் அத்துடன் அவர் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கம் பிரித்தானிய யூதர்களின் நலன்களைப் பாதுகாக்க மாட்டாது" என்று அந்த தீர்மானம் குறிப்பிடுகின்றது.

டோரிகளுடனும் செய்தித்துறையினருடனும் பகிரங்கமாக இணைந்து அவரின் முக்கிய ஆதரவாளர்களை வெளியேற்ற முனையும் பிளேயரின் கையாட்களுக்கு எதிராக போராட கோர்பின் நிராகரிப்பதானது தொழிலாள வர்க்கத்தை சீர்குலைப்பதில் அவரது அரசியல் பாத்திரத்தினால் எடுத்துக்காட்டப்படுகின்றது.

பழமைவாத அரசாங்கம் உடையும் நிலையில் உள்ளது. பிரிட்டன் ஒரு பெரிய அரசியலமைப்பு நெருக்கடியின் பிடியில் உள்ளது. இப்போது கோர்பினும் அவரது முதலாளித்துவ-சார்பு குழுவினரும் ஆளும் வர்க்கத்தினை ஊடறத்து கிழித்துசெல்லும் குழுப் போராட்டங்களிலிருந்து அரசியல் வாழ்க்கையை தீர்மானகரமாக விலக்கி வர்க்கப் போராட்டத்தின் அச்சில் தொழிலாளர்களும் இளைஞர்களும் நோக்கி திருப்புவதை தடுக்கின்றனர்.

நிதிய தன்னலக்குழுவின் உள்நாட்டு மற்றும் பூகோள நலன்களுக்கான ஆக்கிரோஷமான இராணுவ செயற்பட்டியலைத் தொடரவும், உழைக்கும் மக்களுக்கு மேலும் கொடூரமான தாக்குதல்களைத் திணிப்பதற்கான கூட்டு நோக்கத்திற்காக முற்றிலும் கீழ்ப்படுத்தப்பட்ட அவர்களின் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் தொடர்பாக கருத்து வேறுபாடுகளை கொண்ட மிகவும் பழைமைவாதிகளிடையே ஒரு உட்பகைமிக்க போராட்டத்தை பிரெக்ஸிட் தூண்டியுள்ளது. ஒரு முற்போக்கான மாற்றீட்டுக்கான போராட்டமானது, மிகத் தொலைநோக்குடைய தொழிலாளர்களும் இளைஞர்களும் அவசியமான முடிவுகளை எடுப்பதோடு, தொழிற் கட்சியில் இருந்து உடைத்து இடது பக்கம் திரும்பி, பிரித்தானியாவிலும் ஐரோப்பா முழுவதிலும் சோசலிசத்திற்கான உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதில் தங்கியுள்ளது.