ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India and Pakistan tobogganing toward a catastrophic war

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அழிவுகரமான போரை நோக்கி சறுக்கிச் செல்கின்றன

Keith Jones
2 March 2019

இந்தியா மற்றும் பாகிஸ்தான், தெற்காசியாவின் அணு ஆயுதம் தரித்த பகையான நாடுகள், முழு அளவிலான ஒரு இராணுவ மோதலின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

செவ்வாய் அன்று விடியலில், இந்திய போர் விமானங்கள், 1971 இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பின் முதல் முறையாக பாகிஸ்தானை தாக்கின.

அவை, பாகிஸ்தானில் ஆழமாக ஊடுருவி, புது தில்லியின் கூற்று படி இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில், பிரிவினைவாத கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய குழுவான ஜை-ஷெ-மொஹம்மதுவின் (JeM) முக்கிய “பயங்கரவாத தளம்” அழிக்கப்பட்டது.

சில மணி நேர குழப்பத்திற்கு பின்னர், இந்திய தாக்குதலின் பாதிப்புகள் மற்றும் மூலோபாய பிரதிவிளைவுகளை ஆராய்ந்த பின், இஸ்லாமாபாத் பலமான இராணுவ பதிலடி கொடுக்கப் போவதாக சவால் விடுத்தது.

பாகிஸ்தான் உள்ளே அமெரிக்கா-இஸ்ரேல் பாணியிலான தாக்குதல்களை —அது பழிவாங்குதல் அல்லது காஷ்மீரி கிளர்ச்சி குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு தாக்குதல் என்ற பெயரில் நடத்தப்பட்டாலும் சரி— அவற்றை இயல்பாக்குவதை பாகிஸ்தான் அறவே அனுமதிக்காது என்று அது பிரகடனம் செய்தது.

மறுநாள், இந்திய மற்றும் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்தியாவின் மாநிலமான ஜம்மு மற்றும் கஷ்மீரின் மீது ஒரு சிறு, நாய் சண்டையில் ஈடுபட்டன, அது, இந்திய இராணுவ தளங்கள் மீது வெற்றி பெறாத தாக்குதலை இஸ்லாமாபாத் நடத்திய பிறகு நடந்ததாக புது தில்லி கூறுகிறது.

இரண்டு தரப்பும் புதன் கிழமை மோதலில் குறைந்தது ஒரு எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுகின்றன, இஸ்லாமாபாத் தன் கூற்றுக்கு ஆதாரமாக, கைது செய்த இந்திய விமானியைக் காட்டியது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இதர உலக சக்திகள் தற்போது வெளிப்படையாக முழுமையான போர் வெடிப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன — அந்தப் போர் துணைக் கண்டத்திற்கு ”மட்டுப்படுத்தப்பட்டதாக” இருந்தாதாலும் சரி, அது வேகமாகவே ஒரு அழிவுகரமான அணு ஆயுத பரிமாற்றமாக உருவெடுக்கும் என்று ஒப்புக்கொள்கின்றன.

அவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி ஆலோசனை வழங்கினாலும், மத்தியஸ்தராக பங்காற்ற முன் வந்தாலும், பெண்டகனின் சொல்லாடலை பயன்படுத்துவோமாயின் “மூலோபாய போட்டியின் ஒரு புது யுகத்தில்” வல்லரசுகள் மாட்டிக் கொண்டுள்ளன — அவை தெற்காசியாவின் போர் நெருக்கடியை பயன்படுத்தி தங்கள் பூகோள முலோபாய நலன்களை முன்னெடுக்க முயல்கின்றன.

வாஷிங்டன், குறிப்பாக, இந்த நெருக்கடியை பயன்படுத்தி சீனாவை இராஜதந்திர ரீதியாக மற்றும் இராணுவ ரீதியாக சுற்றி வளைக்க முயற்சிக்கின்றது.

அது வெளிப்படையாக பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குலை “தற்காப்பு” என்று பச்சை கொடி காட்டியது, மேலும் இந்திய-அமெரிக்கா “பூகோள மூலோபாய கூட்டின்” பலத்தை கோடிட்டு காட்டுவதற்கு, நடப்பு நெருக்கடியை பயன்படுத்துகிறது.

இந்த நிலைமைகளின் வெடிப்புத்தன்மைக்கு எரியூட்டுவனவாக இருப்பவை, முறையே நரேந்திர மோடி, அவரது இந்து ஆதிக்க பா.ஜ.க மற்றும் இஸ்லாமிய ஜனரஞ்ஜகவாத இம்ரான் கான் தலைமையிலான இரண்டு அரசுகளும் எதிர்கொள்கின்ற சமுக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பது தான்.

வெறும் ஏழு மாதங்களுக்கு முன், பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட கான், வேலைகள், முன்னேற்றம் மற்றும் அதிகரித்த சமூக செலவீனங்கள் போன்ற வாக்குறுதிகளோடு ஆட்சிக்கு வந்தார், ஆனால் அவரது அரசாங்கம், IMF-கோரும் சிக்கன நடவடிக்கையை முன்னெடுப்பதால் அதன் செல்வாக்கு, கீழிறங்குவதை காண்கிறார்.

மோடி மற்றும் அவரது பா.ஜ.க வெட்கமின்றி போர் நெருக்கடியை பயன்படுத்தி வரும் ஏப்ரல்-மே இல் நடக்கவிருக்கும் பல கட்ட பொதுத் தேர்தலில் வாக்குகளை திரட்ட முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தாததாலும், மேலும் பாகிஸ்தான் உடனான உறவில் இருந்த “மூலோபாய பொறுமை காத்தல்” என்ற சங்கிலியை உடைத்த “பலசாலி” மோடியை புகழ் பாடவில்லை என்பதாலும், ”தேசிய ஒற்றுமையை” குலைப்பதாக எதிர்கட்சிகளை பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது.

இராணுவம், பெருநிறுவன ஊடகங்கள், மற்றும் அனைத்து எதிர் கட்சிகளின் முழு ஆதரவுடன், மோடி அரசாங்கம் கான், பேச்சு வார்த்தைக்கு முன்வர தயாராக இருப்பதாக கூறுவதை நிராகரித்தது.

காஷ்மீர் கிளர்ச்சிக்கு அனைத்து பொருள் உதவியையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்ற புது தில்லியின் கோரிக்கைக்கு இஸ்லாமாபாத் எடுத்துக் காட்டும்படியாக சரணாகதி அடையும் வரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உயர் மட்ட அளவில் பேச்சு வார்த்தைகள் எதுவும் கிடையாது, “சமரச பேச்சுக்கள்” என்பது ஒரு புறம் இருக்கட்டும் என்று பல வருடங்களாக புது தில்லி வலியுறுத்துகிறது.

ஒரு அணு ஆயுத பேரழிவு உருவாகிக் கொண்டிருக்கிறதா?

அணு ஆயுத பலம் பெற்ற அரசுகள் இடையே நடைபெறும் போரின் அபாயம் குறித்து யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

2001-2002 போர் நெருக்கடி முதல், அப்போது மில்லியன் கணக்கான இந்திய படைகள் பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது மாதங்களுக்கு குவிக்கப்பட்டிருந்தன, அச்சமயத்தில் இரு நாடுகளும் மெய்-சிலிர்க்கும் மூலோபாயங்களை முன்னிறுத்தின, சக்தி வாய்ந்த தூண்டுதல் வேகமான போருக்கு வழிவகுத்து இருக்கும்.

இந்திய படைகளை கொண்டு பாகிஸ்தானின் மீது பல் முனை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான வேகமான அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுக்கும் இந்தியாவின் கடுமையான துவக்க மூலோபாயத்திற்கு பதிலிறுப்பாக இஸ்லாமாபாத் தந்திரோபாய அல்லது போர்க்கள அணு ஆயுதங்களை பயன்படுத்துகின்றது.

பாகிஸ்தான் தந்திரோபாய அணு ஆயுதங்களை பயன்படுத்தும் பட்சத்தில் “மூலோபாய தொடக்கநிலையை” உடைத்து, அணு-ஆயுதங்களை “முதலில் பயன்படுத்துவது இல்லை” என்ற உறுதிமொழியில் இருந்து இந்தியாவை விடுவிக்கிறது என்று இந்தியா பதிலுக்கு சமிக்கை செய்தது.

இவை அனைத்தும் அளவீட்டில் சிறிய, மக்கள் தொகை மிகுந்த இடத்தில் நடந்தேறிவிடும்.

லாகூரின் மையம், 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரம், அது இந்திய எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் (12.5 மைல்) தொலைவிற்கு சற்று அதிகமாக இருக்கும்.

புது தில்லியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கான தூரம், பெர்லின் மற்றும் பாரிஸ் அல்லது நியூ யோர்க் மற்றும் டெட்ராய்டை விட கணிசமான அளவு குறைவாகவே இருக்கும், மற்றும் அணு-ஆயுத ஏவுகணை சில நிமிடங்களில் பயணித்து விடும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுத பரிமாற்றம் வெறும் பல மில்லியன் கணக்கானவர்களை தெற்காசியாவில் கொல்வதோடு நின்று விடாது.

2008 இல் விஞ்ஞானிகள் (1980 களில் இவர்கள் அணு ஆயுத குளிர்காலம் தொடர்பாக உலகத்தை எச்சரித்தனர்) நடத்திய சோதனை மூலம் ஹிரோஷிமா குண்டு, அளவில் நூறு தடவை வெடிக்க வைத்தது போன்று இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தினால், பெரிய நகரங்கள் நாசம் ஆவதன் மூலம், பெருமளவு புகையும், சாம்பலும் காற்றுவெளியில் பரவும், அது விவசாய நெருக்கடியை உருவாக்கும் என்று கண்டு பிடித்தனர்.

இந்த தெற்காசியாவின் ”மட்டுப்படுத்தப்பட்ட” அணு-ஆயுத போரைத் தொடர்ந்து பில்லியன் கணக்கானவர்கள் இறப்பார்கள் என்று அவர்கள் கணித்தார்கள்.

இந்த சமீபத்திய போர் நெருக்கடியின் உடனடி வெளிப்பாடு எதுவாக இருந்தாலும் —சம்பவங்கள் வரும் நாட்களில் அல்லது வாரங்களில் கை மீறி போகலாம்— அது இந்த போருக்கு பிந்தைய பூகோள அரசியலின் நிலைமுறிவு மற்றும் அதன் விளைவாக ஏகாதிபத்திய பகைமையின் எழுச்சி மற்றும் அரசுகளிடையே பகை, இவையெல்லாம் 20-ம் நூற்றாண்டின் பிரச்சினைகளை மற்றும் முரண்பாடுகளை மேலும் எரியூட்டுகின்றன: அந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் சோசலிசப் புரட்சியின் சவாலிலிருந்து தப்பியது, ஆனால் மனித குலத்தை இரண்டு உலக போர்கள், மற்றும் பாசிசம் மேலும் பல பயங்கரங்களுக்கு இழுப்பதன் மூலமே இது நடந்தது.

பிரிவினையும் தேசிய முதலாளித்துவத்தின் வரலாற்று தோல்வியும்

இந்திய, பாகிஸ்தான் மோதலின் மூலங்கள், துணைக்கண்டத்தை முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பெரும்பான்மை இந்து இந்தியாவாக ஆக்கிய 1947 வகுப்புவாத பிரிவினையில் தங்கியுள்ளது — இந்த குற்றம் தெற்காசியாவை விட்டுச் செல்லும் பிரித்தானிய பிரபுக்கள் மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் எதிரெதிர் கன்னைகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

பிரிவினை, வரலாறு, கலச்சாரம், மற்றும் பொருளாதார தர்க்கத்தை புறந்தள்ளியது மற்றும் வகுப்புவாத வன்முறை என்னும் தீசுவாலையில் 2 மில்லியன் மக்கள் பொசுங்கினர் மேலும் 18 மில்லியன் மக்கள் இந்தியாவை விட்டோ பாகிஸ்தானை விட்டோ தப்பியோடினர்.

ஆனால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பகையான ஆளும் வர்க்கத்தின் சிடுமூஞ்சித்தனமான நலன்களை காத்தது, ஒரு மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்ததன் மூலம், அது கடந்த மூன்று தசாப்தங்களாக தெற்காசியாவை ஆட்டிப்படைத்துள்ளது; மேலும் இலண்டன் உடனான சுதந்திர-பிரிவினை ஒப்பந்தத்தின் பாகமாய், பிரித்தானிய-காலனித்துவ அரசு இயந்திரத்தை தங்கள் வசம் பெற்று, அதன் மூலம் எதிர்ப்பில் கூடுதல் வலிமை பெற்ற தொழிலாள வர்க்கத்தை எதிர் கொண்டனர்.

பரந்துபட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முற்போக்கு தீர்வுகாண திராணியற்ற இரண்டு முதலாளித்துவங்களும் கடந்த ஏழு தசாப்தங்களாக தங்களது மூலோபாய பகை மற்றும் வகுப்புவாதத்துடன் பின்னிய தேசியவாத உணர்வுகளை ஊட்டுவதன் மூலம் சமூக கோபத்தை பிற்போக்கு திசைகளில் திருப்பினர்.

காஷ்மீர் என்ற ஆறாத வடு, அவர்களது பொதுவான திவால்தன்மையின் எடுத்துக்காட்டாகும்.

இந்திய முதலாளித்துவம் ஜம்மு கஷ்மீரின் (இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம்) மக்களை மூன்று தசாப்தங்களாக இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் அடக்கியது மேலும் இந்திய ஆட்சிக்கு மக்களின் பரந்த எதிர்ப்பு குறித்து திகைப்பினை வெளிப்படுத்துகின்ற அதேவேளை, முஸ்லிம் வகுப்புவாத படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட கட்சி மற்றும் பிரதமரை கொண்டாடுகின்றது.

விஷமான பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் பொறுத்த வரை, அது ஆளும் காஷ்மீரில், அவர்களின் உரிமைகளை நசுக்கி, மற்றும் இந்தியா ஆளும் ஜம்மு கஷ்மிரில் எதிர்ப்பினை பயன்படுத்தி, மிகவும் பிற்போக்கான இஸ்லாமிய குழுக்களை முன்னுக்கு கொண்டு வருகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான போர் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பு இயக்கத்திற்காக

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்திய-பாகிஸ்தான் மோதலின் தன்மை மாறிவிட்டது.

அது அமெரிக்க-சீன மோதல்களுடன் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது, அது புதிய வெடிப்புத்தன்மையை அதற்கு கொடுத்து, இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடு உலகத்தின் பெரும் சக்திகளை இழுக்கும் அபாயத்தை எற்படுத்தியுள்ளது.

இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து, வாஷிங்டன் (ஜனநாயக மற்றும் குடியரசு நிர்வாகங்கள் இரண்டும் ஒன்று போலவே) இந்தியாவை தீவிரமாக கவர முற்பட்டுள்ளது, அதன் மீது மூலோபாய சலுகைகளை பொழிவதன் மூலம், முன்னேறிய அமெரிக்க தளவாடங்கள் மற்றும் சாதாரண அணு எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தினை இந்தியாவிற்கு கொடுப்பதும் இதில் அடங்கும், மேலும் புது தில்லியை தனது மூலோபாய நிகழ்ச்சி நிரலில் அரவணைப்பதே அதன் குறிக்கோளாகும்.

அமெரிக்காவின் போர்-திட்டமிடுபவர்கள், தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் மீது முக்கியத்துவத்தை இணைத்திருப்பது —இந்த கடல்வழிப் பாதை சீனாவின் பொருளாதாரத்தை எரியுட்டும் எண்ணெய் மற்றும் இதர வளங்கள் பெறவும், ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கிற்கு எற்றுமதிகளை அனுப்பவும் ஒரு வழியாக உள்ளது— அமெரிக்க பசிபிக் ஆணையகத்தை இந்திய-பசிபிக் ஆணையகம் என்று பேர் மாற்றியதில் இருந்து வெளிப்படுகிறது.

மோடியின் கீழ், இந்தியாவின் தளங்களை அமெரிக்க போர்விமான்ங்கள் மற்றும் கப்பல்கள் நிறுத்த திறந்துவிட்டமை மற்றும் அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் அதிகரிக்கும் இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் நாற்தரப்பு மூலோபாய ஒத்துழைப்புகள், காட்டுபவை, சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு இந்தியா உண்மையில் “முன்னணி நாடாக” மாற்றப்பட்டுவிட்டது என்பது தான்.

பனிப் போரின்போது தெற்காசியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இருந்த இஸ்லாமாபாத், மேலும் பயமுறுத்தும் தொனியில் எச்சரித்தது, அதாவது அமெரிக்காவின் செய்கைகள், இப்பிராந்தியத்தில் “சமபல நிலையை” உடைத்துள்ளது. ஆனாலும் அதற்கு பயனில்லை.

இதன் விளைவாக, அதே போன்று இந்திய-அமெரிக்கா கூட்டணியை கண்டு அஞ்சும் சீனாவுடன் அதன் நீடித்த இராணுவ-மூலோபாய கூட்டினை பாகிஸ்தான் பலமடங்கு பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தற்போதைய இந்தியா பாகிஸ்தான் பதட்டங்களை தணிக்க முயற்சித்தாலும், அதன் கணக்குகளின் படி தெற்காசியாவில் வெடிக்கும் பரந்துபட்ட போர், தற்போது அதன் பூகோள அபிலாஷைகளை கீழறுக்கும் என்று கருதுகிறது, அவ்வாறு செய்கையில் இறுதியாக சீனாவை கீழ்ப்படிய செய்வது உட்பட ஆக்கிரமிப்பது உட்பட உலக ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு உந்தும் கட்டமைப்பினுள் செய்கிறது.

இந்த உந்துதலின் பாகமாக, சீனாவின் ஒரே இணைப்பு ஒரே சாலை (OBOR) என்ற முன்முயற்சியை உடைத்து, முக்கியமாக சீன பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் என்ற முயற்சியை அழிக்க வாஷிங்டன் தீர்மானமாக உள்ளது, சீனாவின் அந்த முயற்சி, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல் “நெருக்கும் புள்ளிகளை” கைப்பற்றுவதன் மூலமாக சீனாவை பொருளாதார ரீதியாக முடக்கும் அமெரிக்க முயற்சிகளை எதிர் கொள்வதற்காகும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள், ஆளும் வர்க்கம் தயாரிக்கும் இந்த குற்றவியல் நிறைந்த போர் தயாரிப்புகளை எதிர்த்து அணி சேர வேண்டும்.

முதலாளித்துவம் வரலாற்றுரீதியாக வேரூன்றி இருக்கும் வகுப்பு வாத அடிப்படையில் புகுத்தப்பட்ட தெற்காசியாவின் காலாவதியாகிவிட்ட தேசிய அரசு அமைப்பு முறையும், மற்றும் போட்டி தேசியவாத முதலாளித்துவ குழுக்களின் ,சந்தைக்காக, இலாபத்துகாக, மூலோபாய நலன்களுக்கான போராட்டம் தான் உலகத்தை மறுபங்கீடு செய்வதில் தோற்றம் காண்கிறது. அதனால் தெற்காசிய மற்றும் உலகம் எங்கிலும், போருக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது ஆகும்.

பூகோள ரீதியாக போர் எதிர்ப்பு இயக்கத்தின் பாகமாக, தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் போர் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சோசலிச சிந்தனை உள்ள இளைஞர்கள், முதலாளித்துவத்தின் வேலைத்திட்டமான போர், சிக்கன நடவடிக்கை மற்றும் வகுப்புவாத பிற்போக்கு ஆகியவற்றுக்கு எதிராக கட்டியமைக்க வேண்டும்.

எண்ணற்ற மாவோவாத குழுக்கள், ஸ்ராலினிச CPM மற்றும் CPI ஆகியவற்றுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் வழியாகத்தான் அப்படிபட்ட இயக்கத்தை கட்ட முடியும். பேரழிவுகரமான போரின் பக்கம் வெகுமக்களை கண்மூடித்தனமாக தள்ள உதவும் பேரினவாத, இராணுவ சார்பு கட்சிகள் தான் CPM, CPI என்பதை அவர்கள் பிஜேபியின் அனைத்துக் கட்சி போர் நெருக்கடி கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலமாக நிரூபித்து உள்ளனர். பல தசாப்தகாலமாக, இந்திய ஆளும் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பாகமாக, முதலாளித்துவத்தின் வல்லரசு கனவுகளுக்காக இந்தியாவின் இராணுவ பலத்தை விரிவாக்கும், மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கை, இந்திய அமெரிக்க கூட்டமைப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்ளை ஊக்கிவித்துள்ளனர். மாவோவாதிகள் தொழிலாள வர்க்க சுயாதீனத்துக்கு விரோதமாக இருப்பதுமட்டும் அல்லாமல்,தேசியவாதத்தில் ஊடுருவி இருக்கின்றனர்.

முதலாளித்துவ போர் மற்றும் பிற்போக்குக்கு எதிராக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொழிலாளர்கள், தொழிலாளர் ஆட்சிக்கான போராட்டத்தின் மூலமாக கீழிருந்து பிரிவினையை களைவது மற்றும் தென் ஆசியாவில் ஐக்கிய சோசலிச குடியரசை உருவாக்குவதற்கான போராட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் சர்வதேச சோசலிசம் ஆகியவற்றில் தான் இதற்கான எதிர்வினையை பார்க்க முடியும்.