ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Abbotsleigh Estate Workers Action Committee and SEP hold powerful conference

இலங்கை: எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் பலம்வாய்ந்த மாநாட்டை நடத்தின

By our correspondents
20 March 2019

மார்ச் 17 அன்று இலங்கையில் தேயிலை பெருந்தோட்டங்கள் உள்ள மத்திய மலையக பிரதேசமான ஹட்டனில் உள்ள நகர மண்டபத்தில், எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மண்டபம் நிரம்பிய மாநாடொன்றை நடத்தின.

"தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினையும் சம்பள அதிகரிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கான முன்னோக்கிய பாதையும்" என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வுக்கு, 30 க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறுபட்ட தொழில்களில் இருக்கும் தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட சுமார் 150 பேரை ஈர்த்திருந்தது. சுமார் 20 சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இருந்து பங்கேற்றனர்.

பல வாரங்களாக தேயிலை தோட்டங்கள், நகர்ப்புற தொழில்துறை பகுதிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் பிரச்சாரம் செய்த பின்னர் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி-சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க கோரும் பிரேரணை ஒன்றும், விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் அமெரிக்க தகவல் வெளியீட்டாளர் செல்சீ மானிங் ஆகியோரை விடுவிக்கக் கோரும் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டன.


எஸ். காண்டிபன்

மஸ்கேலியாவின் கிளெனூஜி தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும் சோ.ச.க. உறுப்பினருமான எஸ். காண்டிபன், இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய போராட்டத்தை காட்டிக்கொடுத்தமை, “தொழிற்சங்கங்கள் இனி தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது பாதுகாக்கவோ இல்லை” என்ற சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் நீண்டகால பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக மாறியுள்ளன."

கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் "ஒரு பக்கத்தில் இருக்க, தொழிலாளர்கள் மறு பக்கத்தில் உள்ளனர்" என்று குறிப்பிட்ட அவர், எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுவை நிறுவ தீர்மானித்தமை, "ஏனைய அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு உதாரணமாகும்" என்று விளக்கினார்.


எம். தேவராஜா

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா பிரதான அறிக்கையை வழங்கி, இந்த மாநாடு "தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச மறு எழுச்சியின் ஒரு தெளிவான வெளிப்பாடு" என்று விளக்கினார்.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய போராட்டமானது அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிரான பிரதிபலிப்பாக தேவராஜா சுட்டிக்காட்டினார். "அடிப்படை தினசரி சம்பளத்தில் 100 சதவிகித அதிகரிப்பு தேவை என்றே தொழிலாளர்கள் கோரினர். கம்பனிகள் தங்கள் கோரிக்கையை முழுமையாக நிராகரித்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வளர்ந்த நிலையில், தோட்டத் தொழில்துறையின் மிகப்பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர்களின் கோபத்தை சிதறடிப்பதற்கே வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

சம்பளப் பிரச்சினையை தான் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த போலி வாக்குறுதியை மேற்கோள் காட்டி, இந்த தொழிற்சங்கம் ஏழு நாட்களுக்கு பின்னர் வேலைநிறுத்தத்தை நிறுத்தியது.

"ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்தனர். தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிக்கு எழுந்தனர். இது எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் சோ.ச.க. வழிகாட்டுதலின் கீழ் ஒரு நடவடிக்கை குழுவை உருவாக்குவதற்கு முன்முயற்சியை மேற்கொண்டதில் உச்ச கட்டத்தை எட்டியது."

தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், எபோட்சிலி தோட்ட நிர்வாகம், நடவடிக்கை குழுவின் தலைவர் எஸ். சுந்தர்த்தலிங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களையும் பழிவாங்குவதற்கு முயற்சித்ததை பேச்சாளர் சுட்டிக் காட்டினார். அபோட்சிலி தோட்டத்தின் உதவி மேலாளர், மார்ச் 17 அன்று ஹட்டன் நகரில் நடந்த தொழிலாளர்கள் மாநாட்டில் சுந்தரசிங்கம் பங்கேற்காமல் தடுப்பதற்காக விசேட கடமைகளை அவருக்கு சுமத்தினார். எனினும் பல எபோட்சிலி தொழிலாளர்கள், நிர்வாக அச்சுறுத்தல்களை மீறி மாநாட்டில் பங்கெடுத்தனர்.

உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பெருகிவரும் நெருக்கடியின் முழு சுமைகளையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு ஆளும் வர்க்கங்கள் சர்வதேச அளவில் முயன்று வருவதாக தேவராஜா விளக்கினார். "இலங்கையில் உள்ள தோட்டத் கம்பனிகளும் அதையே செய்கின்றன. சர்வதேச சந்தையில் போட்டியிட தேயிலை உற்பத்தி செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என அவை கோருகின்ற போதிலும், தங்களது இலாபங்களின் சிறிய பகுதியை கூட தியாகம் செய்யத் தயாராக இல்லை,” என அவர் கூறினார்.

"இந்த நிறுவனங்கள் பெரும் இலாபம் சம்பாதிக்கும் அதே வேளையில், அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பெரும் சம்பளத்தை சம்பாதிக்கின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் தினசரி ஊதியமானது முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட விற்றுத்தள்ளும் கூட்டு ஒப்பந்தத்தில் வெறும் 20 ரூபா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பறிக்கப்பட வேண்டிய தேயிலை கொழுந்துகளின் தினசரி இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு சிறு நிலங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஊதிய முறைகளை அகற்றுவதற்கு கம்பனிகள் முயன்று வருவதோடு தொழிலாளர்களை குத்தகைகை விவசாயிகளாக அல்லது நவீன ஒப்பந்த கூலிகளாக மாற்றுவதற்கு திட்டமிடுகின்றன என்று தேவராஜா சுட்டிக்காட்டினார். "முழு குடும்பமும் இந்தத் நிலத்துண்டுகளை பராமரிக்க இழுத்துத் தள்ளப்படும்" என்று அவர் எச்சரித்தார்.


மாநாட்டின் ஆதரவாளர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டமானது உலகம் முழுவதும் உள்ள சக ஊழியர்களைப் போன்று இலங்கைத் தொழிலாளர்களாலும், தொழிற்சங்கங்கள் மூலம், அல்லது முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு மற்றும் முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது வோண்டுகோல் விடுத்து தங்கள் உரிமையை வெல்லவோ அல்லது பாதுகாக்கவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, என்று பேச்சாளர் தெரிவித்தார்.

"பெரிய அளவிலான தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், உலகப் பொருளாதாரமானது முதலாளித்துவ இலாபங்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக, சமுதாயத்தில் பெரும்பான்மையினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு தங்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை நிறுவுமாறும், முதலாளித்துவ வர்க்கத்தினதும் அரசாங்கத்தினதும் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதற்கு அந்த அமைப்புக்களை ஐக்கியப்படுத்துமாறும் அனைத்து தோட்டங்களிலும் மற்றும் மற்ற பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு தேவராஜா அழைப்பு விடுத்தார்.

"ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும்" என்று அவர் விளக்கினார்.


தேவராஜா பிரதான உரையாற்றுகிறார்

மாநாட்டில் கலந்துரையாடல்களின் போது பல பார்வையாளர்கள் உரையாற்றினர்.

அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி வாரியத்தில் (ஜனவசம) இயங்கும் ஹந்தன தோட்டத்திலிருந்து வந்த தனபாலன், நிர்வாகம் தோட்டத்தை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டதுடன், அதை துப்புரவு செய்து புதர்களை அகற்றை வைப்பதில்லை, என்று கூறினார். "சுற்றுலா பேருந்துகள் கடந்து செல்வதால் வீதியின் இரு பகுதியிலும் அவை சுத்தமாக இருக்கின்றன," என்று அவர் கூறினார்.

"அரசாங்க அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் படிப்படியாக ஹன்தான தோட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர், ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் இந்த நிலங்களில் வேலை செய்ய வேண்டியுள்ளது, இப்போது இந்த காணிகளில் சிறிய ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன."


தனபாலன்

ஓய்வுபெறும் வயதை அடைந்தால், நிர்வாகம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிடுகின்றது, ஆனால் ஓய்வூதிய நிதியை கொடுப்பதில்லை என்று தனபாலன் கூறினார். "இந்த விவகாரங்களை வெளிப்படுத்த எந்த தளமும் கிடையாது. இந்த விஷயங்களை அம்பலப்படுத்துவதற்காகவே இன்று நான் இங்கு வந்தேன்."

ப்ளூம்ஃபீல்ட் தோட்டத்திலிருந்து ஒரு பெண் தொழிலாளி பேசினார்: "அவர்கள் 700 ரூபாய்க்கு எங்கள் [தினசரி] சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். உண்மையில் வெறும் 20 ரூபாதான் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு முழு நாள் சம்பளத்தை பெறுவதற்காக நிர்வாகம் 16 கிலோ தேயிலை கொழுந்துகளை கேட்கிறது.

"எங்களது பிள்ளைகளும் தோட்டத் தொழிலாளர்களாக வளர்ந்து வளர வேண்டுமா? நாம் அனுபவிக்கும் துயரங்களை அவர்களும் எதிர்கொள்ள வேண்டுமா? என நான் கேட்க விரும்புகிறேன். இந்த சூழ்நிலையை நாம் மாற்ற வேண்டும்."


தேவிகா

கொழும்பு துறைமுக தொழிலாளியான தேவிகா, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான நிலைமை பற்றி மாநாட்டில் வெளிப்பட்டதாக தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு பெரும் வருமானம் ஈட்டுபவர்களாவர் உள்ளனர், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம், என அவர் கூறினார்.

கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை சுட்டிக்காட்டி, அரசாங்கம் துறைமுகத்தின் கிழக்கு பகுதியை தனியார்மயமாக்குவதற்கு முயற்சிப்பதாக அவர் விளக்கினார். "அது நடந்தால், துறைமுகத்தில் உள்ள பாரிய தொழிலாளர் படைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். துறைமுகத்தில் உள்ள பிரச்சினைகள் துறைமுக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளன."


மயூரன்

பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மயூரன், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 71 ஆண்டுகளாகியுள்ள போதிலும், "மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை" என்று மாநாட்டில் கூறினார். 1948 இல் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை அகற்றும் பிற்போக்கு முடிவுகளை நினைவுபடுத்திய அவர், ஆளும் வர்க்கம் இன்று தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு எவ்வாறு இனவாத கொள்கைகளை தொடர்ந்து பயன்படுத்துவதைப் பற்றி பேசினார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக மயூரன் தெரிவித்தார். "எதிர்காலத்திலும் மாணவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.


சுலக்ஷனா

ஒரு எபோட்சிலி தொழிலாளி கூறியதாவது: "நான் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கை குழு உறுப்பினர் என்ற வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதையிட்டு சந்தோஷமாக இருக்கிறேன். இன்று பலர் இங்கு உரையாற்றினர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் மட்டுமே நம் சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசி அதை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதைப் பற்றி கலந்துரையாடலாம்.

"இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் டேவிட் நோர்த் எழுதிய ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ் பதிப்பின் வெளியீட்டிற்கு இங்கு வந்தேன். வீட்டுக்குப் போகும்போது சோ.ச.க.வில் இணைந்திருந்தால் என்னால் என்ன சாதிக்க முடியும் என்று நினைத்தேன்? வீட்டில் நான் புத்தகத்தின் இரண்டு பக்கங்களை படித்து, அந்த பக்கங்களை படிக்குமாறு என் மககளையும் கேட்டேன். இந்த புத்தகத்திற்கான பணம் வீணாகிவிடவில்லை, ஏனெனில் பல முக்கியமான விஷயங்கள் அதில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான புத்தகங்களை நாம் அனைவரும் கவனமாக வாசிக்க வேண்டும்."

ஒரு தோட்டத்து யுவதியான சுலக்ஷனா, வருவாமானப் பகிர்வு அல்லது குத்தகை விவசாய முறை என்று அழைக்கப்படுவது பற்றி பேசினார். "வருவாய் பகிர்வு முறை மூலம் தோட்டத்து சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படும். தொழிலாளர்கள் மீது மேலும் சுமை சுமத்தப்படும். சிறுவர்கள் தொழிலாளர்கள் ஆகிவிட்டால், முதலாளிகள் அவர்களையும் பயன்படுத்துவர்.

"150 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள், இந்த முறையின் கீழ் அடிமைகள் போன்ற நிலைமைகளை எதிர்கொள்வார்கள், நாங்கள் அதை நிராகரிக்க வேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும், சோ.ச.க. விளக்கியுள்ளபடி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். ஒரு புரட்சி வந்தால் மட்டுமே தீர்வு வரும்."


கே. ரட்னாயக்க

மாநாட்டின் முடிவில் அவர் கூறிய கருத்துக்களில், உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியரான கே. ரட்னாயக்க, ஹட்டன் நிகழ்வு தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியின் ஒரு புதிய கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது, என்றார்.

“எபோட்சிலி தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தங்களது உரிமைகளுக்காக போராட சுயாதீனமாக ஒழுங்கமைவதற்கு ஒரு தைரியமான மற்றும் முற்போக்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார். "ஜெனரல் மோட்டார்ஸில் உள்ள தொழிலாளர்கள் சமானிய ஊழியர்களின் குழுக்களை உருவாக்குவதற்கு முன்வந்துள்ள வகையில் இதுவும் ஒரு சர்வதேச அபிவிருத்தியின் பாகமாகும்.

"தோட்டக் கம்பனிகள் ஊதிய முறையை ஒழிப்பதற்கும் குத்தகை விவசாய முறையை ஸ்தாபிப்பதற்கும் கோருகின்றன. யுனிலீவர் மற்றும் டாட்டா போன்ற சர்வதேச பெருநிறுவனங்கள், பாரியளவிலான இலாபத்தை திரட்டும் பொருட்டு குறைந்த உற்பத்தி செலவை கோருகின்றன," என்று அவர் கூறினார். இந்த சுரண்டல், ஒரு உலகளாவிய செயல்முறை என அவர் விளக்கினார். "இந்தத் தாக்குதல்களுக்கு தேசிய தீர்வு இல்லை. சர்வதேசரீதியாக ஒழுங்கமைந்து சோசலிசத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும்."

இலங்கை ஆளும் கும்பல் சீரழிவின் முன்னேறிய கட்டத்தில் இருப்பதாக மாநாட்டில் ரட்னாயக்க தெரிவித்தார். "ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க் கட்சிகளிடமும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. அவர்கள் அனைவரும் முழு சர்வாதிகார முறையிலான ஆட்சியை திணிக்க தங்கள் சொந்த வழிகளில் தயார் செய்து வருகின்றனர்.

"இந்த ஆளும் வர்க்கமானது அதன் சொந்த மக்களுக்கு எதிராக 30 ஆண்டுகால போரை, அதாவது, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இனவாத யுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஒரு ஆளும் வர்க்கமாகும்" என கூறிய அவர், நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்புமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.