ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Poverty in the UK: 100 “baby banks” spring up to assist parents with basic supplies

இங்கிலாந்தில் வறுமை: அடிப்படைத்தேவையான பொருட்களை வழங்கி பெற்றோருக்கு உதவுவதற்காக 100 "குழந்தை வங்கிகள்" உதயம்

By Margot Miller 
26 February 2019

சமீபத்திய அறிக்கைகளின் படி, அதிகரித்து வரும் வறுமை மற்றும் சமத்துவமின்மை இங்கிலாந்தில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிவடையச் செய்து மோசமானதாக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2023-24 அளவில், Resolution Foundation அமைப்பின் நிபுணர் குழுவின் எதிர்வு கூறலின் படி, இங்கிலாந்தில் 37 சதவிகித குழந்தைகள் கிட்டத்தட்ட வறுமையில் வாழ வேண்டியிருக்கும். 1990 களின் ஆரம்பத்தில் முந்தைய 34 சதவிகித உயர்வை விட இது அதிகம். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலதிகமாக ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் நிலைமையைக் குறிக்கும்.

பிபிசி (BBC) மேற்பார்வையில், இந்த மாதம் Joseph Rowntree Foundation அமைப்பால் வெளியிடப்பட்ட ஆய்வின் மூலம், இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

பல பிரித்தானியர்கள் வறுமைக்குள் தள்ளப்படுவதுடன், இலவச உணவுக் களஞ்சியங்களை வழக்கமாக பயன்படுத்த பழகிவிட்டனர். இது போன்ற அதிகரித்து வரும் வறுமை "குழந்தை வங்கிகள்" எனும் ஒரு புதிய தோற்றப்பாடு கிளர்ந்தெழ காரணமாகியுள்ளது. இவை தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகளால் நிதியளிக்கப்படுவதுடன் தொட்டில்கள், குழந்தை உணவு மற்றும் குழந்தைகளின் நப்கின்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கஷ்டப்படுகின்ற குடும்பங்களுக்கு வழங்குகின்றது. மக்கள் அவற்றை பயன்படுத்தும் அளவு அதிகரித்து வருவதாக  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிப்பதுடன், நாடெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட குழந்தை வங்கிகள் தற்பொழுது உள்ளன.

Joseph Rowntree Foundation (JRF) எனப்படும் ஒரு சமூக கொள்கை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொண்டு நிறுவனம் பிபிசி இற்காக அரசாங்கத்தின் சொந்த தரவுகளை பகுப்பாய்வு செய்தது.

2016-17 இல், ஒரு வயதுக்குட்பட்ட 302,838 குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்ப வருமானம் உள்ள குடும்பங்களில் வசித்து வருவதாக அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவிகித குழந்தைகள், உதாரணமாக, ஒரு வாரத்திற்கு 198 பவுண்டுகளுக்கு (வீட்டுவாடகைச் செலவை கழித்தபின்) குறைவான ஒற்றை பெற்றோர் சம்பாதிப்பதுடன், அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு தம்பதியினர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு 360 பவுண்டுகள் சம்பாதிக்கின்ற குடும்பங்களில் வாழ்கின்றனர்.

JRF இன் "இங்கிலாந்தின் வறுமை 2018" என்னும் சமீபத்திய தேசிய அறிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 500,000 அதிகரிப்புடன் தற்போது 4.1 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாழுவதாக தெரிவிக்கிறது. 2011-12 முதல் குழந்தை வறுமை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், இங்கிலாந்து குறைந்த ஊதிய பொருளாதாரமாக மாற்றப்பட்டு வருவதால் தொழில்செய்வோரின் வறுமையும் அதிகரித்து வருகிறது.

இந்த ஆய்வு, குழந்தை வறுமையின் அதிகரிப்புக்கு அதிகரித்து வரும் காரணியாக தொழில்செய்வோரின் வறுமையை அடையாளம் கண்டுள்ளது. 2010-11 மற்றும் 2016-17 க்கு இடையில், உழைக்கும் குடும்பங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை, அதேபோல் குழந்தை வறுமை விகிதம் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளில் வேறெப்போதும் இல்லாத அளவில் துரிதமாக அதிகரித்துள்ளது.

இந்த அறிக்கைகளுக்கு பதிலடியாக, பிரதமர் தெரேசா மே இன் பழமைவாத கட்சி மாநாட்டில், சிக்கன சகாப்தம் முடிவுக்கு வந்தது என்று மோசடியான அறிவிப்பை வெளியிட்டார். அவ் அரசாங்கம் வறுமை மற்றும் சமத்துவமின்மை அதிகரித்தமை மற்றும் அதன் உயர்வு என்பவற்றை நிராகரித்தது.

Resolution Foundation இன் "வாழ்க்கைத் தர கண்ணோட்டம் 2019" என்னும் மற்றொரு ஆய்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து குழந்தை வறுமை கணிசமாக அதிகரிக்கும் என கணித்துள்ளது.

குறைந்த-நடுத்தர-வருமான குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தீர்மானம் நிதியம் 2005 இல் நிறுவப்பட்டது. எதிர்வரும் காலங்களில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் குடும்பங்களின் வருமான கணிப்புக்கள் மிக மோசமான தகவல்களையே காட்டுகிறது.

Resolution Foundation இன் மூத்த ஆய்வாளர் ஆடம் கார்லெட் கூறினார், "இங்கிலாந்தின் குடும்பங்கள் ஏற்கனவே 1,500 பவுண்டுகள் வருமான வெட்டை சந்தித்துள்ளன. பொருளாதாரத்தின் ஊதியம் வழங்கும் திறன் தாழ்வான மட்டத்தில் உள்ளமையால் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் வருமானங்கள் தேங்கி நிற்கும் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்துக்குரிய குடும்பங்களின் எதிர்காலம் குறிப்பாக கடுமையானது," என்று கோர்லெட் கூறினார், பொதுநல செலவினங்களை இதற்கான ஒரு காரணியாக காட்டி அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார்.

2008 ஆம் ஆண்டின் உலக நிதிச் சரிவுகளிலிருந்து சராசரி வருமானம் இன்னமும் மீண்டு வரவில்லை மற்றும் பணவீக்கத்துக்கு பின்னர், நெருக்கடி நிலைக்கு முந்தைய காலத்தை விட ஆண்டொன்றுக்கு 500 பவுண்டுகள் வருமானம் குறைவாக உள்ளது என்றும் RF கூறுகிறது. “ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர்ந்த ஏனையோரின் சராசரி வருமான அதிகரிப்பு பல ஆண்டுகளுக்கு மீண்டும் முந்தைய அதிகரித்த நிலைமைக்கு திரும்புவதற்கு எதுவும் செய்யப்படவில்லை”, எதிர்காலத்தில் எப்போது அதிகரிக்கும் எனவும் தெரியாது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்பாடற்ற பிரெக்சிட்டின் எதிர்மறையான தாக்கம் கூட இல்லாது, உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளுக்குட்பட்டு வர்த்தகங்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டாலும் "வீட்டு வருமானத்துக்கான எதிர்காலம் பலவீனமாக உள்ளது."

பெற்றோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும், சமூக வாடகைதாரர்களுக்கும், அடமானங்கள் உள்ளவர்களுக்கும், திருமணமாகாதவர்களுக்கும் எதிர்காலத்தில் கிடைக்ககூடிய வருமான வளர்ச்சி மிகக் குறைவானது. குழந்தைகளின் வறுமை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு மிக உயரும் எனவும், 2016-17 ல் இருந்ததைவிட 2023-24 ல் ஆறு சதவிகித புள்ளிகள் அதிகரிக்கும் என்றும் RF அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2023-24 ஆண்டளவில், “பெரும்பாலான குழந்தைகள், யாரும் வேலைக்கு செல்லாத, பெரிய குடும்பங்களில், ஒற்றை பெற்றோரைக் கொண்டிருப்பார்கள் அல்லது தனியார் அல்லது அரச உதவியுடனான வாடகை வீடுகளில் வசிப்பவர்களாகவும் வறுமையில் வாடுபவர்களாகவும் இருப்பர்."

மக்கள் தொகையில் மிக ஏழ்மையான 40 சதவிகித மக்களின் வருமான வளர்ச்சி ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருக்கும்.

2018 முடிவில் சராசரியான உண்மையான வீட்டு வருமானமானது "முந்தைய வாக்கெடுப்பு கணிப்புக்களில் எதிர்பார்த்ததை விட குறைவான 1,500 பவுண்டுகள் ஆகும்" என்று RF கண்டறிந்துள்ளது. இங்கிலாந்து வங்கியின் சராசரி வருமான கணிப்பு, OBR (வரவு-செலவு திட்ட பொறுப்புக்கான அலுவலகம்) இனை காட்டிலும் வலுவானது என்றாலும், கீழ் நோக்கிய மாற்றத்தை காட்டுவதுடன் 2019 ஆம் ஆண்டில் உண்மையான சம்பள சரிவை கணித்துள்ளது. ஏழைகள் மிகவும் குறைவாக வருமானத்தை பெற்றுக் கொள்வர் என்று கணிப்பிடும் போது, மக்கள் தொகையில் மிகச் செல்வந்த 4 சதவிகிதத்தினர், ஒட்டுமொத்த அடிமட்டத்தில் உள்ள 40 சதவிகிதத்தினரை விட அதிகமான வருமானத்தை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

அதிகரித்து வரும் வறுமைக்கு பிரெக்சிட்(Brexit) வாக்கெடுப்பு மற்றும் தொடர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் என்பவற்றை பங்களிக்கும் காரணிகளாக RF மேற்கோளிட்டுள்ளது. வாக்கெடுப்பு முடிந்த உடனேயே பவுண்டு பெறுமதி வீழ்ச்சியடைந்து. இது பெரும்பாலான வறுமைக் குடும்பங்களைப் பாதிக்கிறது, ஏனெனில் அவர்களின் வருமானத்தின் பெரும்பகுதி அத்தியாவசியத்  தேவைகளுக்கு பயன்படுவதால் ஆகும்.

இந்த அறிக்கையானது, ஏழ்மையான குடும்பங்களை குறைப்பதற்கும் மற்றும் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் ஏழ்மைக்குள் வீழ்ந்துவிடாது குறைப்பதற்கும் முக்கிய காரணியாக இருந்த யுத்தத்தின் பின்னரான சமூகநலன்புரித் திட்டங்களை அரசாங்கம் இல்லாதொழிக்க முனைவதே காரணம் என சுட்டிக்காட்டுகின்றது.

சமூகநல உதவிகளை அதிகரிக்காதது இப்போது 4ஆவது ஆண்டிற்குள் நுழைகின்றது. இது 4.4 பில்லியன் பவுண்டுகளை குடும்பங்களுக்கு கிடைக்காது செய்துள்ளது.  இரண்டு குழந்தைகளுக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு வருடத்திற்கும் 2,800 பவுண்டுக்கு குறைவாக இருக்கும், ஏனெனில் அவர்கள் இப்போது இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே உதவிநலன் உரிமை கோரலாம். வரிக்கடன்கள் அல்லது Universal Credit (UC) கோருவோர் அவர்கள் பெறும் நலன்களில் “குடும்ப அங்கத்துவத்தை” இழப்பர். இதன்மூலம் வருடாந்தம் £545 இழப்பை சந்திப்பர்.

அரசாங்க வரி குறைப்புகள் மூலம் அதிக வருமானம் பெறுவோரே இலாபமடைகின்றனர். வீட்டுவரி அதிகரிப்பும் மற்றும் ஏப்பிரலில் இருந்து ஓய்வதியத்திற்கு செலுத்தும் தொகையில் 2-5 விகித வெட்டும் பெறக்கூடிய வருமானத்தை பாரியளவில் மோசமடைய செய்துள்ளது.

1990-91 முதல் அதன் மிகக் குறைந்த புள்ளியாக இருக்கும் வேலையின்மைக்கு உதவித்தொகை 2019-20 இல் அதேயளவாயுள்ளது, அதாவது 30 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. மக்கள் தொகையின் மிக மோசமான சதவிகிதத்தில், இது குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மிகக் கடுமையான பாதிப்பு ஆகும்.

Resolution Foundation அறிக்கை ஒரு நம்பிக்கையூட்டும் ஆனால் நம்பிக்கையற்ற குறிப்புடன் முடிவடைகிறது. இன்றைய கணிப்புகளிலிருந்து “மாறுபட்ட பொருளாதார போக்குகளின் விளைவாக அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் கொள்கை மாற்றத்தின் விளைவாக அவர்களின் இருண்ட கணிப்புக்கள் சவால் செய்யப்படலாம்."

ஒரு மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகிக்கொள்வது நிகழவுள்ளபோது, பழமைவாத அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அதிகரித்து, முந்தைய சமூகநல சீர்திருத்தங்களை முற்றிலுமாக அகற்றுவதில் உறுதியாக இருக்கையில் பிரித்தானியா ஒரு திக்குத்திசை தெரியாத காலத்தினுள் நுழைகின்றது. பிரித்தானிய பெருநிறுவனங்கள் தங்கள் இலாபத்தை அதிகரிக்கவும், வர்த்தக போர் தீவிரமடையும் வரை உலகப் சந்தையில் போட்டி போடவும், இந்த தாக்குதலை ஒழுங்கமைக்கும். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த தாக்குதல்கள்,  பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருந்தாலும் மற்றும் எந்தவொரு எதிர்கால அரசாங்கத்திற்கு கீழும், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி திணிக்கப்படும்.

2015 இல், பெரும்பான்மையான தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தாராளவாத சீர்திருத்த முன்மொழிவை நிறைவேற்றுவதற்கு அதற்காக வாக்களிப்பதை தவிர்ப்பதன் மூலம் அனுமதி வழங்கினர். பிளேயரிசவாத வலதுசாரிகளை கட்சியைவிட்டு பலவந்தமாக வெளியேற்ற மறுத்துவிட்ட சில வாரங்களுக்கு பின்னர் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெர்மி கோர்பின் உட்பட 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். மாறாக, அவர்களது ஒவ்வொரு வலதுசாரிக் கோரிக்கைக்கும் திரும்பத்திரும்ப அடிபணிந்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் வறுமை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணி, கோர்பின் மற்றும் அவரது நிழல் சான்ஸ்லர் ஜோன் மெக்டொனல் ஆகியோர் தொழிற் கட்சி ஆதிக்கத்திலுள்ள நகரசபைகளில் அவர்கள் சட்டபூர்வமான வரவு-செலவுத் திட்டங்களை தொடர்கின்றனர், அதாவது மத்திய அரசாங்கத்தால் நிதியளிக்கும் வெட்டுக்களை எதிர்கொள்ளும் வகையில் வெட்டுக்களை சுமத்துகின்றன. மெக்டொனால் ஒரு எதிர்கால தொழிற் கட்சி அரசாங்கத்தை "நிதிய நம்பகத்தன்மை விதிமுறைக்கு" உட்படுத்தவுள்ளார், அவர் எப்போதாவது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது பற்றி நாடகமாடுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்கனவே 12,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்திருந்த தொழிற் கட்சியினர் அதிகாரத்திலிருக்கும் பேர்மிங்காம் நகர சபை கிட்டத்தட்ட 1,100 வேலை இழப்புக்களை இந்த வாரம் அறிவித்துள்ளது.