ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump presidency: From the Manhattan underworld to the White House

ட்ரம்ப்பின் ஜனாதிபதிப் பதவி: மன்ஹாட்டன் பாதாள உலகிலிருந்து வெள்ளை மாளிகை வரை

Patrick Martin
1 March 2019

"நிதியியல் பிரபுத்துவம், அது செல்வத்தை கையகப்படுத்தும் முறையும் அதனூடாக அது அடையும் மகிழ்ச்சிகளும், முதலாளித்துவ சமுதாயத்தின் ச்சத்தில் உள்ள உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் மறுபிறப்பே தவிர வேறொன்றுமில்லை" என கார்ல் மார்க்ஸ், பிரான்சில் வர்க்கப் போராட்டம் எனும் தனது நூலில் குறிப்பிட்டார்.

பிரான்சில் 1848 புரட்சிக்கு வழிவகுத்த பூர்சுவா வர்க்கத்தின் ஊழலைப் பற்றிய அவரது ஆய்வில் மார்க்ஸ் விபரித்தது, முதலாளித்துவ வர்க்கமானது சமூக எழுச்சி மற்றும் வெடிக்கும் வர்க்கப் போர்களை அது சொந்தமாக எதிர்கொள்கின்றபோது, 2019 இல் அமெரிக்காவுக்கு இன்னும் கூடுதலான பொருந்துவதாக உள்ளது.

இந்த வகையிலேயே மார்க்சிஸ்டுகள் புதன்கிழமை விசாரணையை புரிந்துகொள்கிறார்கள், அதில் முன்னாள் வழக்கறிஞரும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டொனால்ட் ட்ரம்ப்பின் "ஏற்பாட்டாளருமான" மைக்கல் கோஹன் ஆறு மணி நேரம் புதன்கிழமை விசாரணைக்கு சாட்சியமளித்தார், அதில் அவர் மற்றும் அவரது முதலாளியான ட்ரம்ப் ஆகியோர் எவ்வாறு வணிக பங்காளிகள் மற்றும் வரி சேகரிப்பவர்களை ஏமாற்றுவதையும், வீடு, காணி விற்பனையில் அச்சுறுத்தி அடக்குதல் மற்றும் எதிர்ப்பை ஒடுக்குதல் ஆகியவற்றில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள், கசினோ சூதாட்டம், யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும், இறுதியில், தேர்தல் அரசியலில் எவ்வாறு ஏமாற்றினார் என்பவற்றைப் பற்றி விளக்கியுள்ளார்.

தி காட்பாதர் போன்ற திரைப்படங்களை பார்க்கும் பெரும்பாலான அமெரிக்கர்கள் அடையாளம் காணும் ஒரு செயல்முறையின் இருண்ட பதிப்பையே கோஹன் விவரித்துள்ளார்: எல்லோருக்கும் தலைவரான ட்ரம்ப், ஒவ்வொரு முடிவுகளிலும் ஆலோசிப்பதற்கு அவசியமில்லாத அதிகாரத்தை கொண்ட அவரது பிள்ளைகளான டொனால்ட் ஜூனியர், இவங்கா மற்றும் எரிக் ஆகிய ஒவ்வொருவரும் தற்போது நடந்துவரும் குடும்ப குற்றவியல் ஸ்தாபனத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகிக்கிறார்கள். அவரது ஆறு மணி நேர சாட்சியத்தின் போது கோஹென் ட்ரம்ப்பின் வரி தவிர்ப்பிற்கான திட்டங்களை வழியமைத்தவரும், வங்கிகளை ஏமாற்ற அல்லது வணிக பங்காளிகளை ஏமாற்ற உதவியவருமான ட்ரம்ப் அமைப்பின் தலைமை நிதி அதிகாரி அலன் வைசெல்பேர்க்கை (Allen Weisselberg) பற்றி 20 க்கும் அதிகமான தடவை குறிப்பிட்டார்.

இவை அனைத்திலும் ஒரு செயல்படுத்துபவராக இருந்த கோஹென்: வணிக கூட்டாளிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் ஒன்று அல்லது மற்றொரு ட்ரம்ப்பின் வணிகத்தின் மூலமாக மோசடி செய்யப்பட்ட பின்னர் புகார்களை பதிவு செய்ய அல்லது செலவுகளை திருப்பிக் கேட்க முயன்ற எவரும் உள்ளடங்கலாக தன்னுடைய சொந்த கணக்குப்படி, ட்ரம்ப் சார்பில் பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 500 தடவை அவர்களை அச்சுறுத்தியுள்ளார். இப்போது தடைசெய்யப்பட்ட வழக்கறிஞர் இந்த காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தடவைகள் ட்ரம்ப் உட்பட பலரையும் அதே போன்று வாடிக்கையாளர்களையும் இடைமறித்து ஒட்டுக்கேட்டதாக ஒப்புதல் அளித்தார்.

கோஹனால் விவரிக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் வேடிக்கையானதில் இருந்து (ட்ரம்ப் தனது கல்லூரிகள், அவரது இராணுவப் பள்ளிகளில் கூட தன்னுடைய தரவரிசையை அல்லது பரீட்சை மதிப்பெண்களை வெளியிடக்கூடாது என்று கட்டாயப்படுத்தியமை) ஈனத்தனமான (60,000 அமெரிக்க டாலர்களுக்கு தன்னுடைய ஒரு உருவப்படத்தை வாங்க வேண்டும் என்பதற்காக ட்ரம்ப் தனது சொந்த "தொண்டு" அறக்கட்டளையை நிறுவனத்தை உருவாக்கியது), இழிந்த குற்றத்தனமான (வங்கி கடனுக்காக விண்ணப்பிக்கும் போது சொத்துக்களின் மதிப்பை வேண்டுமென்றே உயர்த்தும் அதே நேரத்தில், வரி விலக்கு பெறுவதற்கு அதே சொத்துக்களின் மதிப்பை இருபது மடங்குக்கு தளர்த்துதல்) வரையான வீச்சில் கூறப்பட்டது.

கோஹனின் முக்கியமான வலியுறுத்தலாக இருந்தது, ட்ரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அவர் வெற்றிபெற முடியும் என்ற எதிர்பார்ப்போடு ஜனாதிபதி தேர்தலுக்குள் நுழையவில்லை என்பதாகும். அதற்கு மாறாக, பில்லியனர் ரியாலிட்டி தொலைக்காட்சி "நட்சத்திரம்" அவரது நெருங்கிய நபர்களிடம், அவரது பிரச்சாரமானது "அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தொலைக்காட்சி விளம்பரமாக" இருக்கும் என்பதோடு தனது வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு நல்லது மற்றும் முன்னர் கிடைக்காத சந்தைகளில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்று தொடர்ந்து கூறியிருந்தார் என்பதாகும்.

இந்த பிரதிகூலமான தகவல்கள், வியாழன் நாளாந்த செய்தித்தாள்களின் பக்கங்களை நிரப்பியதோடு தொலைக்காட்சி செய்திகளில் பல மணிநேரங்களை ஆக்கிரமித்தன. வரலாற்று அபிவிருத்தி மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் எதிர்கால போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதமான மதிப்பீடு மற்றும் கருத்து எவ்வாறாயினும் இந்த பரந்த அளவிலான அறிக்கை மற்றும் வர்ணனையைப் பொறுத்தவரை, ட்ரம்ப்களைப் போன்ற ஒரு குடும்பம் இப்பொழுது அமெரிக்க அரசியல் அமைப்பில் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் முயற்சிகளான ட்ரம்ப்பை ஒரு விதிவிலக்கானது, ஒரு தற்செயலான வரவு, அவரது 2016 ஆம் ஆண்டு தேர்வானது, பதவிவிலகல் கோரிக்கை, கட்டாய இராஜினாமா, அல்லது 2020 இல் தேர்தல் தோல்வி மூலம் "திருத்தப்பட்டுவிடும்" என்று கூறுவதை உலக சோசலிச வலைத் தளம் நிராகரிக்கிறது, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு நீடித்த நெருக்கடி மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவு பற்றிய ஒரு வெளிப்பாடாகும். அதன் போக்கை 1998-99ல் பில் கிளிண்டன் மீதான பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு, பின்னர் வந்த 2000 ஆம் ஆண்டு திருடப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் என குறைந்த பட்சம் இரண்டு தசாப்தங்களாக காணலாம் என நாம் வலியுறுத்துகிறோம்.

இரண்டு பெரிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறை, பெருகிவரும் சமூக பதட்டங்களின் சுமைகளின் கீழ், எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் அதிரித்துள்ள பொருளாதார சமத்துவமின்மையால் உடைகின்றது. இரண்டு ஆண்டு மற்றும் நான்கு ஆண்டு இடைவெளியில் நடைபெறும் தேர்தல்கள் நிதிய தன்னலக்குழுவிற்கு முழுமையாக அடிபணிந்த ஒரு அரசாங்கத்தின் செயல்பாட்டின் மீது உண்மையான மக்களின் செல்வாக்கை செலுத்துகின்றன என்ற போலித்தனத்தைத் தக்கவைக்க முடியாதுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் தெரிந்திருந்தாலும், மறுபரிசீலனை செய்வது தேவையாக உள்ளது: கடந்த மூன்று தசாப்தங்களாக, கிட்டத்தட்ட அமெரிக்க சமுதாயத்தில் பொருள்வளம் அனைத்து உயர்வும் மேலே ஒரு சிறிய அடுக்குக்கு சென்றுவிட்டது. ஜெஃப் பெஸோஸ், வாரன் பபெட் மற்றும் பில் கேட்ஸ் ஆகிய மூன்று மெகா பில்லியனர்கள், இப்போது அமெரிக்க மக்களின் அரைவாசிக்கும் அதிகமான செல்வத்தை கட்டுப்படுத்துகின்றனர். இந்த சமூக துருவப்படுத்தல் என்னும் நிகழ்ச்சிப்போக்கு உலகளாவியது: மிக சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, 26 பில்லியனர்கள் மனிதகுலத்தின் ஏழ்மையான பாதியைவிட அதிக செல்வத்தை கட்டுப்படுத்துகின்றனர்.

பில்லியனர்களது இந்தச் செல்வ வளம், அவை மனிதகுலத்திற்கு மேலும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தருவதற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளோ அல்லது விஞ்ஞான கண்டுபிடிப்புகளோ அல்ல. மாறாக, அவர்களின் செல்வவளம் சமூகத்தின் இழப்பில் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு சாத்தியமான இரண்டாவது உழைப்பு சக்தியும் கொடூரமாக தொழிலாளர்களில் இருந்து சுரண்டப்பட்டு பிழிந்தெடுக்கப்படுகின்ற நிறுவனமான அமசன் தோற்றத்தின் மூலம் பெஸோஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஆகியுள்ளார்.

மொத்தமாக பில்லியனர்களின் வர்க்கம் 2008 ல் உலகளாவிய நிதிய சரிவிற்கு, பொறுப்பற்ற ஊகவாணிபம் மற்றும் தலைசுற்றும் பங்குகள் விற்பனை, பிற ஏமாற்றுகரமான நிதிய "தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் காரணமாக இருந்ததுடன், முதலில் குடியரசுக் கட்சியின் புஷ், பின்னர் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா ஆகியோரினூடாக ட்ரில்லியன் கணக்கான டாலர்களால் பிணையெடுக்கப்பட்டனர். அதேவேளையில், பாரிய உழைக்கும் மக்களுக்கோ வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகள் கடுமையாக சீரழிவிற்குள்ளானது.

டொனால்ட் ட்ரம்ப்பை பொறுத்தவரை, ரியல் எஸ்டேட் மோசடிக்காரன், சூதாட்ட ஏமாற்றுக்காரன் மற்றும் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி முக்கியநபர் பால்சாக் (Balzac) இன் கூற்றின் உயிருடன் உள்ள உதாரணம் ஆவார்: "ஒவ்வொரு பெரிய அதிர்ஷ்டத்திற்கு பின்னாலும் ஒரு பெரிய குற்றம் உண்டு."

ஜனநாயகக் கட்சியில் ஒரு பதிவு செய்யப்பட்டவராக இருந்து மற்றும் இரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கும் நன்கொடையாளராகி நீண்ட காலத்திற்குப் பின்னர்,  2000 இல் தீவிர வலதுசாரி சீர்திருத்த கட்சி (Reform Party) இன் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்பியிருந்தார். 2016 இல் குடியரசுக் கட்சி ஜனாதிபதியாக வேட்பாளராக முடிவு செய்தபோது அவர் தீவிரமாக வலதுக்கு நகர்ந்துவிட்டார். பொருளாதார தேசியவாதத்தின் அடிப்படையில், மிட்வெஸ்ட் மற்றும் அப்பலாச்சியாவில் குறிப்பாக தொழிற்துறை அழிக்கப்பட்ட பிரதேசங்களில் உழைக்கும் மக்களுக்கு வலதுசாரி ஜனரஞ்சக அழைப்புகளை விடுத்து அவர் பொதுவாக குடியேறுபவர்களின் எதிர்ப்பு மற்றும் இனவெறி எதிர்ப்புகளை அதிகமாக விதைத்தன் மூலம் அவருடைய வேட்புமனு ஒரு தெளிவான பாசிச இயக்கத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தியது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் 2016 தேர்தல்களுக்கு முன்பே விளக்கினார்:

அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்கு குடியரசுக் கட்சி பரிந்துரைத்திருக்கும் வேட்பாளர், மூனிச் நகர மதுச்சாலையின் ஒரு அமெரிக்க பதிப்பாக எழுந்தவரல்ல. டொனால்ட் ட்ரம்ப் ஒரு பில்லியனர். மன்ஹாட்டன் வீட்டு கட்டிட சுருட்டல்கள், கசினோ சூதாட்டத்தின் பாதிக் குற்றவியல் நடவடிக்கைகள், மற்றும் அபத்தமான, வெறுப்பூட்டத்தக்க அத்துடன் அடிப்படையாக கற்பனையான “உண்மை வாழ்க்கை” நிலைமைகளை உருவாக்கி பார்வையாளர்களை மகிழ்விப்பதும் முட்டாளாக்குவதுமான கிறுக்குத்தனமான “ரியாலிட்டி தொலைக்காட்சி” உலகம் ஆகியவற்றின் மூலம் பணம் சம்பாதித்தவர். டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளரானதை ரியாலிட்டி தொலைக்காட்சியின் தந்திரங்கள் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டதாய் கூட விவரிக்கலாம்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வு என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நிராகரித்து சாமானிய தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட 2018 இன் ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலைகளுடன் தொடங்கி, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய போராட்டங்களின் தோற்றமாகும். இதற்கான அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரதிபலிப்பானது சர்வாதிகார வழிமுறை ஆட்சியை நோக்கிய ஒரு பீதியைத் தூண்டிவிட்டது.

வெள்ளை மாளிகையில் பில்லியனரான ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் அடித்தளங்கள் மீது ஒரு திட்டமிட்ட தாக்குதலில் ஈடுபட்டார். அரசியலமைப்பு ரீதியான "வரவு-செலவுத் திட்ட அதிகாரத்தை" கொண்ட காங்கிரஸைத் தாண்டி அமெரிக்க-மெக்சிக்கோ எல்லைக்கு அருகே ஒரு பாதுகாப்பு மதிலை கட்டவும் இராணுவ மற்றும் பிற கூட்டாட்சி துறைகளுக்கு நிதிகளை திசைதிருப்பவும் அவர் ஒரு தேசிய அவசரகால நிலையை அறிவித்தார்.

இந்த முயற்சியில் உடனடியாக அவர் வெற்றி பெறமுடிந்தாலும் இல்லாவிட்டாலும், வாக்குச்சீட்டு பெட்டியின் ஒப்புதலுடன் அல்லது இல்லாமல். ட்ரம்பானது ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதை நோக்கி நகர்கிறார் என்பது தெளிவாகிறது. ஊடகங்கள் பொதுவாக குறைத்துக்காட்டி ஜனநாயகக் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட விடயமான கோஹன் அவரது இறுதி அறிக்கையில் கூறியதுபோல், ட்ரம்ப் 2020 தேர்தலில் தோற்காவிட்டால், "ஒரு சமாதானமான அதிகார மாற்றம் இருக்காது" என அவர் அச்சமுறுகின்றார்.

ஜனநாயகக் கட்சியின் ட்ரம்பிற்கான “எதிர்ப்பானது” ஜனநாயக உரிமைகள் மீதான குரோதத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. அவர்களின் ட்ரம்ப் எதிர்ப்பு பிரச்சாரமானது அவர் ஒரு ரஷ்ய கையாள் எனக் காட்டும் போலியான குற்றச்சாட்டுக்களை அடித்தளமாக கொண்டதாகும். அமெரிக்காவின் சமூகப் பிளவிற்கான காரணமாக அவர்கள் ரஷ்ய ஊடுருவலை காட்டுகின்றனரே தவிர முதலாளித்துவத்தின் நெருக்கடியினை அல்ல. மற்றும் இதனூடாக அவர்கள் ஒரு பரந்த வலைத் தள தணிக்கையை திணிக்க முனைகின்றனர்.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் ட்ரம்பின் சர்வாதிகார ஆட்சிக்குமான உண்மையான எதிர்ப்பு என்பது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு பெரு வணிக கட்சிகளுக்கு எதிராகவும் மற்றும் அவர்கள் இருவரையும் பாதுகாக்கும் இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராகவும் இயக்கப்பட வேண்டும்.