ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sixteenth week of protests: French “yellow vests” support strikes in North Africa

ஆர்ப்பாட்டங்களின் பதினாறாவது வாரம்: வட ஆபிரிக்க வேலைநிறுத்தங்களுக்கு பிரெஞ்சு "மஞ்சள் சீருடையினர்" ஆதரவு

By Anthony Torres and Kumaran Ira 
4 March 2019

மக்ரெப் (Maghreb) இல் ஒரு சர்வதேச வேலைநிறுத்த அலையின் மத்தியில் பிரான்சில் "மஞ்சள் சீருடையினரின்" 16 வது வாராந்த எதிர்ப்பு நடைபெற்றது. அல்ஜீரியாவில் ஐந்தாவது ஜனாதிபதி பதவிக்காலத்திற்காக அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா முனைவதை எதிர்த்து நூறாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மத்திய தரைக்கடலின் மறுபக்கத்தில், மக்ரோனின் மோசடியான "பெரும் தேசிய விவாதத்திற்கு" எதிராக மார்ச் 16-க்கு திட்டமிடப்பட்ட ஒரு பெரிய நிகழ்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, போலீஸ் எண்ணிக்கைப் படி, “39,300 மஞ்சள் சீருடைக்காரர்கள்", ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

"மஞ்சள் சீருடைக்காரர்கள்" தங்களை 92,000 என்று கூறிய அதேவேளையில் பொலிஸ்காரர்களின் சங்கம், 200,000 "மஞ்சள் சீருடைக்காரர்கள்" போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களுக்கு சவால் விடுத்திருந்தனர்.

"மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மோதல்கள் வெடித்த நான்ந் (Nantes), இல் அப்பகுதி முழுவதிலும் இருந்து போராட்டக்காரர்கள் வந்து அணிதிரளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்னர். சுமார் பிற்பகல் 2 மணியளவில், ஏறத்தாழ 1,000 எதிர்ப்பாளர்கள் ஒன்றாக அணிவகுத்துச் சென்றனர். ஆனால் பொலிஸ் படைகள் அவர்களைத் தடுத்து, கனமான கண்ணீர்ப்புகைக் வீச்சுக்களை மேற்கொண்டன.

போர்தோவில் (Bordeaux) பல ஆயிரம் பேரணியாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரின் புகையிரத நிலையமானது சிறிதுநேரம் எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்கள் ஒரு பதாகையை வடிவமைத்து அதில் "மார்ச் 16 அன்று, அக்கித்தேன் பாரிஸை ஆக்கிரமிக்கும், இறுதி எச்சரிக்கை, பகுதி 2" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதிகமான "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் இடம்பெற்ற நகரங்களில் ஒன்றான துலூஸில் (Toulouse), எதிர்ப்பாளர்கள் பல மணிநேரங்களுக்கு அமைதியான முறையில் அணிவகுத்த பின்னர், பொலிஸாருடன் மோதல்கள் ஆரம்பித்தன. நகரத்தின் வரலாற்று மையத்தை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில், எதிர்ப்பாளர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை துப்பாக்கி சூடு நடத்திய பின்னர் பொலிஸ் படைகள் தண்ணீர் பீச்சிகளுடன் அணிதிரண்டன.

லியோனில் (Lyon), சுமார் 2,000 பேர் தெருக்களில் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இது பாதுகாப்புப் படைகளுடன் பல மோதல்களுக்கு வழிவகுத்தது. மார்சையில் (Marseille) 2,000 பேர் ஸ்ராலினிச பொது தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) தொழிற்சங்க உறுப்பினர்களுடனும், அதிகாரிகளோடும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"மஞ்சள் சீருடை" இயக்கத்தின் ஆரம்பத்தில் ரீயூனியன் தீவிற்கு இராணுவத்தை அனுப்பப் போவதாக மக்ரோன் அச்சுறுத்தியிருந்தாலும், ரீயூனியன் தீவின் செயிண்ட் போல் நகரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் Chaussée Royale வீதியில் அணிவகுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

லீல் (Lille) இல், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து உட்பட ஏனைய நாடுகளில் இருந்து வந்த "மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு "பிராந்திய மற்றும் சர்வதேச" பேரணி எதிர்ப்பாளர்களை ஒன்றிணைத்தது. பத்திரிகை அறிக்கைகளின் படி, பொலிஸ் படைகள் சுமார் பிற்பகல் 3.30 மணியளவில் எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுவீச்சுக்களை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. சிவப்பு நிற பனியனுடன் மேல் சட்டை இல்லாது வாயையும் கட்டிக்கொண்டு தேசிய சின்னமான மரியான் (Marianne) போல உடையணிந்த பெண்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.


Arc of Triumph க்கு முன்னே

பாரிசில் 4000 பேர் Arc of Triumph இனை விட்டு விலகி “Yellow Vest Week 16: Insurrection” மற்றும் “Week 16, We Take over Paris” அமைப்பினர் நகரத்தின் மேற்கில் Arc of Triumph இனை எவ்வளவு காலத்திற்கு தடைசெய்யமுடியுமோ அவ்வளவிற்கு தடைசெய்ய கோரினர். முற்பகல் 10 மணிக்கு பின்னர், "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்கள் சாம்ப்ஸ்-எலிசேயில் இணையத் தொடங்கினர். பிற்பகல் முடிவில், எதிர்ப்பாளர்களை கலைக்க பொலிஸ் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினார்.

உலக சோசலிச வலைத் தளம் அனைய்ஸ் மற்றும் வன்சன்ட் உடன் பேசியபோது அவர்கள் ஏன் "மஞ்சள் சீருடை" போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்று விளக்கினார்கள்.

"எரிபொருள் செலவினங்களின் அதிகரிப்பால் நாங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டோம்," என்று வன்சன்ட் விளக்கினார். "நான் காரில் எனது வீட்டிலிருந்து வேலைக்கு சென்று மீண்டும் திரும்பி வர மூன்று மணிநேரம் செலவழிக்கின்றேன். வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் அது போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, எங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல்கள் உள்ளன. ஆனால் என் பார்வையில், இதுவும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது, ஏனெனில் எங்களுக்கு வேறு தேர்வு இல்லை. மக்ரோன் எனும் சுதந்திர வர்த்தகர் அல்லது நவ பாசிச வேட்பாளர் லு பென்னுக்கு இடையே நாம் உண்மையில் மாட்டிக்கொண்டோம்."

பொலிஸ் அடக்குமுறையால், "நாங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை, துரதிருஷ்டவசமாக, மோதல்களும் தீங்கு விளைவிக்கும் செயல்களும் அங்கு நடைபெறுகின்றன. ஆனால் எம்மால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுக்கு தேவையானதை கொடுக்க அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்று இன்னமும் தெளிவில்லாமையால் நாம் போராட்டத்தைக் கை விடவோ அல்லது அரசாங்கத்திற்கு ஒரு வெற்றியைக் கொடுக்கவோ முடியாது. மக்ரோன் எங்களைப்பற்றி கவனமெடுக்காமல் காலதாமதமாக்க முயற்சிக்கிறார். இந் நிலைமை தொடர்ந்தால், தொடர்ந்து வரும் வாரங்களிலும் எதிர்ப்புக்கள் தொடரும். உண்மையான தீர்வுகள் எதுவும் இல்லாது வெறும் வார்த்தைகள் இருக்கும்வரை தொடர்ந்து வரும் வாரங்களிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று அனைய்ஸ் கூறினார்.


சுடுவதற்கு உடந்தை

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்கள் "மஞ்சள் சீருடையாளர்களை" யூத-எதிர்ப்பினர் என்று குற்றச்சாட்டுவதை வன்சன்ட் நிராகரித்தார். "அவர்கள் எங்களை இழிவுபடுத்தும் முயற்சிக்கு ஏற்கனவே பொறிகளை அமைத்து விட்டனர். பிரான்சில் கடந்த 40 ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்ததை செய்வது எளிது. யாராவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறார்களோ அவரை நீங்கள் நாஜி, ஒரு மோசமான யூத எதிர்ப்பாளர், அல்லது அடுத்து வரும் வாரங்களில் அவர்களை ஒரு புதிய அவமதிப்புக்கு உட்படுத்துவீர்கள். கடந்த வாரத்தில் யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுக்களை அவர்கள் குறைத்துவிட்டனர் போல் தெரிகிறது. ஆனால் அது ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு அல்லது இஸ்லாமிய எதிர்ப்பு அல்லது எதுவோ ஒன்று என அதன் பின்பு கூறப்படும். அது அவர்களுடைய யுக்தியாகும்."

தொழிற்சங்கங்கள் அரசால் கட்டுப்படுத்தப்படுவதாக அனைய்ஸ் கூறினார். "பொதுவாக, CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) இன் கைப்பட்டிகளுடன் பலர் வருவதை நாங்கள் பார்க்கிறோம். ஆனால் நீண்ட காலமாக அரசாங்கத்தின் கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவர்கள் எதுவும் கூறுவதில்லை, எல்லாவற்றையும் சரியென ஏற்றுக்கொள்கிறார்கள், தங்களுக்கு வசதியான பதவிகளிலும் இருக்கிறார்கள். தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியுமா என்று தெரிந்துகொள்ள விவாதங்கள் நடந்த ஒரு சில சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் ஒரு உடன்பாட்டையும் கண்டுபிடிக்கவில்லை, அதே சமயத்தில் அரசாங்கம் அங்குவந்து விட்டது, இப்போது அது முடிவு செய்யும்."

அல்ஜீரிய போராட்டங்களில் அனைய்ஸ் மற்றும் வன்சன்ட் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். "82 வயதான புட்டஃபிளிக்காவிற்கும் 40 ஆண்டுகளில் மாற்றம் இல்லாத ஒரு அமைப்பு முறைக்கும் இடையே அவர்கள் சிக்கியுள்ளனர்," என்று அனைய்ஸ் கூறினார். "நிச்சயமாக, சிறிது காலம் கழித்து, மக்கள் திரையை உயர்த்தி, அதற்கு கீழே உள்ளதைப் பார்க்க வேண்டும். அவர்கள் போராட வேண்டும் என்று சொல்வது சரிதான். அவர்கள் அதற்காக தான் போராடி வருகிறார்கள் என்றால், அதை செய்வதற்கு உரிமை இருக்கிறது."


போராடுபவர் இழக்க நேரிடும், ஆனால் போராடாதவர் ஏற்கனவே இழந்துவிட்டார்

மார்சையில் இருந்து வந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சந்தித்தனர். ஆனால் அவர் "தனது சுய விருப்பத்தாலேயே வந்தார்" என்று தெரிவித்தார். "தேர்ந்தெடுத்தவர்களின் குறைகளை செவிமடுக்காத ஜனாதிபதியால் நான் இங்கே நிற்கிறேன், உண்மையில் பிரான்சின் மிகச் குறைந்தளவு மக்களே அவருக்கு வாக்களித்து இருந்தனர். எனவே, அவர் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் இன்று அவர் அதைக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக விலைகள் பெருகி வருகின்றன, அதனால் அனைவருக்கும் பிரச்சினை எழுகிறது, அதனாலும் நான் இங்கு நிற்கிறேன்."

"மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில் சியோனிசத்திற்கான எதிர்ப்பைத் தடை செய்யும் ஒரு சட்டத்திற்கான மக்ரோனின் முன்மொழிவுகளில், அவர் கூறியதாவது: "எங்களிடையே  யூதர்கள், முஸ்லீம் சமூகங்களிலிருந்து வந்த பலர் ஆரம்பத்தில் இருந்தே இங்கு உள்ளனர். எப்போதும் போராட்டத்தை இழிவுபடுத்துவது தான் தேவையாக இருந்தது. அவர்கள் அதை விரும்புகிறார்கள் ...


வெளிசுவேலா மீது கைவைக்காதே

"ஊடகங்கள் இன்று அரசாங்கத்தின் நலன்களுக்காக செயற்படுவதை நான் காண்கிறேன். எங்களுக்கு பின்னால் மரி லு பென்னோ அல்லது ஜோன் லூக் மெலென்சோனோ இல்லை. இது ஒரு அரசியல் சார்ந்த இயக்கம் அல்ல. இன்று எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கம் பதவி விலக விரும்புகிறோம். "