ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Unanswered questions on French police role in Saturday “yellow vest” clashes

சனிக்கிழமை "மஞ்சள் சீருடை" மோதல்களில் பிரெஞ்சு போலிஸ் வகித்த பாத்திரம் தொடர்பாக பதிலளிக்கப்படாத கேள்விகள்

By Anthony Torres and Alex Lantier 
21 March 2019

சனிக்கிழமையன்று, "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் 18 வது வாரத்தில், பாரிசில் உள்ள சாம்ப்ஸ்-எலிசே பெரு வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதல்களுக்குப் பின்னர் மக்ரோன் அரசாங்கத்தின் அடக்குமுறை அதிகரிப்பில் அரசாங்கத்தின் பங்கு தொடர்பாக மிக முக்கியமான கேள்விகள் எழுகிறது. "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களால் வன்முறை ஏற்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த இருண்ட நிகழ்வுகளின் அடித்தளத்தில் எதிர்ப்பதற்கான உரிமையை இல்லாது செய்ய எலிசே முயல்கின்றபோது, அரசு எந்திரத்தின் பிரிவுகள் வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவை வழங்குகின்றன.

எதிர்ப்பாளர்களுக்கு இடையே "தீவிரமான பிரிவினர்" இருக்கக்கூடும் என்று போலீஸ் அறிவித்தால், வன்முறை முன்னர் நிகழ்ந்த இடங்களில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்படலாம் என திங்களன்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் குறிப்பாக Fouquet’s உணவகம் உட்பட பல கட்டிடங்கள் நெருப்பு வைக்கப்பட்ட சனிக்கிழமை நிகழ்வுகளால் எழுப்பப்படும் துல்லியமான கேள்வி, இதில் போலிஸின் சொந்த பங்கு என்னவென்பதே.

பாரிஸ் சென்ட்-ஜேர்மன் கால்பந்து கழகத்தின் விற்பனைப் பொருள் கடையில் போலிஸ் திருடிச் சென்றதை படமெடுக்கப்பட்ட பின்னர், இப்போது அதிகரித்த வன்முறையுடன் "மஞ்சள் சீருடையாளர்களை" அச்சுறுத்தி வருகிறது. நவ-பாசிசவாதிகளுடன் இணைந்திருக்கும் பொலிஸ் தொழிற்சங்க கூட்டணியின் பொதுச் செயலாளரான பிரெடரிக் லகாஷ், "நாங்கள் அவர்களுடன் மோதுவதற்கும் சில காயங்கள் ஏற்படு்த்துவதற்கும் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் கோரஸ் பாடும் சிறுவர்களுக்கு எதிராக போராடப் போகவில்லை" என்று ஆர்ப்பாட்டக்காரர்களை காயமடையச் செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனேர் மேலும் கூறினார்: "சனிக்கிழமையன்று, சாம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் சீருடையாளர்கள் இருக்கவில்லை, ஒரு போரின் தர்க்கத்தின்படி Arc de Triomphe ஐ திரும்பப் பெற செயற்பட்ட மக்களே இருந்தனர். சாம்ப்ஸ்-எலிசேயில் 10,000 வன்முறையாளர்கள் இருந்தனர்." எனவே, அமைதியான எதிர்ப்பாளர்கள் உட்பட, அனைத்து "மஞ்சள் சீருடையாளர்" களையும் கொள்ளையர்கள் என தாக்குவதற்கும் காயப்படுத்துவதற்கும் உடனடியாக கலகம் அடக்கும் பொலிஸ் படை ஒன்று அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

போலிஸின் பங்களி்ப்பு சந்தேகத்திற்குரியதாக தொடர்ந்து இருக்கின்றபோதிலும், இந்த மொத்த கலவை, மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அடக்குமுறையை தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த போலிஸில் உள்ள பிரிவுகளின் ஆதரவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஆத்திரமூட்டல்களை அரசாங்கம் பயன்படுத்துகிறதா?. பொலிஸ் மற்றும் உள்நாட்டு உளவுத்துறை அமைப்புகளால் வழங்கப்பட்ட கணிசமான தகவல்களை கொண்டுள்ள அரசு எந்திரத்தின் உயர்மட்ட நபர்களி்ன் அறிக்கைகள் மூலம் இந்த கேள்விகள் எழுப்பப்படுகிறது.

சனிக்கிழமையன்று, பாரிஸின் சோசலிச கட்சி மேயர் ஆன் இடால்கோ "ஜனநாயக உரிமைகளை சீர்குலைக்க விரும்பும் தீவிர வலதுசாரி குழுக்கள், மற்றும் கொள்ளையர்களின் குழுக்களை இன்றைய தினம் நான் பார்த்தேன்" என்று வன்முறைக்கு பிரதிபலித்தார்.

"இப்போது நடந்து முடிந்த ஒரு சூழ்நிலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும்" என்று சாம்ப்ஸ்-எலிசே இல் வெடித்துள்ள வன்முறைக்கு பொலிசின் பொறுப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு அமைப்பின் ஒரு முக்கிய நபராக இருக்கும் இடால்கோ, இயற்கையாகவே, அரச இயந்திரத்தின் பங்கு பற்றி கேள்விகளை எழுப்பும் ஒரு வழியில் தன்னை வெளிப்படுத்தக்கூடாது என்று தனது வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார். ஆனால் இத்தகைய நேரடியான அறிக்கைகளால் முன்வைக்கப்படும் கேள்விகளைக் கேட்பது அவசியமாகும்.

தீவிர வலது குழுக்கள் உண்மையில் பொறுப்பு என்றால், எந்த தீவிர வலது குழுக்கள் அவை? அவர்களது தலைவர்கள் யார்?, வெவ்வேறு கடைகள் மற்றும் கட்டிடங்கள் மீது தீ வைக்க யார் உத்தரவு கொடுத்தது? சாம்ப்ஸ்-எலிசே ஐ சூறையாடிச் சென்ற தீவிர வலதுசாரிக் குழுக்களுக்கிடையில் தொடர்பு இருக்கிறதா? இடால்கோ கூறியதற்கிணங்க, மற்றும் உதாரணமாக, கிளெமோன்ட் மெரிக் பாசிசவாதிகளால் கொல்லப்பட்டதற்கு அவர்களின் முன்னாள் உறுப்பினர்களை குற்றஞ் சுமத்துவதை இப்போது அழைப்புவிடுபவர் யார்?

இலத்திரனியல் தகவல் தொடர்பாடல் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கண்காணிப்பதற்கான மிகப்பெரும் சக்தியை அரசு கொண்டிருக்கையில், அதற்குப் பொறுப்பானவர்களின் அடையாளங்களை அவர்கள் அறிந்திருக்க முடியாது என்பது எப்படி சாத்தியம்?

அத்துடன், இடால்கோ கூறியது போல, வன்முறைக்கான பொறுப்பு, ஜனநாயகத்தை அச்சுறுத்தும் தீவிர வலதுசாரி சக்திகளுடன் உள்ளது என்றால், அரசாங்கத்தின் பங்கு பற்றி ஒருவர் என்ன முடிவுகளை எடுக்க முடியும்? மக்ரோனும் அவரது அமைச்சர்களும் தீவிர வலதுசாரிகளின் பங்களிப்பு பற்றி ஏன் மெளனமாக இருக்கிறார்கள், மேலும் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் —கிட்டத்தட்ட 70 சதவிகித பிரெஞ்சு மக்கள்— வன்முறைக்கு பொறுப்பேற்றுள்ளனர் என்ற கூற்றை சவால் செய்யாமல் இருப்பது ஏன்?

பெரும் செல்வந்தர்களின் சார்பிலான சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாத கொள்கைகளால் பெருமளவு வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அரசாங்கம், வலதுசாரி ஆத்திரமூட்டல்களை பயன்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை நசுக்குகிறதா?

இளநிலை உள்துறை அமைச்சர் லோரோன்ட் நுனேஸ் இடம், திங்களன்று RTL கருத்துக்கள் பகுப்பாய்வில், இடால்கோவின் அதே கேள்விகள் எழுப்பப்பட்டது.

குண்டர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் பெரும் சக்தியுடன் தலையிடவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, "சூழ்ச்சியின் திசையில், நாங்கள் வழக்கத்தை விட குறைவான தாக்குதலும் குறைவான எதிர்வினையும் இருந்தது" என்று நுனேஸ் பதிலளித்தார்.

ஆயினும்கூட, "போலீஸ் படைகளின் செயற்பாட்டில் எந்தவித சந்தேகமும் இல்லை" என்று அவர் பொலிஸ் படைகளைப் பாதுகாத்தார். ஆனால் சாம்ப்ஸ்-எலிசே இல் பொலிஸ் கடைகளை சூறையாடுவதாக காட்டும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் வீடியோக்களால் அவர்களது செயற்பாடு சந்தேகத்தில் உள்ளது. தன்னுடைய சொந்தப் படைகளின் சந்தேகத்திற்கிடமான மற்றும் மர்மமான பாத்திரத்தை மூடிமறைப்பதாக நுனேஸின் அறிக்கைகள் உள்ளன.

சனிக்கிழமையன்று நடைபெற்ற வன்முறைகளில் நவ-பாசிஸ்டுகளின் தொடர்பு பற்றிய இடால்கோ கூறும் குற்றச்சாட்டுக்களை பொறுத்தவரை, பாதுகாப்பு படைகளின் மோசமான தீவிர வலதுசாரி பரிவுணர்வு, குண்டர்களுக்கு எதிராக "குறைவான தாக்குதல்" என்ற தங்கள் முடிவில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததா என கேள்வி எழுப்ப ஒருவருக்கு உரிமை உண்டு.

டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்கார்களின் கண்களை தாக்கிய இரப்பர் குண்டுகளை பயன்படுத்துவதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பானது, வன்முறைமிக்க ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்கையில் நடவடிக்கை எடுப்பதிலிருந்து பொலிஸாரை தளர்வடைந்த பயந்த நிலையில் விட்டுவைத்திருந்தது என்று நுனேஸ் RTL இற்கு தெரிவித்திருந்தார். இந்த விளக்கம் உண்மையானதாக இல்லை. உண்மையில், சனிக்கிழமையன்று பொலிஸ் நடவடிக்கைகள் "மஞ்சள் சீருடையினருக்கு" எதிராக ஆக்ரோஷமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் காணப்பட்டது. கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராகவே பொலிஸ் தயாராற்று இருந்தது.

சனிக்கிழமையன்று, பாரிஸ் போலிஸ், 5,000 முகவர்களை அல்லது சுமார் 40 பிரிவுகளில் கலக தடுப்பு போலீசாரை, குறிப்பாக 1,500 பேர் வன்முறை எதிர்ப்பாளர்களைக் கைது செய்வதற்கு பணிபுரிவதற்காக நன்கு திட்டமிட்டிருந்தது. வார இறுதிக்கு முன்னர், “ஒரு சண்டைக்கு தயாரான” அராஜகவாத “கறுப்பு பிரிவினர்” கலந்துகொள்ளலாம் என எதிர்பார்ப்பதாக JDD இடம் பொலிஸ் தகவல்கள் தெரிவித்திருந்தனர். இதன் விளைவாக, போலிஸ் தேடலாளர்கள், போலீசார் வன்முறை எதிர்ப்பாளர்களாக இருப்பவர்களை கண்டறிவதற்காக, தலைநகர் மற்றும் பாரிஸ் இரயில் நிலையங்களில் உள்ள சாலைகளில் போலிஸ் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சனிக்கிழமையன்று இடம்பெற்ற பொலிஸ் அடக்குமுறையானது, வழக்கமான நேரத்தை விட விரைவிலேயே தொடங்கியது. போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும், இராணுவ போலிஸ் கவச வாகனங்களிலிருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் காலை 11 மணிக்கே வீசத் தொடங்கினர். ஒரு ஹெலிகாப்டர் சாம்ப்ஸ்-எலிசேக்கு மேலாக பறந்து கொண்டிருந்தது.

இந்த பரந்த போலிஸ் அமைப்பு இருந்தபோதிலும் மற்றும் தற்காலிகத் தடைகள் மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் சாம்ப்ஸ்-எலிசே ஐ சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தபோதும், முகமூடி அணிந்து ஆயுதம்தரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருவை வந்தடைந்து சில போலீஸ்காரர்கள் ஏற்கெனவே செய்யத் தொடங்கியிருந்த கடைகளை கொள்ளையடிக்கவும் சென்றனர்.

இந்த பரவலாக வெளியிடப்பட்ட தகவல்கள் அல்லது மேல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பற்றி தீவிர விசாரணை எதுவும் செய்யப்படவில்லை, இது கூட்டாக மக்ரோன் அரசாங்கம், அரசு மற்றும் முழு அரசியல் ஸ்தாபகத்தைப் பற்றிய கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

ஆனால் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறும் பொலிஸ்-அரசு ஆட்சி நிறுவப்படுவதற்கான முயற்சிகளையும், ஆயிரக்கணக்கான "மஞ்சள் சீருடையாளர்கள்" அவர்கள் செய்யாத வன்முறை செயல்களுக்கு பொறுப்பானவை என்று கூறி அதை நியாயப்படுத்த முயலும் ஆளும் உயரடுக்கின் முயற்சிகளையும் அரசியல் ரீதியாக எதிர்க்கும் உரிமையை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டிருக்கின்றனர்.